HOME      Khutba      ஒற்றுமையின் அவசியம் | Tamil Bayan - 856   
 

ஒற்றுமையின் அவசியம் | Tamil Bayan - 856

           

ஒற்றுமையின் அவசியம் | Tamil Bayan - 856


ஒற்றுமையின் அவசியம்
 
தலைப்பு : ஒற்றுமையின் அவசியம்
 
வரிசை : 856
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 12-01-2024 | 30-06-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமது பாவங்களை மன்னிபனாக! நம்மை பொருந்தி கொள்வானாக! நமக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்ப்படுதுவனாக! நம்முடைய கருத்து வேறுபாடுகள், நம்மை பிரித்து விடாமல் அல்லாஹுடைய வேதத்தின் மீதும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் மீதும் ஒன்றுணைந்தவர்களாக நமது சமூதாயத்தை ஆக்கி அருள்வானாக ஆமீன்! 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா முஸ்லிம்களாகிய நம் மீது செய்த மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று நம்மையெல்லாம் ஒரே சமுதாயமாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ஆக்கி இருப்பது.
 
உலக மக்கள் எல்லாம் தங்களுடைய நிறத்தால், இனத்தால், மொழியால் இன்னும், பல காரணங்களால் பிரிந்து பல சமூகங்களாக சண்டை செய்து கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இஸ்லாம் என்ற இந்த ஒற்றுமையைக் கொண்டு நம்மை ஒன்றிணைத்தான்,
 
ஒரு முஸ்லிம் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது தன்னுடைய சகோதரனை விட தன்னை உயர்ந்தவனாக நினைத்தால். மொழியாலோ, இனத்தாலோ, நிறத்தாலோ தன்னுடைய இன்னொரு முஸ்லிமான சகோதரனை விட நான் உயர்ந்தவன், நான் மேலானவன் என்று பெருமை கொள்வானையானால், பிரிவினை காட்டுவானையானால் அவன் இந்த இஸ்லாமிய வட்டத்திற்குள் இருக்க முடியாது, அவன் ஜாஹிலிய்யத்- அறியாமை காலத்தில், அந்த மூடநம்பிக்கையில் அவன் சென்று விடுவான்.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா நம்மை வழிகேட்டிலிருந்து இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தின் மூலமாக நேர்வழிக்கு கொண்டு வந்தான். அறியாமை மடமையிலிருந்து இந்த இஸ்லாமிய மார்க்கத்தை கொடுத்து நமக்கு அல்லாஹுத்தஆலா கல்வியை கொடுத்தான். 
 
இழிவில் இருந்தும், கேவலத்தில் இருந்தும், அவமானப்படுத்துவதில் இருந்தும் அல்லாஹுத்தஆலா இந்த இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு கண்ணியத்தை மேன்மையை கொடுத்தான். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நாமெல்லாம் அவனுடைய அடியார்களாக, நமக்குள் சகோதரர்களாக ஒன்றிணைந்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்தவர்களாக ஒருவருடைய வலியை மற்றவர் உணர்ந்தவராக, ஒருவருடைய இன்ப துன்பத்தில் மற்றவர் பங்கெடுப்பவர் ஆக இருக்க வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா விரும்புகிறான். 
 
நமக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்த கட்டளைகளில் ஒன்று!
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ وَلَا آمِّينَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். 
 
இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். 
 
இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன். (அல்குர்ஆன் 5 : 2)
 
உங்களுக்குள் நன்மையான காரியங்களில், தக்வா உடைய காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் பாவமான காரியங்களிலோ பிறருடைய உரிமையில் எல்லை மீறக்கூடிய  காரியங்களிலோ நீங்கள் ஒருவருக்கொருவர் துணை போகக் கூடாது, உதவி செய்யக் கூடாது என்று அல்லாஹு தஆலா நம்மை தடுக்கிறான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சமுதாயமாகிய நம்மை, உலக சமுதாய மக்களிலேயே சிறந்த சமுதாயமாக தேர்ந்தெடுத்து, பிற மக்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு உம்மத்தாக நம்மை ஆக்கியிருக்கிறான்.
 
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான். (அல்குர்ஆன் 3 : 110)
 
மனித சமூதாயதிர்க்காக வெளியாக்கபட்ட சமூதாயங்களில்  தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்;  அல்லாஹுத்தஆலா நமக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கின்றான். ஏனைய மக்களைப் போன்று சம்பாதிப்பது, தன்னுடைய இந்த உலக வாழ்க்கையை பெருக்குவது, திருமணம் முடிப்பது, பிள்ளைகளை சந்ததிகளை உருவாக்குவது பிறகு, செத்து மடிவது என்பது நம்முடைய வாழ்க்கையாக இருக்க முடியாது.
 
அன்பான சகோதரர்களே! இதற்கு மேற்பட்டு ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத்தை உருவாக்குவதில் பங்களிப்பு செய்ய வேண்டும், இஸ்லாமை பரப்புவதில், இஸ்லாமை பலப்படுத்துவதில், அவன் பங்களிப்பு செய்ய வேண்டும்.
 
யாருக்கு காலையில் எழுந்தவுடன் தன்னுடைய உணவுடைய கவலை மட்டும் இருக்கின்றதோ, தன்னுடைய தொழிலுடைய கவலை மட்டும் இருக்கின்றதோ, இரவில் தூங்கும் போதும் அதே கவலையோடு அவன் தூக்கத்திற்கு தனது படுக்கைக்கு செல்கிறானோ, சகோதரர்களே! அவன் தொழுதாலும், வணங்கினாலும், அவனுக்கும் இந்த மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை. அவனுக்கும் இந்த உம்மத்திற்கும் சம்பந்தம் இல்லை. 
 
தொழுகை வணக்க வழிபாடு இது அல்லாஹ்விற்கு நாம் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும். எப்படி நமக்கு உணவு தேவையோ, நமக்கு நீரின் தேவையோ, சுவாசிக்க கூடிய சுவாசம் தேவையோ அது போன்று இபாதத் நமக்கு தேவையாக இருக்கிறது.
 
இந்த இபாதத்தை  வைத்து மட்டும் தன்னை இந்த உம்மத்தில் ஒருவனாக ஒருவன் நினைப்பான்  என்றால் அவன் ஏமாற்றத்தில் இருக்கிறான். அவன் தன்னைத் தானே சில விஷயங்களைக் கொண்டு திருப்பி அடைந்து ஏமாற்றிக் கொள்கின். 
 
அன்பு சகோதரர்களே! வணக்க வழிபாடுகள் மட்டும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுக்க படவில்லை, வணக்க வழிபாடு என்பது இஸ்லாமிய மார்க்கத்தின்  அஸ்திவாரம். அஸ்திவாரம் இல்லாமல் எந்த கட்டிடத்தையும் உருவாக்க முடியாது. 
 
ஆனால், அஸ்திவாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதிலே கட்டிடத்தை கட்டி எழுப்பாமல் இருந்தால் அதுவும் எப்படி இந்த உலகத்தில் பிரயோஜனமற்றதோ அப்படித்தான் சகோதரர்களே! இன்று நம்முடைய நிலைமை.
 
இந்த இபாதத்திற்கு பிறகு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உம்மத்தை உலக மக்களை வழிநடத்தக்கூடிய உலக மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒரு சமுதாயமாக உருவாக்கினார்களா? இல்லையா??
 
இந்த சமுதாயத்தை சஹாபாக்களின் அந்த உயர்ந்த உன்னதமான அந்த நூற்றாண்டை அந்த சமுதாயத்தை மஸ்ஜிதோடு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறுத்தி விட்டார்களா? உங்களுடைய பணி முடிந்தது, பள்ளியில் தொழ வைத்தீர்களா, மக்களுக்கு பயான் செய்தீர்களா, உங்களுடைய கடமை முடிந்து விட்டது என்று அங்கே அவர்களுடைய பணியை நிறைவுற்ற பணியாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போற்றினார்களா? இல்லையே சகோதரர்களே!
 
இந்த இஸ்லாம் என்ற ஒளியை எடுத்துக்கொண்டு, இந்த இஸ்லாமிய என்ற நீதியை நேர்மையை சத்தியத்தை எடுத்துக்கொண்டு. உலக மக்களை நீங்கள் வழிநடத்த வேண்டும், உலக மக்களை நீங்கள் தலைமை தாங்க வேண்டும், அவர்களின் அறியாமையை அவர்களின் மட நம்பிக்கையின் சங்கலிகளில் இருந்து விடுவிக்க வேண்டும், நேர்மை நீதத்தை நீங்கள் நிலைநாட்ட வேண்டும். 
 
உலகத்தில் சமாதானத்தை, சத்தியத்தை, நீதத்தை நேர்மையை போதிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பை கடமையை கொடுத்து விட்டு அல்லவா! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சமுதாயத்தை விட்டு பிரிந்து சென்றார்கள். ஹஜ்ஜத்துல் விதாவில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்களே!
 
أَلاَ هَلْ بَلَّغْتُ
 
நான் உங்களுக்கு இந்த மார்க்கத்தை எடுத்து சொல்லி விட்டேனா ஒப்படைத்து விட்டேனா? அப்பொழுது அல்லாஹ்வின் தூதரே! இந்த மார்க்கத்தை நீங்கள் ஒப்படைத்து விட்டீர்கள், உங்கள் மீது சுமத்தப்பட்ட அமானிதத்தை எங்கள் மீது ஒப்படைத்து விட்டீர்கள், 
 
இந்த உம்மத்திற்கு நீங்கள் நன்மையை நாடி விட்டீர்கள், அல்லாஹ்வின் பாதையிலே நீங்கள் முழுமையாக ஜிஹாது செய்தீர்கள் என்று சாட்சி சொன்னதற்கு பிறகு, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சஹாபாக்களுக்கு என்ன பொறுப்பு கொடுத்தார்கள்.
 
لِيُبَلِّغِ الشَّاهِدُ منكمُ الغائِبَ
 
இங்கே இருப்பவர் இல்லாதவருக்கு இந்த மார்க்கத்தை கொண்டு செல்லட்டும் இந்த மார்க்கத்தை அவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கட்டும்.
 
لِيُبَلِّغِ الشَّاهِدُ منكمُ الغائِبَ
 
சகோதரர்களே! உங்களுக்கு எல்லாம் தெரியும் அல்லாஹ்வுடைய தீன் என்பது இது பிற மதத்தை போன்றது அல்ல, பிற கொள்கைகளைப் போன்றது அல்ல இந்த தீன் மஸ்ஜிதுல் இருக்கும் இந்த தீன்தான் ஒரு ஆட்சியை நீதமான நேர்மையான ஆட்சியாக ஆக்கும்.
 
இந்த தீன் தான் வியாபாரத்திற்கு வேண்டும், இந்த தீன்தான் அரசியலிலே  ஆட்சியிலே அதிகாரத்திலே இருக்க வேண்டும் இந்த தீன் தான் நீதிமன்றத்திலே இருக்க வேண்டும் இந்த தீணை கொண்டு தான் உலகம் இயங்க வேண்டும்.
 
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ
 
அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த சத்திய மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே (அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கியே தீரும்)! (அல்குர்ஆன் 61 : 9)
 
இந்த தீன் தான் மேலோங்க வேண்டும், இது மேலோங்கினால் தான் ஏழைகள், எளியவர்கள், அடிமைகள், பலவீனமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்க முடியும். எல்லோருக்கும் அவர் அவர்களுடைய உரிமை கிடைக்கும். இந்த தீனுல் இஸ்லாமை தவிர இந்த உலகத்திலே வேறொரு சக்தி  மேலோகினால் அங்கு தீமை மேலோக்குகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்”.
 
இஸ்லாமை தவிர இந்த உலகத்திலே வேறொரு சக்தி ஆட்சி செய்கிறது என்றால் இஸ்லாம் என்ற இந்த சக்தியை தவிர வேறொரு சக்திக்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்” அநியாயத்திற்கு மக்கள் கட்டுப்பட்டு கொண்டிருக்கிறார்கள், அராஜகத்திற்கு அநீதிக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள், ஒடுக்கு முறைக்கு, அநியாயங்களுக்கு, அட்டூழியங்களுக்கு மக்கள் துணை போய்க்கொண்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய இந்த தீனை தவிர வேறு எந்த கொள்கையாலும் அது யாருடைய கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கொள்கையாக இருந்தாலும் சரி, இந்த பூமியில் நீதத்தை நிலை நாட்ட முடியாது அல்லாஹ்வுடைய வேதம் ஒன்றைக் கொண்டு ஆட்சி அமைப்பதே தவிர, மக்களுக்கு அல்லாஹ்வுடைய தீனை கொண்டு போதிப்பது மட்டும்தான் உலக மக்களுக்கு நீதத்தையும் சத்தியத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பாதுகாப்பையும் கொடுக்க முடியும்.
 
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
 
நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியான (-மிகவும் நேர்மையான, நீதமான, எல்லோருக்கும் பொருத்தமான) மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. இன்னும், நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு, “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது. (அல்குர்ஆன் 17 : 9)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழக்கூடிய ஒரு சமுதாயத்தை மட்டும் உருவாக்கவில்லை, திக்ரு செய்யக்கூடிய ஒரு சமுதாயத்தை மட்டும் உருவாக்கவில்லை, தான தர்மம் செய்யக்கூடிய ஒரு சமுதாயத்தை மட்டும் உருவாக்கவில்லை, குர்ஆனை மனப்பாடம் செய்யக்கூடிய ஒரு சமுதாயத்தை மட்டும் உருவாக்கவில்லை, இந்த எல்லா மக்களையும் உலக மக்களை வழிநடத்தக்கூடிய சமுதாயமாக உருவாக்கினார்கள்.
 
18 அல்லது, 19 வயது அல்லது, 20 வயதை தாண்டி இருக்காது மதினாவிலேயே குறைந்த வயது உடைய தோழர் முஆத் இப்னு ஜபல் அந்த தோழரை அழைத்து உலக வரலாற்றிலேயே கலாச்சாரத்தால், சமுதாயத்தால், நிலப்பரப்பால் பழமையான எமன் நாட்டுக்கு ஆளுநறாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஆட்சிளராக அனுப்பினார்கள் என்றால் அது எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கினார்கள்.
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்று நம்முடைய பிள்ளைகளுக்கு விளையாட தெரியும் 18 ,20 வயதில் ஒரு வாலிபர் இடத்தில் இஸ்லாமில் உனக்கு என்ன தெரியும் என்று கேட்டால் பலருக்கு உளூ செய்ய கூட தெரியாது என்று சொல்லலாம், ஏதோ கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து இபாதத்துகளை படித்திருப்பார்களே தவிர இப்படித்தான் இதை செய்ய வேண்டும்” என்று அறிந்திருப்பார்களா? ஒழு எப்படி செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு புத்தகத்தை பார்த்து ஹதீஸோடு படித்து அது போன்று ஒழுவு செய்து நான் பயிற்ச்சி எடுத்து இருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?
 
இதுதான் நமக்கு இருக்கக்கூடிய மார்க்கப்பற்று, இதுதான் மார்க்கத்தோடு நமக்கு இருக்கக்கூடிய தொடர்பு தொழுகையை எடுத்துக் கொள்ளுங்கள் ஏதோ எல்லாரும் பள்ளிக்கு வந்தோம் நான்கு பேரை பார்த்தோம் தொழுகிறாங்க தக்பீர் கட்டுகிறார்கள் இதற்கு மேல் தொழுகையோடு நமக்கு என்ன தொடர்பு இருக்கிறது.
 
தொழுகை குறித்து குர்ஆன் சொன்னதைப் படுத்தி இருக்கிறோமா? தொழுகை குறித்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள் என்பதை படித்திருக்கிறோமா? தக்பீர் கட்டியதிலிருந்து சலாம் கொடுக்கின்ற வரை ஒவ்வொரு ருகூனையும் ஒரு ஒரு நிலையிலும் என்னுடைய நபி எனக்கு எவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் என்பதை படித்திருக்கிறோமா? அது போன்று சரியாக இரண்டு ரக்அத்துகள் தொழுது பயிற்சி எடுத்திருக்கிறோமா?
 
சகோதரர்களே! அன்றாட தொழக்கூடிய இந்தத் தொழுகையின் நிலையை இதற்கு இஸ்லாம் எப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறது என்றால்; நம்மை அழைத்து நீ ஆட்சி செய் என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்? நம்மை அழைத்து நீதிமன்றத்தில் நீதிபதியாக இரு என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்? நம்மை அழைத்து ஒரு மாகாணத்திற்கு, ஒரு ஜில்லாவிற்கு பொறுப்பாளராக இரு, மக்களுக்கு ஆட்சி செய் என்று சொன்னால் என்ன செய்வோம்.
 
எத்தகைய முட்டாள்களாக இருக்கிறோம் என்று பாருங்கள் எத்தகைய வீணர்களாக இருக்கிறோம் என்று பாருங்கள் கல்வி! கல்வி! என்று போதிக்கக் கூடிய இந்த மார்க்கத்தை பெற்றும் கூட இந்த கல்வியை கற்க்காத (ஜாஹீல்களாக) மடையர்களாக நாம் இருக்கிறோம் என்றால், ஒரு பக்கத்தில் இஸ்லாம், இன்னொரு பக்கத்தில் ஜாஹிலியத்தை சேர்த்துக் கொண்டே செல்கிறோம் . ஒரு பக்கத்தில் குர்ஆன் இருக்கிறது ஆனால், அதை படிக்காமல் அறியாமையை நாமும் நமக்குள் சுமந்து கொண்டே இருக்கிறோம்.
 
சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது ஒரு படையை ஏற்பாடு செய்தார்கள். யாரை எதிர்ப்பதற்காக? எந்த நாட்டிற்கு அனுப்புவதற்காக ஏற்கனவே அந்த நாட்டு மக்களோடு ஒரு யுத்தம் நடந்ததோ, எனவே இது இரண்டாவது யுத்தமாகும். ரோமா புரி, ரோமப் பேரரசுகள்.
 
எவ்வாறு இன்று இரண்டு வல்லரசு நாடுகள் உலகத்தை கூறு போட்டு வைத்திருப்பது போன்று அந்த காலங்களிலே இரண்டு பேரரசுகள் உலகத்தில் பெரும் பகுதியைப் பிடித்து மக்களை தங்களை அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.
 
ரோமப் பேரரசு, பாரசீக பேரரசு இந்த பாரசீகப் பேரரசை விட ரோமப் பேரரசு முஸ்லிம்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். ஆகவே, மதினாவில் இஸ்லாம் பரவுவதை அந்த ரோமப் பேரரசு விரும்பவில்லை. எப்படியாவது மதினாவின் மீது படையெடுத்து முஸ்லிம்களை அழிக்க வேண்டும், அவர்களின் இனமே இல்லாமல் அவர்களை துடைத்து எறிந்து விட வேண்டும் என்ற அந்தக் குறிக்கோளிலே அவர்கள் தொடர்ந்து சதி திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சதி திட்டம் தான் ரோம போரின் போது முறியடிக்கப்பட்டது.
 
இங்கே இரண்டாவதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ் செய்து வந்ததற்கு பிறகு, இங்கு நோயுற்று கிடக்கிறார்கள் அங்கே அந்த ரோமப் பேரரசு மதினாவின் மீது படையெடுத்து முற்றிலுமாக இஸ்லாமை, முஸ்லிம்களை அழித்து விட வேண்டும்.
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா சொல்வதைப் போல் அன்றிலிருந்து இன்று வரை அந்தக் கூட்டம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது ஆனால், முஸ்லிம்களாகிய நமக்குத்தான் புரியாமல் இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
 
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
 
(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். 
 
(அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 217)
 
உங்களை உங்களது மார்க்கத்தில் இருந்து வழி கெடுக்காத வரை உங்களை உங்களது மார்க்கத்தில் இருந்து திரும்பாத வரை அவர்கள் உங்களோடு யுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்
 
சகோதரர்களே! முஸ்லிம்களுக்கும், அந்த மக்களுக்கும் உண்டான யுத்தம் இருக்கிறதே அது நிளத்துக்கான யுத்தம் அல்ல அது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான யுத்தம் அல்ல இஸ்லாமா அல்லது குஃப்ரா அல்லாஹ்வுடைய தீனா அல்லது சைத்தானுடைய மார்க்கமா என்பதற்கு இடையேயான யுத்தம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்று என்ன பாலஸ்தீனில் நடக்கிறதோ அதுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்ட காலத்திலிருந்து முஸ்லிம்களுக்கும் இந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்க கூடிய யுத்தம் ஆகவே, தான் அல்லாஹுத்தஆலா ஒரு வசனத்தில் பல வசனங்களில் திரும்ப திரும்ப மூமின்களே!
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
 
நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள் ஆவார்கள். இன்னும், உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர் ஆவார். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5 : 51)
 
விசுவாசிகளே! யூதர்களை, நசாராக்களை உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கி விடாதீர்கள்” அவர்களோடு நீங்கள் உற்ற தோழமை கொண்டு விடாதீர்கள், அவர்களோடு நீங்கள் அவர்களை நண்பர்கள் ஆக்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். 
 
பழகலாம், கொடுக்கல் வாங்கல் வைக்கலாமா ஆனால், பாதுகாவலர்களாக ஆக்கிவிட முடியாது அவர்களுடன் அன்னியோன்யமாக நாம் கலந்து விட முடியாது அவர்கள் வேறு நாம் வேறு அவர்கள் அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கு என்று சொல்பவர்கள் ஆனால், 
 
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
 
(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்). (அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.) இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை. (அல்குர்ஆன் 112 : 1, 2, 3, 4)
 
என்ற நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் அல்லாஹ்வை ஏசியவர்கள், அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டு விட்டது, 
 
لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ
 
“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம். (அல்குர்ஆன் 3 : 181)
 
அல்லாஹ் பிச்சைக்காரனாகி விட்டான், நாங்கள் செல்வந்தவர்கள் என்று சொன்னவர்கள், அவர்கள் நபிமார்களை கொண்டவர்கள், நல்லவர்களை கொண்டவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்தையும் ஹலால் ஆக்கியவர்கள், அவர்களது கொள்கை வேறு, அவர்களது நம்பிக்கை வேறு, நம்முடைய நம்பிக்கை வேறு.
 
நாம் இஸ்லாம் என்ற நேர்மையை கொடுக்கப்பட்டவர்கள் - ஹுதா என்ற சத்தியமான நேர்மையான மார்க்கம் கொடுக்கப்பட்டவர்கள். அல்லாஹுத்தஆலா திரும்பத் திரும்ப சொல்கிறான் இதற்காகவே சூரத்துல் பகரா, சூரா ஆல இம்ரான், சூரா அன்னிஸா,  சூரா அல்மாயிதா பிறகு, பிந்திய பாகங்களில் உள்ள அத்தியாயங்கள் இத்தனைய அத்தியாயங்களில் அன்பு சகோதரர்களே! நீங்கள் எடுத்துப் பாருங்கள் சமூக உறவுகளைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான்.
 
اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ علَى المَدِينَةِ، وَخَرَجَ إلى مَكَّةَ، فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الجُمُعَةَ، فَقَرَأَ بَعْدَ سُورَةِ الجُمُعَةِ في الرَّكْعَةِ الآخِرَةِ: {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ}، قالَ: فأدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ، فَقُلتُ له: إنَّكَ قَرَأْتَ بسُورَتَيْنِ كانَ عَلِيُّ بنُ أَبِي طَالِبٍ يَقْرَأُ بهِما بالكُوفَةِ، فَقالَ أَبُو هُرَيْرَةَ: إنِّي سَمِعْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَقْرَأُ بهِما يَومَ الجُمُعَةِ. [وفي رواية]: اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ... بمِثْلِهِ، إلَّا أنَّه قال: فَقَرَأَ بسُورَةِ الجُمُعَةِ في السَّجْدَةِ الأُولَى، وفي الآخِرَةِ: {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ}
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையில் பல சமயங்களில் சூரத்துல் ஜும்ஆவும் சூரத்துல்  முனாபிக்கும் ஓதுவார்கள்.  
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 877
 
இந்த முதல் சூரா சூரத்துல் ஜும்ஆவில் யூதர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். இரண்டாவது சூராவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு இஸ்லாமை விரும்பாமல் இஸ்லாமிய கலாச்சாரத்தை விரும்பாமல் யூதர்களோடு கிறிஸ்துவர்களோடு நட்பு வைத்துக்கொண்டு இஸ்லாம் பரவுவதை வெறுத்து முஸ்லிம்களுக்குள் யூத கிறிஸ்து கலாச்சாரம் பரவுவதை விரும்பக்கூடிய முனாஃபிக்குகளை பற்றி அல்லாஹ் சொல்கிறான்” 
 
அந்த சூராவை ஜும்ஆவில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவார்கள். எப்படி அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எச்சரிக்கிறான் பாருங்கள்” அன்றிலிருந்து இன்று வரை அதே யுத்தம் தான் நடந்து கொண்டிருக்கிறது.     
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா நமக்கு இந்த தொழுகையை மட்டும் பொறுப்பாக கொடுக்கவில்லை. நாம் ஒரு சமுதாயமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
 
உலக சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய அறிவும், தகுதியும், திறமையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வுடைய கட்டளையை பாருங்கள்.
 
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான். (அல்குர்ஆன் 3 : 110)
 
முஃமின்களே! நீங்கள் சாதாரணமான கூட்டம் அல்ல கூட்டத்திலேயே நீங்கள் சிறந்த கூட்டம் மக்களுக்காக நீங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள் உங்களுடைய கடமை என்ன மக்களுக்கு நீங்கள் நன்மையை சொல்ல வேண்டும். 
 
تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ
 
இங்கு நன்மை என்றால் என்ன? தவ்ஹீதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உம்மத்துடைய முஸ்லிமுடைய உம்மத்துடைய இழிவு அல்லது, அவமானம் அல்லது, பலவீனத்துடைய அடிப்படை ஆணி வேறு என்ன தெரியுமா? தவ்ஹீதை வெளிப்படையாக பிற மக்களிடத்திலே பேசுவதை எப்போது இந்த சமுதாயம் விட்டதோ” அப்போது இந்த சமுதாயம் தலை குனிந்தது. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை பறை சாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
பிலால் அடி வாங்கினார் ஏன் அந்த இடத்தில் அவர் என்ன சொன்னார் அல்லாஹீ அஹத் அல்லாஹீ அஹத் அல்லாஹ் ஒருவன் அல்லாஹ் ஒருவன் என்று பிலால் சொன்னார். உங்களுக்கு இதை விட ஒரு வெறுப்பான வார்த்தை இருந்திருக்குமே ஆனால், அதைத்தான் நான் சொல்லியிருப்பேன் என்றார்.
 
இமாம் தஹபீ, நூல் : சியரு அஃலாமின் நுபலா, 
 
அன்பு சகோதரர்களே! முஸ்லிமாக இருக்கிறார் ஆனால், தவ்ஹீதை பிற மக்களிடம் சொல்வதற்கு வெட்கப்படுகிறான். ஷிர்கையும், குஃபுரையும், ஆபாசத்தையும், அசிங்கத்தையும், அவமானமான கேவலமான போஸ்டர் அடித்து கொண்டிருக்கிற கலாச்சாரத்தில் ஒரு முஸ்லிம் உண்மையை சத்தியத்தை எதற்காக இந்த உலகம் படைக்கப்பட்டதோ அதை பிறரிடம் சொல்ல வெட்கப்பட்டால்! இதைவிட என்ன சீர் கேடு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை சொன்னால் என்ன நினைப்பானோ என்ன நடக்குமோ என்ற பயம்.
 
சகோதரர்களே! இது தான் இதை விட்டதால் ஏற்பட்ட அந்த பலவீனம் தான் இந்த இன்றைய சமுதாயத்தை அளித்துக் கொண்டு நாசமாக்கி கொண்டு இருக்கிறது. 
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
 
وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
 
நீங்கள் முன் கரை தீமையை தடுக்க வேண்டும் எந்த தீமையை அல்லாஹ் சொல்கிறான்? ஷிர்கை தடுக்க வேண்டும். இணை வைத்தலை நீங்கள் தடுக்க வேண்டும். இன்று ஒரு மக்களைப் பார்த்து அவர்கள் செய்யக்கூடிய செயலை ஷிர்க்கு இணை வைத்தல்.
 
இது ஏக இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடிய பெரும் பாவம் என்று சொல்வதை விட்டு விட்டோம். இதுவும் நம்முடைய இழிவிற்கு நம்முடைய அவமானத்திற்கு நம்முடைய தோல்விக்கு நம்முடைய பலவீனத்திற்கு காரணம்.
 
அல்லாஹ் சொல்கிறான் முஃமின்களே! நீங்கள் சிறந்த சமுதாய உங்களுடைய பொறுப்பு என்ன உங்களுடைய கடமை என்ன நீங்கள் நன்மையை ஏவ வேண்டும் தீமையை தடுக்க வேண்டும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும்.
 
وَتُؤْمِنُونَ بِاللَّهِ
 
மேலும் அல்லாஹுத்தஆலா சொல்கிறான்:
 
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
 
இன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். 
 
ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 3 : 103)
 
அல்லாஹ்வுடைய கையிற்றை நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உறுதியாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்” 
 
وَلَا تَفَرَّقُوا
 
நீங்கள் பிரித்து விடாதீர்கள். சொல்கிறான் பாருங்கள்: 
 
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
 
அல்லாஹ்வுடைய நேமத்தை நினைத்து பாருங்கள் அல்லாஹ்வுடைய அருளை நினைத்துப் பாருங்கள் அல்லாஹ் உடைய அருள் எது என்று அல்லாஹ் சொல்கிறான்: 
 
إِذْ كُنْتُمْ أَعْدَاءً
 
நீங்கள் எதிரிகளாக இருப்பீர்கள், பிரிந்து இருந்தீர்கள் பல காரணங்களால் ஒருவர் ஒருவர் மீது பகைமை உடையவராக இருந்தீர்கள். 
 
فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ
 
உங்கள் உள்ளங்களுக்கு மத்தியில் அல்லாஹுத்தஆலா ஒன்றிணைத்தான். 
 
فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا
 
அவருடைய நிகமத்தால், அவருடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள்.
 
 அல்லாஹ்வுடைய அடியார்களே! அரபுகளை போன்று பிரிந்து இருப்பதிலும் சண்டை செய்து கொள்வதிலும் குலப் பெருமை பேசுவதிலோ உலகத்தின் வேறு ஒரு சமுதாயம் வந்ததில்லை. அத்தகைய சமுதாயத்தை இந்த இஸ்லாம் என்ற, அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தை கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கினார்கள் என்றால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இந்த இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கவே முடியாது.
 
நம்மை ஒன்றிணைப்பதற்கு நம்மை பலப்படுத்துவதற்கு நம்முடைய சக்தியை ஒருங்கிணைப்பதற்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடிப்பதை தவிர வேறு வழியே இல்லை. 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنَ النَّارِ
 
நீங்கள் நரகத்தில் படு குழியிலே இருந்தீர்கள். 
 
فَأَنْقَذَكُمْ مِنْهَا
 
அல்லாஹுத்தஆலா இதை இஸ்லாமிய மூலமாக அந்த நரக படுகுழியில் இருந்து உங்களை பாதுகாத்தான். 
 
كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ 
 
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு தன்னுடைய வசனங்களை தெளிவுப்படுத்துகிறான்.
 
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
 
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக, உங்களுடைய நன்மை எதில் இருக்கிறது? உங்களுடைய இம்மை மறுமையில் வெற்றி எதில் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பாதையின் பக்கம் நீங்கள் வந்து விட வேண்டும் என்பதற்காக.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இங்கே மிக கவலையான துக்கமான துயரமான செய்தி என்னவென்றால் இத்தகைய தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டதற்குப்பின்  கூட பல முஸ்லிம் நாடுகள் பிரிந்து இருப்பதால் எத்தகைய அவமானங்களை, கேவலங்களை சந்திக்கின்றன என்பதை நாம் பார்த்தும்  கூட; 
 
இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கக் கூடிய நாம் நமக்கு மத்தியில் எத்தனை பிரிவுகளை வைத்துக்கொண்டு, எத்தனை கோஸ்ட்களை வைத்துக்கொண்டு, எத்தனை கட்சிகளை வைத்துக்கொண்டு பிரித்து இருந்து நாம் ஒருவருக்கொருவர் பகைவை பாராட்டி, வெறுப்புணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
 
இன்று பாருங்கள் முஸ்லிம் தலைவர்கள் அவர்களை நினைத்து வேதனைப்படுவதா? கவலைப்படுவதா? யார் கொள்கையாலும், நம்பிக்கையாலும், வாழ்க்கை கலாச்சாரத்தாலும் நம்மோடு எல்லா விஷயத்திலும் வேறுபடுகிறாரோ அவரோடு இணக்கப் பாராட்ட, அவரோடு நட்பு பாராட்டுவதோடு கைகோர்க்க ஓடுகிறார்கள்.
 
ஆனால், இன்னொரு முஸ்லிம் தலைவரை பார்த்து இன்னொரு முஸ்லிம் கட்சியை பார்த்து வெறுப்பை விரும்புகிறார்கள் கால் புணர்ச்சியை கக்குகிறார்கள் கொள்கையால் இந்த பிற விஷயங்களால் வழி கெட்டவர்களோடு சமாதானம் ஆவதற்கு சமரசம் செய்வதற்கு ஆயிரம் காரணங்களை தேடுகிறார்கள்.
 
ஏன் தன்னுடைய கொள்கை சகோதரர்களோடு ஒற்றுமையாக போவதற்கு தன்னுடைய கொள்கை சகோதரர்களோடு அன்பு பாராட்டுவதற்கு ஒரு காரணம் கூட உனக்கு கிடைக்கவில்லையா?
 
இன்று வட நாடுகளில் ஏன் அதிக அளவில் முஸ்லிம்கள் இருந்தும் இன்று மிக மோசமான நிலையிலே இருந்து கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது இன்னும் சில காலங்களில் வட மாநிலங்களில் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எழுதிக் கொள்ளுங்கள்” 
 
காரணம் என்ன ஒரே ஊரில் பத்து முஸ்லிம்கள் வேட்பாளராக பத்து கட்சிகளில் நிற்ப்பார் ஒரே கிராமத்தில் ஒரே ஜில்லாவில் 20 முஸ்லிம்கள் 20 கட்சிகளிலேயே அப்படி தனக்கு கட்சி கிடைக்கவில்லை என்றால் தனியாக யாவது நிற்பான். அழிந்து நாசமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 
சகோதரர்களே! அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த தென் மாநிலங்களில் நமது தமிழ்நாட்டிலும் உருவாக்குவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் தன்னுடைய பேச்சுக்கு நான்கு பேர் வந்து விட்டால் அவர்களுக்கும் ஒரு கட்சி வேண்டும் அவர்களுக்கும் ஒரு இயக்கம் வேண்டும் ஓட்டை பிரி எனக்கு யார் சீட்டு கொடுக்கிறாரோ அவருடைய காலில் விழுந்து சரநடைந்து விடு அவர் யாராக இருக்கட்டும்.
 
என் சகோதரர்களே! சமுதாயத்தினுடைய நிலைமை என்ன? தலைவர்கள் இங்கு யாரை குறை சொல்வது தன்னுடைய தலைவர் தவறாக வழிகாட்டினாலும் அவருக்கு பின்னால் சென்று சமுதாயத்தை பிரித்து அளித்து பகைமை அல்லாஹ்வுடைய மார்க்கம் இதையா நமக்கு ஏவி இருக்கிறது? 
 
நம்மை ஒற்றுமைப்படுத்தக்கூடிய, வலிமைப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடிய நமது சக்திகளை ஒருங்கிணைக்க கூடிய வலிகளை தேடுவதற்கு பதிலாக நமது மக்கள் கட்சிகளை இயக்கங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 
 
உங்களை ஒற்றுமை படுத்துங்கள், உங்களுக்கு பக்தியிலேயே ஒரு ஜமாத்தாக உருவாகுங்கள். உங்களைத் தேடி அவர்கள் வரட்டும் பிறகு, நீங்கள் உங்களுக்கு இடையில் நிபந்தனை வையுங்கள்” நாங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு சமுதாயமாக முடிவெடுப்போம் என்று எங்களுக்கு ஒரே குரல் தான் என்ற அந்த நிலைமை உருவாகவில்லை என்றால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
சிறு காலங்களுக்கு முன்னால் வட மாநிலங்களில் பரவி இன்று அவர்களை எரித்துக் கொண்டிருக்கக் கூடிய தீ அடுத்த சில ஆண்டுகளில் இங்கே பரவி நம்மை எரிக்க ஆரம்பித்தால் வறுந்தி எந்த எந்தப் பயனும் இல்லை சகோதரர்களே! பல ஆண்டுகள் அந்த மாநிலங்களிலே வசித்த வசித்து அவர்களுடைய நிலைமையை பார்த்து அனுபவித்து பார்த்து சொல்கிறேன். 
 
நம்முடைய தலைவர்களுக்கு வழி காட்டுவாராக! நம்முடைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவானாக!  ஒற்றுமையையும் சத்தியத்தையும் பிடித்து வாழக்கூடிய அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைக்கக்கூடிய நல்ல நல்ல மக்களாக ஆக்கி இருப்பானாக!
 
நம்முடைய காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை பகைமையை அல்லாஹுத்தஆலா நீக்கியருள்வானாக! அல்லாஹ்வுக்காக நேசம் கொள்ளக்கூடிய, அல்லாஹ்விற்காக ஒருவருக்கொருவர் அன்பு கொள்ளக்கூடிய உண்மையான சகோதரத்துவம் உடைய சமுதாயமாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக! நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய அனைத்து காழ்ப்புணர்ச்சிகளையும் பகைமையையும் வேறுபாடுகளையும் அல்லாஹுத்தஆலா களைவானாக!.
 
குர்ஆன் சுன்னாவின்  மீது நிலைநிற்க்ககூடிய உண்மையான உறுதியான சமுதாயமாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக! நமுடைய உயிரையும் பொருளையும் பாதுகப்பானாக! காசா மக்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! ஆக்கிறமிப்பாளர்களாகிய யூதர்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! அந்த ஆக்கிறமிப்பாளர்களை கேவலமானவர்களாகவும் இழிவுபடுத்தப்பட்டவர்களாகவும் அந்த புனித பூமியில் இருந்து அல்லாஹ் வெளியாக்குவானாக! அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை நமக்கு காண்பிப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/