HOME      Lecture      துஆவின் அவசியம் | Tamil Bayan - 733   
 

துஆவின் அவசியம் | Tamil Bayan - 733

           

துஆவின் அவசியம் | Tamil Bayan - 733


துஆவின் அவசியம்!
 
தலைப்பு : துஆவின் அவசியம்!
 
வரிசை : 733
 
இடம் : மஸ்ஜிதுல் தக்வா, குனியமுத்தூர்
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-08-2022 | 15-01-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய சகோதரிகளே! தாய்மார்களே! அல்லாஹ்வின் அருளால் இந்த மாலை நேர அமர்விலே துஆவை பற்றி சில விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் உடைய ஆதாரங்களோடு நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.
 
துஆ என்றால் என்ன? துஆ என்றால் அல்லாஹ்வை அழைத்து, அவனுடைய அருளை வேண்டுவதுதாகும், துஆ என்றால் அல்லாஹ்வை அழைத்து அல்லாஹும்ம, ரப்பே, என் இறைவா! இப்படி அல்லாஹ்வை அழைத்து அவனுடைய அருளை, அதாவது அவனிடம் என்ன நன்மை கிடைக்கின்றனவோ, அந்த நன்மைகளை நாம் கேட்பதுதாகும். அல்லாஹ்விடத்தில் நம்முடைய தேவைகளை கேட்பது இது துஆவாகும், அல்லாஹ்விற்கு இபாதத்தில், வணக்க வழிபாட்டில் மிகவும் பிடித்தமானது துஆவாகும், எல்லா இபாதத்துகளும் துஆவோடு சேர்ந்துவிடும், வணக்க வழிபாடுகளிலேயே தலையான ஒரு இபாதத்து அதுதான் தொழுகை.
 
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم «بُنِيَ الإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَان
 
ஷஹாதவிற்க்கு அடுத்த கடமை, என்ன கடமை? தொழுகை சலாஹ் என்றால் அரபியிலே சலாஹ் என்ற பதம் இருக்க, அரபி வார்த்தைகளிலே இந்த சலாஹ் என்பதற்கு அரபி மொழியில் என்ன நேரடி பொருள் என்றால் துஆ கேட்பதுதாகும்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 16, புகாரி எண் : 8
 
இப்ப நாம்  சொல்றோம் அல்லாஹும்ம   ஸல்லி அலா முஹம்மதின் ஒரே வார்த்தை தான் சலாஹ் என்றால் துஆ, தொழுகையை துஆக்களால் நிரம்பி இருப்பதால் தொழுகைக்கு துஆ என்று பெயர்‌ வைக்கப்படுகிறது.
 
தொழுகை அதனுடைய தொடக்கத்திலிருந்து அதனுடைய கடைசி வரைக்கும் அல்லாஹ் விடத்தில் துஆ கேட்டுக்கொண்டே இருக்கிறோம், குர்ஆன் ஓதுகிறோம் அதுவும் துஆ,  தக்பீர் கட்டுகிறோம், அதற்க்கு பிறகு ஸனா ஓதுகிறோம், வஜக்த் ஓதுகிறோம், அல்லாஹும்ம பாரிக் ஓதுகிறோம் அதுவும் துஆவாகும். பிறகு குர்ஆன் ஓதுகிறோம், அதிலும் துஆ வருகிறது, ருக்கூ செய்து அல்லாஹ்வை புகழ்கிறோம், சுபஹான ரப்பியல் அலீம் அல்லாஹ்வை புகழ்வது ஒரு துஆவாகும்.
 
ஏனென்றால் அல்லாஹ் விடத்தில் நாம் எதையும் கேட்கும் போது எப்படி கேட்கவேண்டும்? அதன் பிறகு எழுந்து நிற்கிறோம், அல்லாஹ்வை தக்பீர் செய்கிறோம், சுஜூது போறோம் திரும்ப அல்லாஹ்வை புகழ்கிறோம்,
 
சுபஹான ரப்பியல் அஃலா. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், இப்ப நீங்க நின்ற நிலையிலிருந்து அல்லாஹு அக்பர் சொல்லி அல்லாஹ்வை உங்களுடைய செயலாலும், உங்களுடைய வார்த்தைகளாலும் அல்லாஹ்வே மிகைப்படுத்துகிறீர்கள், அல்லாஹு அக்பர் உள்ளத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
 
உங்களுடைய சொல்லால், அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துகின்றீர்கள். அல்லாஹ்வை கம்பீரப்படுத்துகின்றீர்கள், அல்லாஹ்வை கண்ணியப்படுத்துகின்றீர்கள், அல்லாஹ்வை கண்ணியப்படுத்திக்கொண்டு இருக்கீங்க, அல்லாஹுத்தஆலாவை அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டிவிட்டு நீங்கள் நிற்கும் அந்த நிலை, அந்த சுஜூதுடைய இடத்தை பார்க்கும் பொழுது,
 
قالَ: ما الإحْسَانُ؟ قالَ: أنْ تَعْبُدَ اللَّهَ كَأنَّكَ تَرَاهُ، فإنْ لَمْ تَكُنْ تَرَاهُ فإنَّه يَرَاكَ
 
அல்லாஹ்விற்கு முன்னாடி நிற்கிற அந்த உணர்வு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் இஹ்சான் என்றால் என்ன? யார் கேட்டார்கள்? ரசூலுல்லாஹ் இடத்திலே ஜிப்ரீல் கேட்கிறார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே கேட்டார்கள். நபியே இஹ்சான் என்றால் என்ன? நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் சொல்கிறார்கள்: ஜிப்ரிலே நீங்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும், எப்படி என்றால்? அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போல,
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 50, குறிப்பு (1)
 
ஒரு பெரிய கம்பீரமான ஒரு அரசரைப் பார்த்தால் உள்ளத்திலே என்ன பயம் வருமோ! அல்லா ஹுத்தஆலா அரசர்களுக்கெல்லாம் அரசராக இருக்கிறான். இந்த துன்யாவில் அல்லாஹுவை யாரும் பார்க்க முடியாது, இந்த வழிகெட்ட சூஃபி கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் சொல்வார்கள்: வாங்க நாங்கள் அல்லாஹ்வை காட்டுகிறோம் என்று, மாறாக அவர்கள் சைத்தானை தான் காட்ட முடியும் அல்லாஹ்வை காட்ட முடியுமா? துன்யாவிலேயே காட்ட முடியாது.
 
எந்த மனிதர்களுக்கும் அந்த சக்தி இல்லை. இந்த துன்யாவில் அல்லாஹுவை பார்ப்பதற்கோ, காட்டுவதற்கோ எந்த மனிதர்களுக்கும் சக்தி இல்லை. அல்லாஹ்வை மறுமை நாளில் தான் பார்க்க முடியும், மஹ்ஷர் மைதானத்தில் பார்க்க முடியும், இதற்குப் பிறகு முஃமீன்கள் அல்லாஹ்வை நிறைவாக பார்ப்பது எங்கே? அது சொர்க்கத்தில்தான், சொர்க்கத்தில் நாம் இன்ஷா அல்லாஹ் யாரை பார்ப்போம்? அல்லாஹ்வுடைய திருமுகத்தை பார்ப்போம்.
 
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌
 
அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும். தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன்  75 : 22, 23)
 
அந்த நாளில் முகங்கள் பிரகாசமாக இருக்கும். வெளிச்சமாக இருக்கும். அல்லாஹ்வை பார்த்து கொண்டிருக்கும் போது,  
 
لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ
 
(அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்கி, மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழ்ந்து) நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. இன்னும், அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது, அவர்கள் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 10 : 26)
 
قالَ: ما الإحْسَانُ؟ قالَ: أنْ تَعْبُدَ اللَّهَ كَأنَّكَ تَرَاهُ، فإنْ لَمْ تَكُنْ تَرَاهُ فإنَّه يَرَاكَ
 
யார் இந்த உலகத்தில் நன்மைகளை அள்ளிக்கொண்டு வருகிறார்களோ, நிறைய நன்மை செய்து அவர்களுக்கு மறுமையிலே சொர்க்கம் உண்டு, அந்த சொர்க்கத்தில் அதிகமான கூலி உண்டு, இந்த அதிகமான கூலி என்பது என்ன? அல்லாஹ்வை பார்ப்பது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:, நீங்கள் அல்லாஹ்வை பார்க்கவில்லை என்றாலும், அல்லாஹ் உங்களை பார்க்கிறான். அந்த எண்ணத்தில் நாம் அல்லாஹ்வை நம்முடைய சொல்லாலும், நம்முடைய செயலாலும் மகிமைப்படுத்தி அப்படியே தலையை குனிந்து அல்லாஹ்வை புகழ்கிறோம். சூரத்துல் பாத்திஹா
 
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 
பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். (அல்குர்ஆன் 1 : 1)
 
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
 
புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது! (அல்குர்ஆன் 1 : 2)
 
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
 
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; (அல்குர்ஆன்1 : 3)
 
அகிலங்களின் அரசனே, அகிலங்களின் அதிபதியே, அகிலங்களைப் படைத்து பரிபாலிக்க கூடிய அல்லாஹ்வே உனக்கே எல்லா புகழும்.
 
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
 
(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்; (அல்குர்ஆன் 1 : 3)
 
مٰلِكِ يَوْمِ الدِّيْنِ
 
கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி! (அல்குர்ஆன் 1 : 4)
 
صلَّيتُ خلْفَ رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فعطِسْتُ فقلتُ الحمدُ للهِ حمدًا كثيرًا طيِّبًا مُبارَكًا فيه مُباركًا عليِه كما يُحِبُّ ربُّنا ويرْضى فلمَّا صلَّى رسولُ اللِه صلَّى اللهُ عليِه وسلَّمَ انْصرفَ فقال منِ المُتكلِّمُ في الصلاةِ . فلم يتكلَّم أحدٌ ، ثم قالَها الثانيةَ : منِ المُتكلِّمُ في الصلاةِ . فلم يتكلَّم أحدٌ ، ثم قالها الثالثةُ : منِ المُتكلِّمُ في الصلاةِ . فقال رِفاعةُ بنُ رافِعِ ابنِ عَفْراءَ : أنَا يا رسولَ اللهِ قال : كيف قُلتَ ؟ قال قُلتُ : الحمدُ للهِ حمدًا كثيرًا طيِّبًا مُباركًا فيِه، مُباركًا عليِه كما يُحِبُّ ربُّنا ويرْضى . فقال النبيُّ صلَّى اللهُ عليِه وسلَّمَ ( والَّذي نفْسِي بيدِهِ ، لقد ابْتَدَرَها بِضعةٌ وثلاثونَ مَلَكًا أيُّهم يَصْعدُ بِها
 
 
அதுக்கப்புறம் குர்ஆன் ஓதறோம். அப்படியே நிற்கும் பொழுது அந்த அச்சம், அல்லாஹ்வை ஓத ஓத அல்லாஹ்விற்கு முன்னாடி நிற்க நிற்க அன்பும் பயமும் அதிகமாகின்றது. அந்த அன்பும் பயமும் அதிகமாக நாம் நிற்கிற நிலையிலிருந்து அப்படியே குனிகிறோம். இன்னும் அல்லாஹ்விற்கு நெருங்கி விடுகிறோம். எழுந்திருக்கிறோம். இன்னும் அல்லாஹ்வை புகழ்கிறோம். ரப்பனா வலக்கல் ஹம்து அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையிலே பயம்   அதிக மாகின்றது. அல்லாஹுத்தஆலா நம்மை இன்னும் நெருக்கமாக ஆகிறான். தக்பீர் கட்டி நின்ற உடனேயே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொல்கிறார்கள்? 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண் : 478, நூல் : திர்மிதி எண் :404 குறிப்பு (2)
 
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ، فَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ» ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا
 
அடியான் தொழுகைக்கு நின்றால் அவனுடைய இறைவனிடத்தில் அவன் பேசுகிறான். இப்ப நாம தக்பீர் கட்டின உடனே, யாரு கிட்டபேசுகிறோம். அல்லாஹ்விடம் பேசுகிறோம். நீங்கள் அல்லாஹ்விடம் பேசணும்னா தக்பீர் கட்டிட வேண்டியதுதான். அல்லாஹ்விடம் பேசுவது பிடிக்குமா? பிடிக்காதா? ரொம்பபிடிக்கும்! ரொம்பபிடிக்கும்! தொழுகை நீளமாக தொழுகனுமா சுருக்கி தொழுகனுமா நீண்ட நேரம் நின்று தொழுக வேண்டும். ருக்கூவில் நீண்ட நேரம் நிற்க வேண்டும். சுஜூதில் ரொம்ப நேரம் நிற்க வேண்டும். சும்மா டொப்பு டொப்புன்னு காக்கா கொத்தின மாதிரி கொத்திட்டு எழுந்திரிக்க கூடாது.
 
நீங்கள் அல்லாஹ் விடத்தில் பேசுவது பிடிக்கும் என்று சொன்னால், நீண்ட, நீண்ட ரக்அத்துகள் தொழுக வேண்டும். ரசூலுல்லாஹ் உடைய தொழுகை எப்படி இருக்கும். நல்லா நீட்டி தொழுவார்கள். ருகூவில் அவ்வளவு நேரம் நிற்பார்கள். சுஜூதில் அவ்வளவு நேரம் நிற்பார்கள்.
 
நாம இன்றைக்கு எப்படிதொழுகிறோம் என்றால், ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ருக்கூவுக்கு பின்னால் எழுந்து நின்றார்கள் பாருங்கள் அல்லது ஒரு சுஜூதுக்கும் இன்னொரு சுஜூதுக்கும் இடையில் உட் கார்ந்து இருந்தார்கள் பாருங்கள். அந்த நேரத்தில் மொத்த ரக்அத் தையும் நாம் தொழுது விடு கிறோம். அந்த நேரத்தில் மொத்த நான்கு ரக்அத்தையும் தொழுது முடித்து விடுகிறோம். எவ்வளவு கெட்டவர்கள் பாருங்க. அல்லாஹ் விடம் பேசுவது பிடிக்க வில்லை.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405
 
கதை பேசுவது பிடிக்கிறது, Game விளையாடுவதற்கு எவ்வளவு நேரம் கொடுக்குறாங்க” தொழுக சொன்னால் மாச்சலா இருக்கு, சோம்பேறியா இருக்கு டக்கு டக்குனு தொழுதுட்டு அம்மா கிட்ட போன குடு என்று கேட்கிறார்கள். நாம் தொழுகைக்கு நின்ற உடனே அல்லாஹ்விடம் பேச வேண்டும். அப்படியே பேசிப் பேசி, பேசிப் பேசிஅல்லாஹுவிற்கும் நமக்கும் இடையிலே அன்பு கூடுகிறது. அல்லாஹ் நம்மளை நேசிக் கிறான்.அல்லாஹுத்தஆலா நம்ம மேல பிரியத்தை அதிகமாக்குகிறான். நமக்கு அல்லாஹ் மீது பயம் அதிகமாகிறது. அப்படியே நிற்கிறோம் புகழ்ந்து கொண்டு, பயம் அதிகமாகி விட்டது குணிந் தோம். திரும்ப எழுந்தோம். பயம் இன்னும் அதிகமாகிறது. ஒரேடியா அல்லாஹ் முன்னாடி மொத்தமா கீழ விழுந்தாச்சு. அல்லாஹ் முன்னாடி மொத்தமா யா அல்லாஹ்! உன் காலில் விழுந்து விட்டேன் அல்லாஹ். உனக்கு முன்னாடி மொத்தமாக நான் சஜிதாவில் விழுந்துட்டேன். நான் உன்னுடைய அடிமை என்பதை நிரூபித்து விட்டேன்.
 
நீதான் உயர்ந்தவன் அதனால், தான் சுஜூதை வேறு யாருக்காவது செய்யலாமா? செய்யக்கூடாது, கபண் சுஜூது பண்ணலாமா? நம்மள பெத்தவங்களுக்கு சுஜூது பண்ணலாமா? அல்லாஹ்விற்கு முன்னாடிதான் சுஜூது செய்யணும். சுபஹான ரப்பியல் அஃலா சுபஹான ரப்பியல் அஃலா மிக மிக உயர்ந்த என் இறைவனே! உன்னை நான் கேட்கிறேன். நமக்கு அல்லாஹ் மேல் பயம் கூடுகிறது, அல்லாஹ்விற்கு நம்மேல் பிரியம் கூடுகிறது, நமது உள்ளத்தில் என்ன கூட வேண்டும்? அல்லாஹ்வின் மேல்பயம் அதனால், தான் அல்லாஹ் என்ன சொல்கிறான்,
 
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். (அல்குர்ஆன் 23 : 1)
 
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ‏
 
அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 2)
 
முஃமின்கள் வெற்றி அடைந்து விட்டார்கள், எந்த முஃமின்கள் தொழுகையினை பயத்தோடு இருப்பவர்கள், தொழுகையில் பயத்தோடு அதுவும் உள்ளச்சத் தோடு தொழுகையில் உள் அச்சத்தோடு இருக்கும் முஸ்லிம்கள் வெற்றியடைந்து விட்டார்கள். சுஜூது செய்துவிட்டு பயம் கூடுகிறது, சுஜூதில் அழுகணும், பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியாத மாதிரி அழுகவேண்டும், இதிலிருந்து கண்கள் கலங்க வேண்டும்.
 
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَعَمْرُو بْنُ سَوَّادٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ، وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அடியான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருப்பார். அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நேரம், எந்த நேரம்? நீங்கள் சுஜூதில் இருக்கும்போது, அப்ப என்ன செய்யணும் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டீர்கள், பயம் வந்து விட்டது, நீங்கள் துஆவை அதிகப்படுத்துங்கள், இப்போ சுஜூதுல போய் துஆ கேட்கணும், அப்புறம் தொழுகிறோம், அல்லாஹ்வை பயந்து, பயந்து நிற்கிறோம், குனிந்து விடுகிறோம், சுஜூது போறோம், நிற்கிறோம், குனியுறோம், சுஜூது போறோம், எப்படின்னு சொன்னா, ஒரு அடிமை தன்னுடைய எஜமான் இடத்தில் வந்து விடுகிறான்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 482
 
மிகப் பெரிய எஜமான் இடத்தில், அந்த அடிமை தவறு செய்திருக்கிறான், அந்த அடிமைக்கு பலத் தேவை இருக்கிறது, இந்த நேரத்தில் அந்த அடிமை அந்த எஜமானனை சுற்றி சுற்றி எஜமானனே என்னை மன்னித்து விடு, எஜமானனே எனக்கு நிறைய தேவைகள் இருக்கிறது, எனக்கு உதவி செய், அப்படின்னு அந்த எஜமானனை எப்படி எல்லாம் சந்தோஷப்படுத்த பார்ப்பான், எப்படி எல்லாம் அந்த எஜமானிடத்தில கெஞ்ச பார்ப்பான், எப்படி எல்லாம் கெஞ்சுவான், அப்படியே மனதில் வைத்துக் கொண்டு தொழுகையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். 
 
அல்லாஹு அக்பர், தக்பீர் கட்டுகிறோம், அல்லாஹ்வை  புகழ்கிறோம், புகழ்கிறோம், நம்முடைய பாவமன்னிப்பை சொல்கிறோம், குனியிறோம், எழுந்திருக்கிறோம், குனிகிறோம், எழுந்திருக்கிறோம், எல்லாத்துலேயுமே அல்லாஹ்வை புகழ்ந்து புகழ்ந்து நாம் இஸ்திக்ஃபார் செய்கிறோம், அல்லாஹ்விடத்தில் தேவையை கேட்கிறோம், கடைசியில் அந்த தொழுகை என்கிற நிலை முடியபோகிறது, அல்லாஹ்வை விட்டு பிரியப்போகிறோம், அல்லாஹ்வுடைய சமூகத்தை விட்டு இப்ப நான் பிரியப்போகிறோம். ஹதீஸ் அப்படித்தானே இருக்கிறது. தொழுகையில் நின்றால் அடியான் அல்லாஹ்விடத்திலே பேச ஆரம்பிக்கிறான்.
 
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ، فَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ» ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا
 
அப்போ தொழுகை முடிந்து விட்டால் அந்த பேச்சு முடிய போகிறது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: நீங்கள் தொழுகையில் நிற்கும் பொழுது உங்களுக்கு எச்சில் சளி வந்து விட்டால் வலது பக்கம் துப்பாதீர்கள், உங்கள் முன்னாடி துப்பாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு முன்னால் அல்லாஹ் இருக்கிறான்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 405
 
உங்கள் செருப்பை கூட முன்னாடி வைக்கக் கூடாது, அப்போ அந்த தொழுகை முடியபோகிறது என்றால் என்ன அர்த்தம்? கடைசி சான்ஸ், இப்போ என்ன கிடைக்கப்போகிறது. நமக்கு எந்த மாதிரி அல்லாஹ்விடம் உருக வேண்டுமோ உருகி, உருகியாச்சு, இப்படி தொழுக வேண்டும் இப்படியெல்லாம் தொழுதால் அது தொழுகை. இல்லையென்றால்  அது ஒரு ஆக்ஷன், ஆக்டிங், ஒரு நடிப்பு. நாம் எல்லாம் இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறோம். தொழுகை மாதிரி நாம் ஒரு ஆக்டிங் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். உண்மையான தொழுகை தொழுகிறோமா? அல்லாஹ்விற்கு தான்வெளிச்சம்.
 
حُبِّبَ إلي منَ الدُّنيا ، النساءُ ، والطِّيبُ ، وجُعِلَ قرةُ عيني في الصلاةِ
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதார்களே, ஆயிஷா தொழுதார்களே ,உம்மு சல்மா தொழுதார்களே உம்மு ஹபீபா தொழுதார்களே அந்த தொழுகை மாதிரி நாம தொழு கிறோமா? தொழுகையில் நிக்கிறீங்க கண் குளிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது. இன் றைக்கு பெண்கள் ஆண்களுக்கு கண்குளிர்ச்சி எதில் இருக்கிறது, டிவி பார்ப்பதில் இருக்கிறது, போனை பார்ப்பதில் இருக்கிறது, facebook-யில் இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3949
 
தொழுகையை நிற்கிறநேரம் அதிகமா? போனை பார்ப்பது அதிகமா? குர்ஆன் ஓதுற நேரம் அதிகமா? சும்மா கதை கேட்கிற நேரம் அதிகமா? நீங்கள் முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஏழு ஜுஸ் ஓதினார்கள் நம் முன்னோர்கள், நாம ஏழு ஜூஸ் சொல்லக்கூட முடிய மாட்டேங்குது, திரும்ப வாங்க விஷயத்துக்கு, இந்த மாதிரி அல்லாஹ்விடம் கெஞ்சி கதறி நின்னு குனிந்து சுஜூதுல விழுந்து கீழே விழுந்து கேட்டு கேட்டு கடைசியில் அல்லாஹ் கொடுத்தடைம் முடியபோகிறது.
 
அல்லாஹ் நமக்கு பேசுவதற்கு கொடுத்த டைம் முடிய போகிறது. உட்கார்ந்து விட்டோம். அத்தஹி யாத்தில் உட்காருவோமா இல்லையா? அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்து அல்லாஹ் உன்னை விட்டு போக போறேன். அல்லாஹ் விட்டு எங்கே போக முடியும். போக முடியாது. திரும்ப வந்துவிட வேண்டும். சுத்தி சுத்தி அங்க தான் வரணும். பர்ளு முடித்தால் சுன்னத்துக்கு எழுந்திருக்கணும்.
 
சுன்னத்து முடித்தால் நஃபிலுக்கு எழுந்திருக்கணும். இந்த தொழுகையை முடித்தால் அடுத்த தொழுகைக்கு வரணும். அல்லாஹு அக்பர் எப்படி பாருங்கள். அல்லாஹ்விற்கும் நமக்கும் நடுவுல அல்லாஹ் அணியானே நீ ஓடிடாத திரும்பத் திரும்ப வா என்கிறான்.அல்லாஹ் நம்மை பிரியமாக  கூப்பிடுகிறான். நாம அல்லாஹ்விடம் பிரியமாக போனோமா என்பதை நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள்.
 
அம்மா பிள்ளையை பிரிய மாக தானே கூப்பிடுவார்கள். சும்மா சும்மா என்ன கூப்டுகிட்டு இருக்கீங்க தொந்தரவு பண்றீயே விளையாட விடுறியா அப்படித் தானே சொல்றீங்க. அம்மா என்ன செய்றாங்க பிள்ளையை வாமா சாப்பிடுமா அத குடிமா இத குடிமா அப்படின்னு சொல்றாங்க. பிள்ளை என்ன சொல்கிறது.
 
சும்மா இருக்க மாட்டியா அம்மா தொணதொணன்னு கொஞ்ச நேரம் விளையாடவிடுறியாமா அப்படின்னு சொல்லுது பிள்ளை. அல்லாஹ் என்ன சொல்கிறான். என்னை விட்டு போயிடாதடா வாடா வாடா திரும்பகூப்பிடுறான். சுபுஹுக்கு தொழுதியா, லுஹருக்கு வா. லுஹர் தொழுதியா அஸருக்கு வா. அஸர் தொழுதியா மஃரிபுக்கு வா. மஃரிப் தொழுதியா இஷாவுக்கு வா. பர்ளு தொழுதியா சுன்னதுக்கு எந்திரி, அப்படின்னு அல்லாஹ் நம்மளை விரும்பு கிறான். நம் மேல பிரியத்தில் கூப்பிடுகிறான். நமக்கு புரியவில்லை. அசால்டாவர்றோம். சோம்பேறியா வர்றோம். முஃமின் களுக்கும் முனாஃபிக்களுக்கும் வித்தியாசம் என்ன?
 
وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى
 
அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; (அல்குர்ஆன் 4 : 142)
 
முஸ்லிம்கள் முனாஃபிக்குகள், முனாஃபிக்குகள் என்றால் யார்? நயவஞ்சகர்கள். நயவஞ்சகர்கள் என்றால் யார் தெரியுமா? டூப்ளிகேட் முஸ்லிம்ஸ். நாமெல்லாம் அதில் சேர்ந்து விடுவோமா என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த டூப்ளிகேட் முஸ்லிமுக்கும் இந்த ஒரிஜினல் முஸ்லிமுக்கும் வித்தியாசம் என்ன என்றால், டூப்ளிகேட் முஸ்லிமை தொழுகைக்கு வா என்றால், இப்பதான் பாங்கு சொல்லி இருக்கு காமத்துக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருக்குது,
 
இப்பதானே வக்து வந்திருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்படின்னு தொழுகையை தள்ளி போட்டு தள்ளி போட்டு கடைசி நேரம் வரை இழுத்துக்கொண்டு போய்விட்டு அவசர அவசரமாக தொழுது முடித்து விடுவது. இவர்களை அல்லாஹ் யார் என்று சொல்கிறான் முனாபிக். பெயருக்கு மட்டும் தான் முஸ்லிம் உள்ளே ஒன்றும் இல்லை. இப்படி தொழுதவனையே அல்லாஹ் என்ன சொல்லிவிட்டான்.
 
முனாஃபிக் என்று சொல்லி விட்டானே, அறவே தொழுகையே இல்லாதவனை காஃபீர், அல்லாஹ் பாதுகாக்கணும், கடைசியாக அத்தஹியாத்தில் உட்கார்ந்து விட்டோம், அல்லாஹ் உன்னை விட்டு போக போறேன். இப்போ அல்லாஹ் என்ன செய்து விட்டான். சரிடா அடியானே உனக்கு இன்னொரு சான்ஸ். என்னை நீ எப்படி உச்சமாக புகழப்போறியோ புகழ் என்று சொல்லி ,ஒரு சான்ஸ் கொடுத் தான். அந்த சான்சில் நமக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸ்பெஷலா ஒரு துஆவை கற்றுக் கொடுத்தார்கள். வேறு எங்கேயுமே அந்த துஆ கிடையாது.
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو "
 
தொழுகையை சிந்திக்க வேண்டும். தொழுகை எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பொசிஷனுக்கு சொல்லி ஒரு ஸ்பெஷல் துஆ கொடுத்திருக் கிறார்கள். என்ன துஆ அல்லாஹ் என் உடல் சார்ந்த வணக்கங்கள், என் வார்த்தை சார்ந்த வணக்கங்கள், என்னு டைய எல்லா புகழ்கள் நான் செய்யக்கூடிய எல்லா நன்மைகள், நான் செய்யக்கூடிய எல்லா விதமான தர்மங்கள் என்னுடைய உடலில் இருந்து, நாவில் இருந்து வெளிப்படக் கூடிய எல்லா நன்மைகளும், நான் கேட்கக் கூடிய எல்லா துஆக்களும் அல்லாஹ் உனக்கு தான்டா, எவ்வளவு பெரிய சரண்டர் பாருங்கள்
 
அறிவிப்பாளர் : அப்துல்லா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 835,1202,6230
 
ஆனால் இந்த முட்டாள்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இப்படி சொல்லிவிட்டு பள்ளிவாசல் பக்கத்திலேயே தர்காவை கட்டி வைத்திருக்கிறார்கள். நீங்க என்ன ஓதுகிறார்கள் அல்லாஹ் உனக்குத்தான் என்னுடைய இபாதத் என்று சொல்லிவிட்டு, பள்ளிவாசல் வெளியில் போய் விட்டு தர்கா தர்காவில் போய் துஆ கேட்டுக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு கெட்ட மக்கள் பாருங்கள். இங்கே சொன்னது ஒன்று, வெளியே போய் செய்றது ஒன்று, ஷிர்க் இங்கே சொன்னான் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத் அல்லாஹ் இந்த இபாதத் எல்லாமே உனக்குத்தான்.
 
அங்க போயிட்டு அவ்லியா என் பிள்ளையை எப்படியாவது பாஸ் பண்ணிருங்க. என் பிள்ளைக்கு எப்படியாவது சீட் வாங்கி கொடுத்துடுங்க. அவர் என்ன பண்ணுவாரு சீட்டு வாங்கி கொடுக்குறதுக்கு, அவுலியா சீட்வாங்கி தந்துருவாரா, சொல்லுங் கம்மா? அவ்லியாவால் சீட் வாங்க முடியுமா, சொல்லுங்க? அவரே அங்கு பயந்து கொண்டிருக்கிறார் எனக்கு என்ன நடக்கும் என்பதை பயந்து கொண்டிருக்கிறார்கள்.
 
اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَه وَيَخَافُوْنَ عَذَابَه اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا‏
 
(தூதர்கள், வானவர்கள், இன்னும் இறைநேசர்களில்) எவர்களை இவர்கள் (தங்கள் தேவைக்காக பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ, - அவர்களோ தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று (ஆர்வப்பட்டு) நன்மையை (அதிகம் செய்வதற்கு வழிகளை)த் தேடுகிறார்கள்; இன்னும், அவனுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள்; இன்னும், அவனுடைய தண்டனையைப் பயப்படுகிறார்கள். நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை பயத்திற்குரியதாக இருக்கிறது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்). (அல்குர்ஆன் 17 : 57)
 
அடப்பாவி பசங்களா அவுலியாக்கள் நபிமார்கள் என்று கைய தூக்குறீங்களேடா அவர்கள் என்னை பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் துஆ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்காக வேண்டி அமல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
 
அவர்கள் என்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறார்கள் என்னுடைய தண்டனை சாதாரண தண்டனை அல்ல அதிகமாக பயப்படக்கூடிய தண்டனை அவர்கள் என்னிடம் துஆ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ போய் அவர்களிடம் துஆ கேட்கிறீயே. மக்கள் இன்றைக்கு அவுலியாவிடம் போய் யார் துஆ கேட்கிறார்களோ அந்த அவுலியா யாரிடம் துஆ கேட்கிறார் அல்லாஹ்விடம். இவர்கள் போய் அவர்களிடம் எங்களுக்கு நல்லது கொடுங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
அவர் யாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்? அல்லாஹ் விடம் அப்போ அவர் கேட்கிற அல்லாஹ்விடம் போய் நீங்கள் கேட்க வேண்டுமா? அவர் கேட்க வேண்டுமா? திரும்ப விஷயத் துக்கு வருவோம். அத்தஹிய் யாத்து ஓதியாச்சு அப்புறம் என்ன செய்ய வேண்டும்? இப்ப அஸ்ஸலாமு அலைக்க யுஹன் நபியும் அய்யுஹன் நபியு வரஹ்மத் துல்லாஹி வபரக்காத் துஹு நபிமேல சலாம் சொல்ல வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய அன்புக்கடுத்து யாரிடம் அன்புக் காட்ட வேண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது எவ்வளவு அன்பு வைக்க வேண்டும்? ரொம்ப ரொம்ப..... அன்பு வைக்கணும். நம்முடைய அத்தா அம்மா எல்லாரையும் விட யாரிடம் அன்பு இருக்க வேண்டும்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம். அவர்களிடம் சலாம் சொல்றோம், அப்புறம் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அழகிய வசனம் சொன்னார்கள். உங்கள் மேலேயும் சலாம் சொல்லுங்கள்.அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில் லாஹிஸ் ஸாலிஹீன் எல்லாருக் காகவும் துஆ செய்யனும்.
 
அப்புறம் அடுத்ததாக அல்லாஹ் விற்கு மிகப் பிரிய மான ஒரு வார்த்தையை சொல் கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அஸ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஸ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு சகாதா முடிந்து விட்டது. சகாதா தான் இந்த உலகத்திலேயே அல்லாஹ் விற்கு மிகப் பிரியமானவார்த்தை. சொல்லியாச்சு அதற்குப் பிறகு அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான துஆ கேட்பதற்கு முன்னால் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்தார்கள். அது என்ன? சலவாத்.ஹதீஸில் துஆக் கள் அத்தஹியாத் ஓதிய பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கூறும் ஸலவாத்து
 
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
 
அப்படி இப்ராஹிம் நபியில் இருந்து ரசூலுல்லாஹ் வரைக்கும் கொண்டு வந்தாச்சு. இதுதான் வசிலா உண்மையான வசீரானா என்ன? அல்லாஹ்விற்கு பிடித்தமானவையை சொல்வது. நபிமார்கள் பெயரில் சலவாத் ஓதுவது அல்லாஹ்விற்கு பிடித்தமானது அந்த வசீலாவை செய்தாச்சு. உன்னை படைத்தது நான் யாரை கேட்டு படைத்தேன் பார்த்தாலும் யாரையும் கேட்டா கொடுக்கிறேன் அல்லாஹ் எது கொடுத்தானோ அது அவனுடைய கருணையா? இன்னொருத்தருடைய தயவுல கொடுக்குறானா? அல்லாஹ்வுடைய அருளால்
 
وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ
 
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. (அல்குர்ஆன் 16 : 53)
 
يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ ما شاء 
 
அவனுடைய அருளால் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், இப்ப நீங்கள் அத்தஹிய்யாத்து ஓதி விட்டீர் களா, சலவாத் ஓதி விட்டீர்களா உங்களுக்கு பிடித்தமானதுஆவை அல்லாஹ்விடம் கேளுங்கள். நமக்கு விளங்க மாட்டேங்குது தொழுகையை முடிக்க போறீங்க.
 
இல்லையா இது துஆ கபூலாக கூடிய முக்கியமான டைம் ரொம்ப பேருக்கு தெரியுதா?தெரியுற தில்லை பொழுது முடித்துவிட்டு, அப்புறம் உட்கார்ந்து கையை தூக்கிக்கிட்டு மணிக்கணக்காக துஆ செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கே அல்லாஹ்வும் ரசூலும் கேட்கச் சொன்னார்களோ அங்கே விட்டு விட்டார்கள். அங்கே துஆ கேட்காமல் சும்மாஉட்கார்ந்து விட்டு ஏதோ ஒன்றை ஓதிவிட்டு போய்விட்டார்கள்.
 
அப்புறம் உட்கார்ந்து கொண்டு தமிழில் கேட்கிறார்கள். நான் கலிமா சொல்லி எத்தனை வருஷம் ஆகிவிட்டது. இன்னும் இந்த தமிழில்தான் துஆ செய்வியா? இல்ல சொல்லுங்க நான் இப்பதான் கலிமா சொல்லி வந்திருக்கோம். இங்கிலீஷ் படிக்க நேரம் இருக்கிறது.
 
அல்லாஹ் வுடைய அருளை படிக்க நேரமில்லை. குர்ஆனுடைய மொழி, ரசூலுல்லாஹ்உடைய மொழியை படிக்க நேரமில்லையா ஒரு துஆவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு எத்தனை வருஷம் ஆகும் சொல்லுங்க இந்த துஆவிற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு எத்தனை வருஷம் வேணும் என்று சொல்லுங்கள்.
 
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
 
எங்கள் இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் தீங்கிழைத்தோம். நீ எங்களை மன்னிக்கவில்லையெனில்; நீ எங்களுக்கு கருணை புரியவில்லையெனில் நிச்சயமாக நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7 : 23)
 
எங்கள் இறைவா நாங்கள் தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால், நீ எங்கள் மீது கருணை காட்ட வில்லை என்றால், கண்டிப் பாக நாங்கள் ஆகி விடுவோம் நஷ்டவாளிகள். இதை தெரிந்து கொள்வதற்கு எத்தனை வருஷம் வேண்டும். அதிகப்படியாக ஒரு நாளை வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாளை செலவு பண்ணி ஒரு துஆ உடைய அர்த்தத்தை படித்து விட்டால் நமக்கு லாபமா நஷ்டமா சொல்லுங்கள்? விடமாட்டேங் கிறான் சைத்தான்.
 
மணிக்கணக்காக டிவியில் உட்கார முடியுது, மணிக்கணக்காக கதை அடிக்க முடியுது மணிக்கணக்காக ஷாப்பிங் பண்ண முடிகிறது, மணிக்கணக்கா சுத்த முடிகிறது ஆனால் என்ன செய்ய வில்லை. துஆவிற்கு அர்த்தம் மனப்பாடம் பண்றதுக்குள்ள சைத்தான் நம்மை தலை வலிக்கிற மாதிரி இருக்குது. அப்படி பண்றான் சைத்தான். சூரத்துல் ஃபாத்திஹா அர்த்தம் தெரியல.
 
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்). (அல்குர்ஆன் 1 : 1)
 
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
 
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன் 1 : 2)
 
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
 
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 1 : 3)
 
مٰلِكِ يَوْمِ الدِّيْنِ‏
 
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (அல்குர்ஆன் 1 : 4)
 
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
 
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் 1 : 5)
 
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
 
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1 : 6)
 
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏
 
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் 1 : 7)
 
இதை மனப்பாடம் செய் வதற்கு எத்தனை வருஷம் ஆகும்.
 
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
 
அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன் 112 :  1)
 
اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
 
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (அல்குர்ஆன் 112 : 2)
 
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ‏
 
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் 112 : 3)
 
وَلَمْ يَكُنْ لَّه كُفُوًا اَحَدٌ‏
 
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன்112 : 4)
 
இது என்ன இதுக்கு என்ன ஆயிடப்போகிறது. நமக்கு சொத்தா போயிட போகுது உடம்பா இளைச்சிடபோகுது சைத்தான் விட மாட்டேங்குறான். துன்யாவில் சைத்தான் கட்டிப் போட்டு வைத்திருக்கிறான். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள். இப்ப நீங்கள் துஆ கேளுங்கள் என்றார்கள். அத்தஹிய்யாத்து ஓதிட்டீங்களா,ஸலவாத் ஓதிட்டிங்களா துஆ கேளுங்கள்  என்றார் கள். நம்ம ஆளுக்கு துஆ கேட்க தெரியவில்லை.
 
ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் துஆ கபுலாகுது எந்த நேரத்தை குறித்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். சலாம் கொடுப்பதற்கு முன்னாடி அத்தஹிய்யாத்து ஓதி ஸலவாத் ஓதிவிட்டு இடையில் இருக்கும் நேரத்தில் அந்த நேரத்தில் ரசூலுல்லாஹ் சொன்னார்கள். அதுக்கு என்று ஸ்பெஷலா இரண்டு துஆ வைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு தொழுகைக்கும் அடுத்தடுத்து மாற்றி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் அர்த்தமே தெரியாமல் ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு ஓதுகிறார்கள். இப்ப நீங்கள் கடையில் இருக்கிறீர்கள் அல்லது ஒரு பெரிய ஆபீஸில் வேலை செய்றீங்க. 31ஆம் தேதி அல்லது ஒண்ணாம் தேதி சம்பளம் கொடுப்பாங்க. வாங்கிட்டு வருவீங்களா? வாங்காம வருவீங்களா? நம்ம கதை எப்படி தெரியுமா இருக்கிறது.
 
சம்பளம் வாங்காமல் வர்ற மாதிரி இருக்கிறது. அல்லாஹுத் தஆலா கடைசியில் கலந்துட்டேன். அல்லாஹ்வுடைய சமுதாயத்தில் வாங்கிட்டு தான் போவேன் என்று உட்கார்ந்து விட்டேன். இப்போ அல்லாஹுத் தஆலா அவனே நமக்கு கற்றுக் கொடுக்கிறான். இந்த மாதிரி கேளுங்கள் என்று, நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். 
 
எல்லாம் யாரு பாக்கியம் பெற்றவர்கள், பரக்கத் பெற்றவர்கள் ஏன் தெரியுமா? நம்மை அல்லாஹ் முஸ்லிம் ஆக்கி அல்லாஹ் என்றால் யார் என்று அவனே சொல்லிக் கொடுத்து, அவனிடம் என்னென்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று அவனே சொல்லிக் கொடுத்திருக்கிறான். ஒரு சிலை வணங்கிக் பாருங்கள். அவன் சிலைக்கு முன்னால் நின்றால் அவனுக்கு என்ன கேட்க வேண்டும் என்று கூட தெரியாது. நமக்கு என்ன கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கற்றுக் கொடுத்து விட்டான். முதலில்
 
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
 
கேளு, அப்புறம் பாவமன்னிப்பை கேளு ,அப்புறம் சொர்க்கத்தை கேளு ,அடுத்து உன்னுடைய உலகத் தேவையை கேளு. இந்த துஆ இருக்குதே தொழுகைக்கு துஆ என்று பெயர் வைக்கப்பட்டது எதனால தொழுகையே துஆ தான் starting to end தொழுகையே துஆ தான். இபாதத்தும் துஆவுடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு இபாதத்தும் துஆவுடன் இணைக்கப்பட்டது.
 
الدُّعاءُ هوَ العبادةُ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். துஆ தான் வணக்கமே! 
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3247, குறிப்பு (3) 
 
இந்த துஆ இருக்கிறதே உங்களை அல்லாஹ்வோடு எப்போதும் தொடர்புடையவர்களாக வைத்திருக்கக் கூடிய ஒரு பெரிய கனெக்க்ஷன். இணைப்பு துஆ என்பது என்ன ஒரு பெரிய இணைப்பு இப்போ தொழுது விட்டீர்கள். நோன்பு வைத்து நோன்பை முடித்து விட்டீர்கள். ஹஜ்ஜுக்கு போய் ஹஜ்ஜை முடித்து விட்டீர்கள். குர்ஆன் ஓதுகிறீர்கள். குர்ஆனை முடித்து விட்டீர்கள்.
 
இப்படி எல்லா இபாதத்தும் முடியலாம். எல்லா இபாதத்தும் ஒரு டைமில் ஸ்டார்ட் ஆகி ஒரு டைமில் முடியும். இந்த துஆவும் திக்ரும் முடியவே முடியாது. வீட்டுக்குள்ளே போகும் போது துஆ ஓதுகிறீர்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது துஆ ஓதுகிறீர்கள். சாப்பிடும் போது துஆ ஓதுகிறீர்கள். தூங்கும் போது துஆ ஓதுறீங்க. தூங்கிகிட்டு இருக்கும்போது துஆ ஓதுறீங்க, எழுந்து இருக்கீங்க துஆஓதுறீங்க, ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை கேட்கிறீர்கள்.
 
ஏதாவது கவலை யான விஷயத்தை கேக்குறீங்க. மழை பெய்யணும்னு துஆ ஓதுகிறோம்.கடையை மூடும் போது துஆ ஓதுகிறோம். பள்ளிக்கு உள்ளே வரும்போது துஆ ஓதுகிறோம். பள்ளியை விட்டு வெளியே போறோம். யார்கிட்டயாவது ஏதாவது விக்கிறோம் துஆ ஓதுறோம். வாங்குறோம் துஆ ஓதுறோம். Life அல்லாஹ் துஆ ஆக்கிவிட்டான்.
 
வாழ்க்கையில் முடியாத இபாதத் என்ன இபாதத். நிக்கிறோம் துஆ ஓதுறோம். சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் லாஹவ்ல வலாக்குவத்த இல்லா பில்லாஹ் நின்னாலும் திங்குற படுத்தாலும் திக்குற துஆ திரும்பத் திரும்ப துவா. அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் நபியை பற்றி தன்னுடைய குர்ஆனில் ரொம்ப அழகான ஒரு புகழ். புகழ்ந்து அல்லாஹ் சொல்கிறான். சூரா ஹுது உடைய11வது அத்தியாயத் தில் 75 வது வசனம்  இப்ராஹிம் நபியை பற்றி அல்லாஹுத் தஆலா புகழ்ந்து சொல்கிறான்.
 
اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ
 
நிச்சயமாக இப்ராஹீம் பெரும் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (எப்போதும் நம் பக்கமே) திரும்பக் கூடியவர் ஆவார். (அல்குர்ஆன் 11 : 75)
 
அல்லாஹ் சொல்கிறான். நிச்சயமாக இப்ராஹிம் ரொம்ப பொறுமையாளர். நம்மிடம் இல்லவே இல்லை. புருஷன் ஒன்று சொன்னா அவர் சொல்வதற்கு முன்னாடி இரண்டு பதில். கேட்டால் இந்த காலம் அப்படித்தான் என்று சொல்வது. மாமியார் ஒன்று சொன்னால் மூன்று பதில், பொறுமையே கிடையாது.
 
பிள்ளைக்கு அம்மா வோட் பொறுமை இல்லை. அம்மாவுக்கு பிள்ளையோடு பொறுமை இல்லை. புருஷனுக்கு மனைவியோடு பொறுமை இல்லை. மனைவிக்கு புருஷ னோட பொறுமை இல்லை. no சகிப்பு no adjustment. சகிப்பு இல்லாத Life இருக்கிறதே கஷ்டம். மருமகளாக இருக்கும்போது மாமியார் சகித்துக் கொள்ள மாட்டிக்காங்க என்று சொல்கிறார்கள். இவர்கள் மாமியாராக ஆன பிறகு, மருமகளாக இருக்கும் போது மாமியாரைப் பற்றி என்னென்ன குறை சொன்னீர்கள்.
 
அந்த குறை எல்லாம் நீங்கள் மாமியாராக ஆன உடனே செய்வீர் களா இல்லையா? மாமியார் எங்கிருந்து வந்தார்கள்.மருமகளா இருக்கும்போது இடிக்குது. மாமியாராக இருக்கும்போது இனிக்குதா? என்ன நியாயம் இது. இப்ராஹிம் நபி எப்படி இருப்பாங் களாம் ரொம்ப பொறுமையாளர். முதலில் அலீமுன் பிறகு அவ்வாகுன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? ரொம்ப ரொம்ப..... துஆ கேட்கக் கூடியவர். கொஞ்ச நேரம் துஆகேட்டுவிட்டு போதும் நீயே, ரொம்ப நேரம் துஆ கேட்டுகிட்டே இருக்கோம்.
 
ஒண்ணுமே கிடைக்க மாட்டேங்குது. அப்புறம் என்னத்துக்கு துஆ கேட்டுகிட்டு. அஸ்தோஃபிர்லா அவசரப்பட்டு ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள். உங்கள் துஆவிற்கு அல்லாஹ் கண்டிப் பாக பதில் அளிப்பான்.
 
நீங்கள் அவசரப்படுகிறீர்கள். நீங்கள் தோசை சுடுற மாதிரி கேட்க ணும்னு நினைக்கிறீங்க. தோசை எப்படி சுடுறீங்க சொய்ங் போட்டு திருப்பி போட்டு தட்டுல போடு. இப்படியா துஆ பண்ணனும். அப்படியெல்லாம் நபிமார்களுக்கு எப்பயாவது தான் அல்லாஹ் காட்டுவான். நாம் என்ன நினைக்கிறோம். உடனே துஆ கேட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே போன உடனே நமக்கு துஆக்கள் கபுல் ஆகணும்.
 
நமக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான்ல இந்த மாதிரி நமக்கு ஒருத்தர் துஆ பண்ணா ருன்னு நினைச்சுக்கோங்க. அப்போ எல்லாரும் ஜனாஸாவை கடக்க வேண்டியது தான். தெருவில் எல்லாருமே கை போய், கால் போய், கண்ணு போய், காது போய் கடைசியில் என்னாலும் அவர் எனக்கு பண்ணார், இவரு எனக்கு பண்ணா, மாமியாருக்கு மருமகள், மருமகளுக்கு மாமியார், நாத்தனார், கண்ணு கிடையாதுகாது கிடையாது. 
 
அல்லாஹுத் தஆலா அதற்குத்தான், இவனுக்கு இப்படியெல்லாம் துஆக்கு பதில் சொன்னால்,இவன் எல்லாருக்கும் சாபமிட்டு நாஸ்தி பண்ணிடு வான். அல்லாஹ் அதற்கு ஒரு லிமிட் வைத்திருக்கிறான். இப்ராஹிம் நபி எப்படிப்பட்டவர்கள். எப்பவுமே துஆ கேட்கக் கூடியவர்கள். பொறுமையான சகிப்பாளர்.துஆ கேட்கக் கூடியவர் எப்போதுமே அல்லாஹ்வை முன்னோக்கியவர்.
 
எந்த கஷ்ட மாக இருந்தாலும், உங்க அம்மா அடித்து விட்டார்களா யார் கிட்ட சொல்லணும்? அத்தாகிட்ட சொல்லக்கூடாது. யார்கிட்ட சொல்லணும் யா அல்லாஹ்!எங்க அம்மா என்னை அடிக்கிறார்கள். எங்க அம்மாவுக்கு பொறுமையை கொடு அல்லாஹ். என் மேல் என் அம்மாவுக்கு பிரியத்தை கொடு யா அல்லாஹ்! அப்படின்னு யாரு கிட்ட சொல்லணும், அல்லாஹ் கிட்ட சொல்ல வேண்டும்.
 
என்ன தேவையோ, பேனா வேணுமா பென்சில் வேணுமா எல்லாத் தையும் யார் கிட்ட சொன்னா படிப்பு எல்லாத்தையும் அல்லாஹ் விடம் கேட்கணும்.துஆ அதிகமாக கேட்பது யாருடைய குணம் என்றால், நபிமார்கள் உடைய குணம். இப்போ நபிமார் களை பாருங்கள். அல்லாஹ் விடத்தில் துஆ கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.நாம் என்னென்ன துஆ கேட்க வேண்டும். எதுக்கு துஆ கேட்கணும். எப்படி துஆ கேட்கணும். அதை சுருக்கமாக சொல்லி முடித்திடுவோம்.
 
நம்ம என்ன துஆ கேட்கிறோம் என்றால் கையை தூக்குவோம், கண்ணுக்கு முன்னால் டிவி வரும் படிப்பு வரும் வயிறு வரும். இதையெல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா சொல்லிவிட்டு முகத்தில் தடவி விட்டு போய்க்கிட்டே இருப்போம். நம்ம துஆவை அதிகமாக எதற்கு கேட்கிறோம். திங்கிறதுக்கு, தூங்குறதுக்கு, சாப்பிடுவதற்கு யா அல்லாஹ்! எங்களுக்கு பரகத்தை கொடு, யா அல்லாஹ்! யா அல்லாஹ்! எங்களுக்கு வீட்டை கொடு, யா அல்லாஹ்! எங்களுக்கு சொந்த வீட்டை கொடு, யா அல்லாஹ்! இது எதுக்கு தூங்குறதுக்கு.
 
சொந்த வீடு இருந்தால் என்ன? வாடகை வீடு இருந்தால் என்ன? இரண்டுலையும் தூங்க தான் போறேன் நீ எப்ப இந்த உலகத்தில் பிறந்தாயோ அப்பவே அல்லாஹ் உனக்கு சாப்பாட்டை முடிவு பண்ணி விட்டான். எதெல்லாம் உனக்கு முடிவு பண்ணி விட்டானோ, அதை எல்லாம் அல்லாஹ்விடம் கேட்டு உட்கார்ந் திருக்க. எதெல்லாம் என்கிட்ட கேளுங்கள் என்று அல்லாஹ் சொன்னானோ, அதை விட்டுட்டு போற. 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்கள்ல மைமுனா என்று ஒரு மனைவி இருந்தார்கள். ரசூலுல்லாஹ் மேல ரொம்ப பிரியம். ஒரு தடவை அவர்கள் துஆ செய்தார்கள். யா அல்லாஹ்! என்னுடைய புருஷனுக்கு நீண்ட ஆயுளை கொடு, யா அல்லாஹ்! என்று துஆ செய்தார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த துஆவை கேட்டுச் சொன்னார்கள். இதுதான் முடிவு செய்யப்பட்டது. யாரும் இந்த துன்யாவில் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
 
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ -، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللهِ الْيَشْكُرِيِّ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَتْ أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللهُمَّ أَمْتِعْنِي بِزَوْجِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِأَبِي أَبِي سُفْيَانَ، وَبِأَخِي مُعَاوِيَةَ قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ سَأَلْتِ اللهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ، وَأَيَّامٍ مَعْدُودَةٍ، وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ، لَنْ يُعَجِّلَ شَيْئًا قَبْلَ حِلِّهِ، أَوْ يُؤَخِّرَ شَيْئًا عَنْ حِلِّهِ، وَلَوْ كُنْتِ سَأَلْتِ اللهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ، أَوْ عَذَابٍ فِي الْقَبْرِ، كَانَ خَيْرًا وَأَفْضَلَ» قَالَ: وَذُكِرَتْ عِنْدَهُ الْقِرَدَةُ، قَالَ مِسْعَرٌ: وَأُرَاهُ قَالَ: وَالْخَنَازِيرُ مِنْ مَسْخٍ، فَقَالَ: «إِنَّ اللهَ لَمْ يَجْعَلْ لِمَسْخٍ نَسْلًا وَلَا عَقِبًا، وَقَدْ كَانَتِ الْقِرَدَةُ وَالْخَنَازِيرُ قَبْلَ ذَلِكَ
 
மைமூனா முன்னாடியே அல்லாஹ் முடிவு பண்ணி விட்டானே இதற்கு பதிலாக எனக்கு அல்லாஹ் விடத்தில் மறுமையினுடைய அழகிய முடிவை அல்லாஹ்வின் மன்னிப்பை, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை கேட்டிருக்கலாம் இல்லையா அப்படின்னு சொன்னார்கள். நீங்கள் பிள்ளைகளுக்கு என்ன துஆ பண்ணுகிறீர்கள்? யாஅல்லாஹ்! என்னுடைய பிள்ளைக்கு நீண்ட ஆயுளை கொடு, யா அல்லாஹ்! என்னுடைய பிள்ளைக்கு பரக்கத்தான வீட்டை கொடு யா அல்லாஹ்! என்னுடைய பிள்ளை செல்வ செழிப்போடு வாழனும் யா அல்லாஹ்! ஈமான், இஸ்லாம், தக்குவா, இபாதத் கிடைக்க மாட்டேங்குது விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
 
அதற்காக நான் ரிஸுக்கு துஆ செய்வதை விட்டு விடுங்கள் என்றுசொல்லவில்லை ரிஸ்க் கேட்கிற அளவுக்கு ஈமானுக்கும் தக்வாவுக்கும் கேட்டிருக்கிறோமா? அதுதான் இல்லை. முதலில் துஆ எதுக்கு கேட்க வேண்டும். ஈமானுக்கு இஸ்லாமுக்கு தக்குவாவுக்கு இபாதத்துக்கு துஆ கேட்க வேண்டும் .
 
அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2663
 
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏
 
இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக! (அல்குர்ஆன் 25 : 74)
 
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
 
“என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்! (அல்குர்ஆன் 14 : 40)
 
யா அல்லாஹ்! என்னையும் தொழக்கூடியவனாக ஆக்கு. எனது சந்ததிகளையும் தொழக் கூடிய சந்ததிகளாக ஆக்கு.
 
قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
 
அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 3 : 38)
 
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மீது அன்பு வைக்கமாட்டான். (அல்குர்ஆன் 3 : 32)
 
முதலில் துவா எதுக்கு கேட்கணும் அல்லாஹ்வுடைய தீன் ஈமான் இஸ்லாமுக்கு கேட்கணும். முஃமினாக வாழனும். முஸ்லிமாக வாழனும். சொர்க்கத்துக்காக வேண்டி துஆ கேட்கணும். ரசூல் எல்லாம் எப்ப கேட்டாலும் யா அல்லாஹ்! சொர்க்கத்தை கொடு யா அல்லாஹ்! அப்படின்னு கேட்பாங்க. அழுகணும் சொர்க் கத்தை கேட்டு சுஜுதில் போன உடனே சொர்க்கத்தை கேட்டு கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டணும். நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடி அழுகணும்,
 
அல்லாஹ்விடத்தில் அதுக்கப் புறம் ரிஜ்க் கேக்கணும். நாம் சொர்க்கத்தை கேட்கும் பொழுதும் மறுமையை கேட்கும் பொழுதும் அழுக மாட்டேங்குறோம். வயிற்றுக்கு துஆ கேட்கும் போது ரொம்ப அல்லாஹ்விடம் அழுகிறான், கெஞ்சுகிறான், ஆஹிரத்தை கேட்கும் போது விட்டுடறாங்க, என்னமோ துன்யாவில் நிரந்தரமாக இருக்க போறது மாதிரி. அப்போ நாம் துஆ கேட்கும் போது எதுக்கு முதல்ல முக்கியத்துவம் கொடுக்கணும் நம்முடைய தீனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
 
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மனைவி மார்களுக்கும், சஹாபாக்களுக்கும் இந்த துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2140 குறிப்பு (4)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய துஆக்களை எல்லாம் எடுத்து படித்துப் பாருங்கள். சொர்க்கம், ஆஹிறத்து, சொர்க்கம், ஆஹிறத்து,
 
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ - سَنَةَ إِحْدَى وَثَلَاثِينَ وَمِائَتَيْنِ - قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، - فِي سَنَةِ خَمْسٍ وَتِسْعِينَ وَمِائَةٍ - قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، فِي مَجْلِسِ الْأَعْمَشِ - مُنْذُ خَمْسِينَ سَنَةً - قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ الْجَمَلِيُّ، - فِي زَمَنِ خَالِدٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ الْمُكَتِّبِ، عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُعَائِهِ: «رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مُطِيعًا، إِلَيْكَ مُخْبِتًا، إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي» قَالَ أَبُو الْحَسَنِ الطَّنَافِسِيُّ: قُلْتُ لِوَكِيعٍ: أَقُولُهُ فِي قُنُوتِ الْوِتْرِ؟ قَالَ نَعَمْ
 
எந்த இபாதத்துக்கும் நீருக்கும் தான் துஆவே‌. அடுத்ததாக துஆ எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோமா, துஆ கேட்கக் கூடிய நேரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியமானது” அந்த நேரத்தை நாம் தவற விட்டு விடக்கூடாது.
 
தஹஜத்துடைய நேரம், அத்தஹிய்யாத்துடைய நேரம், ஓதும் பொழுது , சுஜூதில் இருக்கும் பொழுது இந்த மாதிரி நிறைய நேரங்கள் இருக்கிறது. ஒரு சிறிய புத்தகம் போட்டு இருக்கிறோம். அதில் எல்லாம் இருக்கிறது, ஹஜ் செய்யும் பொழுது, நோன்பிருக்கும் பொழுது நோன்பு திறக்கும் நேரம், எல்லா துஆவுடைய நேரங்களும் இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2140
 
இந்த துஆவுடைய நேரங்களை நாம் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து முக்கியமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا، وإنَّ اللَّهَ أمَرَ المُؤْمِنِينَ بما أمَرَ به المُرْسَلِينَ، فقالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51]، وقالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172]، ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أشْعَثَ أغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إلى السَّماءِ، يا رَبِّ، يا رَبِّ، ومَطْعَمُهُ حَرامٌ، ومَشْرَبُهُ حَرامٌ، ومَلْبَسُهُ حَرامٌ، وغُذِيَ بالحَرامِ، فأنَّى يُسْتَجابُ لذلكَ؟!
 
ஒரு மனிதர் தலைமுடி கலைந்த நிலையிலே ஒரு ரொம்ப நீண்ட தூரம் பயணம் செய்து விட்டு கலைத்துப் போய் துஆ கேட்கிறார் ஆனால் அவருடைய துஆவிற்கு பதில் கொடுக்கப்படவில்லை. ஏன் அவர் சாப்பிட்டது ஹராமா இருக்குது. அவர் உடுத்து இருக்கிறது ஹராமா இருக்கிறது. அப்புறம் எப்படி துஆவிற்கு பதில் அளிக்கப்படும் ஹராமானது நம்முடைய வயிற்றில் கலந்து விட்டால் நம்முடைய வாழ்க் கையில் கலந்து விட்டால் நம் முடைய துஆக்கள் கபுல் ஆகுவதில்லை.
 
அதனால் உங்களுடைய கணவன்மார்கள், வீட்டில் உள்ளவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனமாக பார்க்கணும், கேட்கணும், அறிந்திருக்கணும், தப்பு செய்தால் நீங்கள் அவர் களை திருத்தணும், தட்டி  கேட்கணும், அடுத்ததாக நாம் எந்த ஒரு நல்ல அமலை செய்தாலும் அந்த நல்ல அமலை பரிசுத்தமாக செய்து, அந்த அமலை சொல்லிச் சொல்லி அல்லாஹ்விடம் துஆ கேட்கணும். யா அல்லாஹ்! உனக்காக தொழுதேன் என்னை மன்னித்துவிடு யா அல்லாஹ்!
 
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌‏
 
எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார் என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!) (அல்குர்ஆன் 3 : 193)
 
ஈமானைச் சொல்லி அல்லாஹ்விடம் துஆ கேட்டு பாருங்க. நம்மளுடைய  நம்முடைய ஈமானை சொல்லி, அமலை சொல்லி, அல்லாஹ் விடத்தில் துஆ கேட்கணும். அப்போ அமல் எப்படி செய்யணும். இஃலாஸா செய்ய வேண்டும். மன ஓர்மையோடு செய்ய வேண்டும். அல்லாஹ்வுடைய பயத்துடன் செய்யணும்.
 
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:80]، قَالَ: " خَرَجَ ثَلاَثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمُ المَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ، قَالَ: فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ، فَقَالَ أَحَدُهُمْ: اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالحِلاَبِ، فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً، فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ، قَالَ: فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الفَجْرُ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، قَالَ: فَفُرِجَ عَنْهُمْ، وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ، فَقَالَتْ: لاَ تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ، فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ: اتَّقِ اللَّهَ وَلاَ تَفُضَّ الخَاتَمَ إِلَّا بِحَقِّهِ، فَقُمْتُ وَتَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فُرْجَةً، قَالَ: فَفَرَجَ عَنْهُمُ الثُّلُثَيْنِ، وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ، وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ، فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الفَرَقِ فَزَرَعْتُهُ، حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا، ثُمَّ جَاءَ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي، فَقُلْتُ: انْطَلِقْ إِلَى تِلْكَ البَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ، فَقَالَ: أَتَسْتَهْزِئُ بِي؟ قَالَ: فَقُلْتُ: مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ "
 
மூன்று பேர் போனார்கள் பாருங்கள்காட்டுக்கு மழை பெய்ததா, இடி இடித்ததா, பயந்துகிட்டு குகைக்கு உள்ளே போனார்களா? கண் உறுத்துச்சா குகை வாசல் அடைத்து விட்டதா, மாட்டிக்கிட்டாங்களா யாருக்கு மெசேஜ் அனுப்புனாங்க? அல்லாஹ்விற்கு அர்ஷுடைய அதிபதி அல்லாஹ்விற்கு மெசேஜ் அனுப்பினார்கள்.
 
யா அல்லாஹ்! யா ரஹ்மானே! எங்களுடைய அம்மாவிறகும் அத்தாவிற்கும் நான் பணிவிடை செய்வேண்டா யா அல்லாஹ்! அவர்களுக்கு பால் கொடுக்காமல் நான் என்னுடைய பிள்ளைகளுக்கு அந்த ஆட்டுப் பாலை நான் கொடுக்கவே மாட்டேன். யா அல்லாஹ்! ஒரு நாள் நான் வந்தேன், அவர்கள் தூங்கி விட்டார்கள். 
 
என்னுடைய பிள்ளைகள் எல்லாம் பசியில் பால் கேட்டது.  நான் கொடுக்க மாட்டேன்டே. எங்க அம்மா அத்தா குடிச்சா தான் உண்டு.என் மனைவி என் புள்ளைங்கள் எல்லாம் பசியில் தூங்கிவிட்டது. காலையில் எங்க அம்மா அத்தா எழுந்தவுடனே அவர்களுக்கு கொடுத்துவிட்டு அப்புறம்தான் என்னுடைய என் பிள்ளைகளுக்கு கொடுத்தேன். யாஅல்லாஹ்! நான் இதை உனக்காக தானடா செய்தேன், என்னுடைய கஷ்டத்தை தீர்த்து விடு யா அல்லாஹ்! உடனே அல்லாஹ் கால்வாசியை அகற்றினான். 
 
One third push . யா அல்லாஹ்! ஒரு வேலைக்காரன் என்னிடம் இருந்தான் கொஞ்சம் காசு மிஞ்சி இருந்தது. அதை விட்டுட்டு போயிட்டான். ஒரு ஆட்டை வாங்கினேன். அப்படியே ஆடு பெருகி பெருகி நிறைய ஆடாக ஆகிவிட்டது. அவன் திரும்ப வந்தான். என்னுடைய கூலியை கொடு என்று கேட்டான். இதெல்லாம் உன்னுடைய கூலி தான் என்று சொன்னேன். கிண்டல் பண்ணாத ஒழுங்கா என்னுடைய கூலியை கொடு என்று கேட்டான். இதுதாண்டா உண்மையிலேயே உன்னுடைய கூலி. அதை வைத்து ஒரு ஆட்டை வாங்கினேன்.ஒன்று இரண்டாச்சு, இரண்டு மூன்றாச்சு நான்கு ஐந்து பல ஆடாக ஆகிவிட்டது என்றேன். அப்படியா  எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான்.
 
எனக்கு ஒன்றை கூட கொடுக்கவில்லை. இவ்வளவு நாள் வைத்து காப்பாற் றியதற்கு  யா அல்லாஹ்! உனக்காகத்தானே இதை நான் செய்தேன்.என்னுடையகஷ்டத்தை நீக்குடா, யா அல்லாஹ்! என்று அல்லாஹ்விடம் சொன்னார். உடனே அல்லாஹ்  2nd 3rd போய்விட்டது. 
 
இன்னொருத்தர் யா அல்லாஹ்! ஒரு நாள் பசி பஞ்சத்தில் இருந்தா, வந்து மாட்டிக்கிட்டா காசு கேட்டா நான் சொன்னே இந்த மாதிரி அவள் கடைசில சரின்னுட்டா காசு கொடுத்தேன். கடைசியில் அல்லாஹ்வை பயந்துட்டேன்னு சொன்னா. உடனே பயந்துட்டு நான் தள்ளி போயிட்டேன் யா அல்லாஹ்! நான் உனக்காகத் தானே செய்தேன்,
 
எனக்கு நீ உதவி செய்ய மாட்டியா என்று கேட்டார். அல்லாஹ் மூன்றாவது பகுதியும் திறந்து விட்டது. எல்லாரும் வெளியே வந்தாச்சு. அல்லாஹ்வுக்காக அமல் செய்து, அந்த அமலை சொல்லி அல்லாஹ் விடம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ்வை புகழ்ந்து, நபி மேல் சலவாத் சொல்லி நம்முடைய அமலை சொல்லி சொல்லி கேட்கனும்.
 
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕه‌ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
 
அல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7 : 180)
 
அல்லாஹ்வுடைய பெயர்களை நாம் சொல்லி சொல்லி துஆ கேட்க வேண்டும். நபிமார் களுடைய துஆ என்ன?ஹைருல் ஹாஸிரின், அர்ஹமர்ராஹிமின் அல்லாஹ்வை புகழ்ந்து புகழ்ந்து துஆ கேட்கணும். இன்ஷா அல்லாஹ் இந்த மாதிரி நம்மளும் நம்முடைய துஆக்களை நம்முடைய வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளலாமா? துணிவோடு நாம் நெருங்கி விட்டோம்னா அல்லாஹ்வை நெருங்கி விடுவோம். துஆவில் நம்முடைய மனதை பறி கொடுக்க வேண்டும்.
 
நீண்ட நேரம் துஆ கேட்க வேண்டும், கையை தூக்கி துஆ கேட்கலாம், கையை தூக்காமலும் துஆ கேட்கலாம், மற்றவர்கள் பார்க்கும் போது கையை தூக்கி விட்டு உருகுவது, அப்புறமா உட்டுறது, இப்படி கிடையாது, அதெல்லாம் முகஸ் துதி ஆகிவிடும், அதேபோல சத்தமாக துஆ கேட்கக்கூடாது, அமைதியாக கேட்கணும், அழுத நிலையில் துஆ கேட்கணும், அல்லாஹ்விடம் பணிந்த நிலையில் துஆ கேட்க வேண்டும். இன்ஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ் நாம் இதுவரை கேட்டதைக் கொண்டு அமல் செய்ததை கொண்டு நமக்கு அருள் புரிவானாக ஆமீன். 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
صحيح البخاري (1/ 19)
 
50 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ». قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: " الإِسْلاَمُ: أَنْ تَعْبُدَ اللَّهَ، وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: " مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ " ثُمَّ تَلاَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} [لقمان: 34] الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ: «رُدُّوهُ» فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ
 
குறிப்பு 2)
 
سنن الترمذي ت شاكر (2/ 254)
 
404 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيُّ، عَنْ عَمِّ أَبِيهِ مُعَاذِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَطَسْتُ، فَقُلْتُ: الحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، مُبَارَكًا عَلَيْهِ، كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ، فَقَالَ: «مَنِ المُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟»، فَلَمْ يَتَكَلَّمْ أَحَدٌ، ثُمَّ قَالَهَا الثَّانِيَةَ: «مَنِ المُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟»، فَلَمْ يَتَكَلَّمْ أَحَدٌ، ثُمَّ قَالَهَا الثَّالِثَةَ: «مَنِ المُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟» فَقَالَ رِفَاعَةُ بْنُ رَافِعٍ ابْنُ عَفْرَاءَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: [ص:255] «كَيْفَ قُلْتَ؟»، قَالَ: قُلْتُ: الحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ، كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ ابْتَدَرَهَا بِضْعَةٌ وَثَلَاثُونَ مَلَكًا، أَيُّهُمْ يَصْعَدُ بِهَا»، وَفِي البَابِ عَنْ أَنَسٍ، وَوَائِلِ بْنِ حُجْرٍ، وَعَامِرِ بْنِ رَبِيعَةَ،: " حَدِيثُ رِفَاعَةَ حَدِيثٌ حَسَنٌ، وَكَأَنَّ هَذَا الحَدِيثَ عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ أَنَّهُ فِي التَّطَوُّعِ لِأَنَّ غَيْرَ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ قَالُوا: إِذَا عَطَسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ المَكْتُوبَةِ إِنَّمَا يَحْمَدُ اللَّهَ فِي نَفْسِهِ وَلَمْ يُوَسِّعُوا بِأَكْثَرَ مِنْ ذَلِكَ 
 
குறிப்பு 3)
 
مسند أحمد مخرجا (30/ 297)
 
18352 - حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، وَمَنْصُورٍ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ الْكِنْدِيِّ [ص:298]، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ، ثُمَّ قَرَأَ: " {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ، إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي} [غافر: 60] "
 
குறிப்பு 4)
 
سنن الترمذي ت بشار (4/ 16)
 
2140 - حَدَّثَنَا هَنَّادٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: نَعَمْ، إِنَّ القُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ. وَفِي الْبَابِ عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ، وَأُمِّ سَلَمَةَ، وَعَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، وَعَائِشَةَ، وَأَبِي ذَرٍّ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَنَسٍ، وَرَوَى بَعْضُهُمْ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدِيثُ أَبِي سُفْيَانَ عَنْ أَنَسٍ أَصَحُّ.
 
 DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/