HOME      Khutba      ஏழு பெரும் பாவங்கள்! | Tamil Bayan - 827   
 

ஏழு பெரும் பாவங்கள்! | Tamil Bayan - 827

           

ஏழு பெரும் பாவங்கள்! | Tamil Bayan - 827


தலைப்பு : ஏழு பெரும் பாவங்கள்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஏழு பெரும் பாவங்கள்!
 
வரிசை : 827
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -01-09-2023 | 16-02-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக உங்களுக்கும் எனக்கும் நமது பெற்றோருக்கும் மூஃமினான ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்விடத்தில் அவனுடைய மன்னிப்பையும் மறுமையின் வெற்றியையும் வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக பாவங்களில் இருந்து நம்மை பாதுகாப்பானாக அல்லாஹ்விற்கு விருப்பமான ஒவ்வொரு சிறிய பெரிய அமல்களை செய்வதற்கும் அல்லாஹ் வெறுக்கக்கூடிய ஒவ்வொரு சிறிய பெரிய பாவங்களை விட்டு கெட்ட காரியங்களை விட்டு கெட்ட கொள்கைகளை விட்டு விலகி வாழ்வதற்கு அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் உதவுவானாக தவ்ஃபிக் செய்வானாக ஆமீன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே சென்ற ஜும்மாவிலே நாம் பார்த்தோம் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏழு பெரும் பாவங்களை விட்டு நம்மை எச்சரித்த ஹதீஸை பார்த்தோம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقاتِ، قالوا: يا رَسولَ اللَّهِ وما هُنَّ؟ قالَ: الشِّرْكُ باللَّهِ، والسِّحْرُ، وقَتْلُ النَّفْسِ الَّتي حَرَّمَ اللَّهُ إلَّا بالحَقِّ، وأَكْلُ الرِّبا، وأَكْلُ مالِ اليَتِيمِ، والتَّوَلِّي يَومَ الزَّحْفِ، وقَذْفُ المُحْصَناتِ المُؤْمِناتِ الغافِلاتِ.
 
நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் தூரமாகி விடுங்கள் அளித்து நாசமாக்க கூடிய ஏழு பெரும் பாவங்களை விட்டு பொதுவாக பாவம் என்பதே மிக ஆபத்தான ஒன்று இந்த உலகத்தில் அதனுடைய ஆபத்து எப்படியோ மறுமையினுடைய ஆபத்து மிக பயங்கரமானது.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766 குறிப்பு 1
 
وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
 
இன்னும், யார் வரம்பு மீறுவாரோ; தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும். (அல்குர்ஆன் 20 : 127)
 
மறுமையினுடைய தண்டனை மிகக் கடுமையானது, மிக நிரந்தரமானது ஒவ்வொரு பாவமும் மறுமையில் அல்லாஹ்வுடைய தண்டனைக்கு காரணமானது என்பதை நாம் புரிந்தாலே அந்தப் பாவத்தை விடுவதற்கு போதுமானது.
 
ஒரு பாவம் அந்த பாவத்தை நாம் விடுவதற்கு இந்த பாவம் அல்லாஹ்வின் தண்டனைக்கு அல்லாஹ்வின் கோபத்திற்கு என்னை தள்ளிவிடும் அல்லாஹ் என்னை தண்டிப்பதற்கும் என் மீது கோபப்படுவதற்கும் இந்த பெரும் பாவம்தான் காரணம் என்பதை நாம் புரிந்து கொண்டாலே போதுமானது.
 
அந்தப் பாவத்தை உள்ளத்தால் நாம் வெறுப்பதற்கும் அந்த பாவத்தை விட்டு நாம் விலகுவதற்கும் பெரும்பாலும் மறுமையினுடைய தண்டனை நினைவில்லாத காரணத்தால் மறுமையின் தண்டனை நினைவில்லாத காரணத்தால் தான் நாம் பாவங்களிலே சிக்கி கொள்கிறோம்.
 
அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆகிரத்துடைய அதாப் நினைவுக்கு வந்துவிட்டால் நாம் பாவம் செய்ய மாட்டோம் அப்படியே தெரியாமல் நம்மிடம் இருந்து பாவம் நிகழ்ந்து விட்டாலும் உடனடியாக தவ்பாவை நோக்கி நாம் விரைந்து விடுவோம். அதற்காக அழுது அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்போம் ஓயாமல்.
 
ஆதம் அலைஹிஸ்ஸலாம் எப்படி அழுதார்களோ, யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் எப்படி அழுதார்களோ, தாவூத் அலைஹிஸ்ஸலாம் எப்படி அழுதார்களோ பிறகு, நல்லோர் சான்றோர் எப்படி ஒரு சிறு சிறு பாவங்களை நினைத்து அழுது கொண்டிருந்தார்களோ, அது போன்று நமது கண்களும் அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்கும்.
 
அன்பு சகோதரர்களே! இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன மறுமையை மரத்தல் மறுமையை குறித்த சரியான அந்த அறிவு மறுமையின் மீது உண்டான சரியான பயமில்லாமல் இருத்தல் அல்லாஹுத்தஆலா நம்மை மன்னிப்பானாக!
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்! ஏழு பெரும் பாவங்கள் الموبقات அழித்து நாசமாக்கிவிடும் சஹாபாக்கள் உடனே கேட்டார்கள்! அல்லாஹ்வின் தூதரே அந்த பெரும் பாவங்கள் என்ன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலாவதாக ஷிர்க் இணைவைத்தலை சொன்னார்கள்:
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766 குறிப்பு 1
 
அன்பு சகோதரர்களே! அங்கே உட்கார்ந்து இருந்தவர்கள் யார்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சபையிலே மூத்த நபி தோழர்கள் உட்கார்ந்து இருக்கிறார் நபியிடத்தில் தர்பியா பெற்ற உயர்ந்த மூமின்களுடைய கூட்டம் அங்கே உட்கார்ந்திருக்கிறது அவர்களுக்கு சொன்னார்கள் இணை வைத்தல் என்பதாக இன்று நாம் நாமும் இந்த இணைவைத்தல் பற்றிய சரியான அறிவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம், நமது பிள்ளைகளுக்கும் இது குறித்த அச்சத்தை விழிப்புணர்வை கொடுக்காமல் இருக்கிறோம்.
 
இந்த ஷிர்க் இணை வைத்தல் என்பது அது சிலை வணக்கம், சிலுவை வணக்கம், பிற மத மக்கள் வழிபடக்கூடிய அது மட்டும் தான் என்பதாக முஸ்லிம்களிடத்திலே தவறான ஒரு எண்ணம் மனதிலே பதிந்திருப்பது தான் இதற்கு காரணம்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அப்படி அல்ல சிலை வணக்கம் இது ஷிர்குடைய ஒருவகை, சிலுவை வணக்கம்  இது ஷிர்க்குடைய ஒரு வகை, ஷிர்க்கு என்பது அல்லாஹ் அல்லாத அல்லாஹ் அல்லாத ஒருவரை அல்லாஹ்விற்கு சமமாக நம்புவது, அல்லாஹ்விற்கு சமமாக வணங்குவது, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு செய்வது,
 
அல்லாஹுவிற்கும் அடியானுக்கும் இடையில் இருக்கக்கூடிய விசேஷமான அந்த ஈமானிய உறவை, அந்த பண்புகளை அல்லாஹ் அல்லாத ஒருவரோடு வைப்பது, அல்லாஹ்வுடைய தன்மைகளில் ஏதாவது ஒரு தன்மையை அல்லாஹ் அல்லாதவரோடு சேர்ப்பது இவையெல்லாம் ஷிரிக்கிலே கொண்டு போய்விட்டு விடும் இவையெல்லாம் இணைவைத்தலிலே கொண்டு போய் சேர்த்து விடும்.
 
நிறுத்து வைக்கப்பட்ட சிலையை வணங்குவது மட்டும் அல்ல ஷிர்க் அதுவும் ஷிர்க் இன்று முஸ்லிம்களிலே ஒரு கூட்டம் இந்த ஷிர்க்கை சரியாக கற்றுக் கொள்ளாத காரணத்தால் என்ன என்று கற்றுக் கொள்ளாத காரணத்தால் இந்த உம்மத்திலே ஒரு பெரிய தொகையினர் ஷிர்க்கில் தான் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! கோயில்களிலே சிலைகள் வழங்கப்படுவதற்கும், கோவில்களில் சிலைகள் வழங்கப்படுவதற்கும், முஸ்லிம்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தர்காக்களில் அங்கு சமாதிகள் வழங்கப்படுவதற்கு இடையிலே எந்த வித்தியாசமும் இருக்காது.
 
நல்லோர் ஸாலிஹீன் நமது சமுதாயத்தில் முன் சென்ற அறிஞர்களும் அல்லது, ஒரு சான்றோர் அவருடைய அடக்கஸ்தலம் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பெரும் தொகையினரால், ஒரு பெரும் கூட்டத்தால், ஷிர்குடைய ஸ்தலமாக ஆக்கப்பட்டு அது முஸ்லிம்களுடைய அடையாளச் சின்னமாக மாறிவிட்டது.
 
அதை ஏற்பது, அதற்கு ஆதரவு தருவது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு ஆதரவு தருவதாக மாறிவிட்டது. அதை எதிர்ப்பது இஸ்லாமிய கலாச்சாரத்தை எதிர்ப்பதாக ஆக்கப்பட்டு விட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக! எப்படி கோயில்களில் நேர்ச்சைகள் நிறைவேற்றப்படுகின்றனவோ, அங்கே பழிகள் கொடுக்கப்படுகின்றனவோ, அங்கே மக்கள் தங்களுடைய தேவைகளை வேண்டி வருகிறார்களோ, அதுபோன்று இன்றைய முஸ்லிம் சமுதாயம் ஊருக்கு ஊரு தர்காக்களை ஏற்படுத்திக் கொண்டு அங்கே நேர்ச்சைகளை நிறைவேற்றுவது, அறுத்து பலியிடுவது,
 
அங்கே இரவிலே தங்குவது, அந்த தர்காக்களுக்கு செல்வதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது என்று நம்புவது, அங்கே சென்று பிரார்த்தனை செய்தால் தேவைகள் நிறைவேறும் என்று நம்புவது, தொட்டு தடவிக் கொள்வது, அங்கு சென்று செல்வத்தை காணிக்கை செலுத்துவது, அங்கு அடங்கியிருக்க கூடியவர்களின் பொருட்டால் பிரார்த்தனை கேட்பது, இன்னும், அதிகமாக அந்த கபூருக்கு சுஜூது செய்வதையும் பார்க்கிறோம் அந்த கபுரில் அடங்கி இருப்பவர்களுடைய பெயரை கூறி நீங்கள் எனக்கு உதவுங்கள் உங்களை நம்பித்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்வதைப் பார்க்கிறோம் அந்த கபூரை தவாப் சுற்றி வருவதைப் பார்க்கிறோம் அந்த கபூரை முன்னோக்கி கொண்டு குர் ஆன் ஓதுகிறார்கள் குர்ஆன் ஓதிவிட்டு அல்லாஹ்விடத்தில் கேட்காமல் அந்த இறந்து போன மனிதர் இடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
அன்பான சகோதரர்களே! யோசித்துப் பாருங்கள் அதாவது லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற இந்த தூய திருவாசகத்தினுடைய அடிப்படையே அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடிய அனைத்தையும் மறுப்பது அல்லாஹுவை தவிர வேறு யாருக்கும் வணக்க வழிபாடுகளில் எதையும் செய்யாமல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை பரிசுத்தமாக செய்வது என்ற இந்த தூய திருக்கலிமாவையே புரியாதவர்கள் இதற்கு எதிரான அத்தனை ஷிருக்குகளையும் செய்து கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்று ஒருவர் நம்பினால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறான்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஷிர்க்கும் இஸ்லாமும் ஒன்றாக சேர முடியாது, இணைவைத்தலில் இருந்து இஸ்லாம் நீங்கியது, இணை வைப்பவன் முஸ்லிமாக இருக்க மாட்டான். இணைவைப்பவன் முஸ்லிமாக இருக்க மாட்டான் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் ஒன்றை அல்லா அல்லாதவருக்கு செய்பவன் அவன் முசிறிக்காக ஆகி விடுவான்.
 
அவருடைய தொழுகை வீணாகிவிடும், அவருடைய நோன்புகள் வீணாகிவிடும், ஏன் அவன் கூறிய ஷஹாதாவும் வீணாகிவிடும் அவன் தவ்பா செய்து ஷிர்கிலிருந்து விலகாத வரை அவனுடைய ஷஹாத நாளை மறுமையில் அவனை சொர்க்கத்தில் சேர்க்காது.
 
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
 
திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.” (அல்குர்ஆன் 39 : 65)
 
அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்கிறான் பாருங்கள் இதைவிட தெளிவாக வேறு என்ன விளக்கத்தை நீங்கள் சொல்ல முடியும் அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபியை அழைத்து சொல்கிறான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியே! 
 
உங்களுக்கும் உங்களுக்கு முன் சென்றவர்களுக்கும் வஹியின் மூலமாக மூலமாக திட்டவட்டமாக உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் இணைவைத்தால் நபியை பார்த்து அல்லாஹ் சொல்கிறான் இதே செய்தி தான் எல்லா நபிமார்களுக்கும் சொல்லப்பட்டது.
 
நபியே நீ இணை வைத்தாலும் உன்னுடைய அமல்கள் எல்லாம் நாசமாகிவிடும் நீர் நஷ்டவாளிகளில் ஒருவராக ஆகி விடுவீர் அதாவது செய்த நன்மைகளுக்கெல்லாம் புண்ணியங்களுக்கெல்லாம்  நல்ல அமல்களுக்கெல்லாம் நன்மைகளை இழந்தவராக ஆகிவிடுவீர் உன்னுடைய ஷிருக்கானது நன்மைகளை அழித்துவிடும் சிந்தித்துப் பாருங்கள்.
 
இன்று மக்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறுகின்றோம், நாங்கள் எப்படி முசிறிக்காக ஆக முடியும், நாங்கள் என்ன தர்காக்களில் அடங்கி இருப்பவர்களை அல்லாஹ் என்று சொன்னோமா, கடவுள் என்று சொன்னோமா ரப்பு என்று சொன்னோமா, 
 
ரப்பு அல்லாஹ் தான் நாங்கள் இவர்களில் யாரையும் அல்லாஹ் என்று சொல்லவில்லை நாங்கள் எப்படி ஷிர்க் செய்தவர்களாக ஆகுவோம் என்பதாக தங்களுக்கு தாங்களே ஒரு சுய விளக்கம் கூறி திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! நன்றாக புரிந்து கொள்ளுங்கள் கோயில்களுக்கு சென்று சிலைகளை வணங்கக்கூடிய எந்த ஒரு இணை வைப்பாலனும் அந்த சிலைகளில் எதையும் கடவுள் என்று சொல்வதே இல்லை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலேயே மக்காவில் இருந்த எந்த ஒரு முசிறிக்கும் தான் வணங்கிய சிலையை பார்த்து அதை ரப்பு என்று சொல்லவே இல்லை.
 
ஆனால், அவர்களை அல்லாஹுத்தஆலா எப்படி அழைத்தால் முசிரிக்குகள் என்று அழைத்தான் காபிர்கள் என்று அழைத்தான் மக்காவில் வாழ்ந்த ஒவ்வொரு முசிறிக்கும் அல்லாஹ்வை மட்டுமே ரப்பாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் தான் வானங்கள் பூமியை படைத்த ரப்பு என்று கூறிக் கொண்டிருந்தான் இங்கே இருக்கக்கூடிய முசிறிக்குகளும் அப்படி தான்.
 
படைத்தவன் யார் என்றால் கடவுள் என்று சொல்வார்கள், உணவு அளிப்பவன் யார் என்றால் இறைவன் என்று சொல்வார்கள், எப்படி எல்லாம் நடக்கின்றது என்று சொன்னால் வானத்தில் உள்ளவன் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று சொல்வார்கள், இங்கே பிரச்சனை என்ன அவனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை அவன் அல்லாதவர்களுக்கு செய்வது அதுதான் ஷிர்க்.
 
அது சிலைக்கு செய்தாலும் சரி ஒரு நபிக்கு செய்தாலும் சரி ஒரு மலக்குக்கு செய்தாலும் சரி ஒரு கபருக்கு செய்தாலும் சரி அதுதான் ஷிர்க் அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாப்பானாக இது குறித்து தான் ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கை செய்தார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766 குறிப்பு 1
 
ஏழு பெரும் பாவங்கள் அழிக்கக்கூடிய பெரும்பாவங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் அது தான் முதலாவதாக ஷிர்க் நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
ஷிர்க்கிலே பெரிய ஷிர்க் இருக்கிறது, அதற்குப் பிறகு மறைவான ஷிர்க் இருக்கிறது, முகஸ்துதி அது ஒரு ஷிர்க் புகழை விரும்புவது வணக்க வழிபாடுகள் தான தர்மங்களை கொண்டு மக்களுக்கு மத்தியிலே பிரபலத்தை மக்களுக்கு மத்தியிலே மதிப்பை எதிர்பார்ப்பது இதுவும் ஒரு மறைவான ஷிர்க் இன்று நம்முடைய வார்த்தைகளில் கூட எவ்வளவு ஷிர்க்குகள் பரவி இருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
உலராமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம் ஒருவர் நம்மை பார்த்து நீங்கள் சுகமா என்று கேட்கும் பொழுது அந்த இடத்திலே அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் என்று சொல்வது ஈமான் என்ற சொல்வது தவ்ஹீத் ஆனால் நம்மிலே ஒரு கூட்டம் உங்களுடைய துவா பரக்கத்தால நல்லா இருக்கேன் உங்களுடைய புண்ணியத்தால நல்லா இருக்கேன் உங்களுடைய துவாவால நல்லா இருக்கிறேன் இதுவும் ஒருவகையான ஷிர்க் அல்லாஹ்வை புகழ வேண்டிய இடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களை புகழ்வது நம்முடைய வாழ்க்கையை அல்லாஹ்வுடைய அருளோடு இணைக்க வேண்டிய இடத்தில் அல்லாஹ் அல்லாதவருடைய செயலோடு இணைப்பது.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தோழர்கள் நபி கேட்டபோது, அல்லாஹ்வுடைய நேமத்தை விசாரித்த போது, அல்லாஹ் உடைய فضل அல்லாஹ்வுடைய அருள் என்று சொன்னார்களா அல்லது நபியை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உங்களுடைய துவாவால நாங்க நல்லா இருக்கோம் என்று சொன்னார்களா எங்கேயாவது ஒரு பலவீனமான ஹதீஸையாவது காட்ட முடியுமா ஆனால் இந்த வார்த்தை இன்று சமுதாயத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
 
யார் நம்மை பார்த்து சுகமா நலமா என்று கேட்டாலே உங்க துஆ பரக்கத்தால நல்லா இருக்கேன் எனக்கு என்ன குறை உங்க துவா இருக்கும் பொழுது  அன்பானவர்களே பிறர் எப்படி சொல்வார்கள் அல்லவா உங்கள் ஆசிர்வாதத்தால் உங்களது  புண்ணியத்தால் நான் நன்றாக இருக்கிறேன் என்று அதைத்தான் இப்படி வார்த்தை மாத்தி அரபியினுடைய வார்த்தையால் சொல்லப்படுகிறது.
 
ஒரு முஃமின் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ வேண்டும் அல்லாஹ்வுடைய அருளால் என்று சொல்ல வேண்டுமே தவிர இன்னொருத்தருடைய தயவாலோ அவருடைய துவாவாலோ நாம் நன்றாக இருக்க முடியாது துவா கேட்க வேண்டும் எல்லோரும்  எல்லாருக்காகவும் வேண்டி அந்த துவா அல்லாஹ்வுடைய அருளுக்கு கட்டுப்பட்டது அல்லாஹ்வுடைய அருள் என்று சொன்னால் அதிலே எல்லாமே அடங்கிவிடும் அல்லாஹ்வை புகழ வேண்டிய இடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களை புகழக் கூடாது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய அந்த ஈமானுடைய நம்பிக்கை அதிலே இணை வைத்தல் கலக்காமல் இருக்க வேண்டும், அது மட்டுமா ஷிர்க் இந்த நம்முடைய பலவீனம் எந்த அளவு ஈமானிலே ஊடுருவி இருக்கிறது.
 
நோய் வந்துவிட்ட பொழுது அல்லாஹ்விடத்தில் மன்றாடுகின்றோம் அழுகின்றோம் யா அல்லாஹ் சுகமாக்கு என்று கேட்கின்றோம் பிறகு மருத்துவமனைக்கு சென்று திரும்பும் பொழுது டாக்டர் ரொம்ப திறமையான டாக்டர் கரெக்டான நேரத்திற்கு கொண்டு சேர்த்து விட்டேன் கரெக்டான சிகிச்சை கொடுத்தார் எங்க அப்பாவை காப்பாத்திட்டாரு இதுவும் ஷிர்க் இதுவும் இணை வைத்தல் டாக்டரிடம் செல்வது இணை வைத்தல் அல்ல, மருத்துவம் பார்ப்பது இணை வைத்தல் அல்ல, அது மார்க்கத்தில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஏவிய ஒன்று.
 
ஆனால், என்னுடைய தந்தைக்கு உயிரை கொடுத்தது எனது தந்தையை காப்பாற்றியது என்னுடைய தந்தையை சுகமாக வீட்டுக்கு அனுப்பியது மருத்துவர் அல்ல, அல்லாஹ் சிகிச்சை பார்த்தார் அல்லாஹ் சுகம் அளித்தான் அவர் தேவையானதை செய்தார் அல்லாஹ் எனது தந்தையை வீட்டுக்கு அனுப்பினான் எங்களுக்கு சுகம் அளித்தவன் அல்லாஹ் அந்த நம்பிக்கையோடு இருக்க வேண்டுமே தவிர, சரியான நேரத்தில் சென்று விட்டேன் சரியான மருத்துவரை பார்த்தேன் திறமையான மருத்துவர் எல்லாம் திறமையாக செய்தார் ரொம்ப சிறப்பா முடித்துவிட்டார் ஆபரேஷனை எங்க அப்பா பிழைத்துக்கொண்டார் அன்பானவர்களே இதுவும் இணை வைத்தல் புரியாமல் இருக்கிறோம் கபருக்கு செல்வது மட்டுமல்ல தர்காக்களுக்கு செல்வது மட்டுமல்ல ஷிர்க் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் அதுவும் ஷிர்க்.
 
அந்த காலத்திலேயே என்ன செய்வார்கள் என்றால் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே சுட்டிக் காட்டுகின்றான் கடலிலே சென்று அங்கே புயல்கள் சூழ்ந்து கொண்டு காற்றுகள் சூழ்ந்து கொண்டு கப்பல் தத்தளித்தால் அல்லாஹ்வை அழைப்பார்கள் பிறகு அல்லாஹ் சுபஹானஹூதஆலா அவர்களை பாதுகாத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டால்
 
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
 
ஆக, அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை - அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள். ஆக, அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு சிலைகளை) இணையாக்குகிறார்கள். (அல்குர்ஆன் 29 : 65)
 
அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களாக ஆகி விடுகிறார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் அதற்கு என்ன தெரியுமா விளக்கம் எழுதுகிறார்கள் கடலிலே அல்லாஹ்வை அழைத்தவர்கள் கரைக்கு வந்தவுடன் ஷிர்க் செய்கிறார்கள்ز
 
என்ன தெரியுமா? அது கடலிலே அந்த இக்கட்டான நிலையில் அல்லாஹ்வை அழைத்தார்கள் கரைக்கு வந்தவுடன் சொன்னார்கள் அந்த ஐயாமுல் ஜாஹிலியா உடைய முஷிரிக்குகள் எங்களுடைய கப்பலோட்டிய எங்களுடைய அந்த மாலுமி இருக்கிறார் அல்லவா கப்பல் ஓட்டக் கூடியவர் அவர் ரொம்ப திறமைசாலி அந்த காட்சியினுடைய நேரத்திலே கப்பலை எப்படி இயக்க வேண்டும் என்று திறமையாக இயக்கி எங்களை பாதுகாத்து கொண்டு வந்து விட்டார்.
 
இதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் பாதுகாத்தவன் அல்லாஹ், அந்த காற்றை அமைதி படுத்தியவன் அல்லாஹ் இவர்களோ யாருடைய திறமையை கொண்டு பாதுகாக்கப்பட்டோம் என்று சொல்கிறார்கள் கப்பலோட்டியினுடைய திறமையை கொண்டு இன்னும் எத்தனை மக்கள் சொல்கிறார்கள் ஆபத்தில் சிக்கிவிட்டால் அழுவார்கள், ஆபத்திலே சிக்காமல் வாகனமோ விமானமோ வந்து விட்டால், பைலட் ரொம்ப திறமைசாலி, திறமையா இறக்கிட்டாரு, திறமையா ஏற்றி விட்டார், திறமையா கொண்டு வந்துட்டார்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுவை புகழ வேண்டிய இடத்தில் அல்லாஹ் அல்லாதவர்களை புகழ்வது உயிர்களைப் பாதுகாப்பது ஷிஃபாவை கொடுப்பவன் அல்லாஹு அந்த தன்மையை அல்லாஹ்வை மறந்து அல்லாஹ் அல்லாதவருடைய இணாப்பது இதுவும் ஷிர்க்கிலே கொண்டு போய் சேர்த்து விடும் .
 
இந்த ஷிர்க்கை குறித்து தொடர்ந்து பேச வேண்டும் மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் அடுத்த அன்பானவர்களே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியத்தைப் பற்றி சொன்னார் இன்று முஸ்லிம் சமுதாயத்திலே ஒரு பெரும் கூட்டம் இந்த சூனியத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் செய்வினை மந்திரம் எதற்கெடுத்தாலும் மந்திரகாரனை சூனியக்காரனை நோக்கி ஓடுவது பிறருக்கு தீங்கு செய்வதற்காக இந்த சிஹ்ரு இருக்கிறதே இதை கற்பது இதை கற்றுக் கொடுப்பது இதை செய்ய சொல்வது, இதற்கு உதவி செய்வது, இதை செய்பவன், இது எல்லாமே குப்ரு இணை வைத்தலிலே சேர்ந்தது.
 
ஒருவர் சூனியம் செய்கிறான் என்றால் அவனுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் தண்டனை அவன் கொல்லப்படுவது தான் அவ்வளவு பயங்கரமான பாவம் குஃப்ரிலே நேரடியாக தள்ளக்கூடிய பாவம் இந்த சிகர் சூனியம் செய்தல் கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி இந்த குற்ற செயல் முஸ்லிம்களுக்கு மத்தியிலே மலிவாக இருக்கிறது.
 
நீங்கள் வியாழக்கிழமை இரவு கடற்கரைக்கு சென்றால் அங்கே பார்க்கலாம் புர்கா போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக பெண்கள் வருவார்கள் கையிலே தேங்காய் எலுமிச்சை பழம் கயிறு என்னென்னமோ கொண்டு வந்து அந்த கடலிலே கரைத்துக் கொண்டு இருப்பார்கள்.
 
இன்று தர்காக்களிலே பார்த்தால் சிஹரை எடுக்கிறோம் என்று கூறி  அங்கே ஒரு கூட்டம் ஏமாற்றி கொண்டு இருக்கிறது, சூனியத்தை எடுப்பதற்காக, சூனியக்காரனிடம் செல்வதும் இணை வைத்தல். செய்யப்பட்ட சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரனைத் தேடிச் சென்று எனக்கு சூனியம் வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சொல் பார்த்து சொல் அப்படி வைக்கப்பட்டு இருந்தால் எனக்கு சூனியத்தை எடு என்று ஒரு சூனியக்காரனுடைய உதவியை தேடுவதும் ஷிர்க்  இணை வைத்தல் ஆகும்.
 
அல்லாஹ்வுடைய வசனங்களை கொண்டும் அல்லாஹ்வுடைய பெயர்களை கொண்டும் அல்லாஹ்வுடைய திக்ருகளை கொண்டுமே சூனியங்கள் முறியடிக்கப்படுமே தவிர ஒரு ஷிர்க்கை கொண்டு அல்ல. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766 குறிப்பு 1
 
மேலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர்களை கொள்வதைப் பற்றி சொன்னார்கள் பிற உயிரை கொல்வதைப் பற்றி சொன்னார்கள் பிற உயிரை கொல்வது இருக்கிறதே இஸ்லாமிய மார்க்கத்திலே மிகப்பெரிய பாவம் அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான் ஒரு முஃமின் இன்னொரு முஃமினை கொன்று விடமாட்டான் தெரியாமல் நடந்து விட்டாலே தவிரயாகும். 
 
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
 
எவர் ஒரு நம்பிக்கையாளரை மனம் நாடியவராக (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். இன்னும், அதில் அவர் நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், அவர் மீது அல்லாஹ் கோபித்துவிட்டான். இன்னும், அவரைச் சபித்தான். இன்னும், பெரிய தண்டனையையும் அவருக்காக தயார் செய்திருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 93)
 
யார் ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலை செய்வானோ அவனுடைய தண்டனை நரகமாகும், அதிலே அவன் நீண்ட காலம் தங்கியிருப்பான், அல்லாஹ் அவன் மீது கோபித்து விடுவான், அல்லாஹ் அவனை சபிப்பான். அவ்வளவு பயங்கரமான ஒரு பாவம் ஒரு உயிரை கொல்வதுதாகும்.
 
குர்ஆனிலே தொடர்ந்து பாருங்கள் அல்லாஹ்வுடைய உபதேசம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அல்லாஹுத்தஆலா சொல்லிக் கொண்டே இருப்பான் அல்லாஹ் புனிதமாக்கிய உயிரைக் கொன்று விடாதீர்கள் கொன்று விடாதீர்கள் என்று.
 
அன்பு சகோதரர்களே! அதுமட்டுமல்ல நம்மோடு இணக்கமாக, ஒப்பந்தத்தோடு வாழக்கூடிய முஸ்லிம் அல்லாத பிறரை கொள்வதும் அல்லாஹ்விடத்திலே குற்றத்தால் பயங்கரமானது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
مَن قَتَلَ مُعاهَدًا لَمْ يَرِحْ رائِحَةَ الجَنَّةِ، وإنَّ رِيحَها تُوجَدُ مِن مَسِيرَةِ أرْبَعِينَ عامًا
 
யார் ஒரு ஒப்பந்ததாரரை கொள்வாரோ இணக்கமாக வாழக்கூடிய பிற மனிதரைக் கொள்வாரோ அவர் சொர்க்கத்தின் வாடையையும் நுகர மாட்டார் அந்த சொர்க்கத்தின் வாடையோ இவ்வளவு தூர தூரமான இடத்திலிருந்து நுகரப்படும் ஆனால் இவருக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்காது.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 3166
 
அன்பு சகோதரர்களே! இந்த உயிர்களை கொள்வது இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது சொத்து தகராறிலே கொள்கிறார்கள் மார்க்கத்தின் பெயரால் மக்களை தவறாக கொள்கிறார்கள் இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த முன் அறிவிப்பு இருக்கிறது அல்லவா கியாமத்தினுடைய அடையாளங்களிலே ஒன்று.
 
والَّذي نَفْسِي بيَدِهِ، لا تَذْهَبُ الدُّنْيا حتَّى يَأْتِيَ علَى النَّاسِ يَوْمٌ لا يَدْرِي القاتِلُ فِيمَ قَتَلَ، ولا المَقْتُولُ فِيمَ قُتِلَ. فقِيلَ: كيفَ يَكونُ ذلكَ؟ قالَ: الهَرْجُ، القاتِلُ والْمَقْتُولُ في النَّارِ.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் கொலைகள் பெருகிவிடும் கொன்றவனுக்கும் தெரியாது நான் ஏன் கொள்கிறேன் என்று கொல்லப்பட்டவனுக்கு தெரியாது நான் ஏன் கொல்லப்பட்டேன் என்று.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 2908
 
மஸ்ஜித்களிலே கொலை நடக்கின்றன எங்கே முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அந்த இடத்திலே கொல்லப்படுகிறார்கள் என்றால் இன்றைய சமுதாய முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அல்லாஹ் புனிதம் ஆகிய இந்த உயிரிலே மிகப்பெரிய எல்லை மீறி கொண்டிருக்கிறார்கள்.
 
அது போன்று தான் வட்டி வாங்கி சாப்பிடுவது தன்னுடைய செல்வத்தை வட்டிக்கு கொடுத்து அதன் மூலமாக வாழ்வாதாரத்தை தேடுவது மிக பயங்கரமான பாவம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபித்தார்கள்!
 
لعنَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم آكلَ الرِّبا وموكلَهُ وشاهديْهِ وَكاتبَه
 
அல்லாஹ் சபிப்பானாக! வட்டியை அனுபவிப்பவனை வட்டிக்கு கொடுப்பவனை அதற்கு  சாட்சியாக இருப்பவனை அதற்கு கணக்கு எழுதக்கூடிய அவனை.
 
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, அபூ தாவூது, எண் : 1206, 3333
 
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
 
ஆக, (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) ஒரு போரை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. நீங்கள் (வட்டியைக் கேட்டு பிறருக்கு) அநீதி இழைக்காதீர்கள்; இன்னும், (உங்கள் அசல் தொகையை உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படாமல்) நீங்களும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 279)
 
அல்லாஹ்வோடு போர் செய்வதற்கு அவன் அறிவிப்பு செய்யட்டும் என்று சொன்னான் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நீங்கள் வட்டியில் இருந்து விலகவில்லை என்றால் அல்லாஹ்வோடு போர் செய்வதற்கு நீங்கள் தயாராகி விடுங்கள் என்று அவ்வளவு பயங்கரமான பாவம்ز
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 2766 குறிப்பு 1
 
இது அது போன்று தான் போருடைய மைதானத்தில் இருந்து விலகி செல்வது எங்கே அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவ வேண்டுமோ அந்த நேரத்திலே அல்லாஹ்வுடைய தீனுக்கு உதவாமல் தன்னுடைய உயிருக்கு பயந்து கோழையாக ஓடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய வெறுப்பான ஒரு செயல் அதுபோன்று ஒரு பத்தினித்தனமான ஒழுக்கமுள்ள ஒரு முஃமினான பெண்ணின் மீது பழி சுமத்துவதுز
 
அல்லாஹுத்தஆலா இந்த பாவத்தின் மீது எவ்வளவு கோபித்தான் என்றால் யாராவது ஒருவர் ஒரு முஃமினான பெண் மீது பழி சுமத்தி அதற்கு சாட்சியத்தை கொண்டு வரவில்லை என்றால் 80 கசையடி அவனுக்கு கொடுங்கள் என்று சொன்னார்கள் யார் சாட்சியத்தை கொண்டு வரவில்லையோ, ஒரு பெண்ணின் மீது ஒரு குற்றச்சாட்டை கூறி அதற்குரிய சாட்சியத்தை கொண்டு வரவில்லை என்று சொன்னால் 80 கசையடி கொடுங்கள்.
 
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَاجْلِدُوهُمْ ثَمَانِينَ جَلْدَةً وَلَا تَقْبَلُوا لَهُمْ شَهَادَةً أَبَدًا وَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
 
எவர்கள் பத்தினிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துவார்களோ, பிறகு, அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லை என்றால் அவர்களை எண்பது பிரம்படி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்) ஆவார்கள். (அல்குர்ஆன் 24 : 4)
 
சாதாரணமான தண்டனையா இது அது மட்டுமா அல்லாஹுத்தஆலா அடுத்து சொன்னான் அவர்களுடைய வேறு இனி எந்த சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் உங்களுடைய சபையில் சாட்சியாக கையெழுத்து இடுவதற்கே இனி அவனுக்கு தகுதி இல்லை அவர்கள் பாவிகள் என்று அல்லாஹ் சொன்னான்.
 
ஆனால், இன்று சர்வசாதாரணமாக சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் பிற ஆண்கள் மீது பிற பெண்கள் மீது அவர்கள் சகட்டுமேனிக்கு அவன் இப்படி இவன் இப்படி என்பதாக நான் அவளை அங்கே பார்த்தேன் இவனோடு பார்த்தேன் அவனோடு பார்த்தேன் என்பதாக அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய பயங்கரமான பாவம் அல்லாஹ்விடத்தில்
 
அன்பு சகோதரர்களே! இன்னும் இந்த பெரும் பாவங்கள் என்று நம்முடைய மார்க்க அறிஞர்கள் குர்ஆனிலிருந்து ஹதீஸிலிருந்து தொகுத்து எழுதி இருக்கிறார்கள் 70-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய பாவங்கள் இருக்கின்றன. அலட்சியமாக கருதப்படும் ஆபத்தான  குற்றங்கள் என்ற அந்த நூலில் கூட நீங்கள் பல விளக்கங்களை பார்க்கலாம் இந்த பெரும் பாவங்களை குறித்து.
 
அன்பு சகோதரர்களே இந்த பெரும் பாவங்களை நாம் அறிந்து கொள்வது அதிலிருந்து நாம் விலகுவதற்கு மிகப்பெரிய ஒரு துணையாக இருக்கும் பாவமே எது என்று அறியவில்லை என்றால் அல்லது ஒரு பாவத்தின் கடுமையை அறியவில்லை என்றால் எப்படி நாம் அந்த பாவத்தை விட முடியும். 
 
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஒவ்வொரு பெரிய சிறிய பாவத்திலிருந்து அல்லாஹ்விடத்தில் நாம் தவுபா செய்வோமாக நம்முடைய வாழ்க்கையை பெரும் பாவத்திலிருந்து  பாதுகாப்போமாக ஒவ்வொரு சிறு பாவத்தையும் நாம் விட்டு அல்லாஹ்வுடைய அன்பையும் மன்னிப்பையும் பெறுவோமாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
اجْتَنِبُوا السَّبْعَ المُوبِقاتِ، قالوا: يا رَسولَ اللَّهِ وما هُنَّ؟ قالَ: الشِّرْكُ باللَّهِ، والسِّحْرُ، وقَتْلُ النَّفْسِ الَّتي حَرَّمَ اللَّهُ إلَّا بالحَقِّ، وأَكْلُ الرِّبا، وأَكْلُ مالِ اليَتِيمِ، والتَّوَلِّي يَومَ الزَّحْفِ، وقَذْفُ المُحْصَناتِ المُؤْمِناتِ الغافِلاتِ.
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/