HOME      Khutba      பாலஸ்தீன பிரச்சனையும் முஸ்லிம்களின் கடமையும்! | Tamil Bayan - 841   
 

பாலஸ்தீன பிரச்சனையும் முஸ்லிம்களின் கடமையும்! | Tamil Bayan - 841

           

பாலஸ்தீன பிரச்சனையும் முஸ்லிம்களின் கடமையும்! | Tamil Bayan - 841


பாலஸ்தீன பிரச்சனையும் முஸ்லிம்களின் கடமையும்!
 
தலைப்பு : பாலஸ்தீன பிரச்சனையும் முஸ்லிம்களின் கடமையும்!
 
வரிசை : 841
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-11-2023 | 19-04-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அன்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்தவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு சுபஹானஹூதஆலா நம் மீது அருள் புரிவானாக! பாலஸ்தீனத்திலே யூதர்களின் அநியாயங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் ஆளாக இருக்கக்கூடிய நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக! 
 
அவர்களில் இறந்து விட்டவர்களை ஷஹீதுகளில் அல்லாஹ் ஏற்று அருள் புரிவானாக! அவர்களில்  உயிரோடு இருப்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா இரட்சிப்பை தருவானாக! அவர்களுக்கு உதவக் கூடியவர்களை அல்லாஹுத்தஆலா ஏற்படுத்தி தருவானாக! அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அல்லாஹுத்தஆலா விரைந்து ஏற்பாடு செய்து கொள்வானாக ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பாலஸ்தீன மக்கள் இன்று அனுபவிக்க கூடிய இந்த கொடுமைகளை எல்லாம் ஜும்மா குத்பாவிலே சொல்ல முடியாத அளவு உள்ளவை இந்தப் போரில் மட்டும் அவர்கள் இந்த பிரச்சனைகளை, இந்த சோதனைகளை அனுபவிக்கவில்லை எப்போது யூதர்கள் அங்கே குடியாமர்த்தப்பட்டார்களோ அந்த முதல் நாளிலிருந்து இதையெல்லாம் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அவர்கள் கொல்லப்படுவது, அவர்களுடைய வாலிபர்கள், சிறுவர்கள் சிறைபிடிக்கப்படுவது, அவர்களுடைய வீடுகளில் நிலங்கள் பறிக்கப்படுவது, அவர்களுடைய உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவது, அவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவது, சிறைச்சாலைகளை பாலஸ்தீன முஸ்லிம்களை கொண்டு நிரப்புவது, அந்த சிறைச்சாலையிலே கடுமையான தண்டனைகளை கொடுப்பது, உலகத்தில் எந்த மனித உரிமை அமைப்புகளும் கேட்க முடியாத அளவிற்கு அவர்கள் மீது அநியாயங்களை அக்கிரமங்களை செய்வது இதெல்லாம் எப்போது அவர்கள் அந்த புனித பூமியிலே குடியேறினார்களோ அன்றிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய அநியாயங்கள்.
 
முஸ்லிம் ஆட்சியாளர்களிடத்தில் இருக்கின்ற ஒற்றுமையின்மை, ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்கக் கூடிய பொறாமைகள் அல்லது, வேறு விதமான வெறுப்புகள் காழ்ப்புணர்ச்சிகள் சகோதரர்களே! இவையெல்லாம் அந்த யூதர்களுக்கு சாதகமாக ஆகிவிட்டன.
 
: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
 
அல்லாஹ் மூமின்கள் எல்லாம் ஒரே உடல் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! 
 
அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2586
 
அந்த ஒரு ஈமானிய உணர்வு இல்லாமல் போனது ஒரு முஃமினுக்காக வேண்டி இன்னொரு முஃமின் துவா செய்வான், அந்த முஃமினை பாதுகாப்பான், அந்த முஃமினை எதிரி இடத்திலே ஒப்படைத்து விடமாட்டான், அந்த முஃமினுக்கு உதவி தேவைப்படக்கூடிய நேரத்தில் அவன் அந்த முஃமினை விட்டு விலகி விடமாட்டான் என்றெல்லாம் ஈமான் உள்ளவர்களுக்கு என்னென்ன அடையாளங்களை அல்குர்ஆனும், 
 
ஹதீஸும் உறுதிப்படுத்தியதோ அந்த அடையாளங்களை, அந்த குணங்களை சமுதாயமாகவும், சமுதாயத்தின் தலைவர்களாகவும் சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய அந்த வழிகாட்டிகளாகவும் நாம் எல்லாம் இழந்து நிற்கின்ற இந்த ஒரு பலவீனம் தான் இன்றைய இந்த யூத சமுதாயமும் அவர்களுக்கு பின்னால் அவர்களுக்கு துணை நிற்கக் கூடிய அநியாயக்கார சமுதாயமும் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது செய்கின்ற இந்த கொடுமைகளுக்கு காரணம்.
 
நேற்று ஒருவர் பேசுகிறார் நாங்கள் இந்த யூத அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக, யூத அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்வோம் எங்களை யாரும் கேட்க முடியாது என்று அதிகார வர்க்கத்தில் இருக்கக்கூடியவர்கள் பேசுகிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் கண்டிப்பாக அவருடைய உதவியை இறக்குவான் இந்த சோதனைகளை கண்டு பயந்து விடுவதோ, தளர்ந்து விடுவதோ இந்த சோதனைகளால் நமக்கு அல்லாஹ்வுடைய உதவி இல்லாமல் போய்விடுமோ என்று நிராசை அடைவது மூமின்களுக்கு அழகல்ல,
 
இஸ்ரவேலர்கள் இதை இந்த யூதர்கள் ஃபிர்அவ்ன் இடத்தில் எப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்லிக் காட்டுகின்றான் அங்கே அவர்கள் பொறுமையாக இருந்தார்கள் அவர்கள் ஈமானில் உறுதியாக இருந்தார்கள் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான் என்பதாக குறிப்பிடுகின்றான்
 
وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا  وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا  وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُه وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ‏
 
இன்னும், பலவீனமாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை நாம் அபிவிருத்தி செய்த  (ஷாம் தேச) பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசாக்கினோம். ஆகவே, இஸ்ரவேலர்கள் மீது, - அவர்கள் பொறுமையாக இருந்ததால் - உம் இறைவனின் மிக அழகிய வாக்கு முழுமையடைந்தது. ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் செய்து கொண்டிருந்ததையும் (-விவசாயங்களையும்) அவர்கள் உயரமாக கட்டிக் கொண்டிருந்ததையும் (-மாளிகைகளையும் தரைமட்டமாக) அழித்தோம். (அல்குர்ஆன் 7 : 137)
 
இந்த இஸ்ரவேலர்கள் மூஸா நபியுடைய இந்த சமுதாயம் பொறுமையாக இருந்தார்கள் உறுதியாக இருந்தார்கள் அல்லாஹ்வின் வாக்கு அவர்களுக்கு நிறைவுற்றது, ஃபிர்அவ்னும் ஃபிரவ்னுடைய சமுதாயத்தவர்களும் எதையெல்லாம் கட்டி எழுப்பி வைத்திருந்தார்களோ அதை நாம் தரைமட்டம் ஆக்கிவிட்டோம் என்று அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த யூத சமுதாயத்தை பற்றி அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே மூமின்களாகிய நமக்கு என்ன கூறியிருக்கிறான்” அவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடத்தில் இருக்கக்கூடிய நல்ல பண்புகள் என்ன, அவர்களிடத்தில் இருக்கக்கூடிய கெட்ட பண்புகள் என்ன என்பதை எல்லாம் அல்லாஹுத்தஆலா நமக்கு விவரிக்கின்றானே! இதைப்பற்றிய சரியான விழிப்புணர்வு, 
 
இதைப் பற்றிய சரியான அறிவு நம்முடைய முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியிலே இல்லாமல் போனது மிக முக்கியமான காரணம் நம்முடைய ஈமான் பலவீனப்பட்டு நம்முடைய இறை நம்பிக்கை பலவீனப்பட்டு, அந்த யூத கிறிஸ்தவ, நஸ்ராணி சமுதாயங்களோடு நாம் கலந்துவிட்டது, அவர்களைப் போன்று நாம் மாறிவிட்டது, அவர்களுடைய அந்த கலாச்சாரங்களை நாம் உள்வாங்கிக் கொண்டது அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! கண்ணியத்திற்குரியவர்களே! ரப்புல் ஆலமீன் என்ன சொல்கிறான்”
 
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
 
(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். (அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 217)
 
உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து மாற்றுகின்ற வரை உங்களுடைய உங்களை உங்களுடைய மார்க்கத்தில் இருந்து திருப்புகின்ற வரை அவர்கள் உங்களிடத்தில் யுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்,
 
وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ
 
அவர்களுக்கு நோக்கம் மஸ்ஜிதுல் அக்ஸா மட்டுமல்ல, பைத்துல் முகத்தஸ் மட்டும் அல்ல  அவர்களுடைய குறிக்கோள் அங்கே இஸ்லாம் இருக்கக் கூடாது, அங்கே ஈமான் இருக்கக் கூடாது, அங்கே பரிசுத்தமான தூய இறைவழிபாடு இருக்க கூடாது, மூமின்கள் முஸ்லிம்கள் இந்த பூமியில் இருக்க கூடாது, அவர்கள் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுக்கவில்லை இஸ்லாமின் மீது போர் தொடுத்திருக்கின்றார்கள், ஈமானின் மீது போர் தொடுத்திருக்கின்றார்கள், அல்லாஹ் தெளிவாக சொல்கின்றான்:
 
நீங்களும் அவர்களைப் போன்று காஃபிர்களாக ஆகிவிட வேண்டும் அதுதான் அவர்களுடைய விருப்பம், உங்களையும் அவர்களைப் போன்று வழி கெடுத்து விட வேண்டும் அதுதான் அவர்களுடைய விருப்பம் அல்குர்ஆன் அவர்களோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி நடந்து கொண்டார்கள், அவர்களுடைய குணங்களைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எப்படி தெளிவு படுத்தினார்கள், 
 
ரசூலுல்லாஹ் உடைய காலத்திலே இருந்த அந்த யூதர்கள் எப்படி நபியோடு நடந்து கொண்டார்கள் இவையெல்லாம் நமக்கு அல்குர்ஆனிலும், ஹதீஸிலும், சீரா நூல்களிலும் விவரிக்கப்பட்டு இருந்தும் கூட அவர்களுடைய அந்த சூழ்ச்சிகளை அறியாமல், அவர்களுடைய அந்த சதி திட்டங்களை புரிந்து கொள்ளாமல் நாமும், நம்முடைய சமுதாயமும், நம்முடைய ஆட்சியாளர்களும் அலட்சியத்தில் இருந்ததினுடைய விலையைத்தான் இன்று பாலஸ்தீன முஸ்லிம்களுடைய பெண்களுடைய உயிர்களாலும், 
 
குழந்தைகளுடைய உயிர்களாலும், அந்த அப்பாவி ஆயுதம் அற்ற எதையும் செய்வதற்கு சத்தியத்த அந்த பலவீனமான சமுதாயத்தின் உயிர்களாலும் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது முழுக்க முழுக்க ஒட்டுமொத்த முஸ்லிம்களுடைய தவறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் உடைய பிரச்சனை ஆட்சியாளர்கள், மக்கள் எல்லோரிலும் இருக்கின்ற இந்த பலவீனம், இந்த இயலாமை, இந்த ஈமானிய பலவீனம், இஸ்லாமிய பலவீனம் தான் அவர்களுக்கு இத்தகைய இடத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
 
ஆட்சியாளர்களை குறைசொல்வது, நம்மை அந்த குற்றத்திலிருந்து விலகியவர்களாக, நீங்கியவர்களாக கருதுவது இது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது சகோதரர்களே! ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு இதிலே குற்றவாளிகளாக இருக்கிறார்களோ அதே சமமான குற்றம் சமுதாயத்தையும் சேரும்,
 
சமுதாயத்தில் இருந்து தான் ஆட்சியாளர்கள் வருகிறார்களே தவிர அவர்கள் தனியாக வானத்திலிருந்து இறங்குவது கிடையாது அல்லது பூமியிலிருந்து முளைப்பது கிடையாது.
 
அன்பு சகோதரர்களே இந்த யூதர்களை பற்றி ரப்புல் ஆலமீன் நமக்கு தெளிவாக சொல்கிறான் அவர்கள் யார் உள்ளத்தால் உள்ளதால் மிகவும் இறுக்கமானவர்கள் கடினமான உள்ளம் உள்ளவர்கள்,
 
ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
 
பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகி விட்டன. ஆக, அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. இன்னும் நிச்சயமாக கற்களில் நதிகள் பீறி(ட்டு ஓ)டக்கூடியவையும் திட்டமாக உண்டு. இன்னும் நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. இன்னும் நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (மேலிருந்து கிழே உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் அறியாதவனாக இல்லை. (அல்குர்ஆன் 2 : 74)
 
உங்களுடைய உள்ளம் இறுகி விட்டன அவர்களது உள்ளத்தில் இரக்கம் என்பது கருணை என்பது இருக்காது என்பதை அல்லாஹுத்தஆலா உறுதிப்படுத்துகிறான் அன்பு சகோதரர்களே அந்த நபிமார்களுடைய வழியில் அவர்கள் ஈமானில் இருந்தால் மட்டுமே அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், அந்த ஈமானை விட்டு அவர்கள் வெளியேறினால், குஃபூரிலே சென்றுவிட்டால் அவர்களை விட இந்த பூமியிலே கொடிய கடின உள்ளம் உள்ளவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அத்தகைய மோசமான நிலையில் அவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்.
 
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ
 
இஸ்ரவேலர்களை பார்த்து உங்களுடைய உள்ளம் மிகவும் இறுக்கமான உள்ளம் கடினமான உள்ளம்,
 
فَهِىَ كَالْحِجَارَةِ
 
அந்த உள்ளங்கள் எல்லாம் கற்களை போன்றது,
 
اَوْ اَشَدُّ قَسْوَةً
 
அல்லது கற்களை விட கடினமானது என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.
 
அன்பு சகோதரர்களே! நபிமார்களை கொன்றவர்கள், நல்லவர்களை கொன்றவர்கள், ஸாலிஹீன்களை கொன்றவர்கள் கொலை செய்வது என்பது இவர்களுடைய அந்தப் பிறவி குணமாகவே இருப்பதை பார்க்கிறோம் அல்லாஹுத்தஆலா,
 
مِنْ اَجْلِ ذٰ لِكَ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّه مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا  وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا  وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏
 
அதன் காரணமாக, “எவர் பழிக்குப் பழி அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் (கலகம், குழப்பம், சீர்கேடு) செய்ததற்காக அல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றாரோ அவர் மக்கள் அனைவரையுமே கொன்றவர் போலாவார். இன்னும், எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்’’ என்று இஸ்ரவேலர்கள் மீது (சட்டமாக) விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் எல்லை மீறுகிறார்கள் (-அளவு கடந்து பெரும் பாவங்கள் செய்கிறார்கள்). (அல்குர்ஆன் 5 : 32)
 
தெளிவாக அல்குர்ஆனிலே இப்படி குறிப்பிட்டே சொல்லுகிறான் ஆகவேதான், இந்த இஸ்ரவேலர்களுக்கு நாம் சொல்லி கொடுத்தோம் கட்டளையாக, மார்க்கமாக்கி கொடுத்தோம் உயிர்களை கொள்ளாதீர்!  ஒரு உயிரை கொல்லுவது மனித சமுதாயத்தை கொள்வதை போன்று ஒரு உயிரை வாழ வைப்பது உலக மக்களை மனித சமுதாயத்தை வாழ வைப்பது போன்று,
 
கொலை என்பது அவர்களுடைய ஒரு பிறவி குணமாகவே இருந்தது என்று சொல்லலாம் நபிமார்களை கொலை செய்தார்கள், நல்லவர்களை கொலை செய்தார்கள், ஸாலிஹீன்களை கொலை செய்தார்கள், தொடர்ந்து அல்லாஹுத்தஆலா சொல்லிக் கொண்டே வருகிறான். அன்பு சகோதரர்களே! இந்த யூதர்களுடைய கெட்ட குணங்களிலே ஒன்று,
 
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
 
“அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான். (அல்குர்ஆன் 5 : 64)
 
இந்த பூமியில் குழப்பத்தை உண்டாக்கி கொண்டே இருப்பது, சண்டை சச்சரவுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பது இது இவர்களுடைய அடிப்படை குணம் என்று அல்லாஹ் சொல்கிறான் உங்களுக்கு தெரியும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பப்பட்ட காலத்தில் மதினாவில் அவ்ஸ் கஜர் என்ற இரண்டு பெரிய அரபு கோத்திரத்தார்கள் இருந்தார்و
 
இந்த இரண்டு அரபு கோத்திரத்தார்களையும் இவர்கள் எல்லாம் ஒரு தந்தையிலிருந்து வழிவந்த சகோதர சகோதரிகள் அவ்ஸ் என்று சொல்வார்கள் கஜர் என்று சொல்வார்கள் இந்த இருவருக்கும் இடையிலே சண்டை மூட்டி விட்டு இருவருக்கும் இடையில் யுத்தத்தை ஏற்படுத்தி நீண்ட காலமாக மதினாவில் இருந்த பனு குறைதா யூதர்களும் பனு நதீர் யூதர்களும் அங்கே தங்களுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொண்டிருந்தார்கள்,
 
தங்களுடைய இருப்பை மதீனாவிலே தங்களுடைய உள்ளமையை அவர்கள் நிலை நிறுத்துவதற்கு செய்த அடிப்படை வேலை என்ன மதீனாவினுடைய பூர்வீக குடிகள் ஆகிய அந்த அரபுகளை இரண்டு அரபுகளுடைய மிகப்பெரிய கோத்திரங்கள் ஒரே வம்சத்தில் இருந்து வந்தவர்களை பகைவர்களாக ஆக்கி, ஒருவர் ஒருவருடைய இரத்தத்தை குடிப்பதற்கு  திரும்பக் கூடிய அளவுக்கு அவர்களுடைய உள்ளத்தில் அந்த பகைமையை ஏற்படுத்தி ஒரு யூத கூட்டம் இவர்களுக்கு ஆயுதம் கொடுப்பார்கள் இன்னொரு யூத கூட்டம் இவர்களுக்கு ஆயுதம் கொடுப்பார்கள் சண்டை செய்ய சொல்வார்கள்,
 
ஆனால், அந்த இரண்டு கூட்டமும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பார் மதினாவினுடைய அந்த பூர்வீக குடிகள் ஆகிய அந்த அரபுகள் அவருடைய விவசாய நிலங்கள் பேரிச்சம்பழம் தோட்டங்கள் இவர்களுடைய வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு செல்வத்தை வட்டிக்கு கொடுத்து பிறகு, அதையே தங்களது உடைமைகளாக ஆக்கிக் கொள்வார்கள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் அங்கே யூதர்கள் இருந்து கொண்டு இருந்தார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக அனுப்பப்பட்ட போது இந்த யூத சமுதாயத்திற்கு எவ்வளவோ உபதேசம் செய்தார்கள், சமாதானத்தை கற்றுக் கொடுத்தார்கள், வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார்கள், தவ்ராத் இஞ்சில் உள்ள சட்டங்களை அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள், 
 
ஆனால், அவர்கள் ஒருபோதும் அந்த நல்ல உபதேசங்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை ஒரு சில சம்பவங்களை பாருங்கள் இவர்கள் எந்த அளவுக்கு கொடூர புத்தி உள்ளவர்கள் என்பது உங்களுக்கு புரியும்”
 
أنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جارِيَةٍ بيْنَ حَجَرَيْنِ، قيلَ مَن فَعَلَ هذا بكِ، أفُلانٌ، أفُلانٌ؟ حتَّى سُمِّيَ اليَهُودِيُّ، فأوْمَأَتْ برَأْسِها، فَأُخِذَ اليَهُودِيُّ، فاعْتَرَفَ، فأمَرَ به النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فَرُضَّ رَأْسُهُ بيْنَ حَجَرَيْنِ.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே ஒரு அன்சாரி பெண்மணி சிறுமி என்று சொல்லலாம் அந்த யூதர்களுடைய கடை தெருவிற்கு சென்று விடுகிறார்கள் அந்த சிறுமையை பிடித்து சென்று அவளை ஒரு பாறையில் தள்ளி ஒரு கல்லை எடுத்து ஒரு யகூதி அவருடைய மண்டையை உடைக்கிறான், யோசித்துப் பாருங்கள் குழந்தைகள் இன்று குழந்தைகளை கொன்று குவிக்கிறார்களே! இது இவர்களுடைய கெட்ட கொள்கையின் வெளிப்பாடு இது இந்த புத்தி இன்று இருந்த புத்தி அல்ல, அவர்களுக்கு இவர்களுடைய தொண்டு தொட்டு வரக்கூடிய இந்த புத்தி அவர்களுடையது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம்,  எண் : 5295, 1692
 
ஆகவேதான், அல்லாஹு சுபஹானஹூதஆலா அவர்களை சபிக்கின்றார் அவர்கள் மீது தன்னுடைய கோபத்தை இறக்கி வைத்திருக்கிறான்  அதாவது பூமியிலே நடமாடக் கூடியவர்களிலேயே மிக மோசமானவர்கள் என்று அல்லாஹ் வர்ணிக்கின்றானே இந்த கொடூர புத்தியின் காரணமாகத்தான்,
 
அந்த குழந்தை அந்த நிலையிலே அவன் செய்கிறான் பிறகு இந்த செய்தி தெரிய வருகிறது அந்த குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்தி வருகிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரைந்து செல்கிறார்கள் அந்த குழந்தை இடத்திலே அமைதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள் உன்னை யார் கொன்றது, உன்னை யார் கொன்றது அந்த சிறுமிக்கு எப்போது அந்த பேசக்கூடிய உணர்வு வருகிறது,
 
அந்த நேரத்தில் அந்த சிறுமி சொல்கிறார் இந்த யகூதி என்னை இப்படி செய்தார் என்று அதோட அவருடைய உயிரும் பிரிந்து விடுகிறது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த யுகூதியை வரவழைக்கிறார்கள் அவரிடத்தில் விசாரணை நடைபெறுகிறது அவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார் அன்பு சகோதரர்களே எப்படி அந்த சிறுமையை பாறையால் மண்டையிலே அடித்து கொன்றானோ அதேபோன்று பழிக்கு பழி வாங்கும் படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே சொல்கிறார்கள் அந்த ஏகூதி அப்படி கொல்லப்படுகின்றான்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, முஸ்லிம்,  எண் : 5295, 1692
 
அன்பு சகோதரர்களே! இத்தகைய வீரமிக்க தலைமை நீதத்தை நிலை நிறுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிநடத்தி விட்டு சென்றார்களே! அவர்களுக்கு பின்னால் வந்த இஸ்லாமிய மன்னர்கள், கலீபாக்கள் இதே நேரத்தில் அடிப்படையிலே அவர்கள் ஆட்சி செய்தார்கள், முஸ்லிம்களுடைய உயிர் பொருள் அங்கே பாதுகாக்கப்பட்டது,
 
இங்கே நம்முடைய பலவீனம் என்ன நம்முடைய ஆட்சியாளர்களுடைய பலவீனம் என்ன முஸ்லிம்கள் யார் எங்கு கொல்லப்பட்டாலும் அதைப் பற்றி நமக்கு என்ன கவலை என்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில், அல்லாஹ்வுடைய தீனிலே தொழுகை மட்டும் கடமை அல்ல. முஸ்லிம் ஆட்சியாளர்கள், முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம்களிலே யாரும் கொல்லப்பட்டால் அவர்களுக்காக பழி வாங்குவது இஸ்லாமிய ஆட்சியாளர் மீது இஸ்லாமிய மன்னரின் மீது கட்டாய கடமை என்பதை புரிய வேண்டும்.
 
அந்தப் புரிதல் இல்லாத தலைவர்களால் ஏற்பட்ட பலவீனம் தான் இன்று நம்முடைய பாலஸ்தீன முஸ்லிம்கள்  அனுபவித்துக் கொண்டிருக்க கூடிய இந்த அநியாயங்கள்,
 
أنَّ نَاسًا مِن عُرَيْنَةَ اجْتَوَوُا المَدِينَةَ، فَرَخَّصَ لهمْ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أنْ يَأْتُوا إبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِن ألْبَانِهَا وأَبْوَالِهَا، فَقَتَلُوا الرَّاعِيَ، واسْتَاقُوا الذَّوْدَ، فأرْسَلَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَأُتِيَ بهِمْ، فَقَطَّعَ أيْدِيَهُمْ وأَرْجُلَهُمْ، وسَمَرَ أعْيُنَهُمْ، وتَرَكَهُمْ بالحَرَّةِ يَعَضُّونَ الحِجَارَةَ.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே சில அரபுகள் வருகிறார்கள் நாங்கள் முஸ்லிமாகி விட்டோம் என்று சொல்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்,
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1502
 
உள்ளத்தில் என்ன வைத்திருந்தார்களோ அல்லாஹ் அறிந்தவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு மதினாவிலே ஓரிரு நாட்கள் தங்கியதற்குப் பிறகு, எங்களுக்கு மதீனாவினுடைய இந்த தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை, மதீனாவினுடைய காற்று எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை,
 
எங்களது வயிறுகள் எல்லாம் வீங்குகின்றன எங்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது என்று சொன்னவுடன் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சரி நீங்கள் மதினாவிற்கு வெளியிலே இந்த இடத்தில் முஸ்லிம்களுடைய சதக்காவுடைய ஒட்டகங்கள் இருக்கின்றன அங்கே சென்று தங்குங்கள், 
 
ஒட்டகத்தின் பாலை அருந்துங்கள், அதனுடைய சிறுநீரை அருந்துங்கள், உங்களுக்கு அல்லாஹ் குணம் கொடுப்பான் நீங்கள் சுகமாகுங்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விருந்தினராக கண்ணியமாக அனுப்பி வைக்கின்றார்கள்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1502
 
அன்பு சகோதரர்களே! அங்கே சென்ற அந்த கூட்டத்தார்கள் நல்ல முறையிலே அவர்கள் சுகமாகிறார்கள், அவர்களுக்கு உடல் வலிமை ஏற்படுகிறது, சைத்தான் இப்போது அவர்களது உள்ளத்தில் விளையாடுகிறான்,
 
அங்கே அவ்வளவு அதிகமான ஒட்டகங்களுக்கு எல்லாம் இரண்டே இரண்டு முஸ்லிம்கள் தான் காவலில் இருந்தார்கள் அதை அவற்றை மேய்ப்பவர்களாக அவர் அந்த ரெண்டு முஸ்லிம்களை கொன்று விட்டார், படுகொலை செய்து விட்டு அந்த ஒட்டகங்களை எல்லாம் ஓட்டிக்கொண்டு ஓடினார்கள்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கருணை உள்ளவர்கள் தான் இரக்கம் உள்ளவர்கள் தான் அவர்களை விட இந்த பூமியில் ஒரு கருணையாளரை அல்லாஹ் படைக்கவில்லை,
 
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
 
(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21 : 107)
 
அன்பு, பாசம், கருணை இறக்கம் என்று எதைச் சொன்னாலும் அவை அனைத்தையும் இந்த பூமியிலே ஒரு மனிதரிலே அல்லாஹுத்தஆலா முழுமைப்படுத்தினான் என்றால் அது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்,
 
அத்தகைய நபி என்ன செய்தார்கள் சரி பரவாயில்லை என்று அமைதியாக இருந்தார்களா உடனே எத்தனை தோழர்களை ஒன்று சேர்க்க முடியுமோ ஒன்று சேர்த்துக்கொண்டு அந்த கூட்டத்தார்களை விரட்டி சென்றார்கள் விரட்டி சென்றார்கள் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதிலே செல்கிறார்கள் சென்று அவர்கள் எல்லாம் சிறைபிடிக்கப்படுகின்றார்,
 
யார் அந்த உறைனா கூட்டத்தார்கள் சிறைபிடிக்கப்படுகின்றார்கள் எங்கே அந்த தோழர்களை கொன்றார்களோ அங்கே அழைத்து வரப்படுகிறார்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தக் கூட்டத்தார் அத்தனை பேரையும் மாறுகை மாறுகால் வெட்டி, இரும்பை பழுக்க காய்சி, அவர்களுடைய கண்களுக்கு சூடு போட்டு அந்த பாலைவன மைதானத்தில் அவர்களை அப்படியே வீசி எறிகிறார்கள், தண்ணீர் தாகம் தாகம் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுக்கொண்டு அவர்களில் ஒவ்வொருவராக மரணிக்கிறார்கள்.
 
அன்பு சகோதரர்களே! ஒரு இஸ்லாமிய ஆட்சியாளர் ஒரு இஸ்லாமிய மன்னர் என்றால் அவர் முஸ்லிம்களுடைய உயிருக்காக குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் முஸ்லிம்களுடைய உயிரை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் முஸ்லிம்களுடைய உயிர் ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்ட அதற்காக வேண்டி ஒரு படையைகிளப்ப கூடியவராக இருக்க வேண்டும்,
 
ரோம் உடைய பகுதி கைப்பற்றப்பட்டு அங்கு இஸ்லாத்திற்கு வந்தவர்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வருகிறார் அந்த நேரத்திலே ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது, அநியாயம் செய்யப்படுகிறது, உரிமை பறிக்கப்படுகிறது அந்த முஸ்லிமான பெண் பகுதாதில் இருக்கக்கூடிய معتصم بالله அப்பாசிய மன்னருடைய பேரை சொல்லி எங்களுடைய மன்னர் முஃதஸிம் உடைய காலத்திலா எனக்கு இப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்று கத்துகிறாள்,
 
இந்த சத்தமா போய் அங்கே சேரும் அவருடைய இந்த அநியாயம் இந்த அநியாயம் பகுதாதுடைய மன்னர் முஃதஸிம்க்கு சொல்லப்படுகிறது இப்படி உங்களுடைய ஒரு முஸ்லிமான சகோதரிக்கு ரோமர்களுடைய இந்த ஊரிலே இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்பட்டது, அந்தப் பெண் வா முஃதஸிமா உங்களை உதவிக்கு அழைத்தாள் என்று அன்பு சகோதரர்களே முஃதஸிம் பகுதாதிலிருந்து படையை அனுப்புகிறார் அதனுடைய முதல் கூட்டம் அங்கே சென்று சேரும் பொழுது அதனுடைய கடைசி பகுதி பகுதாதில் இருக்கிறது அதிலே அந்த மன்னரும் இருக்கிறார்.
 
அன்பு சகோதரர்களே! இப்படிப்பட்ட ஒரு வீரத்தையும் சமுதாயத்தின் ஒற்றுமையும், சமுதாய மக்களின் உயிரையும் பாதுகாப்பவர்களாக நம்முடைய மன்னர்கள் இருந்தார்கள், அல்லாஹுத்தஆலா அத்தகைய வீரத்தை தான் நமக்கு மூமின்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.
 
இன்று நம்முடைய பலவீனம் எப்படி ஆகிவிட்டது யாருக்கு எங்கே எது நடந்தாலும் சரி அதை பற்றி நாம் சிந்திக்க முடியாத அளவுக்கு நாம் சிதறடிக்கப்பட்டு இருக்கிறோம் நம்முடைய உள்ளங்களிலே கோழைத்தன்மை, பலவீனம் யாரும் நம்மை என்ன சொல்லி விடுவார்களோ நமக்கு என்ன பிரச்சனை வந்து விடுமோ இப்படிப்பட்ட கடுமையான ஒரு கோழை தன்மையும் ஒரு பலவீனமும் நம்முடைய உள்ளத்தை ஆட்கொண்டிருக்கிறது.
 
அன்பு சகோதரர்களே! இன்று முஸ்லிமல்லாதவர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனையை விட முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை அதிகமாக இருக்கும் என்கிற அளவிற்கு நம்முடைய ஒற்றுமையின்மை, நம்முடைய பலவீனம், ஒருவர் மற்றவர் மீது இருக்கக்கூடிய வெறுப்பு அதிகமாக இருக்கிறது.
 
அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாப்பானாக! அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா இந்த யூதர்களுடைய குணங்களைப் பற்றி சொல்லும் பொழுது இவர்கள் ஒருபோதும் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே மாட்டார்கள், ஒருபோதும் இவர்கள் ஒப்பந்தத்தை பேணவே மாட்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு இறங்கி வந்தார்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் ஆனால், பனு நதீரிலிருந்து யூதர்கள் சென்று குரேஷிகளை போருக்கு கிளப்பிக் கொண்டு வந்தார்கள் இந்த பக்கம் பனு குறைழா யூதர்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று அல்லாஹ்வுடைய தூதர் வாக்களித்திருக்கிறார்கள்,
 
நீங்கள் எங்களுக்கு எங்களது எதிரிகளுக்கு துணை நிற்க கூடாது என்று ஒப்பந்தம் வாங்கி இருக்கிறார்கள் ஆனால் இந்த பனு குறையுதா யூதர்கள் அல்லாஹ்வுடைய தூதருக்கு செய்து கொடுத்த ஒப்பந்தத்தை மீறி அந்த குரேஷிகளுக்கு உதவி செய்ய தயாராகி விட்டார்கள், அல்லாஹ்வுடைய தூதரையும் அந்த தூதர் உடைய சமுதாயத்தையும் பழிவாங்கு அவர்கள் பின்னால் இருந்து சதித்திட்டங்களை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
 
அன்பு சகோதர்களே! அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்:
 
فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
 
ஆக, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம்; இன்னும், அவர்களுடைய உள்ளங்களை இறுகியதாக (கடினமானதாக) ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மையான) இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பகுதியை மறந்தார்கள். இன்னும், அவர்களில் சிலரைத் தவிர அவர்களிடம் மோசடியை (நீர்) தொடர்ந்து பார்ப்பவராக இருப்பீர். ஆக, அவர்களை மன்னிப்பீராக; இன்னும், புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 5 : 13)
 
அவர்கள் ஒப்பந்தங்களை முறித்தன் காரணமாக நாம் அவர்களை சபித்தோம் அவர்களது உள்ளங்களை நாம் கடினமாக ஆக்கிவிட்டோம். ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்:
 
إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الَّذِينَ كَفَرُوا فَهُمْ لَا يُؤْمِنُونَ
 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களில் (எல்லாம்) மிகக் கொடியவர்கள், எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்கள்தான். ஆக, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 8 : 55)
 
اَلَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِىْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَـتَّـقُوْنَ‏
 
நீர் அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர்கள். பிறகு, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறிக்கிறார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை. (அல்குர்ஆன் 8 : 56)
 
யூதர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் பூமியிலே நடக்கக்கூடிய இந்த ஜீவராசிகளிலேயே மிக மோசமானவர்கள் அல்லாஹ்வை நிராகரித்த இவர்கள். இவர்கள் ஒருபோதும் ஈமானை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நபியே! நீங்கள் இவர்களிடத்திலே ஒப்பந்தம் செய்வீர்கள் ஆனால், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறி கொண்டே இருப்பார்கள் ஒவ்வொரு  முறையும் மீறுவார்கள் அவர்கள் ஒப்பந்தங்களை மீறுவது சிறிதளவும் அல்லாஹ்வை பயப்பட மாட்டார்கள்.
 
அன்பு சகோதரர்களே! இவர்களுடைய கொள்கையே இவர்களுடைய அந்த குணமே என்னவென்று சொன்னால் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி இவர்கள் என்ன அநியாயம் செய்தாலும் சரி அந்த அநியாயத்திற்காக இவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான், இது இவருடைய உள்ளத்திலே ஏற்றப்பட்ட ஒரு நஞ்சு விஷம், இது யாருக்கு என்ன கொடுமைகள் செய்தாலும் சரி எங்களுக்கு அதுபற்றி எந்தவிதமான விசாரணையும் மறுமையில் இருக்காது, என்ற ஒரு நச்சுக் கருத்து இவர்களுடைய உள்ளத்திலே ஆழமாக புதைக்கப்பட்டிருக்கிறது அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் பாருங்கள்” 
 
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّه اِلَيْكَ‌ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّه اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّنَ سَبِيْلٌ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ‏
 
வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 3 : 75)
 
நபியே! இந்த யூதர்களில் சிலர் இருக்கிறார்கள் அவர்களில் உள்ள நீமானுள்ள நல்லவர்களையும் அல்லாஹ் புகழ்கிறான், நீங்கள் ஒரு பெரிய தங்க குவியலை நம்பி கொடுத்தாலும் சரி அதை அப்படியே உங்களுக்கு ஒப்படைப்பவரும் இருக்கிறார்கள்,
 
அவர்களிலே இன்னும் பலர் இருக்கிறார்கள் நீங்கள் ஒரு தீனாரை அவருக்கு நம்பி கொடுத்தாலும் சரி நீங்கள் அவன் தலையோடு நின்றாலே தவிர அவன் அதை உங்களுக்கு திருப்பி தர மாட்டான் அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பாமர மக்கள் மீது நாம் எத்தகைய அநியாயம் செய்தாலும் அதன் மீது குற்றமே ஆகாது என்று எங்களுக்கு சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லி அல்லாஹ்வின் மீது அவர்கள் பொய் சொல்கிறார்கள் அறிந்து கொண்டே,
 
وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
 
அன்பு சகோதரர்களே! நாம் இந்த அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் இன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒன்று நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஈமானிய சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவது அல்லாஹ்விடத்தில் துவா செய்வது யா அல்லாஹ்! உலக முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவாயாக! முஸ்லிம்களுக்கு நல்ல ஆட்சியாளரை ஏற்படுத்துவாயாக! 
 
குர்ஆனை ஹதீஸை உன்னுடைய மார்க்கத்தை உன்னுடைய சட்டங்களை நிலைநிறுத்தக் கூடிய ஆட்சியாளர்களை ஏற்படுத்துவாயாக! எங்களுடைய உள்ளத்திலே ஈமானிய உணர்வை, இஸ்லாமிய உணர்வுகளை ஓங்க வைப்பாயாக! யா அல்லாஹ்! துன்யாவுடைய ஆசையை எங்களுடைய உள்ளத்திலிருந்து எடுத்து, ஆகிறதினுடைய ஆசையை, தீனுடைய ஆசையை, தீனுடைய அந்த உறுதியை எங்களது உள்ளத்திலே ஏற்படுத்துவாயாக என்று அல்லாஹ்விடத்திலே நாம் அதிகம் அதிகம் துவா செய்ய வேண்டும்.
 
இதன் மூலமாகத்தான் இந்த சமுதாயத்தின் உடைய அந்த ஒற்றுமையை மீண்டும் கட்டி எழுப்ப முடியும் நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய அத்தனை காழ்ப்புணர்ச்சிகளையும், பகைமைகளையும் நீக்கி அல்லாஹ்விடத்திலே ஈமானிய அன்பையும், ஈமானிய வீரத்தையும், ஒற்றுமையும் கேட்போமாக அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/