HOME      Khutba      இன்னல்களில் இறைபொருத்தம்! | Tamil Bayan - 844   
 

இன்னல்களில் இறைபொருத்தம்! | Tamil Bayan - 844

           

இன்னல்களில் இறைபொருத்தம்! | Tamil Bayan - 844


இன்னல்களில் இறைபொருத்தம்!
 
தலைப்பு : இன்னல்களில் இறைபொருத்தம்!
 
வரிசை : 844
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-11- 2023 | 03-05-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தும் அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார், கண்ணியத்திற்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சலவாத்தும், ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்விடத்தில் அவருடைய மன்னிப்பையும், அன்பையும், அருளையும், சொர்க்கத்தின் வெற்றியும் வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹுத்தஆலா நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வானாக! நம்முடைய சகோதரர்களுக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக! எதிரிகளுக்கு எதிராக அவர்களுடைய பாதங்களை அல்லாஹுத்தஆலா பலப்படுத்துவானாக! அவர்களுடைய பறிக்கப்பட்ட இல்லங்களையும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு மீட்டுக் கொடுப்பானாக! அறியாதபுரத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தருவானாக ஆமீன்!
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த உலக வாழ்க்கையில் சோதனைகளும், இன்னல்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த இன்னல்களை சகித்துக் கொண்டு அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாம் தேட வேண்டும். யாகூப் அலைஹிஸ்ஸலாம் நபிமார்களில் பல சோதனைகளை சந்தித்த ஒரு நபி கவலைகளுக்கு மேல் கவலை கவலையால் துக்கத்தால் அழுது, அழுது அவர்களுடைய கண்களே பூத்து விட்டன.
 
وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰۤاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَـضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُـزْنِ فَهُوَ كَظِيْمٌ‏
 
இன்னும், அவர் அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது எனக்குள்ள துயரமே!” என்று கூறினார். இன்னும், அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்து விட்டன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர். (அல்குர்ஆன்12 : 84)
 
கவலையால் அவர்களுடைய பார்வையே சென்று விட்டது என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான். சகோதரர்களே! இத்தகைய ஒரு மனதை நெருக்கடிக்கு ஆளாக்கிய தனது பாசத்திற்குரிய மகனை பிரிந்து பலவிதமான இன்னல்களுக்கு, நெருக்கடிகளுக்கு ஆளாகிய அந்த நிலையில் அவர்கள் சொன்ன வார்த்தை என்ன?
 
قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
 
(யஅகூப்) கூறினார்: “என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்.” (அல்குர்ஆன்12 : 86)
 
நான் எனது துக்கத்தையும், எனது கவலையையும், எனது சஞ்சலத்தையும் அல்லாஹ்விடம் முறையிடுகிறேன்.
 
சகோதரர்களே! நபிமார்களின் அழகிய இந்த வார்த்தையை பாருங்கள்” அவர்கள் எப்படி சொல்லவில்லை யா அல்லாஹ்! என்னை ஏன் சோதித்தாய் என்று சொல்லவில்லை, நான் நபியின் மகனாயிற்றே, நபியின் மகனின் மகனாயிற்றே, என்னை நீ தேர்ந்தெடுத்தாயே! எனக்கு நபித்துவத்தை கொடுத்தாயே! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், எனக்கு ஏன் இந்த கஷ்டம், எனக்கு ஏன் இந்த சோதனை, நான் என்ன தப்பு செய்தேன், நான் என்ன உனக்கு குற்றம் குறை செய்தேன் என்று அவர்கள் சொல்லவில்லை. 
 
ஒரு சின்ன, சின்ன சிரமங்களை நாம் வாழ்க்கையில் பார்க்கும் போதெல்லாம் உடனே அல்லாஹ்வின் மீது ஆட்சேபனைகளை அள்ளி வீசுகிறோம், நான் என்ன தப்பு செய்தேன், என்னையே அல்லாஹ் இப்படி சோதிக்க வேண்டும், எனக்கு ஏன் இந்த சிரமம் என்பதாக.
 
அன்பு சகோதரர்களே! இது அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்வது அல்லாஹ்வுடைய விதியின் மீது அதிருப்தி கொள்வதாக ஆகிவிடும். யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த அழகிய வார்த்தையை பாருங்கள்“
 
قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
 
(அல்குர்ஆன் 12 : 86)
 
நான் முறையிடுகிறேன் என்னுடைய கவலைகளை என்னுடைய துக்கங்களை எனது ரப்பிடத்தில் அவன் எனக்கு அந்த கவலைகளை துக்கங்களை நீக்கி தர போதுமானவன் அன்பு சகோதரர்களே யாரிடத்தில் முறையிட்டால் கண்டிப்பாக பதிலளிக்கப்படுமோ அவரிடத்திலே நாம் முறையிட வேண்டும். 
 
நம்முடைய சான்றோர் சிலரிடத்திலே கேட்கப்படுகிறது அல்லாஹ்விடம் நீங்கள் ஏன் முறையிடுகிறீர்கள் உங்களது சிரமத்தை ஏன் சொல்ல வேண்டும், அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே, நம்முடைய நிலை அவனுக்கு மறைந்ததில்லையே, என்று கூறிய போது அந்த சான்றோர் சொன்னார்கள் ஆம் அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் ஆனாலும், அல்லாஹுத்தஆலா என்ன விரும்புகிறான் என்றால் தன்னுடைய அடியான் தனக்கு முன்னால் மன்றாடி அழ வேண்டும், கெஞ்ச வேண்டும்,
 
அவன் கை தூக்கி என்னிடத்திலே தனது தேவையைக் கேட்க வேண்டும், பணிய வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
 
எனவே, நான் எனது துக்கத்தை கவலையை கஷ்டத்தை சிரமத்தை இன்னலை அவரிடத்திலே முறையிடுகிறேன் நம்முடைய கஷ்டத்தை சொல்லி அல்லாஹ்விடத்திலே உதவி கேட்கும் போது அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டவர்களாக, உதவக் கூடியவனாக, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக நாம் ஆகிறோம்.
 
அல்லாஹுத்தஆலா سميع عليم مجيب قريب ودود رؤوف رحيم இந்த தன்மைகளை எல்லாம் அல்லாஹ்விடத்தில் நாம் கூறும்போது, அவற்றை வெளிப்படுத்தி கேட்கும்போது, அல்லாஹுத்தஆலா சந்தோஷப்படுகிறான் தன்னுடைய அடியான் கைதூக்கி தன்னிடத்தில் மன்றாடும்போது அல்லாஹுத்தஆலா பெருமைப்படுகிறான் என்னுடைய அடியான் என்னிடத்திலே கேட்கிறான் என்று அன்பு சகோதரர்களே அறிஞர்கள் சொல்வார்கள்:
 
وإذا عرتك بلية فاصبر لها     صبر الكريم فإنه بك أعلم 
 
وإذا شكوت إلى ابن آدم إنما     تشكو الرحيم إلى الذي لا يرحم
 
என்ன? பொருள் உனக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் நீ அதற்கு பொறுமையாக இரு, சகித்துக் கொள்வதை தாங்கிக்கொள், எப்படி கண்ணியமானவர்கள் ஈமானிலே உறுதியானவர்கள் தாங்கிக் கொள்கிறார்களோ அதுபோன்று ஏனென்றால் அல்லாஹ் உன்னை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்,
 
உன்னுடைய உள்ளத்தை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நீ பொறுமையாக இருக்கிறாயா அல்லது, நிலை தடுமாறுகிறாயா என்று அவன் உன்னுடைய உள்ளத்தை சோதித்து கொண்டு இருக்கிறான்,
 
நீ அல்லாஹ்வைப் பற்றி யாரிடத்திலே முறையிட போகிறாய் மனிதர்களிடத்திலேயா,  அப்படி மனிதர்களிடத்திலே நீ முறையிட்டால் ரஹீமை பற்றி, அளவில்லா கருணையாளனாகிய அல்லாஹ்வைப் பற்றி, கருணை காட்ட முடியாத ஒரு பலவீனமான படைப்பிடத்திலேயா நீ முறையிட போகிறாய்,
 
அல்லாஹ்வை விட கருணையாளன் யார் இருக்க முடியும் ரஹ்மான் அந்த அல்லாஹுத்தஆலாவை பற்றி அல்லாஹ் எனக்கு இப்படி கஷ்டம் கொடுத்து விட்டான், என்னை இப்படி சோதித்து விட்டான், எனக்கு என்னென்ன  இன்னல்களை துன்பங்களை கொடுத்து விட்டான், எனது வியாபாரத்தில் பெரிய நஷ்டம் இப்படி எல்லாம் மனிதர்களிடத்திலே சென்று நீ சொன்னால் அல்லாஹ்வைபற்றி, 
 
அல்லாஹ்வுடைய விதியை பற்றி நீ முறையிட்டால் அவர்களால் உனக்கு என்ன செய்து விட முடியும் நீ ரஹீம் இடத்திலே உன் மீது கருணை உள்ள அல்லாஹ்விடத்தில் முறையீடு, நீ அந்த ரஹீமை பற்றி கருணை காட்ட முடியாத, பலவீனமான படைப்புகள் ஆகிய மனிதர்களிடத்திலயா நீ முறையிடுகிறாய்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய அருட்கொடைகளோடு அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய அருட்கொடைகளோடு நாம் சோதனையை ஒப்பிட்டு பார்ப்போமேயானால், அருட்கொடைகள் தான் அதிகமாக இருக்கும்.
 
அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய அருட்கொடைகளோடு நாம் சோதிக்கப்படக்கூடிய சோதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய அருட்கொடைகள் தான் அதிகமாக இருக்கும்.
 
இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்தானே அதைவிட பெரிய அருட்கொடை இருக்க முடியுமா அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய உடல் ஆரோக்கியம் இன்னும், இப்படியே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை எண்ணிக்கொண்டே சென்றால்,
 
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். (அல்குர்ஆன்16 : 18)
 
அல்லாஹ்வுடைய அருட்கொடையை நாம் கணக்கிட்டு முடித்து விட முடியாது, அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நல்லவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை படிக்க வேண்டும், நபிமார்களுடைய  வாழ்க்கை வரலாறுகள், சஹாபாக்கள் தாபியீன்கள் உடைய வாழ்க்கை வரலாறுகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு அழகிய படிப்பினை இருக்கிறது.
 
ஜுபைர் இப்னு அவ்வாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் உர்வத்து இபுனு ஜூபைர் பெரிய தாபியீன் ஹதீஸ் கலை அறிஞர் அவருடைய காலிலே கடுமையான ஒரு கொப்பளம் காய்ந்த ஒரு கொப்பளம் அந்த கொப்பளத்தால் அவர்களுடைய அந்த கரண்டை காலுக்கு மேலிருந்து வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது வெட்டி எடுக்கப்பட்டு விட்டது.
 
பிறகு, அந்த பயணத்திலே அவர்களுடைய ஒரு ஆண் மகனார் அவருடன் இருந்தவரும் அவரும் பயணத்திலே இறந்து விடுகிறார் அவர்களுடைய ஒரு கால் வெட்டப்பட்டு விடுகிறது பயணத்தில் தனக்கு துணையாக இருந்த ஒரு ஆண் மகனும் இறந்து விடுகிறார்,
 
என்ன அவர்களுடைய நிலை இருந்திருக்கும் அவர்கள் எப்படி அந்த சோதனையை எதிர்கொண்டார்கள் பாருங்கள் அவர்களுடைய மாணவர்கள் அறிவிக்கிறார்கள் அவர்கள் அல்லாஹ்விடத்தில் துவா செய்கிறார்கள் யா அல்லாஹ்! எனக்கு ஏழு ஆண் மக்களை நீ எனக்கு கொடுத்தாய் அதிலே ஒரு ஆண்மகனை நீ எடுத்துக் கொண்டாய் ஆறு ஆண் மகன்களை நீ எனக்கு விட்டு வைத்திருக்கிறாய் எனக்கு நான்கு உறுப்புகளை கொடுத்தாய் இரண்டு கைகள் இரண்டு கால்கள் என்று நான்கு உறுப்புகளை கொடுத்தாய் ஒரு உறுப்பு தான் வெட்டப்பட்டு இருக்கிறது மூன்று உறுப்புகள் சஹிஹாக, சலாமத்தாக  ஆரோக்கியமாக இருக்கிறது.
 
அல்ஹம்துலில்லாஹ் யா அல்லா நீ என்னை சோதித்து இருந்தாலும் எனக்கு ஆஃபியத்தையும் கொடுத்திருக்கிறாய் நீ என்னிடம் இருந்து கொடுத்ததை எடுத்துக் கொண்டாலும் எனக்கு இன்னும் நீ மீதம் வைத்திருக்கிறாய் நல்லோர்கள் எப்படி புரிந்தார்கள் பாருங்கள் அல்லாஹ்வை திருப்தி படுத்துவதற்கு உண்டான வழியை தேடினார்கள் இன்று நாம் அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்வதற்கான வழிகளை தேடுகிறோம்.
 
நம்முடைய நல்லோர்கள் என்ன வழிகளை தேடினார்கள் அல்லாஹ்வை திருப்தி கொள்வதற்கு ஈமானை அதிகப்படுத்துவதற்கு அல்லாஹ்வை புகழ்வதற்குரிய வழியை தேடினார்கள் இன்று நாமோ அல்லாஹ்வை குறை சொல்வதற்குரிய அல்லாஹ்வின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடிய வழிகளை தேடிக் கொண்டிருக்கிறோம்.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பாருங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள்:
 
إذا ماتَ ولَدُ العبدِ قالَ اللَّهُ لملائِكتِهِ قبضتم ولدَ عبدي فيقولونَ نعم فيقولُ قبضتُم ثمرةَ فؤادِهِ فيقولونَ نعم فيقولُ ماذا قالَ عبدي فيقولونَ حمِدَكَ واسترجعَ فيقولُ اللَّهُ ابنوا لعبدي بيتًا في الجنَّةِ وسمُّوهُ بيتَ الحمْدِ
 
ஒரு அடியானுடைய குழந்தை இறந்து விட்டால் உயிர் கைப்பற்றிய மலக்குகளை பார்த்து அல்லாஹ் கேட்பான் என்னுடைய அடியானின் பிள்ளையை உயிர் கைப்பற்றி விட்டு வந்து விட்டீர்களா அவர்கள் சொல்வார்கள் ஆம் பிறகு, அல்லாஹ் சொல்வான் அவனுடைய ஈர கொலை அவனுடைய நெஞ்சத்தின் அந்த துண்டை நீங்கள் கைப்பற்றிக் கொண்டு வந்து விட்டீர்களா? அவர்கள் சொல்வார்கள் ஆம். 
 
அப்போது அல்லாஹுத்தஆலா அவர்களை பார்த்து கேட்பான் என்னுடைய அடியான் என்ன சொன்னான் அவனுடைய பிள்ளையை உயிர் கைப்பற்றிய போது அவன் என்ன சொன்னான் என்று அல்லாஹ்வுக்கு தெரியும் எல்லாம் அல்லாஹ்வுடைய அந்த ஏற்பாடு அவர்கள் சொல்வார்கள் உன்னை புகழ்ந்தால் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறினான்.
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1021
 
அல்ஹம்துலில்லாஹி! அலாகுல்லி ஹால் எல்லா நிலையிலும் அல்லாஹ்விற்கே புகழ் நான் சுகமாக இருந்தாலும், நோயுற்றாலும் நான் மகிழ்ச்சியாக இருந்தாலும், கவலை பட்டாலும், எனக்கு அருட்கொடைகள் கிடைத்தாலும், கிடைத்த அருட்கொடைகள் பறிபோனாலும் எல்லா நிலைகளும் அல்ஹம்துலில்லாஹ்! 
 
பிறகு, இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ரப்பே உன்னுடைய அடியான் உன்னை புகழ்ந்து அவன் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறினான், உடனே அல்லாஹுத்தஆலா மலக்குகளை பார்த்து சொல்வான் என்னுடைய அடியானுக்கு சொர்க்கத்திலே ஒரு வீட்டை கட்டுங்கள் அந்த வீட்டிற்கு பைத்துள் ஹம்து என்று பெயர் வையுங்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1021
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா இந்த உலகத்தில் நம்மை சோதிக்கிறான் என்றால் மறுமையில் நம்மை கண்ணியப்படுத்துவதற்காக, நமக்கு சொர்க்கத்தில் ஒரு பெரிய பதவியை, அந்தஸ்தை தருவதற்காக கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
உமர் அல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள் எப்போதும்:
 
وجدنا خير عيشنا بالصبر؛ ولو أن الصبر كان رجلاً لكان كريماً
 
எங்களுடைய வாழ்க்கையிலேயே நன்மையை சிறந்ததை சுபச்சத்தை நாங்கள் பொறுமையின் மூலமாகத்தான் அடைந்தோம் நன்மையை சுபிட்சத்தை வாழ்க்கையினுடைய அந்த செழிப்பை நாங்கள் பொறுமையின் மூலமாக அடைந்தோம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்:
 
قال علي رضي الله عنه: ألا إنه لا إيمان لمن لا صبر له
 
யாருக்கு பொறுமை இல்லையோ அவருக்கு ஈமான் இருக்காது, பொறுமை இல்லாதவர் இடத்தில் ஈமான் இருக்காது, என்ன காரணம் ஒன்று சோதனைகளில் மார்க்கத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிடலாம் அல்லது, அல்லாஹ்வை திட்டிவிடலாம், ஏசி விடலாம், அல்லாஹ்வுடைய விதியை அவர் ஏசி விடலாம், திட்டி விடலாம், அல்லாஹ் விரும்பாத வார்த்தையை அவர் உச்சரித்து விடலாம், அதனால், அவர் மார்க்கத்தை விட்டு, ஈமானை விட்டு வெளியேறிவிடலாம்.
 
அல்லது, தகாத வார்த்தைகளை சொல்லி தன்னுடைய ஈமானை அவர் குறை படுத்தி விடலாம், பலவீனப்படுத்திவிடலாம்.
 
அன்பு சகோதரர்களே! அர் ராஜி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
 
إذا لم نصبر فماذا نفعل
 
அடியானே! நாம் பொறுமையாக இல்லை என்றால் சகித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு என்ன செய்து சாதித்து விட முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம்" அல்லாஹ்வுடைய சோதனைகளில் நாம் பொறுமையாக இல்லாமல் பொறுமை இல்லை என்றால் வேறு என்ன செய்து விட முடியும், அதே நேரத்தில் பொறுமையாக இருந்தோம் என்றால் இம்மையிலும் வெற்றி மறுமையிலும் வெற்றி.
 
ذكر سنيد عن إسماعيل بن علية عن عيينة بن عبد الرحمن عن أبيه قال : نعي إلى ابن عباس أخوه قثم وهو في سفر ، فاسترجع وتنحى عن الطريق ، فأناخ فصلى ركعتين أطال فيهما الجلوس ، ثم قام يمشي إلى راحلته وهو يقول : " واستعينوا بالصبر والصلاة " البقرة 153 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுடைய ஒரு வரலாறை பாருங்கள்” பயணத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய சகோதரர் இறந்த செய்தி வருகிறது, மதினாவை விட்டு வெளியேறி விட்டார்கள் அவருடைய சகோதரர் இறந்த செய்தி வருகிறது, இந்த இடத்தில் நம்மில் யாராவது ஒருவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் இன்றும் நாம் வஃபாத் உடைய செய்தியை செவியுறுகிறோம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் யோசித்துப் பாருங்கள்”
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்இஸ்தித்கார் அல்ஜாமிஃ லி மதாஹிபி ஃபுகஹாயில் அம்ஸார் - இமாம் இப்னு அப்துல் பர், எண் : 11782
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு தன்னுடைய ஒட்டகத்தில் இருந்து இறங்கினார்கள் ஒட்டகத்தை பாதையின் ஓரத்திலே கொண்டு சென்று அதை அமர வைத்துவிட்டு, இரண்டு ரக்அத் தொழுதார்கள், அந்த கடைசி இருப்பை நீண்ட நேரமாக அவர்கள் துவா செய்தார்கள் பிறகு, சலாம் கொடுத்து முடித்துவிட்டு பிறகு, தன்னுடைய வாகனத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டதை நாம் செய்து விட்டோம்.
 
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
 
நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2 : 153)
 
அல்லாஹ் சொன்னான் பொறுமையின் மூலமாக தொழுகையின் மூலமாக உதவி தேடுங்கள் என்று நான் அதை செய்து விட்டேன் என்று சொல்லி தன்னுடைய பயணத்தை தொடங்கினார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்இஸ்தித்கார் அல்ஜாமிஃ லி மதாஹிபி ஃபுகஹாயில் அம்ஸார் - இமாம் இப்னு அப்துல் பர், எண் : 11782
 
அன்பு சகோதரர்களே! இதுதான் பொறுமை நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களை, சோதனைகளை நன்மைகளாக மாற்ற வேண்டுமென்றால் இம்மை மறுமையின் நற் பாக்கியங்களாக மாற்ற வேண்டும் என்றால் நம்மிடத்திலே பொறுமை இருக்க வேண்டும்,
 
சகித்தல் இருக்க வேண்டும், மன உறுதி இருக்க வேண்டும், அதிலே நன்மையை தேட வேண்டும், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்:
 
قال علي بن أبي طالب رضي الله عنه: إن صَبَرْتَ جَرَى عليك القدَرُ وأنت مأجور
 
நீ பொறுமையாக இருந்து விட்டால் எப்படியோ எது விதியிலே எழுதப்பட்டதோ அதுதான் நடக்கப் போகிறது, எது விதியில் எழுதப்பட்டதோ அதுதான் நடக்கப் போகிறது நீ பொறுமையாக இருந்துவிட்டால் உனக்கு நற்கூலி.
 
وإن جَزِعْتَ جرى عليك القدَرُ وأنت مأزور
 
நீ பொறுமையாக இல்லை என்றால் எப்படியோ விதியின் உள்ளபடி நடக்கப் போகிறது நீ பொறுமையாக இல்லை என்றால் அதே விதி தான் நடக்கும் விதியில் உள்ள அதுதான் எது எழுதப்பட்டதோ அதுதான் நடக்கும் ஆனால், நீ குற்றவாளியாக பாவியாக ஆகிவிடுவாய் எப்போது நீ தடுமாறினாள், நீ பொறுமை இழந்தால்.
 
مَرَّ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ بامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ، فَقالَ: اتَّقِي اللَّهَ واصْبِرِي قالَتْ: إلَيْكَ عَنِّي، فإنَّكَ لَمْ تُصَبْ بمُصِيبَتِي، ولَمْ تَعْرِفْهُ، فقِيلَ لَهَا: إنَّه النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فأتَتْ بَابَ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ، فَقالَتْ: لَمْ أَعْرِفْكَ، فَقالَ: إنَّما الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை ஊருக்கு வெளியிலே சென்று கொண்டிருக்கும் போது அங்கே ஒரு கப்ருக்கு அருகிலே ஒரு பெண் அழுது பிரலாபித்துக் கொண்டிருக்கிறாள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பெண்ணுக்கு அருகிலே சென்று பொறுமையாக இரு, அல்லாஹ்வை பயந்து கொள் என்று சொன்னார்கள்,
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1283
 
அந்தப் பெண் சொன்னாள் விலகிப் போ தூரமாக போ என்னுடைய சோதனை உனக்கு ஏற்பட்டு இருந்தால் தெரியும் என்பதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இடத்தை அமைதியாக கடந்து சென்று விட்டார்கள், 
 
பின்னால் வந்த தோழர்கள் சொன்னார்கள் பெண்ணே உனக்கு தெரியாதா இவர்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று உடனே அந்த பெண் ஓடி வருகிறான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டை நோக்கி அங்கே வீட்டிலே காவல்காரரோ, செக்யூரிட்டியோ யாருமே இல்லை அல்லாஹ்வுடைய தூதரை பார்த்து அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை சரியாக கண்டு கொள்ளவில்லை, 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1283
 
உங்களை சரியாக நான் தெரிந்து கொள்ளவில்லை நான் சொல்லிவிட்டேன் என்பதாக சொல்லும் போது இப்போது நான் பொறுமையாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் பொறுமை என்பது அந்த முதல் திடுக்கத்திலே இருக்க வேண்டும், செய்தி கேட்டு முதலாவதாக அந்தத் திடுக்கம் ஏற்படுகிறது அல்லவா முதல் அந்த நிலை அந்த செய்தியினுடைய அந்த முதல் நிலை அந்த நேரத்திலே பொறுமையாக இருக்க வேண்டும், 
 
அழுது புரளாபித்து கூக்குரல் இட்டு கூப்பாடு போட்ட பிறகு சரி என்ன செய்ய விதியில இருக்கு அவ்வளவுதான் அதுவல்ல பொறுமை அந்த முதல் செய்தி கேட்டு உள்ளத்திலே ஒரு திடுக்கம் ஏற்படுகிறது அல்லவா அப்போது பொறுமையாக இருக்க வேண்டும்.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1283
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா தன்னுடைய அடியார்களின் மீது கருணை உள்ளவன், ஒரு தாய் தன்னுடைய பிள்ளையின் மீது வைத்திருக்கக்கூடிய கருணையை விட அல்லாஹுத்தஆலா அவனுடைய அடியார்களின் மீது வைத்திருக்கக் கூடிய கருணை மிக அதிகமானது.
 
ஆட்சி அல்லாஹ்வுடைய ஆட்சி, அதிகாரம் அல்லாஹ்வுடைய அதிகாரம், எதை அவன் நாடுகிறானோ அதை அவன் செய்வான் எதை அவன் விரும்புகிறானோ அதை அவன் சட்டமாக்குவான்,
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ أُحِلَّتْ لَكُمْ بَهِيمَةُ الْأَنْعَامِ إِلَّا مَا يُتْلَى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّي الصَّيْدِ وَأَنْتُمْ حُرُمٌ إِنَّ اللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான். (அல்குர்ஆன் 5:1)
 
நாம் அல்லாஹ்வுடைய இபாத், அல்லாஹ்வுடைய அடியார்கள், அல்லாஹ்வுடைய அடிமைகள், அவன் நம்முடைய எஜமானன், நம்முடைய உரிமையாளன், நம்முடைய அரசன்.
 
لَا يُسْـٴَــلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـٴَـــلُوْنَ‏
 
அவன் செய்வதைப் பற்றி கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் கேள்வி கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 21 : 23)
 
அல்லாஹ்விடத்திலே யாரும் ஏனென்று கேள்வி கேட்க முடியாது, அவனுடைய செயலை பற்றி யாரும் அவனிடத்திலே கேள்வி கேட்க முடியாது, மனிதர்கள் தான், அடியார்கள் தான் கேள்வி கேட்கப்படுவார்கள். அன்பு சகோதரர்களே! இதைத்தான் நமக்கு அல்லாஹ்வுடைய அந்த துவா குர்ஆனுடைய அந்த துவா கற்றுத் தருகிறது,
 
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏
 
அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். இன்னும், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்’’ எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2 : 156)
 
நாம் அல்லாஹ்விற்கு உரிமை பெற்றவர்கள், அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள், அவன் நம்மை படைத்தான், நமக்கு இரணம் அளித்தான், நமது உயிர் அவனுக்கு சொந்தமானது, நமது உடல் அவனுக்கு சொந்தமானது, நம்மிடத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அல்லாஹ்விற்கு சொந்தமானது. அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்கிறான்:
 
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 10 : 107)
 
நபியே! அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கை கொடுத்தால் அவனை தவிர அந்தத் தீங்கை நீக்க கூடியவர், அந்த சிரமத்தை போக்க கூடியவர் யாருமில்லை, அவன் உங்களுக்கு ஒரு நன்மையை கொடுத்தால் அவன் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். ஆகவே, அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா அவனுடைய விதியை நாம் பொறிந்தி கொள்ளும்போது.
 
அன்பு சகோதரர்களே! ஈமானுடைய அந்த சுவையை நாம் உணர முடியும் அல்லாஹ்வுடைய விதிக்கு நாம் தலை சாய்த்து விடும்போது, மனப்பூர்வமாக அதை அங்கீகரிக்கும் போது அல்லாஹுத்தஆலா இந்த உள்ளத்தை விசாலாமாக்குகிறான், இந்த உள்ளத்தை அல்லாஹுத்தஆலா உறுதிப்படுத்துகிறான். ரப்புல் ஆலமீன் சொல்வதை பாருங்கள்”
 
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا  اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ 
 
பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். (அல்குர்ஆன் 57 : 22)
 
இந்த உலகத்திலே சோதனை அது உங்களுக்கு ஏற்பட்டாலும் சரி, இந்த பூமியில் எத்தகைய சோதனை அதை இந்த பூமியில் நாம் உருவாக்குவதற்கு முன்பே அது அல்லாஹ்வுடைய அந்த விதியின் புத்தகத்திலே முன்பே எழுதப்பட்டு விட்டது இது அல்லாஹ்விற்கு மிக இலகுவானது.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்:
 
كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالأرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قالَ: وَعَرْشُهُ علَى المَاءِ
 
வானங்களையும், பூமிகளையும் அல்லாஹுத்தஆலா படைப்பதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பே படைப்புகளுடைய விதிகளை எல்லாம் எழுதி முடித்து விட்டான்.
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2653
 
கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் போரிலே கொல்லப்பட்டார்கள் அவர்களுடைய உறுப்புகளை இழந்தார்கள்  எத்தகைய சோதனைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய 10 ஆண்டுகளிலே மதினா வாழ்க்கையிலே 19 யுத்தங்களையும், 60க்கும் மேற்பட்ட சிறிய சண்டைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சந்தித்தார்கள்.
 
அந்த மதினா மக்களிலே ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக ஒரு ஷஹீத் இருப்பார், ஒரு கை கால் வெட்கப்பட்டவர், ஒரு அனாதை இருப்பார், கணவனை இழந்தவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு சோதனை மதினாவிற்கு வந்தது பலவிதமான சோதனை அப்போது முனாஃபிக்குகள் இன்றும் முனாஃபிக்குகள் இருக்கிறார்கள் அல்லவா அன்றும் இருந்தார்கள் அவர்களின் வாரிசுகள் அப்படியே வாழையடி வாழையாக நமக்குள் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்,
 
அந்த முனாஃபிக்குகள் சொன்னார்கள் அல்லாஹ் உங்களை கைவிட்டு விட்டானா அல்லாஹ்வுடைய உதவி உங்களுக்கு வரவில்லையா குஃபார்கள் சொன்னார்கள் நீங்கள் வணங்கக்கூடிய ரப்பு உண்மையானவனாக இருந்தால் உங்களுக்கு ஏன் இப்பேற்பட்ட சோதனை நாங்கள் அல்லவா மிகைக்கிறோம் என்று அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும் சொல்லிக் கொடுத்தான்”
 
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا  هُوَ مَوْلٰٮنَا ‌وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
 
(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும். (அல்குர்ஆன் 9 : 51)
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள் எங்களுக்கு என்ன சோதனை ஏற்பட்டு இருந்தாலும் சரி எதை அல்லாஹ் எங்களுக்கு எழுதினானோ அதுதான் ஏற்பட்டது, அல்லாஹ் எழுதாத எந்த சோதனையும் எங்களுக்கு ஏற்பட முடியாது, அவன் எங்களுடைய எஜமானனாக இருக்கிறான். அல்லாஹ்வின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்து விட்டோம். 
 
அன்பு சகோதரர்களே! இதுதான் ஈமான் தொழுகையில் மட்டுமல்ல ஈமான், நம்முடைய நோன்பில் மட்டுமல்ல ஈமான், நம்முடைய சில வார்த்தைகள் சந்தோஷமான நேரத்திலே அல்லாஹ்வை புகழ்கிறோமே அதில் மட்டுமல்ல ஈமான், சோதனையிலே ஈமான், அல்லாஹ்வை பொருந்தி கொள்வதை கொண்டு, எந்த நேரத்திலும் அல்லாஹ்வுடைய அடியானாக தன்னை உணர்வதை கொண்டு, ஒவ்வொரு சோதனையிலும் நம்முடைய யக்கின், நம்முடைய நம்பிக்கையை அதிகப்படுத்துவதை கொண்டு. 
 
சகோதரர்களே! ஈமானுக்கு  இவைகள் எல்லாம் தேவை காழி ஷுரைஹ் ரஹிமஹுல்லாஹ் உமர் ரலியல்லாஹு அவர்களுடைய காலத்தில் இருந்து நீதிபதியாக இருந்தவர் பெரிய மார்க்க அறிஞர் தாபியிங்களிலே மூத்தவர், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலும் அவர்தான் நீதிபதி, இராக்கிலே உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலும் அவர்தான் நீதிபதி பிறகு, அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலும் பிறகு, முஹாவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலும் பெரிய அறிஞர் அவர்கள் சொல்கிறார்கள்:
 
எனக்கு சோதனை ஏற்பட்டால் நான் நான்கு முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்வேன் சோதனை ஏற்பட்டால் நான்கு முறை அல்ஹம்துலில்லாஹ் சொல்வேன் நான்கு காரணங்களுக்காக அல்ஹம்துலில்லாஹ் சொல்வேன்” ஏன் தெரியுமா? ஒன்று இதைவிட பெரிய சோதனையை கொண்டு அல்லாஹ் சோதிக்கவில்லையே இதை விட அவன் நாடியிருந்தால் இதை விட பெரிய கஷ்டத்திலே என்னை தள்ளி இருக்கலாம் அல்லவா அப்படி செய்யவில்லையே, இரண்டாவது ஏன் தெரியுமா இந்த சோதனையில் பொறுமையாக இருப்பதற்கு அவன் எனக்கு தவ்ஃபீக் கொடுத்தானே அதற்கு அல்ஹம்துலில்லாஹ் அது மட்டுமல்ல இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வதற்கு அல்லாஹ் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தானே அதற்காக ஒரு அல்ஹம்துலில்லாஹ் ஏன் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லும் போது அவ்வளவு நன்மைகள் இருக்கின்றன, அடுத்து சொல்வார்கள் இன்னொரு அல்ஹம்துலில்லாஹ் எதற்கு தெரியுமா இன்னொரு காரணம் ஏன் தெரியுமா?
 
என்னுடைய உலக விஷயங்களில் அல்லாஹ் என்னை சோதித்தானே என்னுடைய மார்க்க விஷயத்தில் என்னை சோதிக்கவில்லையே எப்படி ஒரு தொழுகை தவறியிருந்தால் ஒரு நோன்பு தவறி இருந்தால் ஒரு பாவம் செய்திருந்தால் ஒரு குற்றம் செய்திருந்தால் இப்படி என்னுடைய மார்க்க விஷயத்தில் என்னை சோதிக்காமல் என்னுடைய சோதனையை உலக விஷயத்தில் உலக இழப்புகளில் ஆக்கினானே அதற்காக அல்ஹம்துலில்லாஹ் எப்படி சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள் நம்முடைய முன்னோர்கள்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நிறைய நல்லவர்களுடைய வரலாறுகள் சம்பவங்கள் இருக்கின்றன நாம் படித்து பார்க்க வேண்டும் உணர வேண்டும் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நமக்கு சொல்கிறான்:
 
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
 
ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது. நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது. (அல்குர்ஆன் 94 : 5, 6)
 
சிரமத்தோடு கண்டிப்பாக சிரமத்திற்கு பிறகு, உங்களுக்கு இலகுவான ஒரு காரியம் இருக்கிறது சிரமமான நேரத்திற்கு பிறகு, உங்களுக்கு வசதியான இலகுவான ஒரு நேரம் கண்டிப்பாக இருக்கிறது இரண்டு முறை அல்லாஹ் சொல்கிறான் சிரமத்திற்கு பிறகு, இலகுவான ஒரு நிலை இலகுவான ஒரு காரியம் இருக்கிறது.
 
அன்பு சகோதரர்களே! சில நேரத்திலே அல்லாஹு சுபஹானஹூதஆலா உடைய சோதனை எப்படி வரும் என்றால் கடைசி எல்லை வரை அல்லாஹ் கொண்டு சென்று விடுவான், கடைசி எல்லை வரை அல்லாஹ் கொண்டு சென்று விடுவான் அப்படிப்பட்ட சோதனை நபிமார்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது, ரசூல்மார்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது, அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் பாருங்கள்”
 
حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
 
இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைந்து, இன்னும், நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் உடைய உதவி தங்களுக்கு வரும் என்று அவர்கள் கூறியது பொய்யாக ஆகிவிட்டது) என்று மக்கள் எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-அந்த தூதர்களை) வந்தடைந்தது. ஆக, நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும், நம் தண்டனை, குற்றவாளிகளான சமுதாயத்தை விட்டு (ஒருபோதும்) திருப்பப்படாது. (அல்குர்ஆன் 12 : 110)
 
அல்லாஹ் சொல்கிறான்: தூதர்கள், ரசூல்மார்கள் அவர்கள் அதாவது எப்போது அல்லாஹ்வுடைய உதவி வரும் என்று நிராசை அடைய கூடிய அளவிற்கு அவர்கள் சென்று விட்டார்கள், நிராசை அடைவது அல்ல அந்த அளவுக்கு இன்னும்,  வரவில்லையே இன்னும், அல்லாஹ்வுடைய உதவி வரவில்லையே என்று அந்த சோதனையின் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்,
 
நம்முடைய முடிவு இதுதான் போல நாமெல்லாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் முஃமின்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி வராதோ காஃபிர்களுக்கு அல்லாஹ்வுடைய அதாப் இறங்காதோ என்றெல்லாம் அவர்கள் என்னும் அளவிற்கு சென்று விட்டார்கள் அந்த நிலையை அடைந்த போது நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது,
 
حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
 
இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைந்து, இன்னும், நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் உடைய உதவி தங்களுக்கு வரும் என்று அவர்கள் கூறியது பொய்யாக ஆகிவிட்டது) என்று மக்கள் எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-அந்த தூதர்களை) வந்தடைந்தது. ஆக, நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும், நம் தண்டனை, குற்றவாளிகளான சமுதாயத்தை விட்டு (ஒருபோதும்) திருப்பப்படாது. (அல்குர்ஆன்12 : 110)
 
நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது அல்லாஹ் சொல்லுகிறான்: அல்லாஹ் நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள், குற்றவாளிகளுக்கு அல்லாஹ்வுடைய தண்டனை எதுவோ அந்த தண்டனை யாராலும் தடுக்க முடியாது. 
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! பொறுமையாக இருக்க வேண்டும், உறுதியாக இருக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு ஆறுதல் தருகிறான்”
 
يٰبَنِىَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَايْــٴَــسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ‌ اِنَّه لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ‏
 
“என் பிள்ளைகளே! (பூமியின் பல பாகங்களில்) செல்லுங்கள்; இன்னும், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்கு தேடுங்கள். மேலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.”(அல்குர்ஆன் 12 : 87)
 
அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து ஒருபோதும் நிராசை அடையாதீர்கள் இறை மறுப்பாளர்கள் தான் அல்லாஹ்வுடைய கருணையில் நம்பிக்கை இழப்பார்கள்.
 
ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்விடத்திலே அதிகம் அதிகம் துவாக்கள் கேட்போமாக நம்முடைய சகோதரர்களுக்காக துவாக்கள் கேட்போமாக துவா கேட்க வேண்டிய முக்கியமான நேரம், கைகள் உயர்த்தப்பட வேண்டிய முக்கியமான நேரம், உலகத்தில் மூமின்களுடைய குரல் ஒடுக்கப்பட்டு, மூமின்கள் ஓரம் கட்டப்பட்டு, அவர்கள் மீது என்ன கொடுமைகள் நிகழ்ந்தாலும் அதை யாரும் கேட்கக்கூடாது, அவர்களுக்கு இந்த உலகத்தில் குரல் இல்லை, உரிமை இல்லை, நிலங்கள் இல்லை, அவர்கள் மீது பிறருடைய மத நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு, மாற்றார்களை போன்று அவர்கள் ஆக வேண்டும் என்பதற்காக நடத்தப்படக்கூடிய போர்கள் தான் யுத்தங்கள் தான் இது என்பதை மறந்து விடாதீர்கள்.
 
அல்லாஹுத்தஆலா தெளிவாக நமக்கு சொல்கிறான் குர்ஆனை எடுத்து படித்து பாருங்கள் இன்றைய காலத்தில் நிகழக்கூடிய இந்த நிகழ்வுகளை நீங்கள் புரிய வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை குர்ஆனை திறந்து சூரத்துல் பகராவை படியுங்கள் அஹ்லுல் கிதாப் வேதக்காரர்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்லுகிறான் என்பதை குரானிலிருந்து அறிந்து கொள்ளுங்கள், சூரா ஆல இம்ரான் படியுங்கள் சூரத்துல் நிஷாவை படியுங்கள், 
 
சூரத்துல் மாயிதாவை படியுங்கள், வேதம் கொடுக்கப்பட்ட அந்த மக்கள் அவர்கள் நசராக்களாக இருக்கட்டும், எஹூதிகளாக இருக்கட்டும் அவர்களுடைய குணம் என்ன அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள், மூமின்களோடு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும், அவர்களுடைய மத நம்பிக்கை என்ன அவர்கள் மூமின்களுக்கு என்ன செய்வார்கள் அவர்களுடைய அவர்களோடு செய்யப்படக்கூடிய ஒப்பந்தங்களின் நிலை எப்படி இருக்கும்,
 
மூமின்கள் அவர்களை தங்களுடைய பாதுகாவலர்களாக, தங்களுடைய பொறுப்பாளர்களாக, தங்களுக்கு நேசர்களாக அவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களோடு மூமின்கள் சாய்ந்தால் இந்த மூமின்களுக்கு எத்தகைய சோதனை வரும் இன்று எல்லா விளக்கங்களையும் அல்லாஹுத்தஆலா இந்த நான்கு சூராக்களிலே தெளிவாக சொல்லி இருக்கிறான், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறுகளோடு அல்லாஹ் சொல்லி இருக்கிறான். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வை நாம் குறை சொல்ல முடியாது, குறை நம்மை சொல்ல வேண்டும், நம்முடைய ஈமானிய பலவீனத்தை சொல்ல வேண்டும், நம்முடைய அறியாமையை சொல்ல வேண்டும், நம்முடைய ஒற்றுமை இன்மையை சொல்ல வேண்டும், மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறினோமே நாம் குற்றவாளிகள்.
 
இந்த சோதனைகள் நம் மீது நம்முடைய செயல்களால் சுமத்தப்பட்டவையே தவிர அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்ல நம்முடைய குற்றங்களால் எப்படி உஹது போரிலே சஹாபாக்களுக்கு சோதனை வந்தபோது கேட்டார்கள் ஏன் இந்த சோதனை நமக்கு என்பதாக அல்லாஹ் சொன்னான் உங்களின் காரணமாக தான், உங்களின் காரணமாக தான் நீங்கள் நபியின் கட்டளையை மீறினீர்களே அதனால் ஏற்பட்டது அதனால் ஏற்பட்டது என்பதாக அல்லாஹ் சொன்னான்.
 
சகோதரர்களே! இந்த நேரத்தில் இஸ்திஃபார் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவது நமக்காக நம்முடைய மூமினான சகோதரர்களுக்காக அல்லாஹ்விடத்திலே உதவியை தேடுவது கண்டிப்பாக அல்லாஹ்வின் உதவியின் மீது ஆதரவு வைத்தவர்களாக இருப்பது அல்லாஹ்வுடைய உதவி கண்டிப்பாக விரைவில் வரும் அல்லாஹுத்தஆலா மூமினுடைய கண்களை குளிர செய்வான், மூமின்களுடைய உள்ளத்திற்கு அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா ஆறுதலை கொடுப்பான், அல்லாஹ் சுபஹானஹூதஆலா உதவி செய்பவனாவும் நம்முடைய பொறுப்பாளனாலும் அல்லாஹ் ஒருவனே போதுமானவனாக இருக்கிறான்.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/