HOME      Lecture      இஸ்லாம் போற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் | Tamil Bayan - 758   
 

இஸ்லாம் போற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் | Tamil Bayan - 758

           

இஸ்லாம் போற்றும் ஈஸா அலைஹிஸ் ஸலாம் | Tamil Bayan - 758


இஸ்லாம் போற்றும் ஈஸா அலைஹிஸ்ஸலாம்
 
 
தலைப்பு : இஸ்லாம் போற்றும் ஈஸா அலைஹிஸ்ஸலாம்
 
வரிசை : 758
 
இடம் : மலேசியா மஹால், எருக்கஞ்சேரி
 
உரை  : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : H/ 30/05/1444 | - 24- 12-2022
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அன்பிற்குரிய பெரியவர்களே! மார்க்க அறிஞர்களே! சகோதரர்களே! தாய்மார்களே! சகோதரிகளே! நீண்ட நேரமாக அல்ஹம்துலில்லா மிக முக்கியமான நல்ல செய்திகளை மார்க்க அறிவுகளை நீங்கள் கேட்டு வருகிறீர்கள். இதுவரை நீங்கள் கேட்டதில் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்வானாக! எனக்கும் பரக்கத் செய்வானாக! அல்ஹம்துலில்லாஹ் குறிப்பாக ஷேக் அவர்கள் இன்று எடுத்துக்கொண்ட தலைப்பு பெரும்பாலும் நமது சமுதாயத்தவர்கள் மறந்து விட்ட ஒன்று, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஒன்றுகூட என்றும் சொல்லலாம்.
 
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி குர்ஆன் பேசுகிறது, ஹதீஸ் பேசுகிறது ஆனால், முஸ்லிம்கள் பேசுவதை விட்டு விட்டார்கள் ஏதோ ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஜீசஸ் அவர்கள் அந்த நசாராக்களுக்கு மட்டும், கிறிஸ்தவர்களுக்கு மட்டும், உரியவர்களை போன்று அவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்களோ! கடவுளின் மகனாக எடுத்துக் கொண்டார்களோ! அல்லது மூன்று அந்தக் கொள்கையிலே ஒரு கடவுள்களாக எடுத்துக் கொண்டார்களோ!  இப்படி நாமே தவறாக புரிந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்று நம்முடைய சமுதாயத்தில் பல இருக்கிறார்கள்.
 
ஈஸா அலைஹிஸ்ஸலாத்தை பற்றி பேசும்பொழுது நாம் நம்பிக்கை கொள்கிற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வேறு நசாராக்கள், கிறிஸ்தவர்கள், ஜீசஸ் என்று சொல்வது வேறு நமக்கும், அவர்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக பலர் நினைத்து இருக்கிறார்கள்.
 
எந்த ஈஸாவை ஜீசஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுடைய தூதர் அல்லாஹ்வுடைய கலிமாவால் பரிசுத்த பெண்ணாகிய தன்னுடைய கற்பழிக்கத்தை பாதுகாத்த பெண்ணாகிய அல்லாஹ்வின் உயர்ந்த சிறந்த நம்பிக்கை கூறிய அடியாராகிய மரியம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஊதினானோ, கொடுத்தானோ, அந்த ஈஸாவை தான், அந்த ஜீசஸை தான், நசாராக்கள் அல்லாஹ்வுடைய மகன் என்று சொல்கிறார்கள்.
 
تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا 
 
இ(ந்)த (சொல்லி)னால் வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும்; பூமி பிளந்து விடுவதற்கும்; மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) சரிந்து விழுந்து (நொறுங்கி) விடுவதற்கும் நெருங்கி விட்டன, (அல்குர்ஆன் 19 : 90)
 
அந்த வார்த்தை இன்று நாம் அப்படியே சகித்துக் கொண்டு செல்கின்ற வார்த்தையாக மாறிவிட்டது. அல்குர்ஆன் சொல்கிறது: அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது என்று இவர்கள் சொல்கிறார்களே! ஈஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுடைய உயர்ந்த, சிறந்த, தூதராக அனுப்பப்பட்ட அந்த தூதரை அல்லாஹ்வுடைய குழந்தை, அல்லாஹ்வுடைய பிள்ளை என்று, சொல்லும் போதெல்லாம் பூமி பிளந்து விட நெருங்கி விடுகிறது, 
 
வானம் சுக்கு நூறாக இடிந்து நொறுங்க நெருங்கி விடுகிறது, மலைகள் அப்படியே குலுங்கி அப்படி அதனுடைய இடங்களிலிருந்து குலுங்கி சுக்கு நூறாக ஆகிவிட நெருங்குகிறது, அந்த வானத்திற்கு வரக்கூடிய கோபம், வானத்திற்கு இருக்கக்கூடிய உணர்வு, பூமிக்கு இருக்கக்கூடிய உணர்வு, மலைக்கு இருக்கக்கூடிய உணர்வு, இன்று முஸ்லிம் ஆகிய நமக்கு இருக்கின்றதா?
 
இந்த உணர்வைக் கொண்டு வருவதற்கு தான் இந்த ஒரு மாநாடு, இந்த ஒரு நிகழ்ச்சி என்றால், அதுதான் நமக்கு மிக அவசியம் இன்று நாம் பார்க்கிறோம் சகோதரர்களே நாம் தாவாவை விட்டு விட்டோம் என்று சொல்லலாம் எங்கோ சிலர் செய்கிறார்கள் என்று உதாரணம் சொல்லாதீர்கள் சமுதாயம் செய்கிறதா!  இந்த தாவாவை முஸ்லிம்களுடைய மஸ்ஜித் முஹல்லாக்களுடைய மஸ்ஜித் எடுத்து நடத்துகிறதா இங்கு அவர்களுடைய ஒவ்வொரு கனிஷாவும் சர்ச்சும் தாவாவை எடுத்து நடத்துகிறது. 
 
அவர்களுடைய சர்ச்சுகள் அதனுடைய ஸ்தாபனமே தாவாவுக்காக இல்லையா சொல்லுங்க பார்க்கலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4 மணிக்கு எழுந்துகின்ற அந்த நசாராக்கள் கிறிஸ்தவர்கள் அன்றைய மாலை வரை தாவாவுக்காக அலைந்து கொண்டே இருக்கிறார்கள் இங்கே முஸ்லிம்கள் பிரியாணி எங்கே கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
 
முஸ்லிம்கள்” எங்கே கல்யாணம், யார் அழைப்பார்கள், பிரியாணி எங்கே என்று, அலைந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுடைய மஸ்ஜித், முஸ்லிம்களுடைய மஸ்ஜித் தொழுகைக்குப் பிறகு கூட்டம் போடுகிறது, தாவா மஸ்ஜிதுகளிலே தடுக்கப்படுகிறது.
 
யோசித்துப் பாருங்கள் எவ்வளவு பெரிய அநியாயம் செய்து கொண்டிருக்கிறோம் தாவாவை மறந்து விட்டோம் இன்று முஸ்லிம்களுடைய முஹல்லாவிலே, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய முஸ்லிம்களுடைய முஹல்லாவிலே சிறு பிரசுரங்களையும், புத்தகங்களையும், கொண்டு வந்து அவர்கள் வீட்டிலேயே கதவை தட்டி தாவா செய்து கொடுத்து விட்டு செல்கிறார்கள். 
 
நம்மில் பலர் கூட சிரித்துக் கொண்டு வாங்கிவிட்டு சரி படிக்கிறோம் செல்லுங்கள் என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு ஓரிரு வார்த்தைகள் சொல்வதற்கு திரும்ப சொல்வதற்கு அவர்களிடத்திலே அறிவு இல்லை, அவர்களிடத்திலே பேசுவதற்கு கல்வி ஞானம் இல்லை, ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி ஓரிரு குர்ஆன் வசனங்களை அவர்களை நிறுத்தி ஓதி காட்டுவதற்கு சொல்லிக் காட்டுவதற்கு புத்தி இல்லை, அந்த விளக்கம் இல்லை, இவருக்கே தெரியாது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் எங்கே சொல்கிறான் என்று அவர்களிலே ஆலிம் படிப்பு கிறிஸ்தவர்களுக்கு அவர்களுடைய மதத்திலே ஆலிம் படிப்பு என்று இருக்கிறது.
 
அதிலே மூன்றாவது ஆண்டிலேயே அவர்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து வருகிறார்கள், மதரஸாக்களுக்கு அழைத்து செல்கிறார்கள், நம்மைப் பற்றி உண்டான ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்து அதற்கு மறுப்பு எப்படி சொல்ல வேண்டும், எப்படி சத்தியத்திற்கு பொய்யை கொண்டு எப்படி மறுப்பு சொல்ல வேண்டும், என்று முட்டாள்தனமான கொள்கைகளை மண்டையிலே புகுத்துகிறார்கள்.
 
அதையும் ஏற்றுக்கொள்கிறார்கள், படிக்கிறார்கள், இங்கு முஸ்லிம்களுக்கு சத்தியம் சொல்லிக் கொடுக்கப்பட்டால், அறிவு சொல்லிக் கொடுக்கப்பட்டால், உண்மை போதிக்கப்பட்டால், குர்ஆனுடைய விளக்கங்கள் சொல்லப்பட்டால், அதைக் கேட்பதற்கு முஸ்லிம்களிலேயே” கூட்டம் இல்லை மாறாக விளையாட்டாக இருந்தால், வேடிக்கையாக இருந்தால், கல்யாணம் காட்சியாக இருந்தால், அங்கே ஒன்று கூடுவதற்கு நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கிலே உடனடியாக ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை படித்துக் கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள், உங்களுடைய அல்லாஹ்வை தெரிந்து கொள்ளுங்கள், எனவே அல்லாஹ்வின் மீது பழி சொல்கிறார்களே! அல்லாஹ்வின் மீது பழி போடுகிறார்களே! அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது. என்று அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா? நீங்கள் ஓதக்கூடிய  
 
قل هو الله احد
 
நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான். (அல்குர்ஆன் 112 : 1)
 
அதனுடைய அர்த்தமே உங்களுக்கு தெரியவில்லையே, அதனுடைய கருத்தை புரியவில்லையே, சிந்திக்க வேண்டாமா! ஹஜ் உடைய நிகழ்ச்சியில் அங்கே பல வாலிபர்கள் படித்த வாலிபர்கள் லீவிலே அவர்களை உம்முராவிற்கு, ஹஜ்ஜுக்கு, அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் கொண்டு வந்திருக்கும் பொழுது அங்கே ஒரு மாணவன் இடத்திலே ஒரு கேள்வி கேட்கிறோம் ஈஸா ஜீசஸ் பற்றி உனக்கு தெரியுமா? அவர் தெரியுமே என்று சொல்கிறான் என்ன? என்று கேட்டால் அவர் தான் அல்லாஹ்வின் மகன் என்று சொன்னான். முஸ்லிம் மாணவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை பாருங்கள் பிறகு ஜிப்ரீல் என்றால் யார்? தெரியுமா என்று கேட்டால். அவர் யாரு என்று எனக்கு தெரியாது என்று சொல்கிறான். 
 
அன்பு சகோதரர்களே! நம்முடைய முஸ்லிம் வாலிபர்களுடைய மார்க்க கல்வியின்மை, அவர்களை வழி கெடுப்பதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக மாற்றார்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் இணக்கமாக வாழ்வோம், ஒற்றுமையாக வாழ்வோம், சமூக நல்லிணக்கத்தை பின்பற்றுவோம், பிறருக்கு ஒரு சிரமம் என்றால் நம்முடைய நாட்டு மக்களிலே ஒருவருக்கு சிரமம் என்றால், அவருக்கு வலி என்றால், அவருக்கு பிரச்சனை என்றால், அவருடைய மதத்தை பார்க்க மாட்டோம், 
 
அவருடைய நிறத்தை பார்க்க மாட்டோம், அவருடைய மொழியை பார்க்க மாட்டோம் ஆனால், நம்முடைய மார்க்கத்தை விட்டு விட்டு அவர்களில் ஒருவராக நாம் கரைந்து விடுவோமா என்றால் அப்படி கரைந்து விட முடியாது.
 
சகோதரர்களே! மார்க்கத்தை, மார்க்கத்தினுடைய இடத்தில் வைத்து, கொள்கையில் எந்த சமரசமும் இல்லாமல் பின்பற்றுவது, தவ்ஹீதிலே உறுதியாக, இருப்பது என்பது வேறு சமூக சகோதரத்துவத்தை சமூக நல்லிணக்கத்தை கட்டி காத்து சமூக ஒருங்கிணைப்போடு ஒருவர் கூறுவர் உதவி செய்து ஒத்தாசை செய்து அன்போடு பரஸ்பர அந்த தூய அன்போடு வாழ்வது, விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, பெருந்தன்மையோடு இருப்பது, உதவி புரிவது என்பது வேறு 
 
இன்று சிலர்கள் இரண்டையும் கலக்க பார்க்கிறார்கள் நாம் அவர்களில் கரைந்து விடுவதை, அவர்களைப் போன்று வேஷம் போடுவதை, இதுதான் மத நல்லிணக்கம் அவர்களுடைய மத சடங்குகளிலே நாம் கலந்து கொள்வது, அவர்களுடைய மத சடங்குகளை ஊக்க வைப்பது, அதிலே பங்கெடுப்பது இது நல்லிணக்கம், இது சமூக ஒற்றுமையை பாதுகாப்பது, என்பதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
 
அரசியல் சமுதாய தலைவர்கள் கட்சிகளையும், இயக்கங்களையும், வைத்திருப்பவர்கள் இதை முன் நின்று இன்று நடத்தக்கூடிய நிலைக்கு சமுதாயத்தின் ஈமானுடைய பலவீனம் ஏற்பட்டு விட்டது. யார் தவ்ஹீதை, அகீதாவை, பேசுவார்களோ இவர்கள் எல்லாம் கடும் போக்கு உள்ளவர்கள், இவர்களெல்லாம் பிடிவாதக்காரர்கள், இவர்கள் எல்லாம் சமூக நல்லிணக்கத்தை விரும்பாதவர்கள், என்று அடையாளப்படுத்துகிறார்கள்.
 
யார்! சில காலங்களுக்கு முன்பு தவ்ஹீதை பேசிக் கொண்டிருந்தவர்கள், அகீதாவை பேசிக் கொண்டிருந்தவர்கள், அவர்களை அரசியலும் இந்த சமூக சூழலும் எப்படி கழிசடைகளாக, சாக்கடைகளாக, அவர்களுடைய சிந்தனைகளை மாற்றிவிட்டது என்பதை சிந்தித்துப் பாருங்கள் அல்லாஹ் உடைய இந்த மார்க்கம்,
 
قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ
 
வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும்  மிகத் தெளிவாகிவிட்டன.) (அல்குர்ஆன் 2 : 256)
 
அல்லாஹுத்தஆலா தெளிவாக சொல்லிவிட்டான் சத்தியம் வேறு உண்மையான ஈமான் வேறு நேர்வழி வேறு வழிகேடு வேறு இரண்டும் ஒன்றல்ல இது இதிலிருந்து பிரிந்து விட்டது.
 
قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ
 
மவுட்டியிடம் மூடத்தனம் முட்டாள்தனம் வழிகேடு வேறு இஸ்லாம் இது நேர்வழி, இஸ்லாம் இது ஒளி, இஸ்லாம் இது கல்வி, இது இஸ்லாம் நேரிய சிந்தனை, இஸ்லாம் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய உங்களுடைய அறிவும் அறிவியலும் உங்களுடைய கல்வியும் ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மையான ஒரு சித்தாந்தம் இது ஒரு அடிப்படை உண்மையான தர்க்கவாதங்களுக்கு தக்க வாதங்களை எல்லாம் மிகைக்கக்கூடிய அடிப்படையான தத்துவம் இது ஞானம் இது உங்களுடைய உலக மக்களுடைய எல்லா தத்துவங்களும் பொய்யாகலாம் குர்ஆன் சொல்லக்கூடிய ஒரு தத்துவம் பொய்யாக முடியாது குர்ஆன் சொல்லக்கூடிய ஒரு தத்துவத்தை உலக மக்களே ஒன்று சேர்ந்தாலும் சரி பொய்ப்பிக்க முடியாது குர்ஆனுக்கு எதிராக இன்னொரு ஆதாரத்தை கொண்டு வர முடியாது
 
قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ
 
(நபியே!) கூறுவீராக: “(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்விற்கே உரியது! ஆக, அவன் (உங்களை கட்டாயப்படுத்தி நேர்வழி நடத்த) நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தியிருப்பான். (அல்குர்ஆன் 6 : 149)
 
அல்லாஹ்வுடைய ஆதாரம் தான் மிகைக்கக்கூடிய ஆதாரம் அல்லாஹ்வுடைய அந்த சான்று தான் எல்லா ஆதாரங்களையும் மிகைக்கக்கூடிய ஆதாரம்.
 
இன்று சூரத்துல் ஃபாத்திஹாவிற்கே அர்த்தம் தெரியாத வீணர்கள் பொழுதை வீணாக கழிக்க கூடியவர்கள் நம்மிலே இருக்கும் பொழுது எங்கே நாம் பிற மக்களுக்கு தாவா செய்யக்கூடிய நிலைக்கு வருவது. இன்று இங்கு இருக்கக்கூடியவர்கள் அல்ஹம்துலில்லா வகுப்புக்கு வரக்கூடியவர்களாக இருக்கலாம், தொடர்ந்து மார்க்க அறிஞர்களோடு பழகக் கூடியவர்களாக இருக்கலாம்,
 
குர்ஆனோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம், ஒரு மஸ்ஜிதிலே ஜும்மா அன்று ஒரு சின்ன எக்ஸாம் வைத்து பாருங்கள் ஒரு பேப்பர் குடுங்க குர்ஆனில் எத்தனை சூரா” சூரா அல் பகரா உடைய அர்த்தம் என்ன? இப்படியாக ஒரு பத்து இருபது கேள்விகளை நீங்கள் கேட்டுப் பாருங்கள்!
 
குர்ஆனுடைய சூராக்களுடைய பெயர் தெரியுமா? அன் நிஷா, மரியம் என்ற ஒரு சூரா எங்கே! இருக்கிறது, ஈஸா நபியை பற்றி எந்த சூராவிலே அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது,
 
இப்படி ஏதாவது கேள்வி கேட்டால் சமுதாயத்திற்கு தெரியுமா யோசித்துப் பாருங்கள் அங்கே அவர்கள் பைபிள் ஸ்டடி என்று வைத்து, பைபிளை தமிழிலே மனப்பாடம் செய்து கொடுக்கிறார்கள். ஒரு முஸ்லிமிடத்திலே எப்படி பேச வேண்டும், ஒரு இணை வைப்பவர் இடத்திலே எப்படி பேச வேண்டும் என்று புரியாத அந்த குப்பையை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து மண்டையிலே திணிக்கிறார்கள்.
 
இங்கே குர்ஆன் தெளிவான வேதம், எத்தகைய பரிசுத்தமான இந்த வேதம், அவ்வளவு உண்மைகள், தத்துவங்கள், நேரிய ஒழுக்கங்கள், அடிப்படைகள், ஒன்றுக்கு ஒன்று முரண் படாத வேதம். அந்த வேதத்தை சொல்லி கொடுக்கிறோம் வாருங்கள் என்றால், அதை படியுங்கள் என்றால், அதனுடைய கருத்தை, கொள்கையை, அதனுடைய விளக்கத்தை புரியுங்கள் என்றால், இங்கே வருவதற்கு தயார் இல்லை. ஆனால் ஆடல் பாடல் என்றால் கூட்டமாக ஒன்று கூடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! சாதாரணமாக நாம் கடந்து விட முடியாது இன்று நமக்கு இருக்கக்கூடிய இந்த சோதனைகள் அதாவது நான் சோதனை என்று எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு நன்றாக புரியும். நாம் இந்த இந்திய திருநாட்டில் நாமும் நம்முடைய சந்ததிகளும் வாழ முடியுமா! நம்முடைய இஸ்லாமிய அடையாளத்தோடு நம்முடைய மார்க்க பற்றோடு என்னை நான் முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதோடு, என் கையில் குர்ஆன் இருப்பதோடு, ஐங்காலத் தொழுகையோடு, இஸ்லாமிய அடையாளங்களோடு, நானும் என் பிள்ளைகளும் இந்த இந்திய திருநாட்டில் எப்படி வாழ்வது என்ற அச்ச உணர்வு கொடுக்கப்பட்டிருக்கின்றோமே ஏன் தெரியுமா!
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மறந்து விட்டோம்” வெறும் கல்யாணங்களிலும், மையத்து வீடுகளிலும் இன்னும், சில சடங்குகளுக்கு மட்டும், தான் இந்த மார்க்கம் என்பதாக வைத்துக் கொண்டோம். மாறாக  படிப்பதற்கோ, புரிவதற்கோ, பரப்புவதற்கோ, இந்த மார்க்கம் இல்லை என்ற ஒரு முடிவிலே பெரும்பாலான முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
மார்க்க பிரச்சாரம் என்றால் என்னவென்று தெரியவில்லை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி இப்படி சொல்லப்படுகிறதே அதற்கு நான் குர்ஆனிலிருந்து என்ன பதில் சொல்வேன் உங்களிடத்திலே ஒன்று கேட்கிறேன்! இத்தனை அறிஞர்கள் பேசினார்களே! எவ்வளவு குறிப்பு எடுத்து கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அவர்கள் அறிஞர்களாக இருந்தும், அதை மீண்டும் ஒருமுறை படித்து வந்து அதற்கான குறிப்புகளோடு பேசினார்களே! உங்கள் இடத்திலே கேட்கிறேன் உங்களிலே யாராவது ஒரு நோட்டு பேனா வைத்து அவர்கள் சொல்லக்கூடிய வசனத்தை குறித்தீர்களா! அவர்கள் சொல்லக்கூடிய கருத்தை முக்கியமான கருத்து என்று எதையாவது பதிவு செய்தீர்களா! 
 
ஈஸா அலைஹிஸ்ஸலாம் நாம் போற்றக்கூடிய தூதர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். நீங்கள் ஈஸாவை நம்பினால் தான் உங்களுடைய ஈமானே முழுமையாகும். அப்போதுதான் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். என்று சொன்னார்கள் அந்த ஈஸாவை நாம் எப்படி நம்ப வேண்டும் எப்படியெல்லாம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி குர்ஆன் சொல்லியிருக்கின்றது என்று ஏறக்குறைய 25 பாயிண்டுகளை ஷேக் அவர்கள் சொன்னார்கள் அதற்குப் பிறகு சகோதரர் எம் எஃப் அலி அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் உடைய முஃஜிசாவை பட்டியல் படுத்தினார்கள்
 
அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லி இருக்கக்கூடிய மேன்மைகளை சொன்னார்கள் யார்ட்டயாவது எழுந்து நின்று இரண்டு விஷயங்களை சொல்லுங்க கோர்வையா சொன்னா சொல்ல முடியுமா? எழுதி வைத்திருக்கிறோமா சகோதரர்களை இது நம்முடைய பலவீனம் விஷயத்திற்கு வருவோம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் என்ன பிரச்சனை 
 
அல்லாஹ் அல்லாத ஒருவரை வானங்களையும் பூமியையும் படைத்த அந்த ஏக இறைவனாகிய உண்மையான கடவுள் ஆகிய படைத்த கடவுள் ஆகிய மக்கள் யாரெல்லாம் கடவுள் என்று சொல்கிறார்களோ அந்த கடவுள்கள் மக்களால் படைக்கப்பட்டவர்கள்.
 
خَلَقُوْا كَخَلْقِه فَتَشَابَهَ الْخَـلْقُ عَلَيْهِمْ
 
அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) (அல்குர்ஆன் 13 : 16)
 
அல்லாஹ் கேட்கிறான்: நான் படைத்தது போன்று இவர்கள் எதையாவது படைத்திருக்கிறார்களா! உங்களுக்கு என்ன குழம்பி விட்டதா இதை படைத்தவன் யார்! இதை படைத்தவன் யார்! இதை படைத்தவன் யார்! என்று நீங்கள் என்னை விட்டுவிட்டு, படைத்த இறைவனை விட்டுவிட்டு இந்த பக்கம் சென்று விட்டீர்களே அல்லாஹ் ருபூபியத் அல்லாஹ்வுடைய அந்த ருபூபியத் அவன் யார்? படைப்பவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், அனைவருக்கும் உயிரை கொடுப்பவன், அனைவருக்கும் உயிரை எடுப்பவன் தன்னுடைய அனாதை நடக்கவும் முடியாது
 
அத்தகைய பரிசுத்தமான ஒரு இறைவனை நிகரற்ற ஒரு இறைவனை ஒப்பற்ற ஒரு இறைவனை அவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் யாருக்கு செய்ய வேண்டும் வணக்க வழிபாடுகள் படைத்த இறைவனுக்கு.
 
يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ 
 
மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள். (அல்குர்ஆன் 2 : 21)
 
படைத்தவனை வணங்கு உன்னை படைத்தவனை, உன் மூதாதையர்களை படைத்தவனை, அவர்களின் மூதாதையர்களை படைத்தவனை வணங்குகள் படைக்கப்பட்ட ஒரு படைப்பு வணங்கப்படுவதற்கு தகுதி ஆகுமா?
 
சகோதரர்களே! ஈஷா அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்ட ஒரு படைப்பு சிலை வணக்கம் எப்படி இணை வைத்தலோ! கற்பனையான உருவங்களை, கற்பனையான பெயர்களை கொடுத்து அவற்றை  கடவுளின் அவதாரம் என்றோ! அல்லது, இவற்றை வணங்கினால் கடவுளை திருப்தி படுத்தலாம் என்றோ! அல்லது இவற்றை வணங்குவதின் மூலமாக கடவுளை வணங்குகின்றோம் என்றோ! எப்படி வணங்குவது இணை வைத்தலோ!
 
اِنْ هِىَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّيْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ
 
இவை எல்லாம் (வெறும்) பெயர்களாகவே தவிர (உண்மை) இல்லை. இந்த பெயர்களை நீங்களும் உங்கள் மூதாதைகளும் (இந்த சிலைகளுக்கு) சூட்டினீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு ஆதாரம் எதையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புவதையும் தவிர இவர்கள் (உண்மையான ஆதாரத்தை) பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து (வணங்கத் தகுதியானவன் யார் என்பதை விவரிக்கும்) நேர்வழி திட்டவட்டமாக வந்திருக்கிறது. (அல்குர்ஆன் 53 : 23)
 
அல்லா இவற்றுக்கு எந்த ஆதாரத்தையும் திறக்கவில்லை மக்களாக கற்பனையாக உருவாக்கிக் கொண்ட பொம்மைகள் அவர்கள் வடிவமைத்த உருவங்கள் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப சில தங்கத்தால் செய்கிறார்கள் சிலர் களிமண்ணால் செய்கிறார்கள் சிலர் மரக்கட்டைகளால் செய்கிறார்கள் சிலர் வெள்ளிகளால் பித்தளைகளால் அழிந்து போகக் கூடியவையாகும்.
 
أَلَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَا أَمْ لَهُمْ أَيْدٍ يَبْطِشُونَ بِهَا أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَا أَمْ لَهُمْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا
 
(சிலை வணங்கிகளே! நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ) அவர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பிடிப்பதற்கு அவர்களுக்கு கைகள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் செவியுறுவதற்கு அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?; (இவையெல்லாம் அவர்களுக்கு இருக்குமாயின் நீங்கள் வணங்கிய). (அல்குர்ஆன் 7 : 195)
 
அல்லாஹ் கேட்கிறான் கால் இருக்கின்றனவே அந்த காலை கொண்டு இவர்களால் நடக்க முடியுமா! இவர்களுக்கு கண்கள் இருக்கின்றனவே அந்த கண்களை கொண்டு பார்க்க முடியுமா! இவர்களுக்கு கைகள் இருக்கின்றனவே அந்த கைகளை கொண்டு பிடிக்க முடியுமா!  இத்தகைய பலவீனமான ஒரு கற்பனை சிலைகளை வணங்குவதை இணைவைத்தல் என்று குர்ஆன் எச்சரிக்கின்ற, குர்ஆன் கண்டிக்கின்ற, அதே இடத்தில் தான் எதையும் கண்டிக்கிறது?
 
அல்லாஹ்வுடைய பரிசுத்தமான தூதராகிய ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொல்லி வணங்குவது அல்லது, அவர்களை அல்லாஹ் என்று சொல்வது அல்லது, அல்லாஹ் என்பவன் கடவுள் என்பவன் மூன்றால் சேர்ந்தவன் எல்லா வசனங்களையும், உங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தெளிவாக ஓதி காட்டி ஓதி காட்டி சொன்னால் குறைந்தது அந்த வசனத்துடைய எண்களையாவது பதிவு செய்து கொள்ள வேண்டாமா!
 
இன்னும் அதிலும் குறைவாக அந்த வசனங்கள் எந்த சூராவில் இடம்பெறுகிறது என்பதை யாவது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா! நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் யாராவது கொஞ்சம் சொல்லிடுங்க இப்பயாவது நாங்க குறிச்சிக்கிறோம் அப்படின்னு சொல்லுவாங்கன்னு சொல்லிட்டு ஆனா யாரும் சொல்ற மாதிரி இல்ல நான் திரும்பத் திரும்ப ரெண்டு மூணு தடவை அதை சொல்றேன் சரி நாங்க அவங்க சொல்லும்போது குறிக்கல இப்பயாவது நீங்க சொல்லுங்களேன் நாங்க குறிச்சிக்கிறோம் சொல்லிட்டு வெட்கப்படுறீங்களா?
 
قَالَ مُجَاهِدٌ لَا يَتَعَلَّمُ الْعِلْمَ مُسْتَحْيٌ وَلَا مُسْتَكْبِرٌ
 
கல்வியை கற்றுக்கொள்ள மாட்டான் யார் வெட்கப்படக் கூடியவனும், பெருமைப்படக் கூடியவனும் இந்த அவேயில் நான் கேட்டா மக்கள் என்ன என்ன நினைச்சு பாங்க என்ன நெனச்சி பாங்க கல்வியிலே நீங்கள் ஆர்வமுள்ளவர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள் கல்வி கேட்பதிலே ஆசை உள்ளவர்கள் என்று உங்களை எண்ணிக் கொள்வார்கள் சரி சொல்லட்டுமா வேணாமா ஒன்னும் குறிக்கிற மாதிரி தெரியலையே சரி போன்லையாவது குறிச்சுக்கோங்க.
 
இஸ்லாமிய கொள்கை என்ன ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் நமக்கு குர்ஆனிலே என்ன போதிக்கின்றான்? அல்லாஹ்வை நாம் எப்படி நம்ப வேண்டும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வாக ஆக முடியுமா? அல்லாஹ்வுடைய குழந்தையாக ஆக முடியுமா? அல்லது, மூன்று கடவுள் அதிலே ஈஸாவும் ஒருவர் அல்லாஹ்வும் ஒருவர் என்றெல்லாம் நம்ப முடியுமா? அந்தக் கொள்கை என்ன இதை அல்லாஹுத்தஆலா சூரா அல்மாஹிதாவிலே 72 லிருந்து 77 வரை உள்ள வசனங்களில் மிக கடுமையாக கண்டித்து வசனங்களை இறக்கி இருக்கிறான் புரியுதுங்களா அது போன்று சூரா அல் மாயிதா உடைய 116 இல் இருந்து 118 வரை உள்ள வசனங்கள்
 
وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ,
 
إنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
 
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.” (அல்குர்ஆன் 5 : 116)
 
அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும். அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 5 : 118)
 
இந்த வசனங்களிலே நாளை மறுமையிலே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நிறுத்தி வைத்து கேள்வி கேட்பான் நசாரா, கிறிஸ்துவ மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், குர்ஆனுடைய நேர்வழியை அவர்கள் அடைய வேண்டும். இறுதி வேதம் ஆகிய குர்ஆனை அவர்கள் படிக்க வேண்டும், அவர்கள் படிப்பதற்கு நீங்கள் குர்ஆனின் பக்கம் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும், குர்ஆனை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
 
படித்து காட்டுங்கள் குறைந்தபட்சம் நாளை மறுமையில் கண்டிப்பாக நாய தீர்ப்பு நாளிலே, விசாரணை உண்டு அல்லாஹுத்தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிறுத்தி கேள்வி கேட்பான் எப்படி கேள்வி கேட்பான்.
 
قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ
 
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அல்குர்ஆன் 5 : 116)
 
ஈசாவே! ஜீசஸே நீங்கள் மக்களிடத்திலே சொன்னீர்களா “இடையில ஒரு விஷயத்தை சொல்கிறேன்” சகோதரர்களே! குர்ஆன் இருக்கிறதே இதை ஏன் நாம் பின்பற்றுகின்றோம், குர்ஆனை நாம் ஏன் ஏற்க வேண்டும், இதை விட தெளிவான ஒரு புத்தகத்தை கொண்டு வாருங்கள் நாங்கள் அதை பின்பற்ற தயார் இல்லையா அல்லாஹுத்தஆலா நான் தான் கடவுள் நான்தான் இறைவன்.
 
اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ 
 
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20 : 14)
 
என்னை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை என்னை மட்டுமே வணங்குங்கள் என்று அந்தப் படைத்த இறைவன் சொல்கிறான், அல்லாஹ் சொல்கிறான்: அல்லாஹ் என்றால் அந்த ஏக இறைவன் சொல்கிறான்:
 
மக்கள் அவனை வணங்க தயார் இல்லை யார் நான் அல்லாஹ்வும் இல்லை அல்லாஹ்வுடைய குழந்தையாகவும் இல்லை எனக்கு எந்த இறை சக்தியுமே இல்லை என்று யார் சொல்கிறார்களோ! அவர்களை வணங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் அப்படி அவர்கள் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?
 
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்குகிறார்களே! அவர்களை அல்லாஹ் என்று சொல்கிறார்களே! அவர்கள் எங்கேயாவது வாழ்நாளிலே என்னை வணங்குங்கள், எனக்கு வழிபாடு செய்யுங்கள் நான்தான் கடவுள் என்று எங்கேயாவது ஒரு வசனம் பைபிளிலே சொல்லப்பட்டு இருக்கிறதா சகோதரர் எம். எப் அலி அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாவாவின் முக்கியத்துவத்தை தாவாவிலே என்ன சொன்னார்கள் என்பதை வரிசையாக சொல்லிக் காட்டினார்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் வாழ்நாள் எல்லாம் அவர்கள் செய்த பிரச்சாரம் என்ன
 
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
 
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது நேரான பாதையாகும். (அல்குர்ஆன் 19 : 36)
 
நிச்சயமாக அல்லாஹ் தான் அல்லாஹ் என்றால் யார் என்று யூதர்களுக்கும் ஏகூதியர்களுக்கும் நசராக்களுக்கும் தெரியும் அவர்களுடைய அரபி பைபிள் அரபியிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ள இஞ்சில் பைபிளை நீங்கள் படித்துப் பார்த்தால் தமிழிலே எங்கெல்லாம் கர்த்தர் என்று வந்திருக்குமோ ஆங்கில பைபிளிலே காட் என்று எங்கெல்லாம் வந்திருக்குமோ,
 
அல்லது பாதர் என்று வந்திருக்குமோ அந்த இடத்திலே என்ன வார்த்தை இருக்கும் அல்லாஹ் என்ற வார்த்தை இருக்கும் அல்லது ரப் என்ற வார்த்தை அல்லது இலாஹ் என்ற வார்த்தை எந்த வார்த்தையை கொண்டு குர்ஆனிலே அல்லாஹ்வை வர்ணிக்கப்படுகின்றதோ அதுதான் அங்கே இருக்கும் ஈஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாழ்நாள் எல்லாம் என்ன சொன்னார்கள்.
 
وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ
 
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். (அல்குர்ஆன் 19 : 36)
 
நிச்சயமாக அல்லாஹ் தான் என்னுடைய ரப்பு உங்களுடைய ரப்பு என்னை படைத்தவனும் அவன் தான் உங்களை படைத்தவனும் அவன் தான் என்னை பரிபாளிப்பவனும் அவன் தான் உங்களை பரிபாலிப்பவன் அவன் தான் அவனை வணங்குங்கள்.
 
هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
 
இதுதான் நேரான பாதை தெளிவான அல்லாஹ்வின் பக்கம் கொண்டு போய் சேர்க்கக் கூடிய பாதையாகும்.
 
ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாளை மறுமையிலே அல்லாஹ் விசாரிப்பான் என்ன விசாரிப்பான் அல்லாஹ் மகத்துவமிக்கவன் அல்லாஹுத்தஆலா உடைய கேள்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
 
فَلَنَسْـــٴَـــلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَـنَسْــٴَــــلَنَّ الْمُرْسَلِيْنَ 
 
ஆக, எவர்களிடம் (தூதர்கள்) அனுப்பப்பட்டார்களோ அவர்களை நிச்சயம் விசாரிப்போம். இன்னும், (நமது) தூதர்களை நிச்சயம் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7 : 6)
 
நாம் தூதர்கள் அனுப்பப்பட்ட மக்களையும், கேள்வி கேட்போம் தூதர்களையும், கேள்வி கேட்போம் சுபஹானல்லாஹ்! 
 
يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ قَالُوْا لَا عِلْمَ لَـنَا اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
 
அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “உங்களுக்கு என்ன பதில் கூறப்பட்டது?” என்று (அவர்களிடம்) கூறுவான். “எங்களுக்கு (அதைப் பற்றி) அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 5 : 109) 
 
وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
 
(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 5 : 116)
 
அல்லாஹுத்தஆலா ரசூல் மார்களை எழுப்பி கேள்வி கேட்பான் உங்களுக்கு என்ன பதில் கொடுக்கப்பட்டது நீங்க தாவா செய்தீர்களா என்று அல்லாஹுத்தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கேட்பான் ஈஸாவே நீங்கள் மக்களிடத்திலே இப்படியா சொன்னீர்கள் உங்களுடைய வீடுகளை சுற்றியுள்ள கிறிஸ்தவர்களுக்கு இந்த வசனத்தை அல் மாயிதா உடைய 116 117 வது வசனத்தை குறைந்தபட்சம் ஒரு பேப்பர்ல எழுதி அல்லது,
 
ஒரு குர்ஆனை எடுத்து தர்ஜிமாவை எடுத்து அத ஜெராக்ஸ் எடுத்து அதையாவது கொண்டு போய் அவங்க கிட்ட குடுங்க அதையாவது அவரிடத்திலே கூறுங்கள் அதை படித்துப் பார்க்கச் சொல்லுங்கள் அல்லாஹுத்தஆலா கேட்பான் ஈஸாவே நீங்க இப்படி சொன்னீங்களா உங்களையும் உங்களுடைய அம்மாவையும் இரண்டு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று வணங்கப்படக்கூடிய கடவுள்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களா?
 
அப்போ ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஜீசஸ் அவங்க சொல்லுவாங்க அல்லாஹ் அக்பர் மக்களிலேயே அதிகமாக அல்லாஹ்வை பயப்பட கூடியவர்கள் நபிமார்கள் அந்த நபிமார்களில் ஐந்து நபிமார்கள் அல்லாஹ்வை அதிகமாக பயந்தவர்கள் அந்த நுபுவத்துடைய, ரிசாலத்துடைய, அந்த தகுதியிலே உச்சத்தை எட்டியவர்கள் ஐந்து நபிமார்கள் அவர்களிலே ஒருவர் தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் யாரை அல்லாஹுத்தஆலா உயிரோடு வானத்திற்கு உயர்த்தினானோ,
 
யாருக்கு இத்தகைய மிகப்பெரிய அத்தாட்சியை அத்தாட்சியாக அவரையே அல்லாஹ் ஆக்கினானோ, யாரைப் பற்றி திரும்பத், திரும்ப குர்ஆனிலே அல்லாஹ் சொன்னானோ, அந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவ்வளவு தகுதி உடையவராக இருந்தும், தவ்ஹீத் உடைய விஷயத்தில் மக்கள் அவரை கை நீட்டுகிறார்கள் இவரால் எங்களுக்கு இந்த கொள்கை என்று அல்லாஹுத்தஆலா நிறுத்தி விட்டான்.
 
ஈஸாவே! சொல்லுங்கள் ஈஸாவே பதிலளியுங்கள் நீங்கள் உங்களை நான் எதற்கு அனுப்பினேன் நீங்கள் மக்களுக்கு என்ன? சொன்னீர்கள் உங்களுடைய பெயரால் இப்படி ஒரு கூட்டம் வழிகெட்டிருக்கிறது உங்களை எனக்கு சமமான ஒரு கடவுளாக வணங்கிக் கொண்டிருந்தார்களே! அல்லது, என்னுடைய குழந்தை என்று மக்களுக்கு மத்தியிலே பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்களே! அவர்களுக்கு முன்னால் நீங்கள் பதில் அளித்து தான் ஆக வேண்டும். அல்லாஹ் கேட்பான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் நடு நடுங்கி விட்டு செல்வார்கள். 
 
قَالَ سُبْحٰنَكَ
 
அல்லாஹ் நீ மகா பரிசுத்தமானவன் இங்க கவனிங்க நீ மகா பரிசுத்தமானவன் அல்லாஹ் அக்பர் ஒரு வார்த்தை அதற்கு மேல் என்ன பேசுவது யா அல்லாஹ் நீ மகா தூயவன் உனக்கு இப்படி ஒரு குறையை என்னால் சொல்ல முடியுமா
 
يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ
 
எனக்கு தகுதி இல்லாததை எனக்கு உரிமை இல்லாததை எனக்கு அனுமதி இல்லாததை நான் எப்படி அல்லாஹ் கூறுவேன் என்னால் கூற முடியுமா சொல்வார்கள்
 
اِنْ كُنْتُ قُلْتُه فَقَدْ عَلِمْتَه
 
என் இறைவா நான் அப்படி கூறியிருந்தால் உனக்கு அது தெரிந்திருக்குமே நான் அப்படி சொல்லி இருந்தாள் என்னை அல்லாஹ் என்றோ உன்னுடைய மகன் என்றோ அல்லது என்னை வணங்குங்கள் என்றோ எனது தாயை வணங்குங்கள் என்றோ நான் சொல்லியிருந்தால். அல்லாஹ் நான் அப்படி சொல்லி இருந்தால் உனக்குத் தெரிந்திருக்குமே
 
اتَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ
 
எனது நப்சிலே எனது உள்ளத்திலே எனது ஆத்மாவிற்குள் என்ன இருக்குமோ அது உனக்கு தெரியுமே அல்லாஹ்வே உன்னுடைய நஃப்சுகுள் உன்னுடைய மனதுக்குள் என்ன இருக்கும் என்று எனக்கு தெரியாதே
 
اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
 
மறைவான விஷயங்களை அனைத்தையும் அறிந்தவன் ஆயிற்றே 
 
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِه
 
அல்லாஹ்வே நான் இவர்களுக்கு என்ன சொன்னேன் கிறிஸ்தவ மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் ஈஸா நபி உங்களுக்கு எதிராக சாட்சியாக இருப்பார்கள் உங்களுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் வாதாடுவார்கள் உங்களுக்கு மறுமையில் முதல் எதிரியாக உங்களுக்கு மறுமையிலே உங்களுக்கு எதிரான முதல் சாட்சியாக யாரை நீங்கள் அல்லாஹ் என்று சொன்னீர்களோ, கடவுள் என்று சொன்னீர்களோ அல்லது, கடவுளின் மகன் என்று சொன்னீர்களோ அந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் உங்களுக்கு எதிரான  சாட்சியாக இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள் சொல்வார்கள் அல்லாஹ் நான் அவர்களுக்கு சொல்லவில்லை நீ எனக்கு எதை ஏவினாயோ அதை தவிர என்ன ஏவினா எனக்கு நான் என்ன சொன்னேன்!
 
اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ  فَلَمَّا تَوَفَّيْتَنِىْكُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِم وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
 
அல்லாஹ்வை வணங்குங்கள் என்னுடைய ரப்பும் என்னை படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனுமாகிய உங்களைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் இதைத்தான் நான் அவர்களுக்கு சொன்னேன்! நான் அவர்களுக்கு மத்தியிலே வாழ்ந்த போது நான் அவர்களுக்கு சாட்சியாளனாக அவர்களை இந்த தவ்ஹீதின் பக்கம் அழைக்க கூடியவனாக இருந்தேன். நீ என்னை வானத்திற்கு உயர்த்தி விட்ட போது, அவர்களுக்கு அவர்களை கண்காணிக்க கூடியவனாக நீ இருந்தால் அல்லவா, நீ அனைத்தையும் பார்க்க கூடியவன் ஆயிற்றே உன்னை விட்டு எதுவும் மறைய முடியாதே சொல்வார்கள் :(அல்குர்ஆன் 5 : 117)
 
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ وَاِنْ تَغْفِرْلَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
 
நீ அவர்களை தண்டித்தாள் அவர்கள் உன்னுடைய அடியார்கள் உன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. நீ அவர்களை மன்னித்தால் அதாவது அவர்களை திருத்தி தவுபா செய்து இந்த தீய வழிகெட்ட கொள்கையில் இருந்து விலகி இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணமாக ஏற்று அவர்கள் முஹம்மது நபியை நம்பிக்கை கொண்டு உன்னை இறைவனாக ஏற்றுக் கொள்வதற்குரிய அந்த வாய்ப்பை தவ்பா உடைய வாய்ப்பை நீ கொடுத்திருந்தால். நீ மிகைத்தவனாயிற்றே உன்னை யார் கேள்வி கேட்க முடியும் ஞானவாயினாயிற்றே உன்னுடைய ஒவ்வொரு செயலும் ஞானமிக்கதே. (அல்குர்ஆன் 5 : 118)
 
அன்பு சகோதரர்களே! இது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமையிலே அல்லாஹ்விற்கு முன்னால் யார் தன்னை வணங்கினார்களோ தன்னை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொன்னார்களோ! அல்லது, மூன்று கடவுளின் ஒரு கடவுள் என்று சொன்னார்களோ! அவர்களுக்கு எதிராக ஈஸா அலைஹிஸ்ஸலாம் சொல்லக்கூடிய தெளிவான சாட்சி.
 
அன்பிற்குரிய முஸ்லிம் ஆன சகோதரர்களே சகோதரிகளே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வும் இல்லை, அல்லாஹ்வுடைய குழந்தையும் இல்லை அல்லது, கடவுள் தத்துவத்தில் மூன்றில் ஒருவராகவும் அவர்கள் இல்லை, அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களைப் போல படைக்கப்பட்ட ஒரு படைப்பு வித்தியாசம் என்ன அல்லாஹுத்தஆலா எப்படி முதலாவதாக தாயும், தந்தையும்,
 
இல்லாமல் என்னால் படைக்க முடியும் என்ற அற்புதத்தை அல்லாஹுத்தஆலா நிகழ்த்தினானோ பிறகு, ஒரு பெண் இல்லாமல், ஒரு ஆணை கொண்டே படைக்க முடியும் என்பதை அவ்வாவை கொண்டு அல்லாஹுத்தஆலா அற்புதத்தை உறுதி செய்தானோ அது போன்று ஆண் இல்லாமல் பெண்ணை கொண்டே ஒரு படைப்பை என்னால் படைக்க முடியும் என்பதை அல்லாஹுத்தஆலா அத்தாட்சியாக நிரூபிப்பதற்காக படைக்கப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு நபி ஒரு மனிதர் இறைவனுடைய ஒரு தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இதைத் தவிர ஒன்றுமே இல்லை.
 
அன்பு சகோதரர்களே! ஈஸா அலைஹிஸ்ஸலாம் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்லாஹ்வுடைய நபி என்று நம்பிக்கை கொள்ளப்பட வேண்டியவர்கள் அவர்களுடைய பிரார்த்தனை அவர்களுடைய தாவாவாக எது இருந்தது அல்லாஹ்வை வணங்குங்கள் என்றுதான் கடைசியாக பேசிய ஷேக் அவர்கள் உருதிலே சூரா அந்நிஸா உடைய அந்த வசனத்தை மிகத் தெளிவாக நமக்கு படித்துக் காட்டினார்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொல்லப்பட்டார்களா? சிலுவையிலே அடையப்பட்டார்களா? அன்பு சகோதரர்களே! குர்ஆன் மிகத் தெளிவாக நமக்கு சொல்கிறது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். 
 
وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ
 
இன்னும், “அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவுமில்லை. இன்னும், அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று) ஒருவன் தோற்றமாக்கப்பட்டான். (அல்குர்ஆன் 4 : 157)
 
யார் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொல்லப்பட்டார்கள் அவர்களை நாம் கொன்று விட்டோம் என்று சொல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான் எப்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொல்பவர்கள் அல்லாஹுவால் அந்த ஏக இறைவனால் சபிக்கப்பட்டவர்களோ அது போன்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஜினாவில் பிறந்தவர் என்று சொல்பவர்களும் சபிக்கப்பட்டவர்கள் அவர்கள் அவர்களை நாங்கள் கொன்று விட்டோம் என்று சொல்லக்கூடிய அந்த ஏகூதிகளும் அல்லாஹ்விடத்தில் சபிக்கப்பட்டவர்கள்.
 
முஸ்லிம்கள் எப்படி அல்லாஹ் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்ணியப்படுத்தினானோ அப்படி கண்ணியப்படுத்தக்கூடியவர்கள் எப்படி அவர்கள் அல்லாஹ்வுடைய பரிசுத்தமான ஒரு அடியான் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபி அல்லாஹ் அவர்களுக்கு இஞ்சீலை கொடுத்தான், தவ்ராத் உடைய இல்மை, ஞானத்தை, மனப்பாடமாக அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்தான்.
 
இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான் இறுதி நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த தூதுத்துவத்தை உண்மைப்பிக்கக்கூடிய, உண்மைப்படுத்தக்கூடிய, அவர்களை கொண்டு சுபச் செய்தி சொல்லக்கூடிய, நற்செயலியராக அல்லாஹ் அனுப்பினான்.
 
அந்த மக்கள் இன்று தங்களுடைய மார்க்கத்தை, தங்களுடைய கொள்கையை, விளையாட்டாக ஆக்கிக் கொண்டார்கள் சிலை வணங்கிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலே எந்த வித்தியாசமும் இல்லை இவர்கள் கற்பனையாக சில சிலைகளை வணங்குகிறார்கள் கணக்கில்லாமல் பல சிலைகளை வணங்குகிறார்கள். இவர்கள் இரண்டு சிலைகளை மட்டும் வணங்குகிறார்கள் அவ்வளவுதான்.
 
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உருவம் தான் இது என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? கற்பனையைத் தவிர சரி இன்னொரு பக்கம் இது ரொம்ப முக்கியமான விஷயம் அவர்களின் நம்பிக்கையின்படி என்ன கேள்வி? எல்லாத்தையும் ஒரு மேஜிக்கா? ஒரு மந்திரமா? தந்திரமா? மக்களை மயக்குகிறது.
 
எப்படின்னு சொன்னா நான் ஓப்பனா சொல்றேன், கண்ணியமா சொல்றதனால எந்த பிரச்சனையும், இல்லை நம்ம யாரையும் போய் சண்டை போடுறது இல்ல, நமக்கு மத்தியில நம்ம புரிஞ்சிக்கிறதுக்காக பேசுறோம்.
 
ஒரு காலத்துல தமிழ்நாட்டுல நிறைய அந்த விழிப்புணர்வு, பகுத்தறிவு பிரச்சாரம், எல்லாம் வந்து அப்ப மக்கள் எல்லாம் சிலை வணக்கத்தை விட ஆரம்பித்தார்கள், கேக்குறீங்களா என்னோட அப்ப என்ன செஞ்சாங்கன்னா நிறைய சினிமா படமா எடுத்தாங்க எடுத்து என்ன செஞ்சாங்கன்னா அந்த சினிமாவுல சிலைகள்நால அதிசயம் செய்கிற மாதிரி அதை காட்டியே பக்தி படங்களை காட்டியே திரும்பவும் சிலை வணக்கங்களின் பக்கம் மக்களை அழைத்தார்கள், சிலை வணக்கத்தை உயிர்ப்பித்தார்கள், அதை அப்படியே கட்டி பாதுகாத்தாங்க இது எங்க இருந்து காப்பி அடிச்சதுன்னு சொன்னா மேலை நாட்டில் இருந்து அவர்கள் என்ன செய்தார்கள் அங்கேயும் பகுத்தறிவு கிளம்பறப்ப இது என்னடா இந்த சிலுவையை போய் நம்பிட்டு இருக்க இத போய்  நம்பிக்கை கொண்டிருக்க ஒண்ணுமே அறிவுக்கே பலப்பட மாட்டேங்குதே நீங்க போய் ஒரு கிறிஸ்தவர் கிட்ட நஸரானிகிட்ட உக்காந்து பேசினா இதுக்கு மேல எனக்கு தெரியாது,
 
என்று சொல்லிடுவார் அவ்வளவுதான் இதுக்கு மேல எனக்கு தெரியாதுங்க அப்படின்னு குழம்புவாரு ஒரு உதாரணம் ஒரு சொல்வாரு ரொம்ப சூப்பரா இருக்கும் இப்ப நீங்க உங்க அத்தாவுக்கு நீங்க புள்ள உங்க பிள்ளைக்கு நீங்க அத்தா உங்க அக்காவுடைய புருஷனுக்கு நீங்க யாரு மச்சான் அப்படித்தாங்க அப்படிங்பாரு எப்படி ஈஸா அலைஹிஸ்ஸலாத்தை நமக்கு எப்படி விளக்குகிறாராம் அந்த மாதிரி தான் அவர் கடவுள் கடவுளின் பிள்ளை மூன்று கடவுளில் ஒருவர் யோசித்துப் பாருங்கள் இதற்கு உதாரணம்,”
 
இப்ப விஷயத்துக்கு வாங்க நம்ம என்ன? கேட்கிறோம் இந்த உதாரணத்தை வை எனக்கு வேதத்தில் இருந்து ஒரு வசனத்தை ஓதி காட்டு வேதத்திலிருந்து ஒரு ஆசனத்தை ஒரு ஆதாரத்தை ஓதி காட்டு சரி விஷயத்துக்கு வருவோம் என்ன விஷயம் சிலுவையிலே அடைஞ்சிட்டாங்கனு சொல்றாங்க குர்ஆன் சொல்லுது அறையில என்று சொல்லிட்டு அடுத்த விஷயம் நம்ம என்ன கேட்கிறோம் எந்த சிலுவையில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களை,
 
அறைந்ததாக சொல்கிறீர்களோ இப்ப அடுத்து நீங்க என்ன செய்றீங்க அந்த சிலுவையை வணங்குறிங்க அப்ப என்ன செய்தார்கள் மேலைநாட்டவர்கள் அந்த கிராசை வைத்துக் கொண்டு பேய ஓட்டுற மாதிரி படத்தை எடுத்தான் பேய ஓட்டுற மாதிரி மேஜிக் எல்லாமே எடுத்து மக்களுக்கு மத்தியில ஆறு காலுக்கு கிறிஸ்டினா பார்த்தீங்கன்னு சொன்னா எல்லாம் அந்த சிலுவையோட இருப்பாங்க பாதுகாப்புக்கு இதப் பாத்தா நம்ம ஆளு பாய் நம்ம மட்டும் சும்மாவா?
 
அவனும் தாயத்த போட்டுக்கிட்டான் ஷிர்கு இருக்குதே ஷிர்க் ஷிர்க்கு தான்  எங்கே இருந்தாலும் ஷிர்க் ஷிர்க்கு தான் நீ தாயத்த போட்டாலும் ஒன்னு தான் கழுத்துல கிராஸ போட்டாலும் ஒன்னு தான் வேற கையில சிவப்பு கயிறு கருப்பு கயிற கட்டுனாலும் ஒன்னு தான் எல்லாமே டோட்டலி ஷிர்குதான் அல்லாஹுத்தஆலா எந்த ஷிர்க் பண்ணனு கேக்க மாட்டான் ஷிர்க்கு பண்ணியா நேரா நரகத்துக்கு போயிடு என்று சொல்லிடுவான்,
 
அல்லாஹு தஆலா அப்ப என்ன கேக்குறாங்க இப்னு கைய்யூம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி நிறைய கேள்வி கேட்கிறாங்க சுருக்கமாக சொல்றேன்:
 
إذا مات الإله بصنع قوم أماتوه فما هذا الإله
 
ஏம்பா இந்த சிலுவை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்குகிறீர்களே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என்ன கேள்வி ஒரு கூட்டம் கடவுளையே கொன்னுருச்சு அந்த கடவுளை வச்சு நீங்க என்னப்பா செய்யப் போறீங்க ஒரு கூட்டம் கடவுளே கொன்னுட்டாங்க அந்த கடவுள் உங்களுக்கு என்ன செய்வார் அடுத்த கேள்வி என்ன இந்த எதிரிகள் உங்க கடவுளை கொன்னாங்களே!
 
இப்போ கடவுளை கொன்னது அந்த கடவுளுக்கு விருப்பமா அல்லது கடவுளுக்கு கோபமா அப்படி கடவுளுக்கு விருப்பம் என்றால் ஆஹா கடவுளைக் கொன்று கடவுளின் விருப்பத்தை அடைந்தார்களே அவர்கள் எவ்வளவு பெரிய பாக்கியவான்கள் கடவுளை வழிபட்டு கடவுளுடைய விருப்பத்தை அடைகிறதா அல்லது கடவுளையே போட்டு தள்ளி கடவுளுடைய விருப்பத்தை அடைவதா இப்போ என்ன அடுத்த கேள்வி கேக்குறாங்க சரி இவர்கள் இதை செய்ததை கடவுளுக்கு பிடிக்காதுன்னு வச்சுக்கோங்க உன்ன பிடித்து இருக்கணும் அல்லது,
 
பிடிக்கல பிடிக்காதது என்றால் அப்ப தனக்கு பிடிக்காததை தன்னோடு இவர்கள் செய்யும்போது அதை தடுப்பதற்கு ஆற்றல் இல்லாமலா அந்த கடவுள் இருந்தார் கேள்வி புரியுதா அவசரமா சொல்லிக்கிட்டே போறோம் அடுத்து என்ன கேக்குறாங்க சரி அப்படி கொல்லப்பட்டதற்கு பிறகு இந்த உலகமெல்லாம் கடவுள் இல்லாமல் இருந்ததா எப்படியோ போட்டு தள்ளியாச்சு யார கடவுளையே போட்டு தள்ளியாச்சு அப்போ இந்த உலகம் கடவுள் இல்லாமல் இருந்ததா அப்போது பிரார்த்தனைக்கு பதில் கொடுப்பவன் யாராக இருந்திருப்பான் மக்களுக்கு கண்டிப்பா வணங்கக் கூடியவர்கள் இருக்கத்தானே செய்வாங்க,
 
அடுத்து கேட்கிறாங்க அப்படி என்றால் ஏழு வானங்களும் ஏழு பூமியும் கடவுள் இல்லாமல் ஆகிவிட்டதா கடைசியில் கொண்டுட்டு போய் புதைச்சிட்டாங்களே சிலுவையில் அடஞ்சிட்டு பொதச்சிட்ட இப்போது மண்ணுல புதைக்கப்பட்டதற்கு பிறகு மண்ணெல்லாம் மேலே கொட்டப்பட்டதற்கு பிறகு இந்த ஏழு வானங்களும் கடவுள் இல்லாமல் போய்விட்டனவா என்ன ஆனது இந்த பிரபஞ்சத்தை நிர்வகிக்கக்கூடிய நடத்தக்கூடிய அந்த கடவுளை கடவுளையே சிலுவையிலே ஆணியிலே அடைத்து விட்டார்களே எப்படி யார் நிர்வாகிப்பது?
 
எந்த கடவுள் இந்த பிரபஞ்சத்தை நிர்வகித்துக் கொண்டிருந்தாரோ அவனையே கொண்டு போயி சிலுவையில் அடஞ்சி கையும் காலையும் எடுக்க முடியாத அளவுக்கு ஆணி வச்சி அடஞ்சிடிங்களே அப்போ இந்த உலகத்தை நிர்வகிக்கக்கூடியவர் எங்கே சென்றார் அடுத்து கேக்குறாங்க சரி விடுங்க இன்னொரு கேள்வியை கேட்கிறேன்?
 
கடவுளுக்கு அந்த இறைவனுக்கு வானவர்கள் ஒரு பெரிய கூட்டங்கள் இருக்கிறாங்கன்னு சொல்றீங்களே நம்ம நம்புறோம் அதுவும் பரிசுத்தமான தன்மையோட இப்ப என்ன இவ்வளவு வானவ கூட்டம் இருந்து தங்களுடைய இறைவனாகிய கடவுளை பாதுகாக்க அவர்கள் வரவில்லையா அடுத்த கேள்வி என்ன இந்த வானவர்கள் எங்கே சென்றார்கள் இவர்களெல்லாம் வரவில்லையா இந்த பிரபஞ்சத்திலே வானவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா உங்களை உங்களுடைய கடவுள் சிலுவையிலே அறையப்பட்டு அழ கூடிய சத்தத்தை அவர்கள் கேட்கவில்லையா அடுத்த கேட்கிறார்கள்?
 
அடுத்து ஒரு கேள்வி கேக்குறாங்க பாருங்க இந்த இரும்பு சங்கிலி போட்டு கட்டி அவங்கள கொண்டு போறாங்களா இல்லையா கேக்குறாங்க ஒரு கடவுளுக்கு இந்த சங்கிலிகளை மாற்றப்படும் பொழுது கடவுள் படைத்தது தானே அந்த சங்கிலி அதுக்காவது மனம் வர வேண்டாமா கடவுளை அறைவதற்கும் கடவுளை துன்புறுத்துவதற்கும் என்னை பயன்படுத்த போகிறார்களே என்று அடுத்த கேள்வி கேக்குறாங்க இந்த எதிரிகள் உடைய கைகள் எல்லாம் எப்படி ஆற்றல் பெற்றன எப்படி நீண்டு விட்டன அவர்கள் அந்த கடவுளை அறைந்து அடிக்கிறார்களா இல்லையா அரஞ்சி அவரை கொண்டுட்டு போயி சிலுவையில் நிறுத்தக்கூடிய அளவிற்கு அவர்களுடைய கைகளுக்கு எப்படி சக்தி வந்தன அடுத்து கேட்கிறார் சரி விடுங்க அரஞ்சாச்சு அறையப்பட்டு செத்துப் போய்விட்டார் என்று சொல்றீங்க சரியா!
 
அதுக்கு அப்புறமா என்ன சொல்றாங்க மூணு நாலு கழிச்சி மூணு நாளா முப்பது நாளா நம்ம எல்லாம் அதுல போறதே கிடையாது நம்ம குர்ஆனை கொடுத்து சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் திரும்பி வந்தார்கள் என்று சொல்கிறார்களே அப்ப என்ன கேள்வி கேக்குறாங்க சரி வந்தாரே இப்ப இவரை உயிர் கொடுத்து எழுப்பியது யார் இவரா இவருக்கு உயிர் கொடுத்து விட்டாரா அல்லது,
 
இவருக்கு உயிர் கொடுத்தது இவர் அல்லாத இறைவனா? யார் உயிர் கொடுத்தது புரியுதா உங்களுக்கு அப்ப இவர் உயிர் பெற்றது இவரா இவருக்கு உயிர் கொடுத்துக் கொண்டது இவரா அல்லது இவர் அல்லாத இறைவனா என்ன பதில் சொல்லுவாங்க அடுத்து கேக்குறாங்க இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா! 
 
கடவுளையே தன்னுடைய வயித்துக்குள்ள வாங்கிரிச்ச இந்த பூமி என்ன ஆச்சரியம் எப்படி கடவுளையே முழுங்கிடுச்சு அப்புறம் மூணு நாள் கழிச்சு வந்தாரு அப்புறம் திரும்ப கொண்டுட்டு போய் என்ன செஞ்சுட்டாங்க திரும்பவும் போய்ட்டாங்க திரும்பவும் கொண்டுட்டு போயி மண்ணில் தானே அடக்கம் பண்ணாங்க கேக்குறாங்க கடவுளையே முழுங்கி கொண்ட இந்த பூமி என்ன ஆச்சரியமானது அதைவிட இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா!
 
கடவுளையே தன்னுடைய வயிற்றுக்குள் வைத்து இருந்தாரே அதுல என்ன கேள்வி கேக்குறாங்கன்னா 9 மாசம் கடவுள் வயிற்றுக்குள்ளே இருந்தாரு அந்த வைட் உடைய கர்ப்பப்பை இருள்களுக்குள்ளார சாப்பாடு என்ன குழந்தைக்கு சாப்பாடு என்னங்க வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தைக்கு சாப்பாடு என்னங்க தாயினுடைய என்ன அதை சாப்பிட்டு கேட்டு கடவுள் இருந்தாரு அடுத்து என்ன செஞ்சாரு தாயினுடைய மர்மஸ்தானத்தை பிளந்து கொண்டு வருகிறார்,
 
அதற்குப் பிறகு பசியினால் தாயினுடைய மடியை மடியில் இருந்து பாலை உறிவதற்காக வாயை திறக்கிறாரே இது என்னப்பா ஆச்சரியம் சொல்கிறார்கள் அடுத்ததாக அல்லாஹ் பரிசுத்தமானவன் இந்த நசாராக்கள் கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடிய இந்த பலிச் சொல்லிலிருந்து இந்த இட்டுக்கட்டில் இருந்து அல்லாஹுத்தஆலா பரிசுத்தமானவன் கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா அவர்கள் அல்லாஹ்வின் மீது புனைந்த அந்த பொய்யான கட்டுக் கதைகள் எல்லாவற்றையும் குறித்து அல்லாஹ் விசாரிப்பான்.
 
அடுத்து ஒரு கேள்வி கேக்குறாங்க பாருங்க இந்த சிலுவைகளை வணங்கக் கூடியவர்களே ஒரு கேள்வி கேட்கிறேன் எனக்கு சொல்லுங்க ஒரு கேள்வி கேட்கிறேன் என்னன்னா இப்ப இந்த சிலுவையில அரஞ்சுட்டாங்களே நீங்க சொல்றீங்களே இப்ப இந்த சிலுவை கண்ணியப்படுத்துவதற்கு தகுதியானதா அல்லது இது இழிவுபடுத்தப்படுவதற்கு தூக்கி எறியப்படுவதற்கு தகுதியானதா கடவுளை கொல்லப்படுவதற்கும் கடவுளை சாவடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒன்று கண்ணியப்படுத்த படக்கூடிய ஒன்றா அல்லது,
 
தூக்கி எறியப்பட வேண்டிய இழிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்றா கேக்குறாங்க ஒரு நல்ல புத்தி இருக்குமேயானால் அதை தூக்கி எறிய வேண்டும் உடைத்து எறிய வேண்டும் எரிக்க வேண்டும் என்றல்லவா சொல்ல வேண்டும் அடுத்து கேட்கிறாங்க பாருங்க அதாவது நிர்ப்பந்தமாக கடவுளை அவருடைய கையில் ஆணி அறைந்து அதிலே நீங்கள் அந்த சிலுவையிலே அடைந்து விட்டால் அந்த சிலுவை எவ்வளவு ஒரு நாசமானது மோசமானது அந்த சிலுவையை தூக்கி உடைத்து எறிவதற்கு பதிலாக அதற்கும் முத்தம் போடுகிறீர்களே!
 
எப்படி கடவுளை கொன்று விட்ட கடவுளை கொல்வதற்கு பயன்படுத்திய அந்த சிலுவையை தூக்கி எறிவதற்கு காலுக்கு கீழே மிதிப்பதற்கு பதிலாக அதற்கு நீங்கள் முத்தம் போடுகிறீர்களே அடுத்து கேக்குறாங்க படைப்பினங்களுக்கு எல்லா இறைவனாக இருக்கக்கூடிய அந்த ஏக இறைவன் இழிவுபடுத்தப்படுகிறான் படைப்பினங்களுக்கு எல்லாம் இறைவனாக இருக்கக்கூடிய அவன் இழிவுபடுத்தப்படுகிறான் அந்த சிலுவையில் அடைந்து கடவுளை இழிவு படுத்துறீங்க கடைசியா அந்த சிலுவையே அத வணங்குறீங்க நீங்க நீங்கள் இறைவனுடைய நேசர்களா அல்லது,
 
இறைவனுடைய எதிரிகளா அடுத்து கேட்கிறார்கள் சரி அடுத்து கேக்குறாங்க பாருங்க சரி அதாவது சிலுவையை நீங்க புனித படுத்துறீங்க அந்த சிலுவையில அடைஞ்சதுனால எந்த சிலுவையை அடைந்தாங்களோ அந்த சிலுவை இல்லை இப்பொழுது எந்த சிலுவையை புனித படுத்துறாங்க இவர்கள் ஒரு காப்பி அடித்துக் கொண்டு ஜெராக்ஸ் காப்பியை அடித்துக்கொண்டு அதுபோன்று,
 
செய்து கொண்டு அதை அவர்கள் புனித படுத்துகிறார்கள் இப்போ என்ன கேக்குறாங்கனா இமாம் இப்னுல் கையும் விடுங்க அடுத்து வாங்க அப்போ அந்த மாதிரி ஒரு சிலுவையே புனித படுத்துறீங்களே எங்கேயோ ஒரு இடத்துல ஈஸா நபி அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்களே அப்ப அந்த கபூரை உள்ளடக்கி இருக்கக்கூடிய மொத்த பூமி இதற்கு அல்லவா நீ அங்கங்கே சஜீதா செய்து கொண்டிருக்க வேண்டும் இதை அல்லவா நீ முத்தம் கொடுத்து இருக்க வேண்டும்,
 
சிலுவையைப் போன்று ஒன்றை வைத்துக் கொண்டு இப்படி புனிதம் கொண்டாடுகிறாயே நீ! புனிதம் எதற்கு கொண்டாடி இருக்க வேண்டும் அந்த ஈஸா நபியை இப்பயும் மண்ணுக்குள்ள வச்சுக்கிட்டு இருக்கு பாருங்க அவர்களின் கருத்துப்படி நம்முடைய கருத்துபடி வானத்திற்கு உயர்த்தப்பட்டாங்க அவர்களுடைய கருத்துப்படி பூமியில புதைக்கப்பட்டார்கள் என்று இருக்குல்ல அதற்கல்லவா நீ முத்தம் கொடுத்து இருக்க வேண்டும் கடைசியில சொல்றாங்க  ஈஸாவை வணங்க கூடியவர்களே விழித்துக் கொள்ளுங்கள் சுதாரித்துக் கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் இந்த மண்ணில் இருந்து தான் ஈஸா படைக்கப்பட்டார் இந்த மண்ணிற்கு தான் அவர் திரும்பவும் கொண்டுவரப்படுவார் .
 
ஆக அன்பிற்குரிய சகோதரர்களே! இன்னும் இஸ்லாமிய ஷேக் அவர்கள் கடைசியாக ஷேக் மதனி அவர்கள் சொன்னது இஸ்லாமிய அகீதாவை கொள்கையின்படி மிக அழுத்தமாக அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள் இன்று இந்த அகீதாவை சரியான முறையிலே   படிக்காததுடைய அந்த மிகப்பெரிய குறை தான் இன்று நம்மிலே பலர் வழி கெடுவதற்கும் நம்மிலே பலர் காதியானிகள் ஆக செல்வதற்கும் அல்லது பலர் கிறிஸ்தவர்களாக செல்வதற்கும் இன்னும் இன்னும் எத்தனை வழிகேடுகளிலே செல்கிறார்களோ அதற்கு காரணம் அடிப்படை அகீதாவுடைய இல்மு இல்லை அல்லாஹ் பாதுகாப்பானாக! இன்னும்,
 
பல நல்ல விஷயங்களை மார்க்க ஆதாரங்களோடு தெரிந்து கொள்ளுங்கள் தாவா கொடுக்கக் கூடியவர்களாக உருவாகுங்கள். அல்லாஹ்வுடைய வேதத்தை நீங்கள் புரிந்து படியுங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்படக்கூடிய ஒவ்வொன்றையும் புரிந்து படித்து அதை குறித்து வைத்து நீங்கள் நினைவிலே வைத்து தாவா கொடுப்பதற்காக அதற்காக ஒரு குறிப்பேடு வைத்து குறித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் நல்ல கல்வியை தந்தருள்வானாக அல்லாஹ்வின் தீனை புரிந்து தவ்ஹீதிலே உறுதியாக இருந்து இந்த தவ்ஹீதின் பக்கம் அழைக்கக்கூடிய நல்ல அழைப்பாளர்களாக நல்ல முஸ்லிம்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/