HOME      Khutba      இயலாமை ஏன்? | Tamil Bayan - 845   
 

இயலாமை ஏன்? | Tamil Bayan - 845

           

இயலாமை ஏன்? | Tamil Bayan - 845


இயலாமை ஏன்?

தலைப்பு : இயலாமை ஏன்?

வரிசை : 845

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 24 -11- 2023 | 10-05-1445

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கு முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாக! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை, தக்வாவை நினைவூட்டியவனாக! மார்க்கப்பற்றை உபதேசம் செய்தவனாக! இந்த குத்துபாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய சகோதரர்களுக்கு உதவி செய்வானாக! அவர்களுடைய பாதங்களை பலப்படுத்துவானாக! அவர்களுக்கு சாதகமாக அல்லாஹுத்தஆலா அருள்களை, சூழ்நிலைகளை இறக்குவானாக! அவர்களுடைய எதிரிகளுக்கு எதிராக அல்லாஹுத்தஆலா அந்த சகோதரர்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா நமக்கு கூறுகிறான்:

إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

உங்களுக்கு காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டால் (நிராகரிப்பவர்களாக இருக்கின்ற அந்த) மக்களுக்கும் அது போன்ற காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டுள்ளது. (சோதனைகள் நிறைந்த) அந்த நாள்கள் - அவற்றை மக்களுக்கு மத்தியில் (சில சமயம் அவர்களுக்கும் சில சமயம் உங்களுக்கும்) நாம் சுழற்றுகிறோம். (உண்மையான) நம்பிக்கையாளர்களை அல்லாஹ் (நீங்கள் அறியும்படி வெளிப்படையாக) அறிவதற்காகவும், உங்களில் சிலரை போரில் கொல்லப்படும் தியாகிகளாக அவன் எடுப்பதற்காகவும் (காலங்களை ஒரு சமயம் உங்களுக்கு சாதகமாகவும் ஒரு சமயம் உங்களுக்கு பாதகமாகவும் அல்லாஹ் சுழற்றுகிறான்). இன்னும், (அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்க்கின்ற) அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்.(அல்குர்ஆன்3:140)

அந்தக் காலங்களை மக்களுக்கு மத்தியிலே நாம் சுழற்றுவோம்என்று, அல்லாஹுத்தஆலா கூறுகிறான்” வெற்றி சில சமயங்களில் நமக்கு கிடைக்கும், சில சமயங்களில் தற்காலிகமாக எதிரிகளுக்கும் கிடைக்கும், அபூ சுஃபியானிடத்திலே ஹிர்கல் மன்னர் கேட்கிறார் உங்களுக்கு இடையிலே போர் நடந்திருக்கிறதா? அந்த போர் எப்படி என்று கேட்கிறார்,

அதற்கு அபூ சுஃபியான் சொல்கிறார் அது கிணற்றின் வாலியை போல கீழே இருக்கும், மேலும் இருக்கும், கீழே இருக்கும், மேலே இருக்கும் அப்படித்தான். சில நேரங்களில் எங்களுக்கு நாங்கள் வெற்றி பெறுகிறோம் நாங்கள் நன்மை அடைகிறோம் சில நேரங்களில் அவர் வெற்றி அடைகிறார்.

ஆகவே, அன்பான சகோதரர்களே! ஒரு முஃமினுக்கு இந்த உலகத்தில் என்ன நடந்தாலும் சரி, எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் சரி, ஏன் ஒட்டுமொத்த சமுதாயமே வேரோடு கொல்லப்பட்டாலும் சரி நாம் நஷ்டவாளிகள் அல்ல, நாம் இறந்தவர்கள் அல்ல சூரத்துல் புரூஜை படித்து பாருங்கள்.

ஈமான் கொண்ட அந்த சமுதாயம் வேரோடு நெருப்பில் போட்டு பொசுக்கப்பட்டார்கள்,கடைசியாக மீதம் இருக்கக்கூடிய ஒரு குழந்தையும், அந்த குழந்தையின் தாயும் நெருப்பிலே போடப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : சுஹைப் இப்னு ஸினான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3005 குறிப்பு 1)

ஒருவர் கூட மீதமாக இல்லை தோற்று விட்டார்களா? அவர்கள் நஷ்டம் அடைந்து விட்டார்களா? அன்பான சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா ஆட்சியை கொடுத்து கண்ணியப்படுத்துவான், அல்லாஹுத்தஆலா ஷஹாதத்தை கொடுத்து கண்ணியப்படுத்துவான், இம்மையின் முடிவை விட

وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏

நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மிக மேலானதாகும். (அல்குர்ஆன் 12 : 57)

மறுமையில் கூலி தான் மிகச்சிறந்தது இறையச்சம் உள்ளவர்களுக்கு,ஈமான் உள்ளவர்களுக்கு என்று அல்லாஹுத்தஆலா கூறுகிறான்: எந்த நிலையிலும்,

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ

நீங்கள் துணிவு இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.(அல்குர்ஆன் 3:139)

நீங்கள் கோழையாகாதீர்கள் தைரியம் இழக்காதீர்கள்,

وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ إِنْ تَكُونُوا تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا

(எதிரி) கூட்டத்தைத் தேடி செல்வதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வலியை உணர்பவர்களாக இருந்தால் நீங்கள் வலியை உணர்வது போன்று நிச்சயமாக அவர்களும் வலியை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி, நன்மைகள் அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆசை வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.(அல்குர்ஆன்4:104)

உங்களுக்கு வலித்தால்,உங்களுக்கு வேதனை என்றால்,உங்களுக்கு சிரமம் என்றால் உங்களில் கொல்லப்பட்டவர்கள் இருந்தால்,அல்லாஹ் சொல்கிறான் அவர்களுக்கும் வலிக்கிறது,அவர்களிலும் கொல்லப்பட்டவர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு சேவை என்றால் அவர்களுக்கும் சேதம் இருக்கிறது,ஆனால்,

وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ

அவர்கள் ஆதரவு வைக்காததை அல்லாஹ்விடத்தில் நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள், அவர்களைப் பொறுத்தவரை இந்த உலகம் தான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை அவர்கள் கொல்லப்பட்டால் நேரடியாக ஜஹன்னம்மிலே ஆனால், ஒரு மூமின் கொல்லப்பட்டால் அல்லாஹ் சொல்கிறான்:

وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْن

இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (அதை) நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை செத்தவர்கள் இறந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்,

بَلْ اَحْيَآءٌ

அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், அவர்கள் அல்லாஹ்விடத்திலே உணவளிக்கப்படுகிறார்கள், அன்பு சகோதரர்களே! நம்முடைய மார்க்கம் வீரத்தின் மார்க்கம், நம்முடைய மார்க்கம் இறை நம்பிக்கையின் மார்க்கம், நம்முடைய மார்க்கம் துணிவினுடைய மார்க்கம், நம்முடைய மார்க்கம் மனதிற்கு உறுதியை கொடுக்கக் கூடியது, கோழைத்தன்மை, கஞ்சத்தனம், பின்வாங்குதல் அனைத்தும் நமது மார்க்கத்தில் மிகப்பெரிய பெரும் பாவங்கள்.

போர் மைதானத்தில் இருந்து பின்வாங்குவது, புர முதுகு காட்டி ஓடுவது எந்த நிலையிலும் ஒரு முஃமினால், முஸ்லிமால் போக முடியாது. காரணம் என்ன அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எண்ணிய ஏழு மிக பெரும் பாவங்களில் உள்ளது அது மட்டுமா நேரடியாக அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் அதை கண்டிக்கின்றான்,

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களை பெரும் படையாக (போரில்) சந்தித்தால் அவர்களுக்கு (உங்கள்) பின்புறங்களை திருப்பாதீர்கள். (-புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்) (அல்குர்ஆன் 8:15)

நீங்கள் காஃபிர்களை சந்தித்தால் ஒருபோதும் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள், யார் அப்படி ஓடுவாறோ தகுந்த காரணம் இல்லாமல் அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகி விட்டார். இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முறை கூட முஸ்லிம்கள் போரில் இருந்து பின்வாங்கியது கிடையாது, மைதானத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஓடியது கிடையாது, இன்றல்ல இதைவிட மிகப்பெரிய யுத்தங்களையெல்லாம் முஸ்லிம்கள் சந்தித்து இருக்கிறார்கள், ஈராக் மீதும், ஷாமின் மீதும் போர் தொடுத்து தாத்தாடிகளை விடவா இவர்கள் பெரிய ராணுவமாக ஆகிவிட்டார்கள்,

இன்றைய காலத்தில் இவர்களிடத்தில் இருக்கக்கூடிய சக்தியை விட இதைவிட மிகப் பெரிய சக்தியும் ராணுவ எண்ணிக்கையும் கொண்ட தாத்தார் மக்களையே அல்லாஹ்வுடைய அருளால் தோற்கடித்தவர்கள் எதிர்த்து நின்றவர்கள், சேதம் ஏற்படும் அல்லாஹ் சோதிப்பான் ஏன் சோதிக்கிறான் நம்மிடத்தில் இருக்கக்கூடிய அநியாயம், நம்மிடத்தில் இருக்கக்கூடிய குற்றங்கள், ஏன் எதிரிகளை அல்லாஹ் சாட்டுகிறான் என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை நாம் தேட வேண்டும்.

அறிஞர் இப்னு பாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ரியாத் நகரத்தில் 1399ஹிஜ்ரிலே இன்று 1445,46ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உரை நிகழ்த்துகிறார்கள் அந்த உரையை படித்தால் சகோதரர்களே! இன்று நமக்காக வேண்டி நிகழ்த்தப்பட்ட ஒரு உறவை போட்டு இருக்கிறது.

அறிஞர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் கேட்பது யார் கேட்க யார் தயாராக இருக்கிறார்கள் யாராவது ஒருவர் நன்மையை ஏவினால், தீமையை தடுத்தால், மார்க்கப்பற்றை வலியுறுத்தினால் அவரை பிற்போக்குவாதிகள் என்று சொல்வதற்கு ஏராளமான பேர், அறிஞர்களுக்கு உலகம் தெரியாது, இவர்களுக்கு உலகம் தெரியாது, இவர்களுக்கு பொதுவாக தெரியாது என்று அறிஞர்களின் மீது பழமைவாத குற்றத்தை சுமத்துவதற்கு தான் இன்று ஆட்சியாளர்களும், செல்வந்தர்களும், மக்களும் இருக்கிறார்கள் தவிர உலமாக்கள் என்ன சொல்கிறார்கள் உலமாக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்பதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்.

பல பேர் ஜும்ஆவுக்கு வருவதே தூங்குவதற்காக, பல பேர் ஜும்மாவுக்கு வருவது எந்த இடத்தில் சென்றால் சீக்கிரமாக முடியும், சுருக்கமாக முடியும், வேலைக்கு சீக்கிரமாக போகலாம் என்பதற்காக பல நோக்கங்களில் வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள்,

நாம் என்ன சொன்னாலும் சரி, இங்கே மட்டும் அல்ல எல்லா பல இடங்களிலும் அப்படித்தான் இல்லா மாஷா அல்லாஹ் உணர்வு உள்ளவர்களும் இருக்கிறார்கள் ஆனால், எத்தனை சதவீதம் நம்மில் அப்படி இருக்கிறார்கள்.

அன்பு சகோதரர்களே! சமுதாயமாக நாம் திருந்தாதவரை மாறாதவரை அல்லாஹ்விடத்தில் அந்த வெற்றியை நாம் அடைய முடியாது. என்ன சொல்கிறார்கள் இமாம் இப்னு பாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அல்லாஹ் அவர்களுடைய கபூரை பிரகாசமாக்குவானாக! இன்று முஸ்லிம்கள் பலவீனப்பட்டு இருக்கிறார்கள், எதிரிகளுக்கு முன்னால் துணிந்து முன் வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை, பிரிந்து இருக்கிறார்கள், பல நாடுகளாக, பல கூட்டங்களாக, பல பிரிவுகளாக, பிளவுபட்டு இருக்கிறார்கள்.

எதிரிகள் அவர்கள் மீது சாட்டப்பட்டிருக்கிறார்கள், எந்த அளவு துணிவு ஏற்பட்டுவிட்டது எதிரிகள் நம்முடைய பூமியின் மீது, நம்முடைய நிலத்தின் மீது, நம்முடைய ஆட்சியின் மீது, அதிகாரம் செலுத்தக்கூடிய அளவிற்கு, அதை நம்முடைய கையில் இருந்து பிடுங்கக்கூடிய அளவுக்கு, அவர்களுக்கு துணிவு ஏற்பட்டுவிட்டது.

சொல்கிறார்கள்” இதற்கு என்ன காரணம் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு கண்டிப்பாக காரணம் இருக்காது இப்பேற்பட்ட பலவீனம் இத்தகைய பின்னடைவு இதற்குரிய காரணங்களை நாம் அறிய வேண்டும்,அதற்குரிய நிவாரணங்களை நாம் அறிய வேண்டும்,நோயே நமக்கு என்னவென்று தெரியவில்லை என்றால் அதற்கு எப்படி மருந்து தேடுவது?

ஆகவே,நோயையும் அறிய வேண்டும், நோய்க்கு உண்டான மருந்தையும் அறிய வேண்டும் அப்போதுதான் ஷிஃபாவும் கிடைக்கும்,ஆஃபியத்தும் கிடைக்கும் ஒரு நோயாளி அவருடைய நோய் என்னவென்று அறியும்போது, அந்த நோய்க்கு உண்டான சரியான சிகிச்சையை அறியும் போது தான் அவன் அந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு அவன் விரைவான பிறகு, அந்த சிகிச்சையின் மூலமாக தன்னுடைய நோயை குணமாக்கி கொள்வான்.

அன்பு சகோதரர்களே! நாம் புத்திசாலிகளாக இருந்தால், நாம் அறிவுள்ளவர்களாக இருந்த ஒரு அறிவுள்ள நோயாளி எப்படி தன்னுடைய நோயை அறிந்து முன் வருவானோ அதுபோன்று நாம் நம்முடைய பலவீனத்தை அறிந்து, அந்த பலவீனத்தை போக்குவதற்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரசூலும் என்ன சிகிச்சை சொன்னார்களோ அந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள தயாராக வேண்டும்.

ஆனால், இன்று நம்முடைய நிலை அல்லது நம்மில் பெரும்பாலானவர்களுடைய நிலை என்னவென்றால் நோயாளிகளில் சிலர்  இப்படி இருப்பார்கள் நோய் முத்தி போய் இருக்கும், பிரச்சனை பெரிதாக இருக்கும், அவர் அதற்குரிய மருந்தை தேட மாட்டார், சிகிச்சை தேட மாட்டார், அந்த நோயில் வாழ்வது அவருக்கு பழக்கப்பட்டு விடும் அந்த நோய் வாழ்வது அவருக்கு பழக்கப்பட்டு விடும் அதையே பெருமையாக பேச ஆரம்பித்து விடுவார் இறுதியாக அந்த நோய் அவரையே கொல்லும் அளவிற்கு ஆகிவிடும்,

அவருக்கு யார் என்ன மருத்துவத்தை சொன்னாலும் சரி, என்ன சிகிச்சையை  சொன்னாலும் சரி அவர் அதை ஏற்றுக்கொள்ள தயாராக மாட்டார் காரணம்” என்ன அந்த நோயிலேயே வாழ்வது அவருக்கு பழக்கமாகிவிட்டது.

அன்பு சகோதரர்களே! இப்படித்தான் இன்றைய முஸ்லிம்களுடைய நிலை இவ்வளவு இழிவிலே இருக்கிறோமே இப்படிப்பட்ட ஒரு மோசமான பின்னடைவில் இருக்கிறோமே இருந்தாலும் இது அவர்களுக்கு பழகிவிட்டது போலும் இந்த அவமானங்கள், இந்த கேவலங்கள், இந்த அபகரிப்புகள், தன்னுடைய சகோதரர்களுக்கு நடக்கக்கூடிய அன்றாட கொடுமைகள், இவையெல்லாம் அவர்களுக்கு சகஜமாகிவிட்டது, பழக்கமாகிவிட்டது போலும்.

அன்பு சகோதரர்களே! இந்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு தெரியுமா ஏன் எதிரிகள் நம் மீது சுமத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு முன்னால் துணிவோடு முன் வருவதற்கு முஸ்லிம்களுக்கு வீரம் இருப்பதில்லை, துணிவு இருப்பதில்லை, அதற்கான சிந்தனை இருப்பதில்லை, இவை எல்லாவற்றையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் அங்கே ஒரு அழகு ஒரு உண்மையான ஒரு காரணம் தெரியும் அது என்ன காரணம்”

الجهلباللهتعالىالجهلبديناللهஅல்லாஹுவை அறியாமல் இருப்பது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அறியாமல் இருப்பது, இந்த ஒரு காரணத்திலிருந்து நூறு காரணங்கள் உருவாகும், இந்த ஒரு பிரச்சனையிலிருந்து நூறு பிரச்சனைகள் உருவாகும் நாமெல்லாம் அல்லாஹ்வை அறிந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டோமா, அல்லாஹ்வை அறிந்திருந்தால் இந்த இழி நிலை நமக்கு ஏற்பட்டிருக்குமா அல்லாஹ்வை அறிவது என்றால் அவன் ஒரு இறைவன் அர்ஷுக்கு மேலே  இருக்கிறான் என்று அறிந்தால் போதுமா,

அல்குர்ஆன் அல்லாஹுவை எப்படி அறிமுகப்படுத்துகிறதோ, அவனுடைய நம்பிக்கையை எப்படி கற்றுக் கொடுக்கிறதோ, ஒரு நம்பிக்கையாளன் எத்தகைய ஈமானிய அடையாளங்களை உடையவனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறதோ அது நம்மில் வராத வரை, நமக்குள் இறங்காத வரை அதை நாம் உள்ளத்தாலும், சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தாத வரை நாம் மூமினாக ஆக முடியாது.

6632 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَقِيلٍ زُهْرَةُ بْنُ مَعْبَدٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الآنَ يَا عُمَرُ»

அன்பு சகோதரர்களே! ஒரு முறை ஒரே ஒரு முறை உமர் ஃபாருக் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்திலே பேசும்போது எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் மீது எனக்கு ரொம்ப அன்பு இருக்கிறது எல்லாரையும் விட உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால், எனது நஃப்ஸை  தவிர இந்த ஒரு வார்த்தை சொன்னார்,

உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு உங்களை பிடிக்கும் எல்லாரையும் விட எல்லா விஷயங்களை விட ஆனால் எனது நஃப்ஸை தவிர இந்த ஒரு வார்த்தைக்கு சொன்னார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரை பார்த்து உமரே! இல்லை, உமரே! இல்லை என்று சொன்னார்கள் என்னை விட உங்களை நான் நேசிக்கிறேன் என்று அப்போது தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரை முஃமினாக ஏற்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6632

அன்பு சகோதரர்களே!பத்ரு போரிலே கலந்தவர்,ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உற்ற தோழர்,ரசூலுல்லாஹ் யாராவது முறைத்து பார்ப்பதே பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ரசூலுல்லாஹி மீது பற்று உள்ளவர்,அத்தகைய தோழர் நினைத்துப் பாருங்கள் இன்று ஈமானிய நற்பண்புகளில் இருந்து ஈமானிய அமல்களில் இருந்து இன்னும்,எத்தனை பட்டியலை நாம் போட்டுக் கொண்டே போகலாம் அதிலிருந்து நாம் வெகு தூரத்தில் இருக்கிறோம்.

அன்பு சகோதரர்களே!அல்லாஹ்வை அறியாமல் இருப்பது இதனால் என்ன நிகழ்ந்தது உலக ஆசைகள் அதிகமாகி விட்டது,மௌத்தின் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது,இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தொழுகையை வீணடிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்,மன இச்சையின் படி வாழ்க்கையை தேடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்,

ஹராமான ஆசைகள்”அதிலே மூழ்கிக் கிடக்கிறார்கள்,அல்லாஹ்வுடைய எதிரிகளை எதிர்ப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும்,ஆட்சியாளரும் அவருடைய மக்களும்,அவருடைய ராணுவமும் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டானோ அதிலே அவர்களுக்கு ஈடுபாடு இல்லை.

வேறு என்ன ஈடுபாடு அந்த எதிரிகளையே தங்களது நாட்டுக்கு வரவழைத்து கண்ணியப்படுத்துவதிலே அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறது,யாரை எதிரிகள் என்று அல்லாஹ் சொன்னானோ,யாரிடத்தில் பழகாதீர்கள் என்று அல்லாஹ் சொன்னானோ,யாரை நேசிக்காதீர்கள் என்று அல்லாஹ் சொன்னானோ அவர்களோடு நட்பு வைப்பதிலே சந்தோஷம்,அவர்களை பெருமைப்படுத்துவதிலே பெருமை இவர்களுக்கு,

தங்களுடைய நாட்டினுடைய மக்களை அல்லாஹ்வுடைய தீனுக்காக உருவாக்குவதில் கவனம் இல்லை,தங்களுடைய தேவைகளை,தங்களுடைய ஆயுத பலங்களை,பலப்படுத்துவதிலே ஆர்வம் இல்லை இதனால் என்ன ஆனது அவர்களுக்கு மத்தியிலே பிரிவினை,அவர்களுக்கு மத்தியிலே கருத்து வேற்றுமை,அவர்களுக்கு மத்தியில் நாம் ஒருங்கிணைப்போம் என்பதிலே ஆர்வமின்மை,

ஒருவர் ஒருவர் மீது பகை உள்ளவராக,ஒருவர் ஒருவரை பார்த்து முகம் திருப்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.மேலும்,சொல்கிறார்கள் இதனால் என்ன ஏற்பட்டது எதிரிகளை பார்த்தால் பயம்,எதிரிகளை எதிர்ப்பதற்கு பயம்,ஹராமான ஆசைகளிலே ஈடுபடுதல்,அது மட்டுமா அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து,நேர்வழியிலிருந்து படுப்பதில் கூட அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பரப்புவதற்கும்,அதை உலகெங்கும் கொண்டு செல்வதற்கும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் சட்டங்கள் தங்களது நாடுகளில் ஓங்கி,உயர்ந்து நிற்பதற்கும் துணை நிற்க வேண்டியவர்கள் அவர்களே அதற்கு தடை போடக்கூடிய அளவிற்கு,அவர்களே அதை விரும்பாத அளவிற்குரிய நிலை ஏற்பட்டது.மேலும்,சொல்கிறார்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் அல்லாஹ்வுடைய கட்டளையின்படி நடந்திருக்க வேண்டாமா அல்லாஹ் என்ன சொல்கிறார்,

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِه عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ لَا تَعْلَمُوْنَهُمُ  اَللّٰهُ يَعْلَمُهُمْ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏

இன்னும், அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்திலிருந்தும், போர் குதிரைகளில் இருந்தும் உங்களுக்கு முடிந்ததை ஏற்பாடு செய்யுங்கள். அதன்மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் (நீங்கள் அறியாத) அவர்கள் அல்லாத (பகைமையை மறைத்திருக்கும்) மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்த வேண்டும். நீங்கள் அவர்களை அறிய மாட்டீர்கள், அல்லாஹ் அவர்களை அறிவான். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பொருள்களில் எதை தர்மம் செய்தாலும் அ(தற்குரிய நற்கூலியான)து உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 8 : 60)

மூமின்களே!உங்கள் மீது தொழுகை மட்டும் கடமை இல்லை,உங்கள் மீது தஹஜத் மட்டும் விரும்பத்தக்க அமலாக விதிக்கப்படவில்லை,பெருநாளும்,குருபானியும் மட்டுமா நம் மீது கடமை அல்லாஹ் சொல்கிறான்:

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ

ஆற்றல்களை,வலிமைகளை தயார் படுத்துங்கள்,அதன் மூலமாக உங்களுடைய எதிரிகளை நீங்கள் அச்சுறுத்த வேண்டும்,அல்லாஹ்வுடைய எதிரியை நீங்கள் அச்சுறுத்த வேண்டும் முஸ்லிம் என்றால் எதிரியின் உள்ளத்திலே பயம் வர வேண்டும்,அவனுக்கு துணிவு வரக்கூடாது நம்முடைய உரிமைகள் மீது அத்துமீறுவதற்கு,நம்முடைய சமுதாயத்தின் மீது அத்துமீறுவதற்கு,நம்முடைய நிலங்கள் மீது அத்துமீறுவதற்கு அத்தகைய நிலையில் நீங்கள் இருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஆனால்,அதை விட்டு விட்டார்கள் தங்களுடைய செல்வங்களை எல்லாம் அல்லாஹ் எதற்கு செலவழிக்க கூடாது என்று சொன்னானோ அதற்கு செலவளிக்கிறான்,அல்லாஹ் எதற்கு செல்வங்களை செலவளியுங்கள் என்று சொன்னானோ அந்த செலவளிப்பை விட்டு விட்டார்கள்.

அன்பு சகோதரர்களே! இதனால் என்ன ஆனது உலகம் உன்னைவிட நான் பெரியவன் உனது நாட்டில் இருக்கும் கட்டிடங்களை விட எனது நாட்டில் உள்ள கட்டிடங்கள் பெரியது, உனது நாட்டில் இருக்கும் சாலைகளை விட எனது நாட்டில் இருக்கக்கூடிய சாலைகள் பெரியது இப்படியாக துன்யாவில் போட்டி போடக்கூடியவர்களாக ஆகிவிட்டார்கள் இதுதான் பெரும்பாலான நிலையாக இருக்கிறது.

இன்று தங்களை இஸ்லாமிய பக்கம் இணைத்துக் கொள்ளக்கூடிய பல நாடுகளுடைய நிலை இதுதான் சகோதரர்களே! அல்லாஹ் பாதுகாத்த சில இடங்களை தவிர அதுவும் சொற்பமான அளவில் தான் அவர்களும் இருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் அல்லாஹ்வை அறியாமை, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அறியாமை, அல்லாஹ் இந்த மார்க்கத்தில் சொல்லி இருக்கக்கூடிய அந்த எதார்த்த உண்மைகளை அறியாமல் இருப்பது. இதுதான் மிகப்பெரிய ஒரு காரணம் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உம்மத்துடைய நன்மை என்று எதைச் சொல்கிறார்கள், இந்த உம்மத்துடைய சிறப்பு என்று எதை சொல்கிறார்கள்:

ما يريد الله به خيرا يفقهه في الدين

அல்லாஹுத்தஆலா ஒரு சமுதாயத்திற்கு ஒரு கூட்டத்திற்கு ஒரு மனிதனுக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மார்க்கத்திலே விளக்கத்தை,மார்க்கத்தின் ஞானத்தை கொடுக்கின்றான் மார்க்கத்தில் ஞானத்தை கொடுக்கின்றான்.

அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :71

முஸ்லிமுடைய ஆட்சியாளர்கள் கல்வியாளர்கள் மார்க்க கல்வியாக இருக்க வேண்டும்,நம்முடைய மன்னர்கள் குலஃபாக்கலாக இருக்கட்டும்,அதற்குப் பின்னால் வந்த பனுல் அப்பாஸ் அப்பாஸ்ஸிய மன்னர்களாக இருக்கட்டும்,அவர்களுக்குப் முன்னால் வந்த பனு உமையா மன்னர்களாக இருக்கட்டும்,அதற்குப் பின்னால் வந்த எந்த முஸ்லிம் மன்னரும் சரி அவர்களுடைய பிள்ளைகளை மார்க்க கல்வி உள்ளவர்களாக,மார்க்க அறிஞர்கள் இடத்திலே கல்வி படித்தவர்களாக உருவாக்கினார்கள்.

ஒரு அரசர் ஒரு அரசனுடைய பொறுப்புகளை,கடமைகளை அறிந்தவராகவும் இருப்பார் அந்த நேரத்திலே அந்த ஊரிலேயே அவர்தான் மார்க்க கல்வியிலேயே தேர்ச்சி பெற்றவராக இருப்பார்,மார்க்க கல்வி இல்லாமல்,அதுவும் மேற்கத்தியர்கள் இடத்திலே கல்வி படித்தவர்கள் தங்களுடைய நாட்டில் உள்ள அறிஞர்களை புறக்கணித்து,தங்களுடைய நாட்டில் உள்ள கல்வி சாலைகளிலே கல்வி படிக்காமல் மேற்கத்தியர்களிடத்திலே கல்வி படித்தவர்கள் இங்கு முஸ்லிம்களுடைய பெயரால் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

அதனால் ஏற்பட்ட மோசமான பின் விளைவு தான்  அவர்களுடைய நாடுகளைப் போன்று முஸ்லிம் நாடுகளை மாற்ற அவர்கள் இப்போது துடித்துக் கொண்டிருக்கிறார்.எவன் எந்த கலாச்சாரத்தில் வாழ்வானோ அந்த கலாச்சாரத்தை நேசிப்பான்,யார் யாரோடு வாழ்வார்களோ அவர்களுடைய அந்த குணம் அந்த கலாச்சாரம் அந்த மாற்றத்தை அந்த தாக்கத்தை உண்டாக்கும்.

நல்லவர்களோடு, அறிஞர்களோடு, இஸ்லாமிய சூழ்நிலையில் வாழ்ந்திருந்தால், படித்திருந்தால் அவர்களுக்கு இதனுடைய அருமை, இதனுடைய மதிப்பு, இதனுடைய மகத்துவம், எப்பேர்பட்ட மார்க்கம் நமக்கு கொடுக்கப்பட்டது, இந்த பூமியில் ஆட்சி எதைக் கொண்டு நமக்கு கொடுக்கப்பட்டது, நமக்கு ஏன் இந்த கண்ணியம் என்பதை எல்லாம் புரிந்து இருப்பார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! சொல்கிறார்கள் யாராக இருக்கட்டும் சாதாரண மனிதனாக இருக்கட்டும், அரசனாக இருக்கட்டும், மக்களாக இருக்கட்டும் எல்லோருடைய நன்மையும் இந்த மார்க்கத்தை கற்றுக் கொள்வதிலே இருக்கிறது, எல்லாருடைய பிரச்சனையும், எல்லாருடைய தீமையும், இந்த மார்க்கத்தை அறியாமல் இருப்பதிலேயே இருக்கிறது. அல்குர்ஆனுடைய வசனம் ஒன்றா, இரண்டா, மூன்றா  மடமையை அறியாமையை அல்லாஹ் கண்டித்துக் கொண்டே இருக்கிறான்”

وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَى وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ

(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும்; இன்னும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும்; இன்னும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை, அல்லாஹ் நாடினால் தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன்6:111)

அல்லாஹ் சொல்கிறான் மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள் ஜாஹில்களாக இருக்கிறார்கள்

مَا جَعَلَ اللَّهُ مِنْ بَحِيرَةٍ وَلَا سَائِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ وَلَكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.அல்குர்ஆன்5:103)

அவர்களை அதிகமானவர்கள் புத்தி இல்லாதவர்களாக சிந்திக்காதவர்களாக இருக்கிறார்கள் அன்பு சகோதரர்களே!இந்த அறியாமையின் காரணமாகத்தான் தங்களுக்கு மத்தியில் பிரிந்து பல பிரிவுகளாக இருக்கிறார்கள்,தங்களுக்கு மத்தியில் வேறுபடுகிறார்கள்,  தங்களுடைய சகோதரர்களை நேசிப்பதை விட யாரையெல்லாம் சபித்தானோ, யார் மீது அல்லாஹ் கோபத்தை இறக்கினானோ அந்த யூதர்களும்,  நஸராணிகளும் இவர்களுக்கு உள்ளத்தில் அன்புள்ளவர்களாக, நேசம் உள்ளவர்களாக, நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்.

ஆபாசங்களை, அசிங்கங்களை விரும்புவது அதை கொண்டு வருவது, அல்லாஹ் கடமையாக்கிய அத்தனை மார்க்க கடமைகளையும் ஒன்று ஒன்றாக வீணடிப்பது, மறுமையை விட உலகத்தை முன்னுரிமைப்படுத்துவது, மறுமையின் பக்கம் தோட்டம் இல்லாமல் இருப்பது, ஆகிரத்தை பற்றி பேசினால் உள்ளம் சுருங்கி விடுகிறது.

ஆகிரத்தைப் பற்றி அல்லாஹ்வுடைய தண்டனையைப் பற்றி சொர்க்கத்தைப் பற்றி நரகத்தைப் பற்றி பேசினால் அது பிடிப்பதில்லை, உலகத்தைப் பற்றி பேசினால் உலகத்திலே எப்படி நாம் பெரியாளாக ஆகுவது, எப்படி நாட்டை வளப்படுத்துவது, எப்படி செல்வங்களை செழிப்பாக்குவது, இப்படி எல்லாம் பேசினால் அவர்களுக்கு ரொம்ப விருப்பமாக இருக்கும். அல்லாஹுத்தஆலா சொல்வதை போன்று தான்,

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ‏

அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள்.(அல்குர்ஆன்75:20)

وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ‏

இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.அல்குர்ஆன்75:21)

நீங்கள் நினைப்பது போன்ற அல்ல, நீங்கள் எண்ணுவது போன்று அல்ல, உங்களுக்கு உலகம் தான் அதிகமாக, பிரியமாக இருக்கிறது. நீங்கள் அற்பகால, அவசரகால உலகத்தை நேசிக்கிறீர்கள் மறுமையை விட்டுவிடுகிறீர்கள் அல்லாஹுத்தஆலா சொல்கிறான் அல்லவா”

فَاَمَّا مَنْ طَغٰى‏

ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,(அல்குர்ஆன்79:37)

وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ‏

இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,அல்குர்ஆன்79:38)

فَاِنَّ الْجَحِيْمَ هِىَ الْمَاْوٰى‏

(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்.(அல்குர்ஆன்79:39)

யார் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறுகிறாரோ, யார் உலக வாழ்க்கையை விரும்புகிறாரோ நிச்சயமாக நரகம் தான் அவருக்கு தங்குமிடம். யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறுகிறாரோ

அன்பு சகோதரர்களே! பாதையிலே செல்லும்போது தடுக்கி விழுவது அல்லது, இடித்து காயப்படுவதோ அல்லது, முள்குத்துவதோ ஏன் ஒரு விபத்தே ஏற்பட்டு விடுவதோ இதை நாம் பெரிதாக பார்க்கிறோம், இதை நான் ஒரு பெரிய சஞ்சலமாக எடுத்துக் கொள்கிறோம், இதுவோ இவற்றால் நாம் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு வலிக்கும், வேதனைக்கும் நமக்கு நன்மை எழுதப்படுகிறது, பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

ஆனால், ஒவ்வொரு நேரத்திலும் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறுவது, அல்லாஹ் தடுத்த பாவங்களை செய்வது, எவ்வளவு பெரிய ஆபத்தான ஒன்று, அல்லாஹ் என்ன சொல்கிறார் யார் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறுவாரோ, எந்த வகையில் மீறினாலும் சரி, மன்னன் அவனுடைய அளவில் அவன் மீறினால், மக்கள் அவர்களுடைய அளவில் அவர்கள் மீறினால்,

ஒரு செல்வந்தன், ஒரு ஏழை, ஒரு கணவன், மனைவி, பிள்ளைகள் யார் அவரவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கட்டளைகளை மீறுகிறாரோ யாராக இருந்தாலும் சரி அல்லாஹ் சொல்கிறான்” அவர்களுக்கு உலகம் பிடித்ததாக ஆகிவிட்டால் நரகம் தான் தங்குமிடம். எவ்வளவு பெரிய எச்சரிக்கை பாருங்கள்”

அன்பு சகோதரர்களே! இதனால் ஏற்பட்டது தான் உலக ஆசை, மௌத்தை வெறுப்பது, இந்த அற்ப ஆபாசங்களை விரும்புவது, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை வீணாக்குவது, தொழுகையை வீணாக்குவது இன்னும், அல்லாஹுத்தஆலா நமக்கு கட்டளையிட்ட நம்முடைய சமுதாயத்தை பலப்படுத்தி வலிமைப்படுத்தி வைத்திருப்பதனுடைய அந்த கட்டளைகளும் இதன் காரணமாகத்தான் வீணாக்கப்பட்டது, இதனால் தான் நமக்குள் பிரிவினை, இதனால்தான் நமக்குள் வேற்றுமை, அல்லாஹுத்தஆலா நமக்கு இந்த துனியாவிலும் சரி, ஆகிரத்திலும் சரி கொடுத்திருக்க கூடிய அந்த நற்பாக்கியத்தினுடைய அந்த வாசல் எதுவென்றால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தெரிந்து கொள்வது,

ما يريد الله به خيرا يفقهه في الدين

அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :71

தனி மனிதனுக்கும் சமுதாய மக்களுக்கும் சரி, அரசருக்கும் சரி, அரசாங்கத்திற்கும் சரி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்வது தன் மீது என்ன கடமை என்பதை அறிந்து கொள்வது இது மிக முக்கியமான கடமை, இதை செய்தால் தான் அல்லாஹுத்தஆலா நமக்கு நன்மையின் நாடியிருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அன்பு சகோதரர்களே! இந்த இல்ம் மார்க்க இல்ம் நம்மிடத்திலே வரும் போது தான் அல்லாஹ் நம் மீது என்ன கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்கள், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும் இன்னும், அல்லாஹுத்தஆலா நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய இந்த செல்வம் கவனியுங்கள்! அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய இந்த செல்வம் உயர்ந்த கட்டிடங்களை கட்டி பெருமை அடிப்பதற்காக அல்ல,

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அல்லாஹ் தடுத்த ஹராமை செய்து பெருமை அடிப்பதற்காக அல்ல, அல்லாஹ் கொடுத்த செல்வம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வுடைய அடியார்களை பாதுகாப்பதற்காக, இந்த தீனை பாதுகாப்பதற்காக என்று அந்த செல்வங்களை தீனின் பக்கம் திருப்புவார்கள்.

எந்த செல்வங்கள் என்று ஹராமில் செலவழிக்கப்படுகிறது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்து இருந்தார்களேயானால் அல்லாஹ்வை அறிந்திருந்தார்களேயானால் அந்த செல்வங்களை அல்லாஹ்வுடைய தீனின் பக்கம், அல்லாஹ்வுடைய தீனை உயர்த்துவதின் பக்கம் செலவழித்து இருப்பார்கள்.

அன்பு சகோதரர்களே! இத்தகைய ஒரு நிலை முஸ்லிம்களிடத்தில் இருந்திருந்தால் என்று எதிரிகள் துணிந்து இருப்பார்களா, எத்தகைய பயம் அவர்களுக்கு வந்திருக்கும் நம் மீது இத்தகைய அநியாயங்களை செய்வார்களா, நம்முடைய உரிமைகளை பறிப்பார்களா, அவர்களுக்குரிய அந்த எல்லைக்குள் அவர்கள் நின்று இருப்பார்கள் அல்லவா ஆனால், இன்று என்ன நடக்கிறது.

எனக்கு ஞாபகம் இருக்கிறது ஏறக்குறைய 25 ஆண்டுகள் இருக்கும் பொதுவாக நாம் சில பொது விஷயங்களை பேசுவதில்லை இருந்தாலும் இந்த இடத்தில் நினைவு வந்ததற்காக சொல்கிறேன் ஒரு தமிழ் பத்திரிகையிலே ஒரு கட்டுரை யார் எழுதுகிறார் அந்த கட்டுரை முஸ்லிம் அல்ல முஸ்லிமல்லாதவர் ஒருவர் எழுதுகிறார் பிரபலமான தமிழ் பத்திரிக்கையிலே என்ன எழுதுகிறார் சுருக்கம் என்ன அமெரிக்க அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வருகிறது,

அந்த சட்டம் என்னவென்றால் அமெரிக்காவினுடைய கடல்களில் பிடிக்கப்படக் கூடிய நண்டுகள் அமெரிக்காவில் பிடிக்கப்படக்கூடிய நண்டுகள் உயிரோடு பேக்கிங் செய்யப்பட்டு பல நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் ஆகின்றன, அப்படி உயிரோடு எக்ஸ்போர்ட் பண்ணும் பொழுது ஒரு பெட்டியில் எத்தனை நண்டுகள் வைக்க வேண்டுமோ அதைவிட அதிகமான நண்டுகள் வைக்கப்பட்டு, எக்ஸ்போர்ட்  ஆகிறது இப்படி நண்டுகளை சித்திரவதை செய்யக்கூடாது,

இப்படி நண்டுகளை அடைக்கக் கூடாது, இப்படிப்பட்ட சிரமங்களை நண்டுகளுக்கு கொடுக்கக் கூடாது என்று ஒரு சட்டத்தை போட்டு ஒரு கூடையில் இந்த இந்த இடைவெளியில் பாக்ஸ் செய்யப்பட்டு இத்தனை நண்டுகள் தான் வைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா ஒரு சட்டத்தை போடுகிறது,

இதை விரிவாக விழாவாரியாக எழுதிவிட்டு அந்த முஸ்லிம் அல்லாதவர்ஒரு கீழே எழுதுகிறார் அமெரிக்காவை நீயும், உன்னுடைய நீ குட்டி போட்ட இந்த இஸ்ரேலும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொல்கிறார்களே, அவர்களின் பெண்களை சூறையாடுகிறார்களே, அவர்களின் நிலங்களை பறிக்கிறார்களே, அவர்களின் குழந்தைகளை சிறையில் அடைக்கிறார்களே,

அவர்களுக்கு உரிமை இல்லையா அவர்களுக்கு மனித உரிமைகள் அவர்களுடைய உரிமைகளை பற்றி நீங்கள் பேசமாட்டீர்களா இன்று வாழ்ந்து நாளை உணவாகி சாகப்படக்கூடிய நண்டு உடைய உரிமைகளை பற்றி பேசுகிறீர்களே நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பாலஸ்தீனத்திலே கொல்லப்படுகிறார்களே, நசுக்கப்படுகிறார்களே, அவர்களுக்கு உயிர் இல்லையா, உரிமை இல்லையா,

கேட்பது யார்” ஒரு முஸ்லீம் அல்லாதவர் யோசித்துப் பாருங்கள் சகோதரர்களே! எங்கே நம்முடைய உணர்வுகள் செத்துவிட்டனவோ இன்ஷா அல்லாஹ்! அடுத்த ஜும்மாவிலே மற்ற விஷயங்களை தொடர்வோம் அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய நிலங்களை பாதுகாப்பானாக! நம்முடைய சகோதரர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக! அவர்கள் இழந்த இழப்புகளை விட சிறந்ததை அல்லாஹுத்தஆலா இம்மையிலும், மறுமையிலும், அவர்களுக்கு தருவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்பு 1)

73 - (3005) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ، وَكَانَ لَهُ سَاحِرٌ، فَلَمَّا كَبِرَ، قَالَ لِلْمَلِكِ: إِنِّي قَدْ كَبِرْتُ، فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ السِّحْرَ، فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا يُعَلِّمُهُ، فَكَانَ فِي طَرِيقِهِ، إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ، فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ، فَإِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ، فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ، فَقَالَ: إِذَا خَشِيتَ السَّاحِرَ، فَقُلْ: حَبَسَنِي أَهْلِي، وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ: حَبَسَنِي السَّاحِرُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتِ النَّاسَ، فَقَالَ: الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمِ الرَّاهِبُ أَفْضَلُ؟ فَأَخَذَ حَجَرًا، فَقَالَ: اللهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ، حَتَّى يَمْضِيَ النَّاسُ، فَرَمَاهَا فَقَتَلَهَا، وَمَضَى النَّاسُ، فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ الرَّاهِبُ: أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي، قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى، وَإِنَّكَ سَتُبْتَلَى، فَإِنِ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ، وَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ، وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الْأَدْوَاءِ، فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ، فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ، فَقَالَ: مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ، إِنْ أَنْتَ شَفَيْتَنِي، فَقَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللهُ، فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللهِ دَعَوْتُ اللهَ فَشَفَاكَ، فَآمَنَ بِاللهِ فَشَفَاهُ اللهُ، فَأَتَى الْمَلِكَ فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ، فَقَالَ لَهُ الْمَلِكُ: مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ؟ قَالَ: رَبِّي، قَالَ: وَلَكَ رَبٌّ غَيْرِي؟ قَالَ: رَبِّي وَرَبُّكَ اللهُ، فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ، فَجِيءَ بِالْغُلَامِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ، وَتَفْعَلُ وَتَفْعَلُ، فَقَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا، إِنَّمَا يَشْفِي اللهُ، فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ [ص:2300] حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ، فَجِيءَ بِالرَّاهِبِ، فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ، فَأَبَى، فَدَعَا بِالْمِئْشَارِ، فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ، فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ، ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ، فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ، فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ، ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ، فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا، فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ، فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ، فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ، وَإِلَّا فَاطْرَحُوهُ، فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ، فَقَالَ: اللهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ، فَرَجَفَ بِهِمِ الْجَبَلُ فَسَقَطُوا، وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟ قَالَ: كَفَانِيهِمُ اللهُ، فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ، فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ، فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ، فَذَهَبُوا بِهِ، فَقَالَ: اللهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ، فَانْكَفَأَتْ بِهِمِ السَّفِينَةُ فَغَرِقُوا، وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟ قَالَ: كَفَانِيهِمُ اللهُ، فَقَالَ لِلْمَلِكِ: إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ، قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ، وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ، ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي، ثُمَّ ضَعِ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ، ثُمَّ قُلْ: بِاسْمِ اللهِ رَبِّ الْغُلَامِ، ثُمَّ ارْمِنِي، فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي، فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ، وَصَلَبَهُ عَلَى جِذْعٍ، ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبْدِ الْقَوْسِ، ثُمَّ قَالَ: بِاسْمِ اللهِ، رَبِّ الْغُلَامِ، ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ، فَوَضَعَ يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ، فَقَالَ النَّاسُ: آمَنَّا بِرَبِّ الْغُلَامِ، آمَنَّا بِرَبِّ الْغُلَامِ، آمَنَّا بِرَبِّ الْغُلَامِ، فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ: أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ؟ قَدْ وَاللهِ نَزَلَ بِكَ حَذَرُكَ، قَدْ آمَنَ النَّاسُ، فَأَمَرَ بِالْأُخْدُودِ فِي أَفْوَاهِ السِّكَكِ، فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ، وَقَالَ: مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا، أَوْ قِيلَ لَهُ: اقْتَحِمْ، فَفَعَلُوا حَتَّى جَاءَتِ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا، فَقَالَ لَهَا الْغُلَامُ: يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ"

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/