HOME      Khutba      அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள் அமர்வு 2 | Tamil Bayan - 835   
 

அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள் அமர்வு 2 | Tamil Bayan - 835

           

அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள் அமர்வு 2 | Tamil Bayan - 835


அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள் அமர்வு 2
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் உதவி வருவதற்கான காரணங்கள் அமர்வு 2
 
வரிசை : 835
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : -20- 10-2023 | 05-04-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக! தக்வாவை உபதேசம் செய்தவனாக! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும், சொர்க்கத்தையும், வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா அவனுடைய பாதையில் போராடக்கூடிய முஃமின்களுக்கு உதவி செய்வானாக! அல்லாஹ்வின் அடியார்கள் மீது கொடுமைகளையும், அநியாயங்களையும், நிகழ்த்தக்கூடிய அபகரிப்பாளர்கள் யூதர்கள் மீது அல்லாஹுத்தஆலா அவனுடைய சாபத்தை இறக்குவானாக! அந்த பரிசுத்தமான பூமியிலிருந்து இழிவடைந்தவர்களாக! அவர்களை அல்லாஹுத்தஆலா வெளியேற்றுவானாக! அவர்களுக்கு எதிராக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவானாக! பலப்படுத்துவானாக உதவி செய்வானாக ஆமீன்.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய உதவி எப்போது நமக்கு வரும், அல்லாஹ்வுடைய உதவி கிடைப்பதற்கு நம்மிடத்தில் என்னென்ன ஈமானிய நற்பண்புகள், ஈமானிய குணங்கள், ஈமானிய தன்மைகள் இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
 
சகோதரர்களே! அதில் ஒன்றுதான் முஃமீன்கள் அல்லாஹ்வையும், அவனுடைய வேதத்தையும், நம்பிக்கை கொண்ட முமீன்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து ஒரே ஜமாத்தாக இருப்பதோடு அவர்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றொருவரை நேசிப்பவர்களாக, ஒருவர் மற்றவருக்கு  உதவக்கூடியவர்களாக, இருக்க வேண்டும்.
 
மூமின்கள் அவர்களுடைய சமுதாயத்தை சாராத அவர்களுடைய எதிரி சமூகத்தை சேர்ந்தவர்களை ஒருபோதும் தங்களுடைய பாதுகாவலர்களாக தங்களுடைய துணைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது, மூமின்கள் தங்களுடைய உண்மையான மனப்பூர்வமான நேசத்தை அன்பை உறுதியை இன்னொரு முஃமினுக்கு வெளிப்படுத்த வேண்டும், செய்ய வேண்டும், ஒரு முஃமினுக்கு எதிராக இறைமறுப்பாளர்களுக்கு அவர்கள் உதவி செய்துவிடக் கூடாது, இறை மறுப்பாளர்களுக்கு துணை நிற்கக்கூடாது,
 
இங்கே ஒரு விஷயத்தை அடிப்படையாக நாம் புரிந்து கொண்டு செல்வோம் அல்லாஹுத்தஆலா உடைய இந்த இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கிடைக்கப்பெற்று இருக்கக்கூடிய இந்த விலைமதிக்க முடியாத இந்த சொத்து இந்த தீன் இந்த ஒன்றில் மட்டும் தான் மனிதன் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதோடு தன்னுடைய கொள்கையில், அகீதாவில், இஸ்லாமில் ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதோடு, இந்த கொள்கைக்கு  எதிரானவர்களிடத்திலும். 
 
அல்லது, இந்த கொள்கையை ஏற்காதவர்கள் அவர்களிடத்திலும், நீதமாக, நேர்மையாக, மனித நேயத்துடன் நடந்து கொள்ள முடியும் இப்படிப்பட்ட அந்த உறுதியான ஒரு கட்டுக்கோப்பை அல்லாஹ் ஈமான் என்ற இந்த ஒற்றை வார்த்தையில் சக்தியாக வைத்திருக்கிறான்.
 
அல்லாஹுத்தஆலா நமக்கு தொழுகையை மட்டும் கடமையாக்கவில்லை நோன்பை கொண்டு மட்டும் நீங்கள் தக்குவாவை அடைய முடியும் என்று அல்லாஹ் சொல்லவில்லை அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ 
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.(அல் குர்ஆன் 5 : 2)  
 
புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன். (அல்குர்ஆன் 5 : 2)
 
புனிதமான மஸ்ஜிதுல் ஹராமுக்கு உங்களை வரவிடாமல் தடுத்தார்களே அந்த சமுதாயத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய கோபம் அவர்கள் மீது எல்லை மீறி உங்களை குற்றவாளிகளாக ஆக்கி விட வேண்டாம் அவர்கள் மீது அந்த கோபத்தால் அவர்கள் மீது நீங்கள் எல்லை மீறி விட்டால் நீங்கள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவீர்கள் மேலும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக பொறுப்புகளை மிகச் சரியாக நிறைவேற்றக் கூடியவர்களாக (நீதம், நேர்மையில் மிக உறுதியானவர்களாக), நீதிக்கு சாதகமாக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதம் செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 8)
 
உங்களுக்கு எதிரியில் இருக்கக்கூடிய சமுதாயம் யாராக இருந்தாலும் சரி நீங்கள் நீதமாகத்தான் நடக்க வேண்டும் நீதம் தான் தக்வாவிற்கு மிக நெருக்கமான வழி ஆகவேதான் இஸ்லாமிய மன்னர்கள் அவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆட்சி நீதமான நேர்மையான ஆட்சி.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திற்கு பிறகிலிருந்து இன்றைய காலம் வரை இந்த நேரம் வரை ஒரு முஸ்லிம் நாட்டிலே பிற மதத்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், அவர்களுடைய வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டது, முஸ்லிம்களுக்கு இருக்கக்கூடிய அந்த சலுகைகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய தனிநபர் உரிமைகள், முஸ்லிம் நாடுகளில் பிற மத மக்களுக்கு இல்லை,
 
என்று ஒரு சிறு ஆதாரத்தை கூட காட்ட முடியாது வரலாற்றில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலிருந்து இன்று, இருக்கக்கூடிய உலகத்தில் இன்று இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகளில் எதுவாக இருந்தாலும் பொதுவாக எல்லோருக்கும் இருக்கக் கூடிய பிரச்சனை அவர்களுக்கும் இருக்கும் அந்தப் பிரச்சனையை,
 
முஸ்லிமும் அனுபவிப்பான் பிறரும் அனுபவிப்பார்கள் லஞ்சமோ அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஃபஸாதுகளோ அது வேறு ஆனால் அவன் பிற மதத்தை சேர்ந்தவன் என்பதற்காக அவன் மீது ஒரு முஸ்லிம் நாட்டிலே அநியாயம் செய்யப்படுகிறது, என்ற ஒரு ஆதாரத்தை கூட வரலாற்றிலே யாரும் காட்ட முடியாது.
 
ஆகவே, தான் கண்ணியத்திற்குரிய அவர்களே உலகத்திலே முஸ்லிம்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ செய்து கொண்டிருக்கிறார்களோ! அவர்களுக்கு எதிராக எந்த மதத்தவர்களும் அவர்கள் கிளர்ச்சி செய்ததோ எங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று அவர்கள் புரட்சி செய்ததோ நீங்கள் பார்க்க முடியாது அல்லாஹுத்தஆலா இஸ்லாமை ஈமானை மார்க்கமாக ஏற்க முஸ்லிம்களுக்கு கொடுத்து இருக்கக்கூடிய அற்புதமான ஒரு சக்தி இது ஈமானால் கிடைக்கப் பெற்ற சக்தி இந்த நீதம் என்பது.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வை மறுத்து இந்த மார்க்கத்திற்கு எதிராக யார் இருக்கிறார்களோ அவர்களோடு நட்பு பாராட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கின்றானே தவிர மனிதாபிமான உதவிகளையோ சமூக ரீதியான கொடுக்கல் வாங்கலையோ மற்ற தொடர்புகளையும் நீங்கள் செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை ஒரு முஃமினை விட அவனுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்காதீர்கள் உங்களுடைய பாதுகாவலர்களாக உற்ற நண்பர்களாக நீங்கள் அவர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள் அல்லாஹ் எப்படி கூறுகின்றான் பாருங்கள் சூரா அல் மாயிதா உடைய 56வது வசனம் இதற்கு முந்திய வசனம் 55 லே அல்லாஹ் சொல்கிறான்:
 
اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُه وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ‏
 
உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்களும்தான். இன்னும், அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள். (அல்குர்ஆன் 5 : 55)
 
முஃமின்களே உங்களுடைய நண்பர்கள் யார் தெரியுமா? அல்லாஹுவாக இருக்கிறான், அவனுடைய ரஸூலாக இருக்கிறார்கள், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமீன்கள் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்கள், 
 
ஜகாத்தை கொடுக்கக் கூடியவர்கள். இத்தகைய மூமின்களை உங்களுடைய நண்பர்களாக, உங்களுடைய பாதுகாவலர்களாக, உங்களுடைய துணைகளாக ஆக்கிக் கொள்ளுங்கள் அடுத்த வசனத்திலே அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
 
وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ
 
இன்னும், எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் நேசி(த்து அவர்களுடன் நட்பு வை)க்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.(அல்குர்ஆன் 5 : 56)
 
அல்லாஹ்வுடைய உதவி எப்போ வரும் என்றால் யார் அல்லாஹ்வை தன்னுடைய பாதுகாவலனாக எடுத்துக் கொண்டார்களோ, யார் அல்லாஹ்வுடைய ரசூலை தங்களுடைய நேசர்களாக ஆக்கிக் கொண்டார்களோ, அது போன்று وَالَّذِيْنَ اٰمَنُوْا மூஃமின்களிடத்திலே நேசம் பாராட்டுகிறார்களோ,  ஒரு முஃமினுக்கும் இன்னொரு முஃமினுக்கும் இயற்கையான இயல்பான மன கசப்புகள் வரலாம்,
 
ஏதாவது வாக்குவாதங்கள் வரலாம் ஆனால், அது அந்த முஃமினுக்கு எதிராக அவனுடைய எதிரிக்கு உதவி செய்வதற்கு இவனை தூண்டி விடக் கூடாது அப்படி தூண்டிவிட்டால் இவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுகிற நிலைக்கு  ஆளாகி விடுவான் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அன்பு சகோதரர்களே அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
 
وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَه
 
யார் அல்லாஹ்விடத்தில் நட்பு பாராட்டுகிறார்களோ, அவனுடைய ரசூலிடத்திலே நட்பு பாராட்டுகிறார்களோ, முஃமின்களிடத்திலே நட்பு பாராட்டுகிறார்களோ,
 
فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ‏
 
இத்தகைய அல்லாஹ்வுடைய ராணுவம் தான் எதிரிகளை வெல்லக்கூடியவர்களாக, எதிரிகளை மிகைக்க கூடியவர்களாக, இருக்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! இந்த இடத்தில் மிகத் தெளிவாக அல்லாஹுத்தஆலா நிபந்தனையிட்டு விடுகிறான் எந்த ரப்புல் ஆலமீன் உங்களுடைய உடல் வலிமையை உறுதிப்படுத்துங்கள் எதிரிகளுக்கு எதிராக ஆயுதங்களை நீங்கள் முடிந்த அளவு நீங்கள் தயார் செய்து வைத்திருங்கள் உங்களுக்கு உடல் வலிமையும் இருக்க வேண்டும் மனவலிமையும் இருக்க வேண்டும். 
 
ஆயுத பலமும் இருக்க வேண்டும். என்று எந்த அல்லாஹ் நம்மை தூண்டுகிறானோ. நமக்கு அறிவுரை கூறுகிறானோ. அதே அல்லாஹுத்தஆலா அவனுடைய உதவி நமக்கு கிடைப்பதற்கும். நாம் பிற சமூக மக்களின் மீது வெற்றி பெறுவதற்கும். மிகைப்பதற்கும்  அல்லாஹுத்தஆலா நிபந்தனையிடுகிறான்.
 
நீங்கள் உங்களில் ஒருவர் மற்றவரை நேசிராக்கி கொள்ள வேண்டும் அவரிடத்திலே பகைமை பாராட்ட கூடாது உங்களில் ஒருவர் மற்றவருக்கு துணை நிற்க வேண்டும் நீங்கள் பிரிந்து விடக்கூடாது இப்படி இருக்க இன்று இதிலே நாம் கவனம் செலுத்தாமல் நாளுக்கு நாள் இடங்களிலும் பிரிவுகளையும் குழப்பங்களையும் அதிகப்படுத்திக் கொண்டு நாம் எதிரிகளுக்கு முன்னால் நின்றால்,
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய உதவி எப்படி வரும், குறை சொல்வது, குறை சொல்ல வேண்டியது நம்முடைய குணங்களை நம்முடைய செயல்பாடுகளை ஆகிறது அல்லாஹ்வுடைய உதவி தாமதமாகிறது அல்லாஹ்வுடைய உதவி வராதா ?என்றால் அல்லாஹ்வுடைய உதவி வராமல் இருப்பதற்குரிய அத்தனை தடையான காரியங்களையும் நாம் ஏற்படுத்தி வைத்துக் கொண்டு, 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய விதியை நாம் எப்படி குறை சொல்ல முடியும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் பாருங்கள் சூரா ஹூத் உடைய 113 ஆவது வசனம் இங்கே அல்லாஹுத்தஆலா இன்னும் கடமையான எச்சரிக்கையை செய்கின்றான்:
 
وَلَا تَرْكَنُوْۤا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ
 
‏இன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 11 : 113)
 
முஃமின்களே! யார் இணைவைப்பில் சென்றுவிட்டார்களோ, நிராகரிப்பிலே சென்று விட்டார்களோ, அநியாயக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நீங்கள் ஆதரவு தேடாதீர்கள், அவர்களோடு நீங்கள் சாய்ந்து விடாதீர்கள், அவர்களுடைய வழிகளிலே நீங்கள் சென்று விடாதீர்கள், அப்படி சென்றால் உங்களை நாளை மறுமையில் நரகம் தீண்டி விடும், 
 
அல்லாஹ்வின் அடியார்களே! தொழ வில்லை என்றால் எந்த ரப்பு நம்மை நரகத்தைக் கொண்டு எச்சரிக்கின்றானோ ஜகாத் கொடுக்கவில்லை என்றால் எந்த ரப்பு அல்லாஹுத்தஆலா நம்மை நரகத்தைக் கொண்டு எச்சரிக்கின்றானோ அதே ரப்புதான் அதே அல்லாஹ் தான் அதே குர்ஆனிலே நம்மை எச்சரிக்கின்றான் நீ எனக்கு எதிரியாக இருக்கக் கூடிய அநியாயக்காரர்களோடு சேர்ந்து கொண்டால் மூமின்களை விட்டுவிட்டு அநியாயக்காரர்களோடு நீ சேர்ந்தால் உன்னை மறுமையில் நரகம் பிடித்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை செய்கிறான்,
 
ஒன்றை ஏற்றுக் கொண்டோம் இன்னொன்றை விட்டு விடுகிறோம் ஒன்றை மதிக்கின்றோம் அல்லாஹ்வுடைய இன்னொரு கட்டளையை அலட்சியம் செய்கிறோம் தொழுகை பேணப்படுகிறது ஆனால், சமூக வாழ்க்கையிலே அல்லாஹ் சொன்ன அழுத்தமான கட்டளை புறக்கணிக்கப்படுகிறது எப்படி அல்லாஹ்வுடைய உதவி வரும் சகோதரர்களே மேலும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் இந்த நட்பு என்பது இந்த உறவு என்பது ஈமானின் அடிப்படையில்
 
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
 
மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும், பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் மற்றவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். (அல்குர்ஆன் 49 : 13)
 
தக்வாவின் அடிப்படையிலே,
 
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
 
நம்பிக்கையாளர்கள் எல்லாம் சகோதரர்கள் ஆவர். ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்யுங்கள். இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)
 
முஃமீன்கள் சகோதரர்களாக இருக்க வேண்டும் ஒருவர் மற்றொருவரை எப்பொழுதும் பகைக்க கூடாது, எதிர்க்க கூடாது, அவனுக்கு எதிராக எதிரிகளை தூண்டக்கூடாது, எதிரிகள் இடத்தில் தனது சகோதரனை காட்டிக் கொடுக்கக் கூடாது எதிரிடத்தில் தனது சகோதரனை ஒப்படைக்க கூடாது.
 
அன்பு சகோதரர்களே வரலாற்றிலே இதற்கு முன்னால் இஸ்லாமிய மன்னர்களுக்கு இடையிலே கருத்து வேற்றுமையினாலோ அல்லது வேறு சில பிரச்சனைகளாலோ சண்டைகள் வந்திருக்கின்றன போர்கள் மூண்டு இருக்கின்றன ஆனால், அவர்களில் யாரும் ஒருவர் மற்றவரை எதிரிகள் இடத்தில் ஒப்படைப்பவர்களாகவும் முஸ்லிமை பகைத்துக் கொண்டு எதிரிகளை தங்களுடைய நேசர்களாக ஆக்கிக் கொண்டு,
 
இஸ்லாமிய எதிரிகளின் உதவிகளைக் கொண்டு இன்னொரு சகோதரர் முஸ்லிம் மன்னனை இன்னொரு சகோதரன் முஸ்லிம்களை அளித்ததாகவோ அவர்கள் மீது போர் செய்ததாகவோ வரலாறு இல்லை எந்த தவறை இன்றைய முஸ்லிம் சமுதாயம் செய்து கொண்டிருக்கின்றது.
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே இது ஏதோ அரபு நாட்டில் இருக்கக்கூடிய மன்னவர்களுக்கு மட்டும் பொதுவான வழிகாட்டுதல் என்று  நினைத்து விடாதீர்கள் நமது நாட்டிலே நமது பிரச்சனையை எடுத்துப் பாருங்கள்,
 
இன்று நாம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இந்த நாட்டில் இவ்வளவு ஆண்டு காலமாக வாழ்ந்தும் நமக்கு என்ன இந்த நாட்டிலே மதிப்பு இருக்கிறது ஏன் நமக்கு மதிப்பு இல்லாமல் போனது ஏன் நமக்கு அல்லாஹ்வுடைய உதவி இல்லாமல் போனது தன்னுடைய எதிரி அவமானப்படுத்தப்பட வேண்டும் தன்னுடைய எதிரி இழிவுபடுத்தப்பட வேண்டும்,
 
அவன் ஓரம் கட்டப்பட வேண்டும் அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரியே இன்று பிறரை விட முஸ்லிம்தான் முஸ்லிம்களுக்கு எதிரிகள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை வீழ்த்த நினைக்கின்ற ஒரு நிலைதான் சகோதரர்களே! எதிரிகளின் பார்வையிலே நம் மீது அச்சமில்லாமல் போனது ஒற்றுமை உள்ள ஒரு சமுதாயத்தை உலகத்தில் யாராலும் எதிர்க்க முடியாது,
 
ஈமான் இருந்து இஸ்லாம் இருந்து அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு மஸ்ஜிதிலே முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மஸ்ஜிதிலே அல்லாஹ்வுடைய சட்டங்களை கண்ணியப்படுத்தக்கூடிய முஸ்லிம்கள் சமூக வாழ்க்கையிலே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை எதிர்ப்பவனாக ஏன் அவனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்ட கூடியவனாக  மாறுவதை பார்க்கும் பொழுது மனது எவ்வளவு வேதனைப்படுகிறது.
 
யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே அல்லாஹுத்தஆலா உடைய உதவி என்பது தொழுகையில் மட்டுமல்ல துவாவில் மட்டுமல்ல சமூக வாழ்க்கையில் நம்மிடத்தில் சில பண்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் வலியுறுத்தினார்கள் அந்த பண்புகளை நாம் உறுதிப்படுத்தாமல் கொண்டு வராமல் நம்முடைய தொழுகையை கொண்டு அல்லாஹ்விடத்தில் வெற்றி பெற்று விட முடியாது,
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு மத்தியிலே ஒரு சில கருத்து வேற்றுமைகள் வந்தாலும் உடனடியாக அந்த கருத்து வேற்றுமைகளை களைந்து அவர்களுக்கு மத்தியிலே ஒற்றுமையை நிலை நிறுத்தினார்கள் ஒருபோதும் ஒருவர் மற்றவரை பகைத்துக் கொண்டு உறவுகளை முறித்துக் கொண்டு முகம் திருப்பி அவர்களாக வாழ்வதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்றுக்கொள்ளவில்லை,
 
காபிர்களை பொறுத்தவரை அவர்கள் நமக்கு மத்தியிலே குழப்பங்களை உருவாக்கி பிரச்சனைகளை உண்டாக்கி நம்மை சமூகங்களாக இனங்களாக பிரித்து நமக்கு மத்தியிலே சண்டைகளை மூட்ட நினைப்பார்கள் யூதர்களின் ஒரு கூட்டத்தாருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு இந்த குணம் இருந்தது அந்த குணம் அவர்களின் ஒரு பிரிவினருக்கு இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது இந்த யூதர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை பார்த்தால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் இரண்டு கூட்டமாக அவர்களை பிரிக்கின்றான் ஒரு கூட்டம் யார்
 
ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ
 
பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும். (அல்குர்ஆன் 35 : 32)
 
அவர்களில் நீதமான ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள் நடுநிலையான நேர்மையான மக்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களில் அதிகமானவர்கள் செய்யக்கூடிய செயல் கெட்ட செயலாக பாவமாக அநியாயமாக இருக்கும்,
 
என்று அல்லாஹ் சொல்கிறான் ரப்புல் ஆலமீன் எவ்வளவு அழகான நீதமுடையவன் பாருங்கள் அவர்களில் உள்ள நல்லவர்களை புகழ்கின்றான் அவர்களின் அதிகமானவர்கள் செய்யக்கூடிய விஷமத்தனத்தை அல்லாஹ் கண்டிக்கின்றான் என்னென்ன விஷமத்தனத்தை செய்தார்கள் அல்லாஹு அக்பர் எந்த ரப்புல் ஆலமீன் இந்த இஸ்ரவேலர்களை புகழ்கின்றானோ
 
يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
 
இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நீங்கள் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 2 : 47)
 
யாக்குபுடைய சந்ததிகளே உங்கள் மீது நான் செய்த அருளை நினைவு கூறுங்கள் உலக மக்களை விட உங்களை நான் சிறப்பித்தேனே நபிமார்களின் வாரிசுகளில் தொடர்ந்து உங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இருந்தேனே என்ன என்ன அருட்கொடைகளை உங்கள் மீது நான் செய்தேன் நினைவு கூறுங்கள்,
 
என்று அந்த சமுதாயத்தின் மீது அவ்வளவு அருள் புரிந்ததை அல்லாஹுத்தஆலா சொல்கின்றான் அவர்களுக்கு தொடர்ந்து அல்லாஹுத்தஆலா நபிமார்களை அனுப்பி கொண்டே இருந்தான் அப்படி இருந்தும் அந்த ரப்பை பற்றி இந்த யூதர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?
 
لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ 
 
“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம். (அல்குர்ஆன் 3 : 181)
 
அல்லாஹுத்தஆலா தர்மம் கொடுங்கள் தர்மம் செய்யுங்கள் என்று சொன்ன பொழுது அல்லாஹ்வையே கேலி கிண்டல் செய்தார்கள் இப்பொழுது அல்லாஹ் ஏழையாகி விட்டான் நாங்கள் செல்வந்தர்களாக இருக்கின்றோம் அதனால் தான் எங்கள் இடத்திலே அல்லாஹ் பிச்சை கேட்கின்றான் ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி,
 
وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ‌  غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا  بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ
 
“அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். 
 
(நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான். (அல்குர்ஆன் 5 : 64)
 
அது மட்டுமா இன்னும் என்ன சொன்னார்கள் அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது அல்லாஹ்வுடைய கரம் கட்டப்பட்டு விட்டது அதனால் இப்போது தர்மம் செய்ய  முடியாமல் போய்விட்டது எனவே எங்களை தர்மம் செய்ய சொல்கிறான் அல்லாஹ் சொன்னான் சபிப்பான் இந்த வார்த்தையால் அவர்களை சபிக்கப்பட்டார்கள் அவர்களது கரங்கள் கட்டப்படட்டும் அல்லாஹ்வுடைய இரு கரங்களும் விரிந்தே இருக்கின்றது என அல்லாஹ் சொன்னான்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வோடு அவர்களுடைய இத்தகைய ஒரு ஒழுக்கம் கெட்ட மரியாதை கெட்ட நடைமுறைகள் நபிமார்களை கொஞ்ச நஞ்சமா அந்த சமுதாயம் கொடுமைப்படுத்தினார்கள் அல்லாஹ்வுடைய கலீம் மூஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் எத்தகைய நபி அவர்கள் மீது எவ்வளவு பாசம் அந்த ரப்புல் ஆலமீன் வைத்திருக்கிறான் அந்த நபியை ஒவ்வொரு நாளும் இம்சை செய்து கொண்டே இருந்தார்கள் அந்த நபிக்கு ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள் அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்கிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا
 
நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரியவராக இருந்தார். (அல்குர்ஆன் 33 : 69)
 
முஹம்மதுடைய சமுதாயமே சல்லல்லாஹு அலைஹிவசல்லம் மூஸாவுக்கு தொந்தரவு கொடுத்த இஸ்ரவேலர்களை போன்று நீங்கள் இருக்காதீர்கள் என்று அவ்வளவு தொந்தரவு கொடுத்தார்கள் மூஸா நபியினுடைய உடல் அமைப்பை பற்றி கேவலமாக பேசினார்கள் இன்னும் பல நபிமார்களை வரலாற்றிலே கொலை செய்தார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்:
 
وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ
 
இன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், 
 
அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார். (அல்குர்ஆன் 2 : 61)
 
இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், 
 
நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும். (அல்குர்ஆன் 2 : 61)
 
அநியாயமாக இறைத்தூதர்களை இறைத்தூதர்களை நபிமார்களை மேலும் அந்த நபிமார்களை ஈமான் கொண்ட நன்மைகளை ஏவக்கூடியவர்களை கொலை செய்தார்கள் படுகொலை செய்தார்கள் என்று அல்லாஹ் சொல்லுகிறான் அவர்கள் சபிக்கப்பட்டதற்கு காரணம்,
 
அன்பு சகோதரர்களே! இத்தகைய மக்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்களா நமது குழந்தைகள் மீது இரக்கம் காட்டுவார்களா நம்முடைய பெண்கள் மீது இரக்கம் காட்டுவார்களா நமது உரிமைகளை கொடுப்பார்களா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக இருந்தபோதே அவர்கள் என்ன சொன்னார்கள்:
 
وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
 
வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். 
 
ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 3 : 75)
 
இந்த அரபு மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவர்களது சொத்துகளை சூறையாடினாலும்  அவர்களது செல்வங்களை சூறையாடினாலும் அவர்களை கொலை செய்தாலும் அல்லா எங்கள் மீது குற்றம் பிடிக்க மாட்டான் என்று குதர்க்கம் பேசிக் கொண்டிருந்தார்கள் யாருடைய காலத்திலே குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலே ஏன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவில் வாழ்ந்த யூதர்களை வெளியேற்றினார்கள்,
 
ஏன் கைபரிலே வாழ்ந்த யூதர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியேற்றினார்கள் ஏன் பனு முஸ்தலக் அந்த யூதர்களை அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியேற்றினார்கள் நம்முடைய நபியை விடவா ஒரு சமாதான தூதரை ஒரு ஒற்றுமையை விரும்பக் கூடியவரை சமூக நட்பை ஆதரிக்க கூடியவரை உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். 
 
எல்லா மனிதனுக்கும் சமமான கண்ணியம் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்பக்கூடிய ஒருவரை நம்முடைய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட நம்முடைய இஸ்லாமின் தூதரை விட ஒருவரை வரலாற்றிலே கொண்டு வர முடியுமா அந்த நபியையே ஒன்றுக்கு மேற்பட்ட பலமுறை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அந்த நபியை விருந்தினராக அழைத்து அவர்களுக்கு விஷம் வைத்துக் கொடுத்தவர்கள்,
 
அந்த நபியின் தலையிலே கல்லை போடுவதற்கு முயற்சி செய்தவர்கள் அன்பு சகோதரர்களே இவர்களோடு ஒருபோதும் எந்த சமுதாயமும் ஒற்றுமையாக இருக்க முடியாது மனிதர்களில் உள்ள விஷமிகளாக இவர்கள் இருப்பார்கள் அல்லாஹுத்தஆலா மிகத் தெளிவாக சொல்கின்றான்.
 
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஒரு தன்மையோடு இன்ஷா அல்லா இந்த ஜும்மாவை முடிப்போம் ஆக மிக முக்கியமான ஒரு அறிவுரை முஃமீன்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய பகைமையை மறக்க வேண்டும் வேற்றுமையை மறக்க வேண்டும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அல்லது சமூக கருத்துக்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அந்த கருத்து வேறுபாடுகளையும்.
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் ஆட்சியாளர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குள் ஒரு விஷயத்தில் தகராறுசெய்தால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததும், மிக அழகான முடிவும் ஆகும். (அல்குர்ஆன் 4 : 59)
 
கருத்து வேற்றுமை எங்கே வருகின்றதோ அல்லாஹ்விடம் வந்து விடுங்கள் அல்லாஹ்வுடைய ரசூல் இடம் வந்து விடுங்கள் அதை வைத்து உங்களுடைய கருத்து வேற்றுமையை முடிவு செய்து கொள்ளுங்கள், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் கருத்து வேற்றுமை வரவில்லையா என்ன செய்தார்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் கலீபாவாக இருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலீபாவாக இருந்தும், 
 
தன்னுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அபு மூஸாவை தேர்ந்தெடுத்து நீ எங்கள் இரண்டு பேருக்கும் இடையிலே தீர்ப்பளி நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று இறங்கி வந்தார்கள் அல்லவா அப்படிப்பட்ட நடுவரையும் உருவாக்கி சமாதானத்தை செய்து கொள்ளக்கூடிய ஒரு அழகிய முறையை இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது ஆனால் சகோதரர்களே!
 
நம்முடைய சமுதாய தலைவர்கள் இந்த வசனங்களை படிக்க வேண்டும் இந்த வரலாறுகளை தெரிய வேண்டும் யாரும் பிறருக்காக விட்டுக் கொடுத்து நடுவரை உருவாக்கி சமுதாயத்தை இணைப்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை தங்களுடைய பிடிவாதம் கருத்தின் மீது உண்டான பிடிவாதம் இதுதான் இன்று நம்மை இப்படியாக சமுதாயமாக,
 
வாழக்கூடிய இடங்களில் பிளவு செய்து பிளவு செய்து கடைசியாக இன்று நாடுகளாக பிளவுப்பட செய்து இன்னொரு எதிரி சமுதாயம் யார் உலகத்திலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றார்களோ அவர்களால் நாம் இத்தகைய சோதனைகளை சந்தித்து கொண்டு இருக்கின்றோம் இதுவும் அன்பிற்குரிய சகோதரர்களே நமக்கு மிகப்பெரிய படிப்பினை அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் வருவதற்கு இந்த நேரத்திலும் நாம் சோர்ந்து விடக்கூடாது அல்லாஹ் சொல்கிறான்:
 
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
 
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 3 : 146)
 
எத்தனையோ நபிமார்கள் அல்லாஹ்வின் பாதையிலே போரிட்டு இருக்கிறார்கள் அவர்களோடு நல்லவர்களும் போரிட்டார்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கண்டு தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கண்டு அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை கோழைகளாக, 
 
ஆகிவிடவில்லை எதிரிகள் இடத்திலே அவர்கள் பணியவில்லை இத்தகைய உறுதியானவர்களை அல்லாஹ் விரும்புகிறான் என்று அல்லாஹ் சொல்கிறான் அதுக்கு அடுத்து அல்லாஹுத்தஆலா ஒரு அழகிய துவாவிலே நம்முடைய வெற்றிக்கு உண்டான காரணத்தை கற்றுத் தருகின்றான்,
 
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
 
இன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை. (அல்குர்ஆன் 3 : 147)
 
அவர்கள் என்ன சொல்வார்கள் யா அல்லாஹ் நாங்கள் தான் குற்றம் செய்து விட்டோம் எங்களுடைய மார்க்கத்தில் நாங்கள் வரம்பு மீறி விட்டோம் எங்களை மன்னிப்பாயாக எங்களது குற்றங்களை மன்னிப்பாயாக எங்களது பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இந்த காஃபிர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக என்று என்னிடத்திலே வேண்டினார்கள் இந்த துவாவின் மூலமாக அழகான வெற்றிக்குரிய காரணத்தை அல்லாஹ் சுற்றி காட்டுகிறான்.
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அவர்களே சோதனைகள் முந்திய காலங்களிலும் இருந்தன இப்போதும் இருக்கின்றனர் இனியும் தொடரலாம் அதற்குரிய தீர்வு என்ன அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் வருவது ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிகாட்டுதலின் பக்கம் வருவது கண்ணியத்திற்குரிய கலிபாக்களின் அந்த வழிமுறையின்!
 
பக்கம் வருவது அல்லாஹு சுபஹானஹூதஆலா நமக்கு இந்த மார்க்கத்தை புரிந்து நம்முடைய வாழ்க்கையிலே பின்பற்றி நமக்கு மத்தியிலே சமூக ஒற்றுமையும் தந்த அருள் புரிவானாக நமது உள்ளங்களை உறுதிப்படுத்துவானாக! நமது பாவங்களை மன்னிப்பானாக! 
 
எதிரிகளுக்கு எதிராக போரிடக்கூடிய முஜாஹிதுகளுக்கு அல்லாஹுத்தஆலா எல்லா உதவிகளையும் செய்து அருள்வானாக அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அல்லாஹு சுபஹானஹூதஆலா சிறந்த பரிகாரத்தை தந்த அருள் புரிவானாக! அவர்களிலே கொல்லப்பட்டவர்களை அல்லாஹுத்தஆலா ஷஹீதுகளாக ஏற்றுக்கொள்வானாக!
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும் அல்லாஹ்வுடைய அடியார்களுக்கும் எதிரிகளாக இருந்து கொடுமைகள் செய்யக்கூடிய மக்களுக்கு தகுந்த படிப்பினையை அல்லாஹ் தருவானாக ஆது சமூத்கூட்டத்தை அளித்ததை போன்று அல்லாஹுத்தஆலா அவர்களையும் அழித்து வைப்பானாக!
 
 ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/