HOME      Khutba      தூய்மையான உள்ளம்! | Tamil Bayan - 543   
 

தூய்மையான உள்ளம்! | Tamil Bayan - 543

           

தூய்மையான உள்ளம்! | Tamil Bayan - 543


543  - தூய்மையான உள்ளம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்.
(அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅடியார்களை பல உருவங்களில் பல அமைப்புகளில் படைத்துள்ளான். அவன் படைத்த உருவ அமைப்புகளைக் கொண்டு அல்லாஹுத்தஆலா அவர்களை எடை போடுவதில்லை; அடியார்களின் மதிப்பு கண்ணியத்தை வைத்து அல்லாஹ் முடிவு செய்ய மாட்டான்.  ஒருவரை வெள்ளையாக ஒருவரை கருப்பாக ஒருவரை உயரமாக ஒருவரை குட்டையாக இப்படிய பல அமைப்புகளில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் படைத்துள்ளான்.

அல்லாஹ் ஒரு அடியானை மதிக்கின்றான் அவனுக்கு கண்ணியத்தை கொடுக்கின்றான் என்றால் அந்த அடியானுடைய உள்ளத்தை வைத்துதான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் இதை முடிவு செய்வான். நீங்கள் எந்த மொழி பேசுங்கள், எந்த நாட்டிலே பிறந்து இருங்கள், எந்த குலத்தில் பிறந்தவர்களாக இருங்கள், அல்லாஹ்விடத்தில் நீங்கள் நெருக்கத்தை பெற வேண்டுமென்றால்ஈமான் இஸ்லாம் என்ற உயர்ந்த இரு தன்மைகளுக்கு பிறகு அல்லாஹ்வுடைய நேரடி பார்வை உங்கள் மீது படுகின்றதுஎன்றால் அது உள்ளத்தின் மீது படுகின்றது. அந்த உள்ளத்தை எந்த அளவிற்கு நாம் சுத்தப்படுத்திக் கொள்வோமோ அழுக்கு அடையாமல், அசிங்கப்படுத்தி விடாமல் எந்த அளவிற்கு பாதுகாப்போமோ, அல்லாஹ்விற்கு பிடித்தமான குணங்களைக் கொண்டு நம் உள்ளத்தை நிரப்பிக் கொள்வோமோ அல்லாஹ்விற்கு பிடிக்காத அல்லாஹ் வெறுக்கின்ற அத்தனை தீய குணங்களை விட்டும் நமது உள்ளத்தை சுத்தப்படுத்திக் கொள்வோமோ அல்லாஹுத்தஆலா நம்மை அந்த அளவிற்கு உயர்த்துகிறான்.

நாம் சாதாரணமாகச் செய்யக்கூடிய அமல்களுக்கும் உள்ளங்கள் சுத்தமான நிலையில் செய்யக்கூடிய அமல்களுக்கும் இடையே இரண்டு நன்மைகளிலேயே வித்தியாசங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன.

இன்று நாம் தொழுகிறோம்; தொழுகையில் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை; பல எண்ணங்கள், பல குழப்பங்கள், பலவிதமான ஊசலாட்டங்களால், நாம் தடுமாறிக் கொண்டு இருக்கின்றோம்; காரணம் என்ன? நமது உள்ளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை; நற்குணங்களை கொண்டு, தூய்மையை கொண்டு நாம் அதை பரிசுத்தப்படுத்தாத  காரணத்தால் இபாதத்தில் கூட தடுமாற்றங்கள் ஊசலாட்டங்களில் நாம் இருக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதுகுறித்து  உணர்த்துகிறார்கள்;

إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلَا إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ  (1)

அல்லாஹூத்தஆலா உங்களது உடல் அழகை பார்ப்பதில்லை; உங்கள் முக அழகை பார்ப்பதில்லை; அவன் உங்கள் உள்ளங்களைத் தான் பார்க்கின்றான்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், எண் : 4650   

பிலால் உடைய கல்பு, அம்மாருடைய  கல்பு, சுமைய்யா வின் கல்பு  ரழியல்லாஹு அன்ஹும் எந்த அளவிற்கு உயர்ந்தது அல்லாஹ்வின் அன்பை தவிர அனைத்தையும் அதிலிருந்து அவர்கள் எடுத்து விட்டார்கள். அல்லாஹ்விற்காக அர்ப்பணமாக வேண்டும் மறுமையின் தேடலை தவிர உலகத்தில் எந்த ஆசையும், அற்பமான எந்த எண்ணங்களையும் வைத்துக்கொள்ளவில்லை; எனவே அல்லாஹ் அவர்களை உயர்த்தினான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சொல்லக்கூடிய மற்றுமொரு ஹதீஸ்;

أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ    


உள்ளத்தில் இருக்கக்கூடிய ஒரு சதை துண்டு அது சீராகிவிட்டால் எல்லாம் சீராகிவிடும். அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டு விடும் என்று கூறி அந்த சதை துண்டு தான் கல்பு என்று சொன்னார்கள்.   (2)

அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரிஎண்: 50.    

இந்த உள்ளம் கெட்டு விடும் போது தான் (அல்லாஹ் பாதுகாப்பானாக!) மனிதனுடைய  செயல்பாடுகளில் முரண்பாடுகள் மனிதர்களுடைய செயல்களில் அல்லாஹ்விற்கு பிடிக்காத காரியங்களெல்லாம் ஏற்பட்டுவிடுகின்றன. ஒரு மனிதன் தொழுகையை நிறைவேற்றுவதில் பேணுதலாக இல்லையா? ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில்  அலட்சியம் செய்கின்றானா? அது போன்று இன்னொரு அடியான் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் பொழுது அவன் வாக்கை பேணுவதில்லையா? அவன் மோசடி செய்கின்றனா ? இப்படி இறை வழிபாடுகளில் அல்லது அடியார்கள் உடைய   ஹக்குகளில் எதில் ஒரு மனிதன் அநியாயமாக நடந்து கொண்டாலும் அது அவனுடைய செயலாக மட்டும் நீங்கள் எண்ணி விடாதீர்கள்; அவனுடைய உள்ளம் கெட்டு விட்ட காரணத்தினால் அவனுடைய செயல் இப்படி எல்லை மீறியதாக இருக்கின்றது.

அல்லாஹ்வுடைய பயம் உள்ளத்தில் இருந்திருந்தால், மறுமையில் நிறுத்தப்படும் விசாரணைக்கு அவனுடைய உள்ளத்தில்பயம் இருந்திருந்தால், அடியார்களுடைய  ஹக்குகளை மீறும் பொழுது,  அல்லாஹ் நாளை மறுமையில் நம்மை நிறுத்தி    வைத்துவிடுவானே! நமது அமல்கள் பறிபோகிவிடுமே! என்ற பயம் இருந்திருந்தால் கண்டிப்பாக இவன் ஒரு அநியாயக்காரனாக, அடியார்களின் ஹக்குகளை முறிக்க  கூடியவனாக இருக்க மாட்டான்.இப்படி  ஹுக்குகுல்லாஹ் (அல்லாஹ்வின் உரிமை) ஆக  இருக்கட்டும் அல்லது  ஹுகுக்குல் இபாத் (அடியார்களின் உரிமை) ஆக இருக்கட்டும்  ஒரு அடியான் அதில் அல்லாஹ்வுடைய கட்டளையை மீறுகின்றான் என்றால் அதற்கு அடிப்படை காரணமாக அவனுடைய கல்பு–உள்ளம் சீர் கெட்டதை தான் நம்முடைய அறிஞர்கள் பதிவு செய்கின்றார்கள்.

அல்லாஹுத்தஆலா அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அனுப்பும் போதே நபியே! உங்களுடைய பணி என்னவென்றால்நீங்கள் இந்த அடியார்களை சுத்தப்படுத்த வேண்டும்.

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில்உள்ளஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பிவைத்தான். அவர்கள்இதற்குமுன்னர்பகிரங்கமானவழிகேட்டில்இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடையவசனங்களைஓதிக்காண்பித்து, அவர்களைப்பரிசுத்தமாக்கிவைத்து, அவர்களுக்குவேதத்தையும்ஞானத்தையும்கற்றுக்கொடுக்கிறார்.

அல்குர்ஆன் 62:2   

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தாவாவை  சொல்லிக்கொடுக்கும்போது நீங்கள் குர்ஆனை ஓதி மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழையுங்கள்; யார் உங்களது அழைப்பை ஏற்று இந்த மார்கத்திற்குள் வருகின்றார்களோ நபியே நீங்கள் முதலில் அவர்களது உள்ளத்தை தஸ்கியா செய்யுங்கள்; அவர்களின் உள்ளத்தை நீங்கள் பண்படுத்துங்கள்;  ஈமானைக் கொண்டு இறையச்சத்தை கொண்டு மறுமையை கொண்டு சொர்க்கத்தின் ஆசையைகொண்டு நரகத்தின் பயத்தை கொண்டு மறுமையில் மஹ்ஷரின் அந்த காட்சிகளை கொண்டு அந்த நினைவைக் கொண்டு அவர்களது உள்ளத்தை நீங்கள் பரிசுத்தபடுத்துங்கள்.

அல்லாஹுத்தஆலா அடுத்த கடமையாக சொல்லி தருகின்றான் அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுத் கொடுங்கள்; இந்த மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளை கற்றுத் கொடுங்கள். (அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்.)
இன்று நம்மிடத்தில் இல்மிற்கு–கல்விக்கு பஞ்சமில்லை ஆனால் ஹலால் ஹராமை நாம் அறிந்திருக்கின்றோமா? அதன்படி நம்மால் நம் வாழ்க்கையில் செயல்பட முடிகின்றதா? இபாதத் உடைய முக்கியத்துவம் நமக்கு தெரியும்; வணக்க வழிபாடுகளின் அவசியம் நமக்கு தெரியும்; அதேபோன்று அடியார்களின் ஹக்குகள்  -தாய் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும், உறவுகளுக்கு என்ன செய்ய வேண்டும், கொடுக்கல் வாங்கல் வியாபாரங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எல்லாம் நமக்கு தெரியும். ஆனால், இன்று யாருக்கு அதிகம் தெரிகின்றதோ அவர்தான் அந்த அளவிற்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறக்கூடியவராக இருக்கின்றார். காரணம் என்ன அந்த தக்வா உள்ளம் பண்படாததாக இருக்கின்றது. ஆகவேதான் அல்லாஹ் அவனுடைய தூதருக்கு கொடுத்த மூன்று கடமைகளில் ஒன்று நீங்கள் அவர்களுடைய உள்ளங்களை பண்படுத்துங்கள். எந்த ஒரு நேரத்தில்கூட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்சிறு விஷயங்களில் கூட அவர்கள் சகித்துக் கொள்ளவில்லை உள்ளம் கெட்டு இருக்குமேயானால்.

صحيح البخاري - (1 / 52)

29 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاصِلٍ الْأَحْدَبِ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ

بِالرَّبَذَةِ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ

ஒருமுறை இரண்டு ஸஹாபாக்களுக்கு இடையே கருத்து வேற்றுமை பிணக்கு வாக்குவாதம் ஏற்பட்டு விடுகின்றது.ஒரு சஹாபி இன்னொருவரை அவருடைய தாயைகூறி கொஞ்சம் தரக்குறைவாக பேசி விடுகின்றார்; அந்த சஹாபி ஓடோடி வருகின்றார்; அல்லாஹ்வின் தூதரே! இன்ன தோழர் எனது தாயை இவ்வாறு பேசி விட்டார்; கருப்பியின் மகனே என்று; என்னுடைய இனத்தை கூறி என்னுடைய நிறத்தை கூறி பழித்து விட்டார் என்று வரும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கோபத்தை பாருங்கள்; அந்தப் பலித்த சஹாபியிடம் இன்னும் உங்கள் இடத்தில் மடமை காலத்தின் பழக்கங்கள் இருக்கின்றதா?

அறிவிப்பாளர்: அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரிஎண்: 29,5590

இன்று நாம் இதெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றோம். அன்று அவர்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம், இன்று நம்முடைய பார்வையில் இதைவிட மழை போன்ற வார்த்தைகளை மனிதர்களுக்கு நாம் சொல்லி விடுகின்றோம்; நம்முடைய உறவுகளுக்கு சொல்லிவிடுகின்றோம்; நாம் அன்றாடம் பழகக்கூடிய நண்பர்களிடத்தில் சொல்லி விடுகின்றோம்; இதையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டிருந்தால் நம்மை எல்லாம் முர்தத் என்றேசொல்லி இருப்பார்கள்; அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்கவேண்டும்; அல்லாஹ் மன்னிக்க வேண்டும்; ஒரு சின்ன வார்த்தை அவனுடைய தாயுடன் சேர்த்து சொல்லிவிட்டதால் எப்படி வெகுண்டு எழுந்தார்கள்? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் உன்னிடம் அந்த அறியாமைக்கால வாடை இருக்கின்றது; அது தான் உன்னை இப்படி பேச வைத்தது என்று கூறினார்கள்.

அன்பு சகோதரர்களே! ஒரு மனிதனுடைய நாவிலிருந்து வெளிப்படக்கூடிய வார்த்தையாக இருக்கட்டும், அவனுடைய செயல்களாக இருக்கட்டும் எல்லாம் அவனுடைய உள்ளத்தில் இருந்து வருகின்றது. ஆகவே தான் இந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவது இந்த மார்க்கத்தின் மிக முக்கியமான கடமைஎன்று அல்லாஹ் கூறுகின்றான்.

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

  ஆத்மாவின்மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன்மீதும், அதன்நன்மைதீமைகளை அதற்கறிவித்தவன்மீதும்சத்தியமாக! எவர் (பாவங்களைவிட்டும்தன்ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக்கொண்டாரோ அவர், நிச்சயமாகவெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோஅவன், நிச்சயமாகநஷ்டமடைந்துவிட்டான்.

அல்குர்ஆன் 91: 7-10 

ஒரு மனிதன் ஒரு காரியத்தை செய்யும் பொழுது முதலாவதாக அல்லாஹ் அவனது உள்ளத்தில் படைத்து இருக்கக்கூடிய தூய ஆத்மா சொல்லும்; இந்த காரியத்தை செய்யாதே!  இது பாவம்; இதன் பக்கம்  நெருங்காதே! அது உனக்கு வேண்டாம் என்று. இரண்டாவது முறை செய்யும் பொழுது மீண்டும் சொல்லும்; மூன்றாவது முறை அதனுடைய பலம் குன்றிவிடும்; நான்காவதாக அது விலகிக் கொள்ளும், ஷைத்தான் சவாரி செய்ய ஆரம்பித்து விடுவான்; கெட்ட ஆன்மா தன் மீது சவாரி செய்ய ஆரம்பித்துவிடும்; பிறகு அந்தக் கெட்ட ஆன்மா எந்த செயலை அவனுடைய உண்மையான ஆன்மா பாவம் என்று உணர்த்தியதோ அதையே இவனுக்குள் இருக்கின்ற கெட்ட ஆன்மா அது சரி, அதுதான் நியாயம் என்று இவனுக்கு அந்த பாவத்தை அலங்கரிக்க ஆரம்பித்துவிடும்.இதுவரை பாவத்தை வெறுத்தவன் இப்பொழுது பாவத்தை விரும்ப ஆரம்பித்து விடுவான்.இதுவரை பாவத்தை எதிர்த்தவன் இப்பொழுது பாவத்திற்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்து விடுவான். இதுவரை பாவத்தைஇப்பொழுதுஅதை பரப்ப ஆரம்பித்து விடுவான்.
  

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் இது விஷயத்தில் நமக்கு அழகிய முறையில் வழிகாட்டி உள்ளார்கள்;

صحيح مسلم - (12 / 403)

4632 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ قَالَ

سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ

அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், எண்: 4632

ஒரு சஹாபி வருகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? பாவத்தை எப்படி நான் புரிந்து கொள்வது? இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு நீண்ட பட்டியலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வாழ்நாள் எல்லாம் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒரு அளவுகோலை தனது கண்ணுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தனது மனதில் பதிய வைத்துக்கொண்டால் போதும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அவர்கள் மனப்பாடம் செய்யவில்லை என்றாலும்  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவருக்கு ஒரு அளவை கொடுத்தார்கள்.

உன்னுடைய உள்ளத்தில்எது உனக்கு உறுத்தலை ஏற்படுகின்றதோ, உள்ளத்தை குறை கூறுகின்றதோ, இதை நீ செய்கிறாயே  செய்யலாமா? உன்னுடைய உள்ளத்தை எது உறுத்துகிறதோ குத்துகிறதோ அது பாவம் விட்டுவிடு என்று சொன்னார்கள். எவ்வளவு அழகான வழிகாட்டுதல். எவ்வளவு அழகான வார்த்தைகள். இந்த உள்ளத்தை அல்லாஹுத்தஆலா சுத்தமாக படைத்திருக்கின்றான். (அல்லாஹுத்தஆலா நம்மைப் பாதுகாக்க வேண்டும் நம்மை மன்னிக்க வேண்டும்) நாம்தான் மீண்டும் மீண்டும் பாவங்களை செய்து பாவங்களிலேயே திரும்பத்திரும்ப செய்து அந்த உள்ளத்தை களங்கப்படுத்தி விடுகின்றோம்; அந்த உள்ளத்தை அசிங்கப்படுத்தி விடுகின்றோம்.
 

இந்த உள்ளம்  சுத்தத்தைப்பற்றி நமது அறிஞர்கள் எவ்வளவு அதற்கு முக்கியத்துவத்தை  கொடுத்து அந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவதில் பண்படுத்துவதில், அந்த உள்ளத்தை அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு நேர்மையைக் கொண்டு ஒழுங்குபடுத்துவதில் எவ்வளவு பிரயாசை எடுத்து இருக்கின்றார்கள்.

இன்று நாம் நம்முடைய ஆடையை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கின்றோம்; காலையில் தினமும் எழுந்தவுடன் குளிப்பதற்கு சுத்தம் செய்வதற்கு நமது உடலில் எந்த ஒரு கரையையும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை. ஆனால் உள்ளமோ மொத்தமாக கரைபடிந்திருந்தாலும் அதை கண்டுகொள்வது கிடையாது. ஆடையில் உடலில் நாம் ஒரு சிறுகரையை கூட ஒத்துக் கொள்ள தயாராக இல்லை. ஆனால் நம்முடைய சொல்லால், செயலால், குணங்களால் தினம் தினம் இந்த உள்ளத்தில் குப்பைகளை அசிங்கங்களை அழுக்குகளை அல்லாஹ்விற்கு பிடிக்காத குணங்களை ஒன்று சேர்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
  
இமாம் சுஃப்யான் இப்னு உயைனா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நம்முடைய வெளிரங்கம்  நம்முடைய உள்ரங்கம் பற்றி சொல்லக்கூடிய ஒரு அழகான வார்த்தையை பாருங்கள்;

يقول سفيان بن عُيَينة - رحمه الله -: "إذا وافَقتِ السَّريرة العلانية فذلك العدل، وإذا كانت السريرة أفضل من العلانية فذلك الفضْل، وإذا كانت العلانية أفضَل مِن السَّريرة فذلك الجور""صفوة الصفوة" (2: 234)

ஒரு மனிதன் நல்லதை பேசுகின்றான்; நல்லதின் பக்கம் அழைக்கின்றான்; அவனுடைய வெளிரங்கத்தை பார்த்தால் நல்லவனாக தோன்றுகிறது; அவனுடைய உள்ளமும் அப்படியே இருந்து விட்டால் அது நீதம்.ஒரு மனிதன் பேசுவதை விட அவன் வெளிப்படுத்துவதை விட அவனது உள்ளம் சிறப்பாக இருந்ததுவிட்டால் அதுவோ மிகப்பெரிய சிறப்பு; அதாவது அவனுடைய செயலில் வெளிப்படக்கூடிய தக்வாவை விட அவன் உள்ளத்தில் இருக்கக்கூடிய தக்வா சிறந்ததாக இருக்கிறது; அதுவோ மிகச் சிறப்பு.

அடுத்ததாக சொல்கிறார்கள்; (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்) நாம் இந்த குணத்தில் தான்   இருக்கிறோமா என்ற பயத்தில் நாம் இருக்க வேண்டும்; ஒரு மனிதன் பேசுகின்றான்; அவனது பேச்சு என்னமோ சிறப்பாக இருக்கின்றது; ஆனால் அவன் உள்ளம் அப்படி இல்லை;  அந்தரங்கம் அப்படியில்லை; வெளிப்படுத்துவது என்னவோ ஹஸன் பஸரியை போன்று, முஹம்மது இப்னு சீரினைப்  போன்று. ஆனால் அவனது உள்ளமோ பிர்அவ்னைப் போன்று இருக்கின்றது;  அவனுடைய உள்ளமோ காரூனுடைய உள்ளதைப் போன்று இருக்கின்றது; வெளிப்பாடுகள் பெரிதாக இருக்கின்றது; ஆனால் உள்ரங்கமோ கெட்டுப்போய் இருக்கின்றது; இதுதான் மிகப்பெரிய அநியாயம்; மிகப் பெரிய அக்கிரமம் என்றுகூறினார்கள்.

இன்று நாம் மக்களுக்கு முன்னால் வரும்பொழுது மக்களிடத்தில்  பேசும்பொழுது நீதத்தை பேசுகின்றோம்; ஒழுக்கத்தை பேசுகின்றோம்; இறையச்சத்தை பேசுகின்றோம்; ஆனால் நம்முடைய வாழ்க்கையில் நாம் தனித்து விடும் பொழுது நாம் அந்த தக்வாவை பேணுக்கின்றோமா? அல்லாஹ்விடம் நமக்குள்ள அந்த உறவை பேணுக்கின்றோமா? அடி யாருடைய ஹக்குகளில் அதிகாரம் இருக்கும்போது நாம் ஒரு காரியத்தை செய்யும் பொழுது நம்மை யாரும் கேட்கமாட்டார், நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை வரும் பொழுது நாம் எப்படி நடந்து கொள்கின்றோம்? மக்களை பயந்து இன்று எத்தனையோ தீமைகளை மக்கள் விடுகின்றார்கள்; ஆனால் அல்லாஹ்வை பயப்படுவதில்லை.
அல்லாஹ்வுடைய பயம் அவர்களை தடுப்பதில்லை.மக்களுடைய பயம் தடுக்கின்றது. எப்போ  மக்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணுகின்றானோ அப்பொழுது அனைத்து தீமைகளுக்கும் அவன் சொந்தக்காரனாக மாறி விடுகின்றான்.

நம்முடைய  சஹாபாக்கள்  தாபியீன்கள் இதற்குமிகப்பெரிய உதாரணமாக இருக்கின்றார்கள்.
இந்த உள்ளத்தை பற்றி அவர்கள் பேசியதையும், இந்த உள்ளத்தின் சுத்தத்திற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம்பற்றியும் பல கிரந்தங்கள் எழுதினாலும் முடிக்க முடியாது.
 

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து சொல்லக்கூடிய வார்த்தையை பாருங்கள்; உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்; யா அல்லாஹ் !  நான்  அபூபக்ரை அவருடைய வெளியிரங்கத்தை விட  ௨ள் ரங்கம் சிறந்தது என்பதாகஅறிந்து வைத்துள்ளேன்.

இன்று யாராவது நமக்கு இப்படிப்பட்ட ஒரு சான்றை கொடுக்க முடியுமா? இன்று நம்மில் யாராவது ஒரு நண்பனுக்கு அல்லது சகோதரன் சகோதரிக்கு கணவன் மனைவிக்கு, மனைவி கணவனுக்கு இப்படிப்பட்ட சான்றை கொடுக்க முடியுமா? (அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!) மேலும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்; அவர்களைப் போன்று எங்களில் யாரும் இல்லை; அவர்களுடைய வெளிரங்கத்தைவிட அவர்களுடைய உள்ளரங்கம் மிகச் சிறந்தது.இதைக் கொண்டுதான் அல்லாஹ்விடத்தில் அவர்கள்கண்ணியம்அடைந்தார்கள்.

மேலும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்கூறினார்கள்;

شعب الإيمان للبيهقي - (1 / 42)

35 - أخبرنا أبو عبد الله الحافظ ، حدثنا أبو بكر أحمد بن إسحاق الفقيه ، حدثنا محمد بن عيسى بن السكن ، حدثنا موسى بن عمران ، حدثنا ابن المبارك ، عن ابن شوذب ، عن محمد بن جحادة ، عن سلمة بن كهيل ، عن هزيل بن شرحبيل قال : قال عمر بن الخطاب رضي الله عنه : « لو وزن إيمان أبي بكر بإيمان أهل الأرض لرجح (1) بهم»

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானைஒரு தட்டிலும் உலக மக்கள் அனைவரின் ஈமானை ஒரு தட்டில் வைத்தாலும் அபூபக்ரின் தட்டுதான் கணமாக  இருக்கும் என்று கூறினார்கள்.

நூல்: ஷீஅபுல் ஈமான் பைஹகி எண்: 35.


இது எதனால்? அந்த ஈமானோடு இறை நம்பிக்கையோடு சேர்ந்த நற்குணங்கள் அந்த ஈமானோடு அவர்களது உள்ளத்தில் இருந்த தக்வா –இறையச்சம், தனிமையில் இருந்தாலும் சரி சபையில் இருந்தாலும் சரி.  நீதம், நேர்மை, ஒழுக்கம் என்பதிலே அவர்கள் முன்னுதாரணமாக இருந்தார்கள்; எனவே தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவர்களுக்கு இப்பேற்பட்ட உயர்வை சொன்னார்கள்.

ஒருமுறை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் இடத்திலே தபுஉதாபியின்களில் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களைப்பற்றி பிரஸ்தாபித்து சொல்லப்படுகின்றது. அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹதீஸிலும்  சரி,  பிக்களிலும்  சரி,  அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத்  செய்வதிலும் சரி, ஒரு சிறந்த முன்னுதாரணமாக, இமாமாக -முன்னோடியாக திகழ்ந்தார்கள். அப்போது இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு முபாரக் பற்றி மக்கள் பேசும்பொழுது இமாம் அஹமது என்ன கருத்து கூறினார்கள் என்றால்.

قال أحمد: ما رفع الله ابنَ المبارك إلا بخبيئةٍ كانت له.....

இந்த உள்ளத்தை கெடுக்கக் கூடிய இந்த உள்ளத்தை பாழாக்கக்கூடிய கெட்ட குணங்களில் ஒன்று முகஸ்துதி ரியா இது தான் மனிதனை அழித்தொழிக்க கூடியது. இமாம்ஃபுழைழ்  இப்னு இயாழ், இமாம் சுஃப்யான் சவுரி அவர்கள் சொல்கின்றார்கள்; இந்த தூய்மை இஹ்லாஸ் உள்ளத்தில் வருவதற்கு நாங்கள் போராடுவது போன்று வேறு எதற்கும் நாங்கள் போராடியது இல்லை.அவ்வளவு கஷ்டமாக இருக்கும். இந்த இடத்தில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு இமாம் அஹ்மது கூறிய சான்று என்ன தெரியுமா?   அல்லாஹூத்தஆலா அப்துல்லாஹ் இப்னு முபாரக்கிற்க்கு இப்பேற்பட்ட கண்ணியத்தை கொடுத்தான் என்றால் அது அவர்களுடைய உள்ளத்தின் தன்மையினால் அவர்களுடைய நற்குணத்தினால்ஆகும். அது என்ன நற்குணம்? தன்னுடைய நல்ல அமல்களை எப்பொழுதும் மறைத்துக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹுத்தஆலா அவர்களுடைய கண்ணியத்தை உயர்த்தினான். தான் செய்த ஜிஹாத் தன்னுடைய  ஸதக்கா தன்னுடைய மற்ற மற்ற பணிகள்  இப்படியாக அனைத்தையும் மறைத்துக் கொண்டே இருந்தார்கள். சில நேரங்களில் சிலர் அவர்களுடைய ரகசியமான அமல்களை பார்த்து அறிந்து கொண்ட பொழுது தன்னுடைய அந்த மாணவர்களிடத்தில் சத்தியம் வாங்கினார்கள். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இதை நீ யாருக்கும் சொல்லி விடக்கூடாது என்பதாக. அன்பு சகோதரர்களே! இன்று நாம்   எப்படி இஸ்ரவேலர்களை போன்று, தான் செய்யாததை கொண்டு மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

தன்னிடத்தில் இல்லாத குணங்களை கொண்டு மக்கள் தம்மை புகழ்வதை விரும்புகின்ற நிலையில் நம்முடைய உள்ளம் மோசமடைந்து விட்டது. பாவங்களை மக்களுடைய கண்களில் இருந்து மறைக்க முயற்சிக்கின்றோம். செய்யக் கூடிய சிறிய சிறிய அமல்களை கூட மக்களுக்கு வெளிப்படுத்துகின்றோம். ஆனால் அவர்கள் பாவங்களை அல்லாஹ்வுக்கு பயந்து விட்டுவிட்டார்கள்; தங்களுடைய அமல்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்பதாக மக்களுடைய பார்வையிலிருந்து அவர்கள் மறைத்துக் கொண்டு இருந்தார்கள்.

அன்பு சகோதரர்களே! அந்த நல்லவர்கள் தங்களுடைய அமல்களை அல்லாஹ்விற்காக மறைத்து மறைத்து செய்தார்கள்; இஹ்லாஸிற்காக எவ்வளவு அவர்கள் பாடுபட்டார்கள் தெரியுமா?  அலி இப்னு ஹூசைன் அவர்கள் சதக்கா செய்வதாக இருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா? சதகா விற்காக உணவுகளை எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் அந்த காலத்தில் இரவுகளில் இப்போது இருப்பதைப் போன்று தெருவிளக்குகள் இருக்காது. இரவு வந்து விட்டால் அவ்வளவுதான் மக்கள் எல்லாம் ஒதுங்கி விடுவார்கள். அந்த இரவில் சென்று மிஸ்கின் உடைய வீடுகளுக்கு தேடித்தேடி சென்று அவர்களுக்கு கொடுப்பார்கள். அல்லாஹ் மட்டுமே தன்னுடைய தர்மத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த அந்த தர்மத்தின் அந்தப் பண்பை பாருங்கள்.

சலாம் இப்னு அபி முத்திய் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அய்யுப் சுஹ்தியாணி ரஹிமஹுல்லாஹ்அவர்களுடைய குணத்தைப் பற்றி சொல்லும் பொழுது,

يقوم الليل يخفي ذلك، فإذا كان قبيل الصبح رفع صوته كأنه قام في تلك الساعة لم يكن يشعر هم انه كان قد قام قبلها يوقت طويل

இவர்கள் இரவெல்லாம் வணக்க வழிபாடு செய்வார்கள் சுப்ஹ்  நேரத்தில் இரவெல்லாம் தூங்கி காலையில் எழுந்தால் எப்படி அசைந்து சத்தம் கொடுத்து எழுந்திறிப்பாரோ அதுபோன்று எழுந்திருப்பார்கள். மக்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள்? உஸ்தாத் இப்பொழுதுதான் எழுந்து இருக்கிறார் என்று. ஆனால் அவர்களோ மிக நீண்ட நேரத்திற்கு முன்பாகவே எழுந்து வணக்க வழிபாடுகளை செய்து கொண்டு இருந்தார்கள்.

இன்று நம்முடைய அமல்களை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். அந்த முன்னோர்கள் தான் செய்த அமல்களை மறைத்தார்கள். அல்லாஹுத்தஆலா எச்சரிப்பது போன்று  இன்று நம்முடைய பாவம் எப்படி இருக்கிறது என்றால், அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ (2) كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

 நம்பிக்கையாளர்களே! நீங்கள்செய்யாதகாரியங்களை (செய்ததாகபிறரிடம்) ஏன்கூறுகிறீர்கள்? நீங்கள்செய்யாதகாரியங்களை(ச்செய்ததாகக்) கூறுவதுஅல்லாஹ்விடத்தில்பெரும்பாவமாகஇருக்கிறது.

அல்குர்ஆன் 61:2,3  

அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்; தான் செய்யாத அமலை தான் செய்ததாக கூறுவது; தன்னிடத்தில் இல்லாத குணத்தை இருப்பதாகக் கூறுவது; தான் செய்யாத ஒரு நல்ல காரியத்தை தான் செய்ததாக கூறுவது; இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கோபத்திற்கு உண்டான காரியம்.

عن إبراهيم قال: كان مسروق يرخي الستر بينه وبين أهله ثم يقبل على صلاته ويخليهم ودنياهم


இமாம் மஸ்ரூக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரத்தில் தங்களுடைய குடும்பத்தாரோடு பேசி முடித்துவிட்டால்  தங்களுடைய குடும்பத்தார்கள் தன்னைப் பார்க்காத அளவிற்கு தனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரையை ஏற்படுத்திக் கொள்வார்கள். அவர்களை அவர்களுடைய துணையோடு விட்டுவிட்டு இவர்கள் இறை வழிபாடுகளில் தங்களுடைய நேரத்தை கழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.இது அவர்களுடைய உள்ளத்தில் இருந்த இஹ்லாஸ்மற்றும் அல்லாஹ்வுடைய முஹப்பத்–அன்பை காட்டுகிறது. இன்று அல்லாஹ்வுடைய அந்த முஹப்பத் குறைந்துகொண்டே போகின்ற காரணத்தினால் தான் எதுவாக இருந்தாலும் சரி மக்களிடத்தில் இருந்து ஆதாயம் கிடைக்கின்றதா? எப்படி மக்கள் இன்று மாறிவிட்டார்கள்? உலக ஆதாயத்தை முன்வைத்தே நல்ல அமல்களையும் செய்கின்ற அளவிற்கு உள்ளங்கள் கெட்டுப் போய் விட்டன.

இமாம் அஃமஷ்  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்ராஹீம் நஹஈ அவர்களை குறித்து கூறுகிறார்கள்;

இமாம் இப்ராஹீம் நஹஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குர்ஆனை அதிகம் ஓதுவார்கள்; எப்படி ஓதுவார்கள் என்றால் குர்ஆன் ஓதிக் கொண்டே இருப்பார்கள், கையில் ஒரு துண்டு வைத்துக் கொண்டிருப்பார்கள்; யாராவது தன்னை சந்திக்க வந்து விட்டார்கள் என்றால் குர்ஆனை மூடிவிட்டு அதன் மீது துண்டை போட்டு விடுவார்கள்; குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்ததை அவர் அறியாத அளவிற்குதான் ஏதோ சும்மா உட்கார்ந்து இருப்பதை போன்று வந்த மனிதருக்கு அவர்கள் காட்டிக் கொள்வார்கள். தான் ஓதிக்கொண்டு இருப்பதை போன்று காட்ட மாட்டார்கள்.

இன்று எப்படி? சர்வசாதாரணமாக அப்பொழுதுதான் குர்ஆனை ஓத ஆரம்பித்திருப்பார்கள்; போன் வரும் நான் குர்ஆன் ஓதி கொண்டிருக்கிறேன்; புறகு பேசுங்கள்.  நான் வியாழக்கிழமை நோன்பு வைத்திருக்கிறேன்; எனவே உங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வர முடியாது. சின்ன சின்ன சந்தர்ப்பங்கள் கிடைத்தால் கூட உடனே இபாதத்துகளை  வெளிக்காட்டுவது மட்டுமல்ல விளம்பரமே படுத்தி விடுவார்கள்.

சில அறிஞர்களின் கூற்றை சமீபத்தில் பார்த்தோம்; சில பேர் தங்களுடைய வாட்ஸ்அப்களில் அதில் ஸ்டேட்டஸ் வைப்பார்கள்; நானும் உம்ராவில்  இருக்கிறேன்; நான் காபாவிலே  தவாபு செய்து கொண்டிருக்கின்றேன்; நான் துஆவிலே இருக்கின்றேன்; இப்படியாகதன்னுடைய இபாதத்தை தன்னுடைய ஸ்டேட்டஸ்களாக வைத்துக்கொண்டு செயல்படக்கூடிய புதிய முகஸ்துதியின்  காலகட்டம் வந்துவிட்டது.


நம் முன்னோர்கள் எப்படி இமாம் ரபீஃ அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டு இருப்பார்கள்; யாராவது வந்துவிட்டால் தன்னுடைய ஆடையால் அதை மறைத்துக் கொள்வார்கள். இப்படித்தான் அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்விற்கு தான் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தெரிந்து விடக்கூடாது என்று இருப்பார்கள்.

இமாம் முஹம்மது இப்னு சீரின் அவர்களைப் பற்றி அவர்களது மாணவர்கள் கூறுகின்றார்கள்; இமாம் முஹம்மத் அவர்கள் இரவெல்லாம் அழுது கொண்டே இருப்பார்கள்; பகலில் மக்களிடத்திலே பழகினால் சிரித்துக் கொண்டிருப்பார்கள். இன்று நாம் எப்படி மக்கள் யாராவது நம்மை சந்திக்க வந்து விட்டால் அப்படியே மறுமையின் கவலையில் மூழ்கி இருப்பதைப் போன்று அப்படியே ஆஹிரத்தைப் பற்றிப் பேசுவது; துன்யாவை  மறந்து ஞானி மாதிரி துறவி மாதிரி பேசுவது; அதற்கு பிறகு தனிமையில் பார்த்தால் தான் தெரியும்; இவரது நிலைமை. அன்பு சகோதரர்களே! இது என்ன ஒரு முரண்பாட்டை காட்டுகின்றது அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும்!
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எப்படி இருந்தார்கள்?

صحيح البخاري - (10 / 238)

2809 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ إِسْمَاعِيلَ عَنْ قَيْسٍ عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّي لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا

மக்களை சந்தித்தால் புன்சிரிப்பு உடையவர்களாக, தனிமையில் அழக்கூடியவர்களாக கவலை உடையவர்களாக இருப்பார்கள்.

அறிவிப்பாளர்: ஹரீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 2809

இன்று நாம் மக்களுக்கு முன்னால் வரும் பொழுது அப்படியே மறுமை உடைய கவலை தீனுடைய கவலை உம்மத் உடைய கவலை இப்படியாக காட்டிக் கொள்வோம்; தனிமையிலே இருக்கும்பொழுது எந்தவித உணர்வும் இல்லாதவர்களாகஇருப்போம். இப்படிப்பட்ட நிலை இன்று பெரும்பாலும் காணப்படுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறினார்கள்;

وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ  

அர்ஷின் நிழலில் இருக்கக்கூடிய சிறந்தவர்களில்  யார் தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அழுகின்றாறோ அல்லாஹ்வை நினைத்து அழுததால் அவருடைய கண்கள் அழுகையால் பீரிட்டனவோ அவர் அர்ஷ் உடைய நிழலிலே இருப்பார்கள் என்றுகூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: எண்:620   (3)

அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா இடத்தில் இந்த உள்ளத்தின் தூய்மைக்காக மிக மிக விசேஷமாக நாம் துஆ செய்ய வேண்டும்.அல்லாஹ்தஆலா மறுமையைப் பற்றி சொல்லும் பொழுது,

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

அந்நாளில், பொருளும்பிள்ளைகளும்ஒருபயனுமளிக்காது. ஆயினும், பரிசுத்தஉள்ளத்துடன் (தன்இறைவனாகிய) அல்லாஹ்விடம்வருபவர்தான் (பயனடைவார்).

அல்குர்ஆன்26  : 88,89

கல்புன் சலீம். அதாவது பரிசுத்தமான உள்ளம். கெட்ட குணங்களை விட்டு, ஷிர்க்கை விட்டு, நீஃபாக்கை விட்டு,  ரியாவை  விட்டு, இன்னும் அல்லாஹ்விற்கு  பிடிக்காத ஒவ்வொரு தீய குணங்களை விட்டு, பாதுகாக்கப்பட்ட  அந்த உள்ளத்தோடு யார் வருகின்றாரோ  அவருக்குத்தான் நாளை மறுமையில் வெற்றி உண்டு.

قَالَ اللَّهُ هَذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ

உண்மைசொல்லும்சத்தியவான்களுக்கு அவர்களுடையஉண்மைபலனளிக்கக்கூடியநாள்இதுதான்என்று அல்லாஹ் கூறுவான்.

அல்குர்ஆன் 5: 119

பொய்யர்கள், அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அமல்களை செய்தவர்கள் அல்லாஹ்வை மறந்தவர்கள் இவர்கள் நாளை மறுமையில் வெற்றி பெறவே முடியாது. இவர்கள் நபிமார்களின் தந்தையாக இருந்தாலும் சரி, நபிமார்களின் பிள்ளையாக இருந்தாலும் சரி.

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ

நாளைமறுமையில்நம்முடையரகசியங்கள்வெளிகொண்டுவரப்பட்டுவிடும்.

அல்குர்ஆன் 86:9  

அறிஞர்களில் ஒருவர் சொல்கின்றார்கள்; யார் அல்லாஹ்வுடைய பயத்தினால் தவறான எண்ணங்களை தவறான செயல்களை விட்டு விடுகின்றாரோ கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா அந்த தீமையிலிருந்து அவரை பாதுகாப்பான். அத்தகைய உள்ளத்திற்காக நாம் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யவோமாக! நமது உள்ளங்களை சுத்தப்படுத்திக் கொண்டே இருப்போமாக! அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா பாதுகாக்கப்பட்ட உள்ளத்தையும் பரிசுத்தம் ஆக்கப்பட்ட உள்ளத்தையும் தந்தருள் புரிவானாக!


            ஆமீன்

صحيح مسلم - (12 / 426)-1

4650 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحَاسَدُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ بِحَسْبِ امْرِئٍ مِنْ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ أُسَامَةَ وَهُوَ ابْنُ زَيْدٍ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ كُرَيْزٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ دَاوُدَ وَزَادَ وَنَقَصَ وَمِمَّا زَادَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلَا إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَشَارَ بِأَصَابِعِهِ إِلَى صَدْرِهِ

صحيح البخاري - (1 / 90)-2

50 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ

صحيح البخاري - (3 / 51)-3

620 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

 

Website: http://www.darulhuda.net/