HOME      Lecture      சிறுவர்களின் முன்மாதிரி இப்னு அப்பாஸ் | Tamil Bayan - 749   
 

சிறுவர்களின் முன்மாதிரி இப்னு அப்பாஸ் | Tamil Bayan - 749

           

சிறுவர்களின் முன்மாதிரி இப்னு அப்பாஸ் | Tamil Bayan - 749


சிறுவர் களின் முன்மாதிரி இப்னு அப்பாஸ்
 
தலைப்பு : சிறுவர் களின் முன்மாதிரி இப்னு அப்பாஸ்
 
வரிசை : 749
 
இடம் : ஹிப்ளு மத்ரஸா காரைக்கால்.
 
உரை :  முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி
 
நாள் : 26-04-1444 | 20-11-2022
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்ஹம்துலில்லாஹ்! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ரொம்பவும் பிரியமானவர்கள் நீங்கள். நீங்கள் என்றால் சிறு பிள்ளைகள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெருவில் எப்போ போனாலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் நின்று அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டு செல்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் சிறுவர்களோடு  விளையாடி இருக்கிறார்கள். 
 
ஹசன் ஹுஸைன் இரண்டு பேர் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பேரன்கள். பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய மகன்கள். அந்த இரண்டு பேரிடத்திலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரியமாக விளையாடி இருக்கிறார்கள். 
 
أسامةُ أحبُّ الناسِ إليَّ
 
அதேபோல ஜைது ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனார் உஸாமா அவரும் சிறிய பிள்ளையாகத் தான் இருந்தார். அவர் மேல் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரொம்ப பாசம் வைத்திருந்தார்கள். அதனால் அவர் பெயர் ஹிப்பு ரசூலுல் லாஹ். ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமான பிள்ளை. 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமி, எண் : 924
 
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உங்களை மாதிரி ரொம்ப சின்ன பிள்ளைகளிடம் கொஞ்சி விளையாடுவார்கள். அப்போ நீங்கள் எவ்வளவு பிரியமானவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் அவர்களுக்கு, ஹசன் ஹுஸைன் இரண்டு பேர் சொன்னோமா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மடியில் ஹஸன். எல்லாம் 7வயசு 8 வயசு. 
 
جَاءَ أعْرَابِيٌّ إلى النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فَقَالَ: تُقَبِّلُونَ الصِّبْيَانَ؟ فَما نُقَبِّلُهُمْ، فَقَالَ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: أوَأَمْلِكُ لكَ أنْ نَزَعَ اللَّهُ مِن قَلْبِكَ الرَّحْمَةَ!
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை முத்தமிடுகிறார்கள். அங்கே அரபு குளத்தின் உடைய பெரிய தலைவர் வந்திருக்கிறார். அவர் பார்த்துவிட்டு  என்ன நீங்கள் உங்கள் சிறு பிள்ளைகளுக்கு முத்தம் கொடுப் பீர்களா? எனக்கு 10 பிள்ளைகள் இருக்கிறார்கள்.(அரபி வசனம்:4: 44) நான் வாழ்நாளில் ஒருத்தருக்கு கூட முத்தம் கொடுத்ததில்லை. 
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5998
 
அதற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள் தெரியுமா? உன்னுடைய உள்ளத்தில் அன்பு, பாசம், இரக்கம், கருணை அல்லாஹுத்தஆலா எடுத்துவிட்டிருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். அதற்கு நானா பொறுப்பாக முடியும். உனது உள்ளத்திலே அன்பை கொண்டு வருவதற்கு என்னிடத்திலே என்ன இருக்கிறது?
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 5998
 
நீங்கள் யார்? ரசூலுல்லாஹ்விற்கு இந்த உம்மத்திலே ரொம்ப பிரியமானவர்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களை நேசிப்பவராக இருந்தார்கள் என்று சொன்னால், அப்போ நீங்களும் ரஸுலுல்லாஹ் அவர்களை நேசிக்க வேண்டும். 
 
அல்லாஹ் விடம் துஆ கேளுங்கள். யா அல்லாஹ்! எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய முஹப்பத்தை கொடு. யா அல்லாஹ்! ஈமானுடைய அடிப்படை நிபந்தனைகளில் ஒன்று நாம் நபியை நேசிப்பவர்களாக இருப்பது. நாம் எந்த அளவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் அவர்களை நேசிக்கிறோமோ அந்த அளவு ஈமான் கிடைக்கும்.
 
சஹாபாக்களுக்கு ஏன் ஈமான் அதிகமாக இருந்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே ஒரு முக்கியமான காரணம். அவர்கள் ரசூலுல்லாஹ்வை அதிகம் நேசிப் பவர்களாக இருந்தார்கள். 
 
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أُتِيَ بشَرَابٍ فَشَرِبَ منه، وعَنْ يَمِينِهِ غُلَامٌ، وعَنْ يَسَارِهِ الأشْيَاخُ، فَقَالَ لِلْغُلَامِ : أتَأْذَنُ لي أنْ أُعْطِيَ هَؤُلَاءِ؟ فَقَالَ الغُلَامُ: واللَّهِ يا رَسولَ اللَّهِ، لا أُوثِرُ بنَصِيبِي مِنْكَ أحَدًا، قَالَ: فَتَلَّهُ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ في يَدِهِ.
 
இப்னு அப்பாஸ் என்று ஒரு பையன் இருந்தார். அப்ப அவர் பையன் தான். நமக்கு அவர் ஒரு பெரிய சஹாபி. மிகப்பெரிய இமாம். இமாமுன் தப்ஸீர். குர்ஆனுடைய விரிவுரையின் இமாம். சட்டக் கலையினுடைய இமாம். அந்த இமாமுக்கு அப்பொழுது வயசு என்ன தெரியுமா? நபியை சந்திக்கும் போது அவருக்கு 9 வயசு 10 வயதுக்குள். நபி வஃபாத் ஆகும் போது அவருக்கு 12 இலிருந்து 13 வயதுதான். 
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5620
 
அவருக்கு ஒன்பது வயதில் ரசூலல்லாஹ் உடன் அவ்வளவு பிரியம். நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் ஒரு தடவை பள்ளியில் ஒரு தொழுகை முடித்தவுடன் வந்து உட்காருகிறார்கள். மற்ற சஹாபாக்களுக்கு எல்லாம் தெரியும் எல்லாம் தள்ளி தள்ளி உட்காருவார்கள். வலது பக்கம் இடது பக்கம் பெரிய சஹாபாக்கள் எல்லாம் உட்காருவார்கள். 
 
அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, அப்துல்லா மசூத் அப்புறம் அன்சாரிகள் உபை இப்னு காப், அப்துல் ரஹ்மான் அந்த மாதிரி பெரிய சஹாபாக்கள் எல்லாம் உட்காருவார்கள். ரசூலுல்லாஹ் உடைய right hand side யாருக்கு reserved. அபூபக்கர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களுக்கு reserved. அந்த ஒன்பது வயது பையன் வந்து உட்கார்ந்து இருக்கிறான்.   
 
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உட்க்காருமிடத்தில் அவன் உட்கார்ந்து கொள்கிறான். இவர் யார் ரசூலுல்லாஹ் உடைய சச்சா பையன் எதுவும் சொல்ல முடியுமா? ரசூலுல்லாஹ்வுக்கு தம்பி வேண்டும். அண்ணன் பக்கத்தில் தம்பி உட்காருகிறான். அப்ப மாமனார் தள்ளி தான் உட்கார முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடிப்பதற்கு ஒருவர் கிண்ணத்தில் பால் கொண்டு வந்து கொடுக்கிறார்.    
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5620
 
யாரசூலுல்லாஹ் குடிங்க. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்வார்கள்,சில நேரத்தில் இப்படி குடிக்கொடுத்து விடுவார்கள். எல்லோரும் குடிங் கள் என்று சொல்லி, கடைசியில் அவர்கள் குடிப்பார்கள். அது எப்பன்னு சொன்னா எல்லோரும் பசியாக இருக்கும் போது, எல்லோ ரும் நார்மலாக இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குடித்ததை மற்றவர்கள் குடிப்பதற்கு ஆசைப்படுவார்கள். 
 
அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த பாலை ஒரு மிடரோ இரண்டு மிடரோ குடித்துவிட்டு பக்கத்தில் பார்த்தால் தம்பி உக்காந்து இருக்கிறான். அந்தப்பக்கம் அபூபக்கர் உஸ்மான் என்று பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். 
 
ரசூலுல்லாஹ் பார்த்துவிட்டு இந்த பால் கிண்ணத்தை தம்பிகிட்ட கொடுத்துட்டு அந்த பக்கம் கொடுக்கிறதா, தம்பி நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்துறே, விட்டுக்கொடுத்து என்றால் என்ன அர்த்தம் நீ கடைசியாக குடி முதலில் பெரியவர்களுக்கு கொடுத்து விடலாம். அபூபக்கர் மற்றவர்களுக்கு கொடுத்து விடலாம் விட்டுக்கொடுத்துருங்களேன் என்று சொல்கிறார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன் உங்களுடைய வெற்றியை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று சொல்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே! இது வேறொன்றாக இருந்தால் நான் விட்டுக் கொடுத்திருப்பேன். உங்களுடைய எச்சி அல்லவா நான் தான் முதலில் குடிப்பேன். 
 
ரசூலுல்லாஹ் குடித்த இடத்தில் தானும் குடிப்பதுதான் முஹப்பத். இது வேறு உலக விஷயமாக இருக்கட்டும் காசு, பணம், இதுதான் நமக்கும் சஹாபாக்களுக்கும்  உள்ள வித்தியாசம். நான் காசு பணமாக இருந்தால் விட்டுத் தரமாட்டோம். அவர்கள் என்ன செய்தார்கள் காசு பணத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டார்கள். 
 
ரசூலுல்லாஹ் உடைய முஹப்பத். ரசூலுல்லாஹ் உடைய எச்சி முதலில் அவர்க் குடிக்கிறார் அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த கிண்ணத்தை இப்படி அழுத்தி வைக்கிறார்கள் நான் சொன்னதை நீ கேட்கவில்லையே என்று, அவருக்கு அதெல்லாம் பெரிது கிடையாது அவருக்கு முதலில் என்ன தேவை? ரசூலுல்லாஹ் உடைய எச்சில் முதலில் அவருடைய வயிற்றுக்கு போக வேண்டும். 
 
அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5620
 
بِتُّ في بَيْتِ خَالَتي مَيْمُونَةَ بنْتِ الحَارِثِ زَوْجِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ وكانَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ عِنْدَهَا في لَيْلَتِهَا، فَصَلَّى النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ إلى مَنْزِلِهِ، فَصَلَّى أرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ قَالَ: نَامَ الغُلَيِّمُ أوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ قَامَ، فَقُمْتُ عن يَسَارِهِ، فَجَعَلَنِي عن يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ، حتَّى سَمِعْتُ غَطِيطَهُ أوْ خَطِيطَهُ، ثُمَّ خَرَجَ إلى الصَّلَاةِ
 
சுபஹானல்லாஹ்! அவருக்கு எவ்வளவு ஈமான். இதுதான் அன்பு இந்த அன்பு தான் உங்களிடம் வரணும் என்னிடம் வரணும் அல்லாஹ்வுடைய தூதர் மேலே, இந்த இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு இருக்கிறாரே ஒரு தடவை என்ன செய்கிறார் தெரியுமா இஷா தொழுகிறார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எல்லோரும் வீட்டுக்கு போய் விடுகிறார்கள். நீங்கள் சின்ன பிள்ளைகள் என்ன ஆசைப்படுவீர்கள்? சாப்பிடணும் விளையாடனும் தூங்கணும் என்று ஆசைப்படுவீர்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா என்ன ஆசைப்படுகிறார்கள் ரசூலுல்லாஹ் தொழுக வைத்துவிட்டு போகிறார்கள் எல்லோரும் போயிட்டாங்க. 
 
இவர் ரசூலுல்லாஹ் பின்னாடியே போகிறார். அன்றைக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மைமுனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் போய் தங்குகிறார்கள். மைமுனா ரலியல்லாஹு அன்ஹா யார்? இப்னு அப்பாஸ் அன்ஹுமா உடைய அம்மா உம்முல் ஃபதல் அவர்களுடைய தங்கச்சி தான் யார் ரசூலுல்லாஹ் உடைய மனைவிமார்களின் ஒருவர் மைமுனா. அப்பொழுது இப்னு அப்பாஸுக்கு மைமுனா என்ன வேண்டும்? காலா. அம்மாவுடைய சகோதரி தான அதனால் இவருக்கும் வீட்டுக்குள் போவதற்கு அனுமதி இருந்தது. இவர் வந்துட்டார் அவங்க போய் ஓரமா படுத்துட்டாங்க. 
 
இவர் என்ன செய்தார் ரசூலுல்லாஹ் எல்லா வேலையும் முடித்துவிட்டு தலையணை போட்டு படுத்தார். இவர் என்ன செய்தார் ரசூலுல்லாஹ் உடைய தலையணையில் ஓரமாக தலை வைத்து படுத்துக்கொண்டார். எவ்வளவு பாசம் பார்த்தீங்களா அன்பு பார்த்தீங்களா அப்புறம் என்ன நடந்தது ரசூலுல்லாஹ் தூங்கிட்டாங்க. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் படித்த உடனே தூங்கிட்டாங்க.
 
இவர் தூங்கல. உங்க அக்காவும் அம்மாவும் உங்ககிட்ட படுத்திருந்தா நீங்க என்ன செய்வீங்க. கதை சொல்லு கதை சொல்லு நீங்க தூங்குற வரைக்கும் கதை சொல்லுன்னு ஓரளவுக்கு சகராத்தாக்கிட்டு அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்த உடன் நீங்கள் தூங்கிவிடுவீங்க. கடைசியில் அவர்கள் தூக்கம் போய்விடும்.
 
ரசூல் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் படித்த உடனே படுக்க விட்டுறாங்க ரசூலுல்லாஹ்வை தூங்க விட்டுறாங்க. இவர் தூங்கவே இல்லை. எவ்வளவு நேரம் தூங்க வில்லை. ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் இஷா தொழுது விட்டு படுத்துட்டு நடு இரவு ஏறக்குறைய 12 ஒரு மணிக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் எந்திரிக்கிறாங்க. 
 
அதுவரைக்கும் இவர் தூங்காமல் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்துக் கொண்டே இருக்கிறார். சுபஹானல்லாஹ் அந்த மாதிரி சின்ன பிள்ளைகள் எல்லாம் இந்த காலத்தில் இருந் தால் அவர்களெல்லாம் பெரிசாகி பெரிய இமாம் ஆகி விடுவார்கள். அந்த மாதிரி நீங்கள் ஆகணும். இன்ஷா அல்லாஹ்.   
 
அதுக்குத்தான் இந்த சம்பவத்தை சொல்கிறேன். நீங்கள் ஒவ்வொருத்தரும் என்ன நிய்யத் வைக்கணும்? என்ன ஆசை வைக்கணும் ?அல்லாஹ்வுக்கு நெருக்கமானவனாக அல்லாஹ்வுடைய தூதருக்கு நெருக்கமானவனாக இந்த மார்க்கத்தை உயிராக மதித்து அதைவிட உயர்ந்ததாக மதித்து தீனைக் கற்றுக் கொண்டு குர்ஆனை மனப்பாடம் செய்து அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு நான் இந்த மார்க்கத்தை எடுத்துச் சொல்வேன் என்ற மனசோடு உறுதியான எண்ணத்தோடு நீங்கள் குர்ஆனை மனப்பாடம் செய்தால், அந்த உறுதியான எண்ணத்தோடு நீங்கள் இருந்தால்” கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா உங்களை அந்த மாதிரி ஆக்கு வான். 
 
அல்லாஹ்வுடைய இந்த குர் ஆனை மனப்பாடம் செய்து மார்க்கத்தை கற்றுக் கொண்டு நானும் அதன் படி அமல் செய்து அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை சொல்லித் தரக்கூடியவனாகவும், அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூடியவனாகவும் நான் வரவேண்டும் என்ற அந்த உறுதி இருக்கணும். 
 
அல்லாஹ் மேல் நபி மேல் முஹப்பத் இருக்கணும். அப்படி இருந்தால் கண்டிப்பாக அல்லா ஹுத்தஆலா உங்களில் ஒவ்வொ ருவரையும் அதுபோன்ற இமாமாக அறிஞனாக அல்லாஹ் ஆக்குவான். ஆமீன் சொல்லுங்கள்.
 
இப்ப இப்னு அப்பாஸ் ரலி யல்லாஹு அன்ஹுமா என்ன செய்தார்? ரசூலுல்லாஹ் தூங்கிட்டாங்க. இவர் தூங்காம ரசூலுல்லாஹ்வை பார்த்துக் கொண்டே இருக்கார். கடைசியாக ரசூலுல்லாஹ் எந்திரிக்கிறாங்க. ஆனால், இவர் தூங்குற மாதிரி காட்டிகிட்டு இருக்காரு. 
 
ரசூலுல்லாஹ் இவர் தூங்குறாரு போல என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்  தூங்கல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் எந்திரிச்சாங்க.ஓதுன துஆவை ஓதுனாங்க. அதற்கு அப்புறம் வீட்டுக்கு வெளியில் சுய தேவைக்காக வேண்டி போனாங்க. பின்னாடியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துட்டு போறாரு. நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் சுய தேவையை நிறைவேத்துறாங்க.   
 
அல்லாஹ்வுடைய தூதரே! உங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து இருக்கேன். அவங்கநினைச் சுக்கிட்டாங்க பெரிய ஆள் யாரோ என்று, யார் என்று கேட்கிறார்கள்? நான்தான் இப்னு அப்பாஸ். ரசூலு ல்லாஹ் அந்த தண்ணீரை வாங்கிக்கொண்டு சுத்தம் பண்றாங்க. இன்னொரு தண்ணியோடு இருக்கிறார்கள். 
 
ரசூலுல்லாஹ் உளூச் செய்வதற்கு, ரசூலுல்லாஹ் உளூச் செய்வதற்கு தண்ணீர் ஊத்துறாங்க. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளுச் செய்து முடிக்கிறாங்க. இப்பொழுது இரவு உடைய நேரத்தில் இருக்கிறார்கள் ரசூலுல்லாஹ் உளூச் செய்து விட்டார்கள். எதற்காக வேண்டி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளூச் செய்திருக்கிறார்கள். தஹஜத்துக்காக வேண்டி. அந்த நேரத்திலே இப்னு அப்பாஸை அணைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறார்கள். என்ன துஆ கேட்டார்கள்”
 
 أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ دَخَلَ الخَلَاءَ، فَوَضَعْتُ له وَضُوءًا قالَ: مَن وضَعَ هذا؟ فَأُخْبِرَ فَقالَ: اللَّهُمَّ فَقِّهْهُ في الدِّينِ.
 
அல்லாஹ்வே! இந்த குழந்தை க்கு சிறுவனுக்கு உன்னுடைய வேதத்தைக் கற்றுக்கொடு. அல்லாஹ்வே! இந்த சிறுவனுக்கு உனது வேதத்தினுடைய விளக்கத் தை கற்றுக்கொடு.
 
அளவுக்கு அதிகமாக ஞானத்தை அறிவை கற்றுக்கொடு. யா அல்லாஹ்! இவருக்கு குர்ஆனை கற்றுக்கொடு. யா அல்லாஹ்! இவருக்கு குர்ஆனுடைய விளக்கத்தை கற்றுக்கொடு. தஹஜ்ஜத்துடைய நேரம் ரசூலுல்லாஹ் துஆ செய்கிறார்கள். அந்த துஆ அல்லாஹ் இடத்தில் கபுலாகிவிட்டது. இந்த துஆவை இப்னு அப்பாஸ் பெறுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் பாருங்கள்.
 
ரசூலுல்லாஹ்வுடைனே இருந்தார். ரசூலுல்லாஹ் தூங்குறாங்க இவர் தூங்காம முழிச்சுக்கிட்டு இருக்காரு.ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம் உடன் நடுராத்திரி யில் எழுந்திருக்கிறார். இன்றைக்கு சின்ன பிள்ளைகள் சுபஹுக்கு எழுந்திரிச்சா கூட எத்தனை பேர் ஒழுங்கா எந்திரிக்கிறாங்க? எத்தனை பேர் கோபப்படுவார்கள்? வீட்டுக்கு போனால் அத்தா எழுப் பும்போது அம்மா எழுப்பும் போது உடனே எழுந்திரிக்கணும். 
 
இங்க மதரசாவில் சுபஹு தொழுதுட்டு, வீட்டில் போய் என்னம்மா இப்படித் தான் ஹஜ்ரத் எழுப்புவார். நான் தூங்குறேன் மா அப்புறம் எழுந்தி ரிச்சு தொழுவுறேமா என்று சொன் னீங்கன்னா நீங்கள் முஹப்பத் தில் தொழுகவில்லை, தொழுதிங்க மதரசாவில் ஆனால், எப்படி தொழுகவில்லை நீங்கள் அல்லாஹ் உடைய முஹபத்தில் தொழுகவில்லை என்று அர்த்தம். 
 
உஸ்தாது காலையில் எழுப்பும் போது சுறுசுறுப்பாக எழுந்திருக் கணும். ஆசையோடு எழுந்திருக் கணும் அது எப்போ முடியும் அல்லாஹ்வுடைய முஹப்பத் இருந்தால், அல்லாஹ்வுக்கு தொழுகையில் மிகப் பிரியமான தொழுகை,
 
أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا
 
(நபியே!) சூரியன் (வானத்தின் நடுவிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக ஃபஜ்ர் உடைய தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17 : 78)
 
பஜர் தொழுகை அல்லாஹ்வுக்கு எவ்வளவு பிரியம் என்றால் அந்த தொழுகையில் நம்மோடு கலந்துகொள்ள வானவர்களை அல்லாஹ் இறக்கிவைக்கிறான். அந்தத் தொழுகைக்கு வானவர்களை இறக்கி வைத்து நிரப்ப மாற்றி விடுகிறான். மலக்குகள் கலந்து கொள்ளக்கூடிய தொழுகை ஃபஜ்ருடைய தொழுகையாகும். 
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  மீது எவ்வளவு பிரியம் வைத்திருந்தார்கள். அவர்களுடைய பிரியம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மட்டுமல்ல. அவர்களின் கல்வியின் மீது. மார்க்கத்தின் மீது அப்புறம் கொஞ்சம் வருஷத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்து விட்டார்கள்.  
 
ரசூலுல்லாஹ்விற்கு இறப்பு இருக்கா? இல்லையா? இருக்கு அவர்களும் மனிதர் தான். தரிக்கா கூட்டம் அவர்கள் சொல்லித் தருவார்கள் உங்களுக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மௌத்தே ஆகாத நபி என்று சொல்லித் தருவார்கள். அப்படி சொல்லக்கூடாது. ரசூலுல் லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மனிதர். அவர்களுக்கு மௌத் இருந்துச்சு. மௌத் ஆயிட்டாங்க. ரசூலுல்லாஹ் மனிதரா? ஒளியா? மனிதர். அவர்கள் சொல்லித் தருவார்கள் ரசூலுல்லாஹ் மனிதர் அல்ல ஒளி என்பார்கள். 
 
ரசூலுல்லாஹ் மட்டும் ஒளி என்று சொல்ல மாட்டார்கள். இறந்து போன எல்லோரையும் ஒளியுல்லாஹ் ஒளியுல்லாஹ் என்று சொல்வார்கள். அல்லாஹ்வுடைய ஒளி. அதாவது என்ன அர்த்தம்? அல்லாஹ்வை ஒளி என்று சொல்கிறோம் அல்லவா அவுலியாக்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய ஒளியில் போய் சேர்ந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். 
 
காஃபிர்கள் சொல்கிறார்கள் ஜோதியில் போய் கலந்துவிட்டார் என்று அது மாதிரி. இதெல்லாம் குஃபுர் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். இப்போ உங்களிடம் ஒருத்தர் கேட்கிறார் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று, நீங்கள் என்ன சொல்வீர்கள்?
 
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏
 
ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான். (அல்குர்ஆன் 20 : 5)
 
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
 
நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான்.
 
பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். (அல்குர்ஆன் 7 : 54)
 
எங்களுடைய ரப்பு அல்லாஹ் அர்ஷுக்கு மேலே இருக்கிறான். அவர்கள் என்ன சொல்வார்கள்? அல்லாஹ் எங்கேயும் இருக்கிறான் என்று சொல்வார்கள். இந்த தூணிலேயும் இருக்கிறான். காஃபீர்கள் சொன்ன மாதிரி அங்கே யும் இருக்கிறான். இங்கேயும் இருக்கிறான் என்று சொல்வார் கள். அப்படி சொல்லக்கூடாது அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அர்ஷுக்கு மேலே இருக்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன். 
 
அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கெல்லாம் இந்த அக்கீதாவை சிறு வயதிலேயே கற்றுக் கொடுப்பார்கள் ஈமானை சிறுவயதிலேயே கற்றுக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடைய ஈமான் பாதுகாப்பாக இருந்தது. 
 
லுக்மான் என்ற பெரிய அறிஞர் இருந்தார் அவர் தனது சிறு பிள்ளைக்கு அவர் சொல்கிற அறிவுரை அல்லாஹ்விற்கு ஷிற்க் செய்யாதீர்கள். ஷிற்க்குனா என்ன அல்லாஹ்விற்கு இணைவைப்பது. அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வது கூடாது. 
 
பக்கத்தில் காரைக்கால் நாகூரில் தர்கா இருக்கிறது. அதில் மக்கள் போய் என்ன செய்கிறார்கள். கபூரை போய் வணங்குகிறார்கள். எப்படி வணங்குறாங்க. அங்கே போய் சுஜுது செய்றாங்க. அங்கே போய் அவுலியா உங்கள் பரக்கத்தில் அல்லாஹ்விடம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
 
وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا  وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا‌  وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏
 
அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை. (அல்குர்ஆன் 6 : 107)
 
அல்லாஹ் நபியை பார்த்து சொல்கிறான், எனக்கும் அவர்களுக்கும் இடையில் நபியே நீர் பொறுப்பாளர் அல்ல. அவங்க அவங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு.
 
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ وَمَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ
 
பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், அதிலிருந்து (-அந்தப் பாவச்சுமையில் இருந்து) எதையும் சுமக்க முடியாது, அ(ழைக்கப்பட்ட ஆன்மாவான)து உறவினராக இருந்தாலும் சரியே (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுபவர்களைத்தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது. (அல்குர்ஆன் 35 : 18)
 
ஒருத்தருடைய பாவத்தை ஒருவர் சுமக்க முடியாது. இந்த மக்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் எல்லாம் பண்றது எல்லாம் பண்ணிட்டு அவ்லியாவிடம் போய் சொன்னால் அவுலியா பார்த்துப்பார். நாளை மறுமையில் எல்லோரும் வரும்போது யாரெல்லாம் அவுலியாவிடம் சொன்னார்களோ எல்லோரும் அவுலியாவிடம் போவார்கள். நீங்கள் என்னையா வணங்குனீங்க அவுலியாவிடம் போய் கேட்டுக்கோங்க என்று சொல்வான். அவர்களால் ஏதாவது செய்ய முடியுமா? ஈஸா அலைஹிஸ்ஸலாம் கையை தூக்கின மாதிரி தூக்கிடுவாங்க. யா அல்லாஹ் உன்னை வணங்கும் படி தான் நான் கூறினேன். 
 
இவர்கள் என்னை வணங்குவதற்கு நான் பொறுப்பாளி அல்ல என்று சொல்லிவிடுவார்கள். நீங்கள் எல்லாம் இப்பவே மனதில் உறுதிவைக்கணும். நான் பெரிய ஆளாக ஆனவுடன் இந்த மார்க்கத்தை நன்றாக படித்து இந்த மக்களுக்கெல்லாம் தாவா செய்வேன். இந்த மக்களுக்கெல்லாம் நான் தவ்ஹீதை எடுத்துச் சொல்வேன். என் குடும்பத்திற்கு எடுத்துச் சொல்வேன். இந்த மக்களை நான் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பேன். 
 
இதற்காக வேண்டி எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சிரமம் வந்தாலும் நான் பொறுத்துக் கொள்வேன். அந்த மாதிரி மனதில் உறுதி வரணும். வீரம் வரணும். சின்னப் பிள்ளைகள் எல்லாம் சாதாரணம கிடையாது. சின்னப் பிள்ளைகளுக்கு அல்லாஹ் வீரத்தை கொடுத்து இருக்கிறான். நல்ல அறிவை கொடுத்திருக் கிறான்.
 
அப்துல்லா இப்னு அப்பாஸு க்கு யாரு மேல பிரியம் அல்லாஹ் மேல் ரசூலுல்லாஹ் மேல் மார்க்கத்தின் மேல் மார்க்க கல்வியின் மேல். நீங்கள் குர்ஆன் மனப்பாடம் பண்றீங்களா, அடுத்து இன்ஷா அல்லாஹ் ஹதீஸ் படிப்பீங்களா, குர்ஆனுக்கு அடுத்து எதை மனப் பாடம் பண்ணனும். ஹதீஸை மனப்பாடம் பண்ணனும். அந்த மாதிரி தான் இப்னு அப்பாஸுக்கு என்ன வேலை என்றால் குர்ஆனை மனப்பாடம் பண்ணிட்டார். அபூபக்கரிடம் போய் ஹதீஸ் படிக்கிறது.
 
ரலியல்லாஹு அன்ஹு உமரிடம் ஹதீஸ் கேட்பது. உஸ்மான் கிட்ட ஹதீஸ் கேட்பது. அலியிடம் கேட்பது. இப்படி சஹாபாக்களை தேடித்தேடி ஹதீஸ் படிக்கிறார். அவருக்கு ஒரு சப்போர்ட் தேவைப்பட்டது கூட போறதுக்கு அப்போது ஒரு அன்சாரி சிறுவனை அழைத்துக்கொண்டு வா! நம்ம ரெண்டு பேரும் போய் கல்வி படிப்போம் என்கிறார். 
 
அதற்கு அந்த அன்சாரி பையன் ஆமா நம்ம தான் பெருசா படிச்சிட்டு போய் நம்மிடம் மக்கள் விளக்கம் கேட்கப் போறாங்களாக்கும். இவ்வளவு பேர் பெரியவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துப்பார்கள். நாம் வேலைக்கு போவோம் என்கிறார். 
 
இப்னு அப்பாஸ் பார்த்தார் இது என்னடா வம்பா இருக்கு சரி சரி நீங்கள் வேலைக்கு போறதா இருந்தால் போங்க. விளையாட போறதாக இருந்தால் போங்க. நான் கல்வி படிக்கப் போறேன். நான் இல்மு படிக்கப் போறேன் என்று சொல்லி ஒவ்வொரு சஹாபி வீட்டிலேயும் காத்திருந்து. கதவை தட்ட மாட்டாரு. அந்த சஹாபி வெளியே வரும்வரைக்கும்  காத்திருந்து அவர் பள்ளிவாசலுக்கு போகும்போது, அப்படியே அவர் கூட போகும் போது ஹதீஸ் மனப்பாடம் பண்ணிடுவார்.  
 
தொழுதுட்டு அவரோடு உட்கார்ந்து ஹதீஸ் மனப்பாடம் பண்ணிடுவார். இப்படி மதினாவில் இருந்த பெரிய சஹாபாக்களின் கல்வி எல்லாம் யாரிடம் வந்து சேருகிறது? இப்னு அப்பாஸ் ரலி யல்லாஹு அன்ஹுமா அவரிடம் வந்து சேருகிறது. இதில் இப்னு அப்பாஸை ரொம்ப பக்குவப் படுத்தி அவரை உருவாக்கியவர் யார் தெரியுமா? ரசூலுல்லாஹ் விற்குப் பிறகு, உமர் ஹத்தாப் ரலியல்லாஹு அன்ஹு. இந்த உமர் இப்னு அப்பாஸை உருவாக்குகிறார்.
 
ரசூலுல்லாஹ் உடைய வஃபாத்திற்கு பிறகு அபூபக்கர் உடன் ஒட்டிக்கிட்டார். அபூபக்கருடைய வஃபாத்திற்கு பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒட்டிக்கிட்டார். அவ்வளவு பிரியம் உமர் மேல, உமருக்கும் இவர் மேல் அவ்வளவு பிரியம். உங்களுக்கு உஷ்தாதுடைய பிரியம் வேண்டும் என்றால், நல்லா படிக்கிற பிள்ளையா இருங்க. 
 
அப்போது தான் உஸ்தாதுடைய பிரியம் கிடைக்கும். உங்களுக்கு உஸ்தாதுடைய அன்பு, உஸ்தாதுடைய துஆ கிடைக்கணும் என்றால் நீங்கள் எப்படி இருக்கணும்? படிப்பதில் ஆர்வமுள்ள பிள்ளையாக இருக்கணும்.  
 
விளையாடுவதிலேயும் ஊர் சுற்றுவதுலேயும் வெட்டியாக தூங்குவதிலேயும் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உஸ்தாதுடைய முஹப்பத் கிடைக்காது. உஸ்தாதுடைய துஆவும் கிடைக்காது. உஸ்தாதுடைய முகபத்தும் கிடைக்கவில்லை துஆவும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உருவாக முடியுமா? உருவாக முடியாது. 
 
அப்ப எந்த அளவுக்கு உமர் மேல முஹப்பத் உமரோடு நெருக்கமாக இருப்பார்கள் என்று சொன்னால் இவருடைய அறிவு, அறிவுடைய தேடல் ஆற்றலினால் உமர் ரலியல்லாஹு அன்ஹு எப்போதுமே அந்த சபையில் உட்கார்ந்தார்கள் என்று சொன்னால் அந்த சபையில் பெரிய பெரிய பத்ரு சஹாபாக்கள், உஹது சஹாபாக்கள், முஹாஜிர் அன்சாரி உடையதலைவர்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள்.    
 
அதில் ஒரு முக்கியமான இடம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும். அவர் அப்படியே 9 வயதிலிருந்து தாண்டி 15 வயது 16 வயது 17 வயதுகிட்ட இருக்கிறார். அவருக்கு தாடி கூட முளைத்திருக்காது. அங்கே சபையில் உள்ளவர்கள் எல்லாம் தாடி நரச்சு போய் நெஞ்சு வரைக்கும் தாடி உள்ளவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். 
 
தாடியே இல்லாத ஒரு சின்ன பையன் உமர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். எப்படி இருக்கும்? சில சஹாபாக்கள் எல்லாம் உமரிடம் போய் நேராகவே கேட்டு விடலாம். என்ன உமரே இந்த சின்ன பையன் மாதிரி எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். 
 
நாங்களும் இந்த சபையில் அவர்களை கொண்டு வரட்டுமா என்று கேட்கிறார்கள். இவருக்கு மட்டும் உங்களுடைய சபையில் அனுமதி கொடுத்திருக்கிறீர்களே, உட்கார வைத்திருக்கிறீர்களே என்று கேட்டார்? அதற்கு உமர் காத்துருங்கள் பண்ணுங்க விளக்கம் சொல்கிறேன் என்று சொன்னார் கள். அடுத்த நாள் என்ன செய்தார் கள் சூரத்துல் நஸ்ர்.
 
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
 
(நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால், (அல்குர்ஆன் 110 : 1)
 
அந்த சூராவை ஓதிவிட்டு இந்த சூரா உடைய விளக்கம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். யாரிடம்? அந்த பெரிய சஹாபாக்கள் எல்லோரிடமும், அப்போது அவர்கள் அல்லாஹ்வுடைய வெற்றிவரும். நிறைய பேர் முஸ்லிமாவார்கள். அப்போ நபிக்கு தவ்பா, இஸ்திஃபார் செய்யுங்கள் நிறைய தஸ்பீஹ் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொன்னான் என்று விளக்கம் சொல்கிறார்கள். எல்லோரிடமும் கேட்டுவிட்டு கடைசியில் யாரிடம் விளக்கம் கேட்கிறார்கள்?
 
இப்னு அப்பாஸ் நீ என்ன சொல்ற அப்படின்னு கேக்குறாங்க. இப்னு அப்பாஸ் ரொம்ப சாந்தமா சொல்றாரு. அல்லாஹுத்தஆலா தன்னுடைய நபியுடைய வயது முடிய போகிறது என்று இந்த சூராவில் சொல்கிறான் என்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹயாத்தா இருக்கும்போது தான் இந்த சூரா இறங்கியது. 
 
இந்த சூராவை இறக்கி அல்லாஹு ரசூலுல்லாஹ்விடம் ரசூலுல்லாஹ்வே உங்களுடைய வயது முடிய போகிறது என்று ரசூலுல்லாஹ்வின் மரணச் செய்தியை அல்லாஹுத்தஆலா இப்படி சொல்கிறான் சூசகமாக என்று சொன்னவுடனே அந்த சஹாபாக்களை பார்த்து உமர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் இவர் என்ன கருதுகிறார் இந்த சூராவிற்கு விளக்கமாக அதைத்தான் நானும் கருதுகிறேன் என்றார்கள். பார்த்தீர்களா எவ்வளவு அறிவு. கல்வியின் மேல் எவ்வளவு ஆசை அவர்களுக்கு,  
 
நமக்கு கல்வியின் மேல் எவ்வளவு ஆசை இருக்கிறது? நிறைய இருக்கணும். கொஞ்சோண்டு விளையாடனும். கொஞ்சோண்டு சேட்டை செய்யணும். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இருக்கணும். அப்படி இருந்தால்தான் நாம் பெரிய அறிவாளியாக, பெரிய கல்விமானாக, பெரிய அறிஞராக முடியும். எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதன் பக்கம் தான் அல்லாஹ் உங்களுக்கு வழி காட்டுவான். 
 
இப்னு அப்பாஸுக்கு எதில் ஆர்வம் இருந்தது? அவர் எல்லா பெரிய சஹாபாக்களிடமும் போய் படிச்சுக்கிட்டே இருப்பார். ரொம்ப அதிகமாக யாரிடம் பழகினார்கள் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா ரசூலுல்லாஹ்விற்கு பிறகு உமர் பாரூக். ஏனென்றால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அவ்வளவு கல்வி இருந்தது.
 
سَمِعْتُ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: بيْنَا أنَا نَائِمٌ، أُتِيتُ بقَدَحِ لَبَنٍ، فَشَرِبْتُ حتَّى إنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ في أظْفَارِي، ثُمَّ أعْطَيْتُ فَضْلِي عُمَرَ بنَ الخَطَّابِ قالوا: فَما أوَّلْتَهُ يا رَسولَ اللَّهِ؟ قالَ: العِلْمَ.
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். எனக்கு கனவில் பால் அல்லாஹ் கொடுத்தான் குடிச்சேன் குடிச்சேன் குடிச்சேன் அப்படி குடிச்சேன் அப்புறமா அதை நான் உமர்கிட்ட கொடுத்தேன். உமரும் குடிச்சாரு குடிச்சாரு குடிச்சாரு அவ்வளவு குடிச்சாரு. அதற்கு அப்புறம் மற்ற வர்களுக்கு வாங்கி கொடுத்தேன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் குடித்தார்கள். சஹாபாக்கள் கேட்கிறார்கள் யாரசூலுல்லாஹ் என்ன வித்தியாசமான கனவாக இருக்கிறது. என்ன விளக்கம் அதற்கு சொன்னார்கள்,
 
நான் இந்த கனவுக்கு விளக்கம் என்ன கண்டேன். அல்லாஹ் கனவில் கொடுத்த அந்த பால் கல்வியாகும். உமருக்கு அவ்வளவு கல்வி அல்லாஹ் கொடுத்தான். இமாம் புகாரி இந்த சம்பவத்தை பதிவு செய்கிறார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கு சூரா தஹ்ரீமில் ஒரு வசனத்தினுடைய விளக்கம் தெரியவில்லை அல்லது, விளக்கம் தெரிந்திருக்கிறது அதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 82
 
நீங்கள் இருவரும் திருந்தி விட்டால் தவ்பா செய்து விட்டால் உங்கள் இருவருடைய உள்ளங் களும் தூய்மையாகிவிடும் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் எந்த இரண்டு பேரை பார்த்து பேசுகிறானோ அந்த இரண்டு பேர் யார்? குர்ஆனை நாம் படிக்கும் போது இப்படித்தான் படிக்க வேண்டும். அல்லாஹ் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் இதில் என்ன அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹ் இப்படி சொல்லி இருக்கானே, இதில் யாரை பத்தி அல்லாஹ் சொல்கிறான்.
 
اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا قَالَ اَنّٰى يُحْى هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا  فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَه قَالَ كَمْ لَبِثْتَ‌ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا  فَلَمَّا تَبَيَّنَ لَه قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
 
அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். 
 
அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). 
 
இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 2 : 259)
 
அவருடைய உதாரணத்தைப் போல, அவர் ஊரை கடந்து சென்றால் அல்லாஹ் 100 ஆண்டு மௌத் ஆக்கினான். கேட்கணும் உஸ்தாத் கிட்ட உஸ்தாத் இவர் யாரு, எந்த நாட்டுக்காரர், எப்ப நடந்த சம்பவம். அந்த மாதிரி எல்லாத்தையும் கேட்க கேட்க தான் அறிவு வரும். இப்னு அப்பாஸ் சொல்கிறார்கள் உங்களுடைய அறியாமை போக வேண்டும் என்றால் நீங்க கல்விமான் இடத்திலே கேளுங்கள் சந்தேகத்தை கேட்கணும். விளக்கத்தை கேட்கணும்.  
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு எவ்வளவு  பிசியானவர்கள். யார் அவர்கள்? உலக முஸ்லீம் நாடுகளுடைய பெரிய தலைமை  ஜனாதிபதி அவர்கள் தான். ஹலி ஃபத்துல் முஸ்லிமீன், அமீருள் முஃமினின் அவர்கள் எவ்வளவு வேலை இருக்கும்.
 
அவர்களுக்கு தொழுகை, இபாதத், மக்களுக்கு தீர்ப்பு அவ்வளவு வேலை முன்னாடி மாதிரி இல்லை. எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கேட்டு தெரிஞ்சிப்பாங்க. இந்த ஆயத்துக்கு விளக்கம் கேட்பதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா 2 1 /2  வருஷம் உமரோடு கூட இருக்கிறார்கள். 
 
இந்த ஆயத்துக்கு அதுவும் இரண்டு பேர் யார் என்பதை கேட்டு தெரிந்து கொள்வதற்கு, கடைசியில் ஒரு கட்டத்தில்  நேரம் கிடைக்கல. உமர் ரலியல்லாஹு அன்ஹு அந்த வருஷம் ஹஜ்க்கு போறாங்க. 21/2 வருஷம் ஆகிவிட்டது. இந்த தேடுதலிலேயே உமரோடு இருக்கிறாங்க. வேலை செய்றாங்க. உமர் சொல்வதை எல்லாம் செய்றாங்க. ஆனால் டைம் கிடைக் கல பொறுமை. உஸ்தாதுடைய நேரத்தை பார்க்கணும். எப்போது அவருக்கு ஓய்வு. அதையெல்லாம் பார்த்து தான் கல்வி கற்றுக்கொள்ள வேண்டும்.
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு இப்னு அப்பாஸையும் கூப்பிடுகிறார்கள் ஹஜ்ஜுக்கு போறதுக்கு மக்காவுக்கு போறாங்க தவாப் முடிச்சாச்சு. உம்ரா முடிச்சாச்சு. ஹஜ்க்கு இஹ்ராம் கட்டி மினாவுக்கு போனாங்க. அரஃபா போனாங்க .முத்தலிஃபா வந்தாங்க. அப்புறம் திரும்ப மினாவுக்கு வந்தாங்க‌. ஹஜ் எல்லாம் முடிஞ்சிருச்சு. தவாப், சியாராத் முடிஞ்சிருச்சு. அப்புறம் மினாவில் மூன்று நாள் தங்கணும்.11, 12 ,13 அப்புறம் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கும். 
 
எல்லோரும் எங்கே போவார்கள் பாதி பேர் தவாப் சியாரத் போவார் கள். அப்புறம் ஒரு கட்டத்தில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் தொழுக வைக்கணும். அவர்கள் தான் இமாம் அவங்க தானே தொழுக வைக்கணும் ஃபர்ளுக்கு, தொழுக வைப்பதற்கு உளூச் செய்யப் போறாங்க. அப்போ கையில் தண்ணீர் நோட்டாவை எடுத்துக்கிட்டு கூடவே இப்னு அப்பாஸ் போறாங்க. நேரம் கிடைச்சிருச்சு. 
 
உமரோடு யாருமே இல்லாத நேரம் கிடைச்சிருச்சு. இப்னு அப்பாஸ் தண்ணீரை ஊத்துறாங்க. உமர் உளூச் செய்றாங்க. அப்படியே உளூவை முடிக்க முடிக்க அமீரில்முஃமினீன் நான் உங்களிடம் ஆயத்துக்கு விளக்கம் கேட்கணும். உமர் சாந்தமாக இருக்காங்க என்று தெரிந்தவுடன் அமீருல் முஃமினீன் நான் உங்களிடம் ஒரு ஆயத்தை பற்றி விளக்கம் கேட்கணும் கேட்கலாமா என்று கேட்கிறார்கள். அவசரமாக திரும்பி பார்த்துட்டு என்ன வசனம் என்று கேட்கிறார்கள். அல்லாஹ் இப்படி சொல்கிறானே அந்த இரண்டு பேர் யாரு? அந்த உளூவை முடிக்கிற நேரத்திலேயே உமர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள். 
 
ஆயிஷாவும் எனது மகள் கப்சாவும் என்று சொல்லிட்டு அந்த சம்பவத்தை இப்னு அப்பாஸுக்கு சொல்லிக் காட்டுகிறார்கள். இந்த நேரத்தில் அந்த சம்பவத்தில் உமரும் சம்பந் தப்படுகிறார்கள். தனது மகளுக்கு    ஆலோசனை சொல்வது.
 
எவ்வளவு பொறுமை கல்வி கற்றுக் கொள்வதில், ஒரு ஆயத் தை கற்றுக் கொள்வதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு உமருக்கு எத்தனை வருஷம் கூட இருந்து வேலை  செய்தார்? 2 1/2 வருஷம். நீங்கள் 2 1/2 வருஷத்தில் குர்ஆனையே மனப்பாடம் பண் ணிட்டு போயிடுவீங்க. சுபஹானல்லாஹ்!
 
நான் முதலில் என்ன சொன்னேன் உங்களையெல்லாம் யாருக்கு பிடிக்கும் என்று சொன்னேன்? ரசூலுல்லாஹ்விற்கு பிடிக்கும் என்று சொன்னேன். அதை சொல்லும் போது தான் அப்படியே உள்ளுக்குள் போய்ட்டோம். முஸ்லிமான சிறுவர்கள் என்ற அடிப்ப டையில் ரசூலுல்லாஹிவிற்கு நீங்கள் பிரியமானவர்கள். 
 
குர்ஆனை மனப்பாடம் செய்ய அந்த குர்ஆனை சுமக்க கூடியவர்கள் என்ற அடிப்படையில் நீங்கள் அல்லாஹ்வுக்கும் பிரியமானவர்கள். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் பிரியமானவர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்ளணும். உங்களுடைய நிய்யத்தை சரி பண்ணிக்கோங்க. நான் அல்லாஹ்வுக்காக குர்ஆனை மனப்பாடம் செய்கிறேன்.நான் தொழுகையில் ஓதுவதற்காக குர்ஆனை மனப் பாடம் செய்கிறேன். இரவு தொழுகையிலே ஓதுவதற்காக குர்ஆனை மனப்பாடம் செய்கிறேன்.     
 
ரமலானில் தொழுக வைத்து காசு வாங்குவதற்காக அல்ல. ஒரு பள்ளியில் இமாமத் செய்து காசு வாங்குவதற்காக அல்ல. நான் எனது தொழுகையிலே குர்ஆன் ஓதுவதற்காக. எனது ரப்பை நான் திருப்தி படுத்துவதற்காக. நான் குர்ஆனை மனப்பாடம் செய்கிறேன். இந்த நிய்யத் வைத்துக் கொள்வோமா.    
 
அடுத்ததாக என்ன செய்கிறோம். அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறோம். யா அல்லாஹ்! எனக்கு இந்த குர்ஆனை லேசாக்கி கொடு. குர்ஆனுடைய இல்மை லேசாக்கி கொடு. என்று கேட்போமா இன்ஷா அல்லாஹ்!
 
அடுத்ததாக நாம் படிக்கக் கூடிய காலத்தில் ஒழுக்கமாக இருக்கணும். யாருக்கும் தொந்தரவுதரக்கூடாது. அதில் குறிப்பாக உஸ்தாதுக்கு அறவே தொந்தரவு தரக்கூடாது. கூட படிக்கிறவர்கள் யார்கிட்டேயும் அவர்களை காயப்படுத்துவது மாதிரி, மனசு காயப்படுத்துற மாதிரி, உடல் காயப் படுத்துற மாதிரி அவர்களுடன் சண்டை சச்சரவு செய்யவே கூடாது. யாரையும் திட்டக்கூடாது. யாரையும் ஏசக்கூடாது. கோபமாக பேசக்கூடாது. நாம் விட்டுக் கொடுப்பவர்களாக இருக்கணும். மற்ற மாணவர்களோடு நீங்கள் பிரியமுள்ளவர்களாக இருக்கணும். இருப்பீங்களா இன்ஷா அல்லாஹ்!
 
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு சொன்னேனே அதிலிருந்து உங்களுக்கு படிப்பினை கிடைத்ததா? ஞாபகம் வைத்துக் கொள்ளணும். எப்போ தெல்லாம் சைத்தான் வந்து உங்களுக்கு சோம்பேறித் தனத்தை சொல்றானோ அப்ப நீங்கள் என்ன செய்யணும்? அந்த சைத்தானை தூக்கி போட்டு மிதிச்சு போடா எனக்கு முன் மாதிரி இப்னு அப்பாஸ் என்று சொல்லிவிட்டு சைத்தானை தூக்கி போட்டு மிதிக்கணும். இஸ்திஃபார் ஓதணும். அவூது பில்லா ஓதணும். அல்லாஹ் விடத்தில் துஆ கேட்டுக்கிகொண்டே இருக்கணும்.
 
رَبِّ زِدْنِي عِلْمًا ربي اشرح لي صدري اللهم علمني اللهم إني أسالك علما نافعا இந்த மாதிரி துஆவை கேட்டுக்கிட்டே இருக்கணும். குறிப்பாக சுஜுதில் கேட்க மறந்துடாதீங்க. குறிப்பாக தஹஜத்தில் கேட்க மறந்துடாதீங்க இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் சுபஹானல்லாஹ் உங்கள் அனைவரையும் இந்த தீனை சுமந்தவர்களாக, குர்ஆனை சுமந்தவர்களாக, குர்ஆனுடைய கல்வியை சுமந்தவர்களாக ஆக்கி அருள்வானாக! உங்களுடைய இந்த கல்வியை கொண்டு உங்களுக்கும் நற்பலனை கொடுத்து பிற மக்களுக்கும் அல்லாஹுத் தஆலா நற்பலனை கொடுப்பானாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
 
                  أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/