HOME      Khutba      நன்மைகள் பக்கம் விரைவோம்! | Tamil Bayan - 849   
 

நன்மைகள் பக்கம் விரைவோம்! | Tamil Bayan - 849

           

நன்மைகள் பக்கம் விரைவோம்! | Tamil Bayan - 849


நன்மைகள் பக்கம் விரைவோம்!
 
தலைப்பு : நன்மைகள் பக்கம் விரைவோம்!
 
வரிசை : 849
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 22 -12 -2023 | 09-06-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக! அல்லாஹ்வுடைய தூதர் மீது, அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே இம்மை மறுமையில் வெற்றியை வேண்டியவனாக! அல்லாஹ்வின் அன்பையும், பொருத்தத்தையும் வேண்டியவனாக! நல்ல அமல்களை அதிகம் அதிகம் செய்வதற்குரிய தவ்ஃபீக்கை, வாய்ப்பை வேண்டியவனாக! இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய சகோதரருக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக! அவர்களின் கொல்லப்பட்டவர்களை அல்லாஹுத்தஆலா ஷஹீதுகளாக ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹுத்தஆலா அந்த மக்களுக்கு அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து அருள்வானாக!
 
அல்லாஹு சுபஹானஹூதஆலா புனித பூமியை முஸ்லிம்களிடத்திலே மீட்டு தருவானாக! முஸ்லிம்களுக்கு அநியாயங்களும், கொடுமைகளும் செய்யக்கூடிய அநியாயக்கார யூத யூனிஸ்டுகளுக்கு தகுந்த படிப்பினைகளை பாடத்தை அல்லாஹ் தருவானாக! முந்திய ஆத் சமூத் கூட்டத்தார்களுக்கு இறக்கிய தண்டனையை அவர்கள் மீது இறக்குவானாக ஆமீன்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா இந்த உலக வாழ்க்கையை நமக்கு ஒரு வாய்ப்பாக கொடுத்திருக்கிறான், இந்த உலக வாழ்க்கை மறுமைக்கான அமல்களை செய்வதற்குரிய ஒரு வாய்ப்பு.
 
இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டால் அடுத்து நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை மறுமையில் நாம் வெற்றி அடைவதற்கு, மறுமையில் சொர்க்க வாழ்க்கையை தேடுவதற்கு, சொர்க்கத்துடைய இன்பங்களை கட்டி எழுப்புவதற்கு, இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை, வேறு ஒரு சந்தர்ப்பம் இல்லை. 
 
சகோதரர்களே! அல்லாஹு சுபஹானஹூதஆலா குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய, அத்தனை வசனங்களுடைய அந்த கருத்துக்களை சிந்தனைகளை நாம் எடுத்துப் பார்த்தால் அல்லாஹுத்தஆலா இதைத்தான் நமக்கு நினைவூட்டி கொண்டே இருக்கிறான். 
 
மறுமைக்கான அமல்களை செய்து கொள்ளுங்கள், சொர்க்கத்திற்கான அமல்களைத் தேடிக் கொள்ளுங்கள், இந்த உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம், இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் ஏமார்ந்து விடாதீர்கள் இதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லாமே ஒரு தற்காலிகமான ஒரு இன்பங்கள் தான், அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
 
உண்மையான இன்பம் இந்த உலகத்தில் இல்லை இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமானது இல்லை குர்ஆனுடைய நூற்றுக்கணக்கான வசனங்கள் இந்த அடிப்படையை வைத்து நமக்கு பேசுகின்றன அல்லாஹ்வுடைய அடியார்களே! இன்று மக்கள் இந்த உலக வாழ்க்கையை தேடுவதில், இந்த உலக இன்பத்தை செல்வத்தை தேடுவதிலே போட்டி போடுகிறார்கள், ஒருவரை விட ஒருவர் வேகமாக முந்தி செல்ல வேண்டும் என்று ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களாகிய முஃமின்களாகிய நமக்கு சொல்கிறான்:
 
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏
 
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
முஃமின்களே! அல்லாஹ்வின் அடியார்களே! நீங்கள் ஒருவரை விட ஒருவர் முந்தி வேகமாக செல்லுங்கள்” سَارِعُوْۤا வாகனங்களை ஓட்டுவதிலே, உலக  செல்வங்களிலே நான் ஒருவரை விட முந்தி செல்ல வேண்டும் என்ற அந்த வேகத்தில் அல்ல அல்லாஹுத்தஆலா சொல்கின்றான் எந்த வேகத்தில்
 
اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ
 
உங்களுடைய ரப்புடைய பாவமன்னிப்பை பெறுவதற்காக அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெறுவதிலே நீங்கள் ஒருவரை விட ஒருவர் வேகமாக செல்லுங்கள். அல்லாஹுத்தஆலா அவனுடைய மன்னிப்பை எதில் வைத்திருக்கிறான்? 
 
அல்லாஹ்விற்கு பொருத்தமான அமல்களை செய்வதில் அல்லாஹுத்தஆலா அவனுடைய மன்னிப்பை வைத்திருக்கிறான் தொழுகையில் அல்லாஹ் மன்னிப்பை வைத்திருக்கிறான், நோன்பிலே அல்லாஹுத்தஆலா மன்னிப்பை வைத்திருக்கிறான், ஒருவருக்கு உதவுவதில் அல்லாஹுத்தஆலா மன்னிப்பு வைத்திருக்கிறான், 
 
சதக்கா செய்வதிலே அல்லாஹுத்தஆலா மன்னிப்பு வைத்திருக்கிறான்,  ஒரு கண் தெரியாதவருக்கு வழிகாட்டுவதிலே, அவரை அழைத்து செல்வதில் அல்லாஹுத்தஆலா நன்மையை வைத்திருக்கிறான், பசித்தவருக்கு உணவளிப்பதிலே அல்லாஹுத்தஆலா நன்மை வைத்திருக்கிறான், கைதிகளை விடுதலை செய்வதிலே அல்லா நன்மைகளை வைத்திருக்கிறான். 
 
கண்ணியத்திற்குரிய அவர்களே! அல்லாஹுத்தஆலா எதை விரும்புகிறானோ அந்த ஒவ்வொரு செயலையும் தேடி தேடி செய்வது ஆர்வத்தோடு பிரியத்தோடு அல்லாஹ்வின் மன்னிப்பை ஆசை வைத்தவர்களாக செய்வது ஒரு அடியானை அல்லாஹ்விடத்தில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாக ஆக்கிவிடும்.
 
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: بَيْنا رَجُلٌ يَمْشِي، فاشْتَدَّ عليه العَطَشُ، فَنَزَلَ بئْرًا، فَشَرِبَ مِنْها، ثُمَّ خَرَجَ فإذا هو بكَلْبٍ يَلْهَثُ يَأْكُلُ الثَّرَى مِنَ العَطَشِ، فقالَ: لقَدْ بَلَغَ هذا مِثْلُ الذي بَلَغَ بي، فَمَلَأَ خُفَّهُ، ثُمَّ أمْسَكَهُ بفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الكَلْبَ، فَشَكَرَ اللَّهُ له، فَغَفَرَ له، قالوا: يا رَسولَ اللَّهِ، وإنَّ لنا في البَهائِمِ أجْرًا؟ قالَ: في كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أجْرٌ.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இருந்தார் அவர் கெட்ட நடத்தை  உள்ளவராக இருந்தார் அவர் பாதையிலே செல்லும்போது தாகம் ஏற்பட்டது, கிணற்றில் இறங்கி தண்ணீர் குடித்தார், மேலே வந்து பார்த்தால் ஒரு நாய் அதுவும், 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2363
 
தாகத்தால் அந்த கிணற்றை சுற்றி இருந்த ஈரமான மண்ணை நக்கி கொண்டு இருந்தது, இதற்கும் தாகம் ஏற்பட்டு இருக்கிறது போல் என்று உணர்ந்தவராக, மீண்டும் கிணற்றிற்குள் சென்று தான் அணிந்திருந்த அந்த தோழால் செய்யப்பட்ட அந்த காலுறையை கழட்டி, அதிலே தண்ணீர் எடுத்து வந்து, அந்த நாய்க்கு தண்ணீர் கொடுத்து விட்டு சென்றார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் அல்லாஹுத்தஆலா அவரை மன்னித்து விட்டான் அவர் அவரை அல்லாஹுத்தஆலா திரித்தி விட்டான் பிறகு, அல்லாஹ்வுடைய நேசராக அவர் ஆகிவிட்டார்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2363
 
கருணை இருக்கின்றது சகோதரர்களே! இதை அல்லாஹ்விடத்தில் ஒரு அடியானுடைய உள்ளத்திலே  ஹிதாயத் இறங்குவதற்கு கருணை பிறர் மீது நாம் கருணை படும் போது பிறர் மீது நாம் இரக்கம் படும்போது பிறரை நாம் அல்லாஹ்விற்காக நேசிக்கும் போது உண்மையாக அல்லாஹுத்தஆலா அந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய கெட்ட எண்ணங்களை எடுத்து விடுகின்றான், 
 
அந்த உள்ளத்தில் இருக்கக்கூடிய வழிகேட்டை எடுத்து ஹிதாயத்திற்கான வாசலை நேர்வழிக்கான வெளிச்சத்தை அந்த உள்ளத்திலே அல்லாஹுத்தஆலா போடுகின்றான் அல்லாஹ்வுடைய மன்னிப்பின் பக்கம் விரையுங்கள் என்றால் என்ன ஒவ்வொரு அமல் எதை அல்லாஹுத்தஆலா பிரியப்படுகின்றானோ விரும்புகிறானோ அந்த அமலை செய்வது ஆகவே தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
لا تَحْقِرَنَّ مِنَ المَعروفِ شيئًا، ولو أنْ تَلْقَى أخاكَ بوَجْهٍ طَلْقٍ
 
நன்மையில் எதையும் லேசாக மதிப்பீட்டு விடாதீர்கள் எந்த நன்மையால் நீங்கள் மன்னிக்கப்பட்டு நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களில் ஒருவராக ஆகுவீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது.
 
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2626
 
நாம் எத்தனையோ பெரிய அமல்களை பெரிதாக நினைத்து செய்திருப்போம் கண்டிப்பாக ஒவ்வொரு அமலையும் பெரிதாக நினைத்துதான் செய்ய வேண்டும். ஆனால், அதிலே நாம் ஏதாவது குறை செய்து இருக்கலாம் அந்த பெரிய அமல்களை செய்யும்போது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
நமக்கு ஏதாவது முகஸ்துதி ஏற்பட்டு இருக்கலாம், நாம் புகழை விரும்பி இருக்கலாம், பிறரிடத்திலே அதை சொல்லி பெருமையைத் தேடி இருக்கலாம் அதனால், உண்மையில் அது பெரிய அமலாக இருந்தாலும் நமக்கு அது கூலியால் அல்லாஹ்விடத்தில் பெரிய அமலாக இல்லாமல் போய்விடும்.
 
ஒரு சிறிய அமலை நாம் செய்திருப்போம் இது ஒரு சிறிய அமல் தானே சொல்லிக் காட்டப்படுவதற்கு இதில் என்ன இருக்கிறது இருந்தாலும், அல்லாஹ் ஒருவன் தான் அந்த இடத்திலே பார்த்துக் கொண்டிருந்தான் மனிதர்கள் பார்க்கவில்லை அங்கே முழுமையாக இக்லாஸ் இருந்தது அந்த இக்லாஸான ஒரு சிறிய அமலின் பொருட்டால் அல்லாஹு சுபஹானுஹூவதஆலா இந்த அடியானை மன்னிக்க போதுமானவன்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகின்றான்:
 
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ
 
உங்களுடைய ரப்புடைய மன்னிப்பின் பக்கம் நீங்கள் விரையுங்கள் அடுத்து சொல்கின்றான் சொர்க்கத்தின் பக்கம் விரையுங்கள். கண்ணியத்திற்குரியவர்களே! நாம் இந்த உலகத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு அமலும், இது நம்முடைய சொர்க்கத்திற்கான விலை, இதன் மூலமாக நான் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறேன், அல்லாஹ் என்னை இதன் மூலமாக சொர்க்கத்தில் நுழைப்பான்.
 
பாவம் என்பது நரகம், அல்லாஹ்விற்கு மாறு செய்வது என்பது நரகம், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிதல் என்பது சொர்க்கம் அதை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர் சஹாபாக்கள், தாபியீன்கள், சான்றோர்களில் நல்லவர்கள் அவர்களுடைய கண்ணோட்டம் எப்படி இருந்தது அந்த கண்ணோட்டத்தால் அவர்களுடைய அமல்களிலே ஏற்பட்ட மாற்றம் என்ன?
 
நாம் எப்படி பார்க்கிறோம் நாம் ஒரு பாவத்தை நம்முடைய ஆசையாக நம்முடைய விருப்பமாக அதில் என்ன இருக்கிறது அப்படி அலட்சியமாக கடந்து விடுகிறோம் பாவத்தை பார்ப்பதிலும் அலட்சியம், பாவத்தை செய்யும் போதும் பயம் இன்மை, பாவத்தை செய்ததற்கு பிறகும் பயம் இன்மை, அலட்சியம் கடந்து விடுகிறோம் பார்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ் மன்னிப்பான் என்ற அந்த நம்பிக்கையானது நம்மிடத்திலே தவறாக பதிந்து விட்டது.
 
நம்முடைய கண்ணியத்துக்குரிய அந்த சஹாபாக்கள், தாபியீன்கள், நல்லவர்கள் அவர்களுடைய அந்த பார்வை அவருடைய அந்த நம்பிக்கை அது எப்படி இருந்தது அவர்கள் பாவத்தை பார்த்து பயந்தார்கள், பாவத்தை நினைத்தால் பயந்தார்கள், பாவத்தை செய்து விட்டால் பயந்தார்கள், அழுதார்கள், மன்றாடினார்கள், அதற்காக  வருந்தி அழுது தவுபா செய்து அல்லாஹ்விடத்தில் மீண்டார்கள்.
 
அவர்கள் அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை வைத்தார்கள்” எந்த நம்பிக்கை சரியானது பாவம் செய்துவிட்டால் தவ்பா கேட்டுவிட்டு, திருந்தி விட்டு, இஸ்திஃபார் செய்துவிட்டு அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொள்வது அது சரியான நம்பிக்கை அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான் அவர்கள் யார்?
 
وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏
 
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)
 
அல்லாஹ் சொல்கிறான்” நல்லவர்கள் பாவமே செய்ய மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை, முத்தகீன் என்றால் அவர்கள் தவறே வாழ்க்கையில் செய்திருக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை,
 
اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌‏
 
நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள், - ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (அல்லது கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூர்வார்கள்; அப்போது, அவர்கள் (தங்களுக்குரிய அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (-அந்த தீய எண்ணத்தை விட்டு விலகி, இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.) (அல்குர்ஆன் 7 : 201)
 
நல்லவர்கள் யார்? அவர்கள் ஏதாவது மானகேடான செயலை செய்து விட்டால், பாவத்தை செய்து விட்டால், தவறான காரியத்திலே விழுந்து விட்டால் அவ்வளவுதான் அதற்குப் பிறகு, அல்லாஹ்வை நினைத்து பயந்து துடிதுடித்து விடுவார்கள், அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்பார்கள்.
 
அது பாவம் என்று தெரிந்ததற்கு பிறகு அல்லது, நாம் ஒரு பெரிய குற்றத்தை செய்தோம் என்று புரிந்ததற்கு பிறகு அதிலே அவர்கள் தொடர்ந்து இருக்க மாட்டார்கள். உடனே விலகி விடுவார்கள் வருந்துவார்கள். 
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் சொல்கிறான் இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பு இருக்கிறது என்று தக்வா உள்ளவர்கள் யார்? சைத்தான் அவர்களை கெட்ட எண்ணங்களை கொண்டு கெட்ட ஆசைகளை கொண்டு கெட்ட செயல்களை கொண்டு தீண்டிவிட்டால் அவர்களை தூண்டி விடுகிறான் சைத்தான் செய்து விடுகிறார்கள் தக்வா உள்ளவர்கள் தான்.
 
உடனே புரிந்து கொள்வார்கள் ஆஹா சைத்தானுடைய வலையிலே விழுந்து விட்டேனே என்று இந்த ஆசையிலே நான் மாற்றிக் கொண்டேனே பாவம் செய்து விட்டேனே என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் இதனுடைய கெட்ட முடிவு என்ன என்பதை அறிந்து கொள்வார்கள் உடனே தவ்பா செய்து வந்து விடுவார்கள் இதைதான் அல்லாஹுத்தஆலா சொல்லினான்:
 
قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّه هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
 
(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். (அல்குர்ஆன் 39 : 53)
 
வரம்பு மீறி அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ் அக்பர் அல்லாஹுத்தஆலா இங்கு யாரை சொல்கிறான் யார் பாவம் செய்த நிலையிலும், குற்றங்கள் செய்த நிலையிலும், அவர்கள் திருந்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அல்லாஹ்வின் பக்கம்  முன்னோக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, 
 
எஞ்சியுள்ள தங்களது வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, நாளை மறுமையில் குற்றவாளியாக அல்லாஹ்விடத்தில் நிற்கக்கூடாது என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொல்கின்றான்”
 
நீங்கள் நிராசை அடையாதீர்கள்! அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து நீங்கள் நிராசை அடையாதீர்கள் நீங்கள் திருந்தி விட்டால் மன்னிப்பு கேட்டு விட்டாள் அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான்.
 
அன்பு சகோதரர்களே! வஹ்ஷியை அல்லாஹ் மன்னித்து, ஹிந்தை அல்லாஹ் மன்னித்து, ரலியல்லாஹு அன்ஹும் என்ற தரஜாவிற்கு அல்லாஹ் கொண்டு வந்தானே! யார்? மூமின்களை கொண்டவர்களை நபியின் உறவுகளை அவர்கள் மூமின்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை அல்லாஹ் கொன்றவர்களை அவர்கள் திருந்தும் போது
 
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌  وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
 
எனினும், எவர்கள் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவர்கள் செய்யும்படி அவன் அவர்களை மாற்றி விடுகிறான்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 25 : 70)
 
யார் தவ்பா செய்கிறாரோ, யார் ஈமானை ஏற்றுக் கொள்கிறார்களோ, யார் அமலே ஸாலிஹ் செய்கிறார்களோ அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுவான். முன்பு பாவம் செய்தவர்கள் இப்போது நன்மையிலே விரைய ஆரம்பிப்பார்கள் அல்லாஹ் அவர்களை மன்னிப்பவனாக, அவர்கள் மீது கருணை காட்டக் கூடியவனாக, அவர்களுடைய பிழை பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.
 
அன்பு சகோதரர்களே! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஸலஃபுகள் எப்படி புரிந்து இருந்தார்கள் ஒரு அமலை செய்யும்போது அதை சொர்க்கம் என்று நினைத்து இந்த அமலால் அல்லாஹ் சொர்க்கத்தை கொடுப்பான் என்று நினைத்து செய்தார்கள் எனவே தொழுகையில் ஆர்வத்தோடு வந்தார்கள், ஆர்வத்தோடு நின்றார்கள், அந்தத் தொழுகையில் ராகத்தை உணர்ந்தார்கள், இன்பத்தை உணர்ந்தார்கள்.
 
حُبِّبَ إلي منَ الدُّنيا ، النساءُ ، والطِّيبُ ، وجُعِلَ قرةُ عيني في الصلاةِ
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துன்யாவில் தனக்கு விருப்பமான வஸ்துக்களை சொன்னார்கள் எனக்கு துன்யாவிலே இது பிடிக்கும் இது பிடிக்கும் என்று சொன்னார்கள் பிறகு, என்ன சொன்னார்கள் ஆனால், என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது, எனக்கு மனைவிகள் பிடிக்கும் என்று சொன்னார்கள், உங்களது துன்யாவிலேயே எனக்கு மிக விருப்பமானது என்னுடைய மனைவிமார்கள் என்று சொன்னார்கள், 
 
மனைவியிடம் இருக்கக்கூடிய இன்பத்தை விட தன்னுடைய ஹலாலான மனைவியிடத்தில் அனுபவிக்க கூடிய சுகத்தை விட அந்த உயர் மனிதனுக்கு இந்த உலகத்திலே இன்பத்தினுடைய உச்சகட்டமாகிய அந்த நிலையில் ஏற்படக்கூடிய இன்பத்தை விட அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் காட்டினார்கள் எனக்கு தொழுகையில் தான் கண் குளிர்ச்சி இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 3949
 
அதையும் சொன்னார்கள்: எனக்கு மிகப் பிடித்த மனிதன் மனைவிமார்கள் என்று அதே நேரத்திலேயே தொழுகையை விட அல்ல என்னுடைய கண் குளிர்ச்சி தொழுகையிலே இருக்கிறது, 
 
يا بلالُ أقمِ الصلاةَ، أرِحْنا بها
 
என்னுடைய உள்ளத்தினுடைய ராகத் தொழுகையிலே இருக்கிறது பிலால் தொழுகையின் மூலமாக நமக்கு ராகத்தை கொடுங்கள் என்று சொன்னார்கள்" 
 
அறிவிப்பாளர் : சாலிம் இப்னு அபி ஜெஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூது, எண் : 4985
 
அன்பு சகோதரர்களே! ஏன் ஒவ்வொரு இபாதத்தையும் அவர்கள் சொர்க்கமாக பார்த்தார்கள், சொர்க்கம் பிடிக்குமா பிடிக்காதா? சொர்க்கத்திற்கு போறது பிடிக்குமா? பிடிக்காதா சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பிரியமானது, இன்று நாம் இபாதத்தை சொர்க்கமாக நினைக்காத காரணத்தால், தொழுகையை சொர்க்கமாக நினைக்காத காரணத்தால், நோன்பை, ஜகாத்தை, ஹஜ்ஜை தான தர்மத்தை, பிறருக்கு உதவி செய்வதை, இன்ன பிற அமல்களை சொர்க்கமாக பார்க்காத காரணத்தால், வெறும் ஒரு செயலாக பார்க்கின்ற காரணத்தால் எவ்வளவு சுருக்கமாக செய்ய முடியுமோ, எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ பட்டும் படாமலும் செய்துவிட்டு வந்துவிடுகிறோம்.
 
நாம் தொழக்கூடிய ஒவ்வொரு தொழுகையையும் அதை சொர்க்கமாக நினைத்து இருந்தால் நாம் அதில் இருந்து விரைவாக வெளியேற விரும்பி இருக்க மாட்டோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ்களை பார்க்கிறோம், சஹாபாக்கள் உடைய அமல்களை பார்க்கிறோம், கால் வீங்க தொழுதார்கள், இரவெல்லாம் தொழுதார்கள், நூற்றுக்கணக்கான வசனங்களை ஓதினார்கள், அவர்களுக்கு அது சாத்தியமானதே! கேட்கப்படக்கூடிய அத்தனை செல்வங்களையும் அல்லாஹ்வுடைய பாதையிலே கொட்டிக் கொடுத்தார்கள், தங்களுடைய உயிரை அல்லாஹ்வுடைய பாதையிலே தியாகம் செய்தார்கள், ஏன் அதிலே சொர்க்கத்தை பார்த்தார்கள், அதிலே அல்லாஹ்வுடைய பிரியத்தை பார்த்தார்கள் எனவே, அது அவர்களுக்கு இலகுவானது.
 
நாம் பாவத்தில் நரகத்தையும் பார்ப்பதில்லை நல்ல அமல்களில் சொர்க்கத்தையும் பார்ப்பதில்லை எனவே நாம் இந்த நிலையில் இருக்கிறோம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே நடந்த இரண்டு சம்பவங்களை பார்ப்போம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தபூக் போருக்காக வேண்டி மிகச் சிரமமான போர் அந்த போர் வறுமை, பட்டினி, பசி, பஞ்சம், நெருக்கடி தொடர்ந்து பல போர்களால் நலிவுற்று, அவர்கள் இக்கட்டான நிலையிலே இருந்தார்கள்.
 
அந்த நேரத்திலே செய்தி வருகிறது ரோமர்கள் மதினாவின் மீது படையெடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்றைய காலத்தில் முஃமீன்கள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய முனாஃபிக்குகள் போல் பேசவில்லை, நாமே இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம், சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம் வந்தா பார்த்துக் கொள்ளலாம் அல்லது, துவா செஞ்சு சமாளிக்கலாம் அவர்கள் மதினாவை நோக்கி வருவதற்குள் நாம் அவரை தேடி செல்வோம் என்பதாக தங்களுடைய யார் தயாராக இருக்கிறார்கள் என்று அழைத்துக் கொண்டு தயாரானவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் ரோமை நோக்கி புறப்பட்டார்கள்.
 
ரோம் யார் முற்றிலும் பல நூறு ஆண்டுகளாக ராணுவங்களை  கட்டமைத்து மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்தவர்கள் இங்கே மதினாவும் 10 ஆண்டுகளிலும் பலவீனமான நிலை வறுமை பட்டினி இங்கே ஆயுதங்கள் இல்லை இங்கே படையிலே எண்ணிக்கை இல்லை இருந்தாலும் ஈமான் இருந்தது யக்கீன் துணிவு இருந்தது, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தது, அல்லாஹ்வுடைய பாதையிலே கொல்லப்பட்டால் ஷஹாதத் அல்லாஹ்வுடைய மார்க்கம் பாதுகாக்கப்பட்டால் அது நமக்கும் நம்முடைய தலைமுறைக்கும் உண்டான வெற்றி என்பதை நம்பிக்கை கொண்டு இருந்தார்கள், புறப்பட்டார்கள்.
 
அப்படி புறப்படும் போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களிடத்திலே தர்மம் கேட்கிறார்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே தர்மம் செய்யுங்கள் அழைத்துச் செல்ல வேண்டும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களை இதுல ஏழைகள் இருக்கிறார்கள், வறுமையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், வாகனங்கள் இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.
 
அந்த காலத்திலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே போரிலே செல்லக்கூடிய முஜாஹித்களுக்கு கொடுப்பதற்கு சம்பளம் இல்லை, கஜானா இல்லை அவரவர்கள் தான் எடுத்துக் கொண்டு வர வேண்டும், இன்றைய காலத்திலே ராணுவம் என்றால் அரசாங்கம் செலவு செய்யும்.
 
- أَمَرَنَا رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ بالصدقةِ ، فوافقَ ذلك مالٌ عندي ، فقلتُ: اليومَ أسبقُ أبا بكرٍ إن سبقتهُ يومًا ، فجئتُ بنصفِ مالي ، فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ: ما أبقيتَ لأهلِكَ ؟ قلتُ : مثلُهُ ، وأَتَى أبوبكرٍ بكلِّ ما عندَهُ ، فقال : ما أبقيتَ لأهلِكَ ؟ قال : اللهُ ورسولُه ، فقلتُ : لا أُسابِقُكَ إلى شيٍء أبدًا
 
ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலே அப்படி இல்லை அல்லாஹ்வின் பாதையிலே செல்லக்கூடிய ஒவ்வொருவரும் தன்னுடைய செல்வத்தை தன்னுடைய உயிரை அவர் எடுத்துக் கொண்டு வர வேண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள் தங்களது தோழர்கள் இடத்திலே அப்போது உமருல் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அதிகமான செல்வத்தை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்,
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் உமரே! உங்களது குடும்பத்திற்கு என்ன செய்தீர்கள் என்று உமர் சொன்னார்கள் யா ரசூலுல்லாஹ் இதேபோல அளவு என் குடும்பத்திற்கு வைத்திருக்கிறேன் சொத்திலே பாதியைக் கொண்டு வந்து விட்டார்கள். பிறகு, அபூபக்கரை பார்த்து கேட்டார்கள்,
 
அபூபக்கரே! நீங்கள் என்ன கொண்டு வந்தீர்கள் என்ன விட்டு வந்தீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதரே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் எனது குடும்பத்திற்கு அல்லாஹ்வையும் ரசூலையும் விட்டுவிட்டு நான் எனது செல்வத்தை எல்லாம் கொண்டு வந்து விட்டேன் என்று உமர் சொன்னார் அபூபக்கரே உங்களை ஒருபோதும் நான் முந்த முடியாது.
 
 அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூது, எண் : 1678
 
شَهدتُ النَّبيَّ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ وَهوَ يَحثُّ على جيشِ العُسرةِ فقامَ عثمانُ بنُ عفَّانَ فقالَ عليَّ مائةُ بعيرٍ بأحلاسِها وأقتابِها في سبيلِ اللَّهِ ثمَّ حَضَّ على الجَيشِ فقامَ عثمانُ فقالَ يا رسولَ اللَّهِ عليَّ مِائتا بعيرٍ بأحلاسِهَا وأقتابِها في سبيلِ اللَّهِ ثمَّ حضَّ على الجيشِ فقامَ عثمانُ فقالَ يا رسولَ اللَّهِ عليَّ ثلاثمائةِ بعيرٍ بأحلاسِها وأقتابِها في سبيلِ اللَّهِ فأنا رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ ينزلُ عنِ المنبرِ وَهوَ يقولُ ما على عثمانَ ما عمِلَ بعدَ هذِهِ ما على عثمانَ ما عملَ بعدَ هذِه
 
இன்னொரு பக்கம் பாருங்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆர்வமூட்டுகிறார்கள் உஸ்மான் எழுந்திருக்கிறார் அல்லாஹ்வுடைய தூதரே நூறு ஒட்டகங்களை நான் தருகிறேன் அல்லாஹ்வுடைய பாதையிலே நூறு ஒட்டகங்கள் மீண்டும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த படைக்கு செலவழிப்பதற்கு யார் தயார் என்று அவர்கள் ஆர்வம் ஊட்டுகிறார்கள் உஸ்மான் அவர்கள் எழுந்திருக்கிறார்கள் அல்லாஹ்வுடைய தூதரே! 200 ஒட்டகங்களை தருகிறேன்,
 
போர் தடவாலங்களோடு போருக்கான சாதனங்களோடு 200 ஒட்டகங்கள் முந்தியுள்ள நூறு அல்லாமல் முந்தி 100 தனி அடுத்து 200 பிறகு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதையும் ஒப்புக்கொண்டு பிறகு மீண்டும் கேட்கிறார்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே இந்த போருக்கு செலவளிப்பது யார் என்று உஸ்மான் மீண்டும் எழுந்திருக்கிறார் சொல்கிறார் யா ரசூலுல்லாஹ்! 300 ஒட்டகங்களை தருகிறேன், போருக்கான அனைத்து சாதனங்களோடும்.
 
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு கப்பாப் இப்னு அரத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3700, (இந்த அறிவிப்பு பலவீனமானது )
 
அன்பு சகோதரர்களே! செல்வந்தராக இருந்தால் இப்படிப்பட்ட செல்வந்தராக இருக்க வேண்டும் அல்லாஹுத்தஆலா இத்தகைய செல்வந்தர்களை விரும்புகிறான், உண்மையான மூமினான செல்வந்தர் யார் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிப்பதற்காக சம்பாதிக்கிறார் அல்லவா, ஏழைகளுக்கு கொடுப்பதற்காக தன்னுடைய செல்வத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார் அல்லவா அவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.
 
சஹாபாக்கள் உடைய செல்வந்தர்களுக்கும் நம்முடைய செல்வந்தர்களுக்கும் இடையிலே உள்ள வித்தியாசம் இதுதான் நம்மிலே ஒருவருக்கு செல்வம் வந்துவிட்டால் தன்னை உயர்த்துவதில் இருக்கக்கூடிய கவலை, சிந்தனை, ஆசை தன்னுடைய மார்க்கத்தையோ, தன்னுடைய சமூகத்தையோ உயர்த்துவதில் அவருக்கு இருப்பதில்லை அதுதான் இங்கே பிரச்சனை செல்வந்தர்களை அல்லாஹ் விரும்புகிறான், நேசிக்கிறான், எந்த செல்வந்தர்கள் தன்னுடைய செல்வத்தை ஹக்கிலே அல்லாஹ்வுடைய பாதையிலே அந்த செல்வம் அழிய வேண்டும் என்று சாட்டி விடுகின்றார்களோ, 
 
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: உலகத்திலேயே நீங்கள் பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்றால் இரண்டு பேர் மேல தான் பொறாமை படலாம் ரெண்டு பேர் மேல தான் நீங்கள் பொறாமை படலாம் ஒருவர் யார் அல்லாஹ் அவருக்கு இல்மை கொடுத்தான் ஞானத்தை கொடுத்தான் கற்றார் செயல்பட்டார் மக்களுக்கு அதை கற்றுக் கொடுக்கின்றார் அதன் மூலமாக மக்களுக்கு மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்ப்பளிக்கின்றார் அவரைப் பார்த்து பொறாமைப் படுங்கள்.
 
இன்னொருவர் யார் செல்வந்தர் ஆனால், அந்த செல்வத்தை சத்தியத்திலே அழிய வேண்டும் என்று சாட்டி விட்டாரே அவரைப் பார்த்து பொறாமைப் படுங்கள் என்று உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அத்தகைய செல்வந்தர் அது மட்டுமா,
 
جاء عثمانُ إلى النبيِّ صلَّى اللهُ عليهِ وسلَّم بألفِ دِينارٍ قال الحَسَنُ بنُ واقِعٍ وفي موضِعٍ آخَرَ من كتابي في كُمِّهِ حين جهز جيشَ العُسْرَةِ فنَثَرها في حِجْرِهِ قال عبدُ الرحمنِ فرأيتُ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّم يُقَلِّبُها في حِجْرِهِ ويقولُ ما ضَرَّ عثمانَ ما عَمِلَ بعدَ اليومِ مرتين
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவா செய்தார்கள் யா அல்லாஹ்! உஸ்மானை நீ பொரிந்தி கொள் நான் உஸ்மானை பொரிந்தி கொண்டேன் பிறகு, உஸ்மான் அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள் ஆயிரம் தங்க காசுகளை எடுத்துக் கொண்டு வந்து ரசூல்லாவுடைய மடியிலே வைக்கிறார்கள் யா ரசூலுல்லாஹ்! இதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் இன்றைய தினத்திற்கு பிறகு, உஸ்மான் எதை செய்தாலும் சரி அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, அவருடைய முழுமையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அவ்வளவு பெரிய நற்செய்தியை சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் இப்னு சமுரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3701
 
கண்ணியத்திற்குரியவர்களே! சஹாபாக்களுடைய வாழ்க்கையிலே நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கின்றன. இந்த சம்பவங்கள் எல்லாம் எதை உணர்த்துகின்றன நல்ல அமல்களிலே அவர்களுக்கு இருந்த ஆர்வம், இந்த தீனிலே அமலே சாலிஹ் ஒன்று தீனுடைய அமல்கள் இன்னொன்று இந்த தீனை பாதுகாப்பதற்காக இந்த தீனை பாதுகாப்பதற்காக அதை தன்னுடைய செல்வத்தை செலவழிப்பதிலே இருந்து ஆர்வம்.
 
بَادِرُوا بالأعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ المُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بعَرَضٍ مِنَ الدُّنْيَا.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை கூறி நிறைவு செய்வோம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் நல்ல அமல்களை விரைந்து செய்யுங்கள் விரைந்து செய்யுங்கள், கடுமையான இருள் சூழ்ந்த இரவினுடைய பகுதிகளைப் போன்று மிகப் பெரிய குழப்பங்கள் வர இருக்கின்றன மனிதன் காலையிலே  மூமினாக இருந்தால் மாலையிலே காஃபீர் ஆகிவிடப் போகிறான், மாலையிலே மூமினாக இருந்தால் காலையிலே காஃபீர் ஆகிவிடப் போகிறான், தன்னுடைய மார்க்கத்தை துன்யாவுக்காக விட்டுவிடக் கூடியவர்கள் வரப்போகிறார்கள் நீங்கள் அதற்கு முன்னால் அமல்களை விரைந்து செய்யுங்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 118
 
أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ حَلِيمٍ الْمَرْوَزِيُّ، أَنْبَأَ أَبُو الْمُوَجَّهِ، أَنْبَأَ عَبْدَانُ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: " اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ 
 
மேலும் சொன்னார்கள்” ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நல்ல அமல்களை நீங்கள் விரைந்து செய்யுங்கள் நல்ல அமல்களை விரைந்து செய்யுங்கள் உங்களுடைய ஐந்து வருவதற்கு முன்பாக ஐந்தை நீங்கள் கனிமத்தாக கருதி கொள்ளுங்கள் உங்களுக்கு வயோதிகம் வருவதற்கு முன்னாள் வாலிபத்தை, உங்களுக்கு நோய் வருவதற்கு முன்னால் உங்களுடைய ஆரோக்கியத்தை, ஏழ்மை வறுமை வருவதற்கு முன்னால் செல்வத்தை, வேலை வருவதற்கு முன்னால் ஓய்வை, மவுத்துக்கு முன்னால் உங்களுடைய ஹயாத்தை.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி பல ஹதீஸ்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருக்கின்றார்கள் நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி கழிக்க வேண்டும் அமல்களிலே நாம் எப்படி விரைய வேண்டும். 
 
நம்முடைய இந்த மறதியானது எத்தகைய மிகப்பெரிய பாதிப்பை அழிவை நாசத்தை பின்னடைவை நமக்கு ஏற்படுத்தி விடும் என்று நாம் அறியாமல் இருக்கிறோம் நம்முடைய ஒவ்வொரு நேரமும் நம்முடைய மறுமைக்காக கொடுக்கப்பட்டது.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா நம்முடைய வாழ்க்கையை இபாதத்துக்காக தீனுக்காக ஏற்றுக் கொள்வானாக! இபாதத்தை லேசாக்கி கொடு என்று அல்லாஹ்விடத்திலே துவா கேட்க வேண்டும்,
 
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ مُسْلِمٍ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ، عَنْ الصُّنَابِحِيّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: " أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ "، وَأَوْصَى بِذَلِكَ مُعَاذٌ الصُّنَابِحِيَّ، وَأَوْصَى بِهِ الصُّنَابِحِيُّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ
 
நாம் மன்றாடி அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும் யா அல்லாஹ்! எனக்கு தொழுகையை லேசாக்கி கொடு நோன்பை லேசாக்கி கொடு இபாதத்திலே எனக்கு ஆர்வத்தை கொடு என்று அல்லாஹ்விடத்திலே துவா கேட்க வேண்டும் நாம் எதற்காக அல்லாஹ்விடத்தில் துவா கேட்கிறோமோ அதை அல்லாஹ் நமக்கு லேசாக்கி கொடுப்பான்.
 
அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூது, எண் : 1522
 
அல்லாஹ் சுபஹானஹூதஆலா எனக்கும், உங்களுக்கும், நம்முடைய குடும்பத்தாருக்கும், மூமின்கள் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய ஒவ்வொரு நல்ல அமல்களை செய்வதற்கு அருள் புரிவானாக! நல்ல அமல்களை அல்லாஹ் நமக்கு எளிதாக்கி தருவானாக! பாவங்களை விட்டு அல்லாஹுத்தஆலா நம்மை பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/