HOME      Khutba      ஸுன்னாவை உயிர்ப்பிப்போம் | Tamil Bayan - 861   
 

ஸுன்னாவை உயிர்ப்பிப்போம் | Tamil Bayan - 861

           

ஸுன்னாவை உயிர்ப்பிப்போம் | Tamil Bayan - 861


ஸுன்னாவை உயிர்பிப்போம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஸுன்னாவை உயிர்பிப்போம்
 
வரிசை : 861
 
இடம் : (JAQH மஸ்ஜிது, தொண்டி
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 02-02-2024 | 28-07-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக! அல்லாஹுத்தஆலா உடைய கண்ணியத்திற்குரிய தூதரும் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மீதும், நேசத்திற்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும் என்று அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக! உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் இம்மை மறுமையின் வெற்றியை வேண்டியவனாக! இவ்வுலக வாழ்க்கையின் காரியங்களை எல்லாம் அவன் நமக்கு இலகுவாக்கி நன்மையாக்கி தர வேண்டும் என்று வேண்டியவனாகவும்!
 
நமக்கெல்லாம் மறுமையில் அவனுடைய அருளாலும், கருணையாலும், அவனுடைய அன்பினாலும் சொர்க்க வாழ்க்கையை தர வேண்டும் என்று வேண்டியவனாக! இந்த ஜும்ஆவுடைய உரையை ஆரம்பம் செய்கிறேன்! அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அவன் பொருந்தி  கொண்ட நல்லடியார்களின் என்னையும் உங்களையும் அல்லாஹுத்தஆலா சேர்த்து அருள் புரிவானாக! பாலஸ்தீனத்தில் காசாவில் பாதிக்கப்படக்கூடிய முஃமின்கள் முஸ்லிம்களுக்கு அல்லாஹுத்தஆலா நல்லுதவியை விரைவாக செய்து அருள்வானாக! அந்த புனித பூமியை முஸ்லிம்களுக்கு அல்லாஹுத்தஆலா மீட்டுக் கொடுப்பான் என்றும் அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக! இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்!. 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா நமக்கு ஒரு மார்க்கத்தை வழங்கி இருக்கிறான், அந்த மார்க்கத்திற்கு ஒரு வழிகாட்டியையும் அல்லாஹுத்தஆலா வழங்கியிருக்கிறான். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம் கொடுக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்ட மார்க்கம் வழங்கப்பட்டவர்கள். இந்த மார்க்கத்தில் எந்த குறையும் இல்லை. இந்த மார்க்கம் முழுமையாக்கப்பட்டது.
 
முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்கள் புரிந்து கொண்டாலும் சரி, புரியவில்லை என்றாலும் சரி இந்த இஸ்லாமிய மார்க்கம் தான் நம்முடைய வணக்க வழிபாடுகளுக்கும் நிறைவானது, பரிபூரனமானது, வழிகாட்டக் கூடியது.
 
முஸ்லிம்களுக்கு இந்த இஸ்லாமிய மார்க்கம் தான் அவர்களுடைய அரசாட்சிக்கும், அரசியலுக்கும் வழிகாட்டக் கூடியது, நிறைவானது. நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கும் இந்த மார்க்கம் தான் நிறைவானது, பரிபூரனமானது, வழிகாட்டக் கூடியது.
 
நம்முடைய தொழில்துறைகளுக்கும், கொடுக்கல் வாங்கல்களுக்கும், இந்த மார்க்கம் தான் நிறைவானது, வழிகாட்ட கூடியது, பரிபூரணமானது. ஒரு முஸ்லிம் தனக்குத் தேவையான அத்தனை வழிகாட்டுதல்களையும் அவனுடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் சொல் வழியாகவும், செயல் வழியாகவும் அவன் பெற்றுக் கொள்வான்.
 
இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லாம் வகையான வழிகாட்டுதல்களை பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனை எப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது வரை அனைத்தையும் சொல்லாலும், செயலாலும் நமக்கு வழிகாட்டி, அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா இந்த மார்க்கத்தை நமக்கு நிறைவு செய்து கொடுத்திருக்கிறான்.
 
கண்ணியத்திற்குரிய தோழர்களே! அல்லாஹுத்தஆலா நமக்கு அற்புதமான வேதத்தை கொடுத்திருக்கிறான் நாம் வேண்டுமானால் இந்த வேதத்தின் அருமையை புரியாதவர்களாக இருக்கலாம்”, இதனுடைய மதிப்பை உணராதவர்களாக இருக்கலாம்”, நம்மில் பலருக்கு இதை ஓதுவதற்கோ, சிந்திப்பதற்கோ, ஆராய்வதற்கோ, படிப்பதற்கோ, புரிவதற்கோ இதுவரை நேரமில்லாமல் இருந்திருக்கலாம்” அது நம்முடைய துர்பாக்கியமாகத்தான் இருக்கிறது. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக! பாதுகாப்பானாக! இந்த வேதம் எத்தகைய வேதம் என்றால்?
 
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَه خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
 
இந்த குர்ஆனை நாம் ஒரு மலையின் மீது இறக்கி இருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் முற்றிலும் பணிந்ததாகவும் பிளந்து விடக்கூடியதாகவும் அதை நீர் கண்டிருப்பீர். இந்த உதாரணங்கள், இவற்றை மக்களுக்கு நாம் விவரிக்கிறோம், அவர்கள் சிந்திப்பதற்காக (அல்குர்ஆன் 59 : 21)
 
நபியே! உங்களுக்கு இந்த வேதத்தின் உடைய மதிப்பு, சக்தி, இன்னும், வல்லமை என்னவென்று தெரியுமா? இந்த வேதத்தை ஒரு மலையின் மீது நாம் இறக்கி இருந்தால் அது எப்படி சுக்கு நூறாக வெடித்து சிதறுகிறது இன்னும், அல்லாஹ்வின் பயத்தால் அதை எப்படி நடு நடுங்குகிறது என்பதை நீங்கள் அந்த மலையை பார்த்து இருப்பீர்கள், கண்டிருப்பீர்கள்”.
 
لَّرَاَيْتَه خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ
 
அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்: நபியே! அந்த மலையில் இந்த குர்ஆன் எத்தகைய அல்லாஹ்வுடைய பயத்தை ஏற்படுத்தி, அந்த பயத்தால் மலை துடிதுடிப்பதால், அது நொறுங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்” 
 
சகோதரர்களே! இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பட்ட வார்த்தையாகும். வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கக்கூடிய அல்லாஹ்,
 
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
 
அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கின்ற ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கின்ற) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. (அதில்) பாக்கியம் பெற்ற ‘ஜைத்தூன்' மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகிறது. அது கீழ்நாட்டில் உள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. 
 
அந்த எண்ணெயை நெருப்புத் தொடாவிடினும் அது பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகிறான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன் தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24 : 35)
 
இந்த குர்ஆன் அல்லாஹ்வுடைய பரிசுத்தமான அவனுடைய அந்த ஒளியிலிருந்து வெளிப்பட்டது. ஆகவே, தான் அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை பிரகாசம் என்று சொல்கிறான்.
 
يَاأَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ
 
வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது. (அல்குர்ஆன் 5 : 15)
 
அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகிறான்: அல்லாஹ்விடம் இருந்து உங்களுக்கு ஒரு ஒளி, ஒரு வெளிச்சம், தெளிவான வேதம் வந்திருக்கிறது. அந்தோ பரிதாபம் இத்தகைய புனிதமான ஒரு வேதம், அறிவான வேதம்,
 
يس وَالْقُرْآنِ الْحَكِيمِ
 
யா சீன். ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 36 : 1, 2)
 
தெளிவான அத்தாட்சிகளுடைய வேதமாகும். ஆதாரங்கள் நிரம்பிய வேதமாகும். அறிவியலுக்கு ஆதாரம் வேணுமா? ஆன்மீகத்திற்கு ஆதாரம் வேண்டுமா? இம்மை மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரம் வேண்டுமா? ஆதாரங்களால் நிரப்பப்பட்ட இந்த வேதம்;
 
அந்தோ பரிதாபம் நிலை! என்னவென்றால் இன்று சடங்குகளில் ஓதப்படும் மந்திரங்களைப் போன்று பயன்படுத்தப்படுகிறது. பிறரிடத்தில் சடங்குகளுக்காக ஓதுவார்கள் அல்லவா? அது போன்ற மந்திர வார்த்தைகளை போன்று நம்மில் சிலர் இந்த குர்ஆனை மாற்றிவிட்டார்கள். இந்த குர் ஆன் இறக்கப்பட்டது எதற்காக? ஓதப்படுவது எதற்காக?
 
لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ
 
உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்). (அல்குர்ஆன் 36 : 70)
 
அல்லாஹ் சொல்கிறான்: நாம் இந்த வேதத்தை உயிருள்ளவரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக இறக்கினோம்.
 
وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ‏
 
(நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள். (அல்குர்ஆன் 42 : 7)
 
நபியே! இந்த குர்ஆனை ஓதி உலக மக்களுக்கு நற்செய்தியை சொல்வதோடு, அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! மக்களை இந்த குர்ஆனை கொண்டு நேர்வழியின் பக்கம் அழைப்பீராக! இந்த குர்ஆனை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக!. ஆக இதற்காகவல்லவா? இறக்கப்பட்டது.
 
ஆனால், இன்று இந்த வேதம் வெறும் சடங்குகளுக்கு ஓதப்படகூடிய மந்திரங்களாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இதை ஏன் ஓதுகிறோம், எதற்காக ஓதுகிறோம், எதை இது வழிகாட்டுகிறது என்பதை எல்லாம் மறந்திருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த குர்ஆன் எப்படி உயர்ந்ததோ, கண்ணியமானதோ, புனிதமானதோ அதேபோன்று இந்த குர்ஆனுக்கு அல்லாஹுத்தஆலா நமக்கு வானத்திலிருந்து ஒரு ஆசிரியரை இந்த குர்ஆனுக்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். 
 
மேலும் அல்லாஹ்வின் அனுமதியோடு அந்த ஆசிரியர் பூமியில் உள்ள ஒரு மாணவரை தேர்ந்தெடுத்தான். அந்த மாணவரை உலக மக்களுக்கெல்லாம் ஒரு அற்புதமான, ஒரு ஆசிரியராக அல்லாஹுத்தஆலா ஆக்கினான். 
 
வானவர்களிலேயே மிக உயர்ந்த வானவரையும், தன்னுடைய வார்த்தையாகிய குர்ஆனுக்கு ஆசிரியராக அல்லாஹு தேர்ந்தெடுத்தான். அன்பானவர்களே! சூரத்துல் தக்வீரை படித்து பாருங்கள்” 
 
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
 
(மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக! தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக! செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.  (அல்குர்ஆன் 81 : 15, 16, 17, 18, 19)
 
அல்லாஹ் எத்தனை சத்தியங்கள் செய்கிறான்; செய்துவிட்டு சொல்கிறான்;” இது கண்ணியமான உயர்ந்த ஒரு வானவரால் போதிக்கப்பட்ட வேதமாகும்.
 
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
 
இந்த குர்ஆனை போதிப்பதற்காக எப்படி ஓத வேண்டும்? குர்ஆனை எப்படி உச்சரிக்க வேண்டும்? அரபி மொழியிலேயே அவ்வளவு அழகாக அரபி மொழி பேசக்கூடியவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
அரபி மொழியின் அந்த உச்ச சந்த காலத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கும் இந்த குர்ஆனுடைய உச்சரிப்பு கற்றுக் கொடுக்கப்பட்டது என்றால்? நாம்  இந்த குர்ஆனுடைய உச்சரிப்பை கற்றுக் கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
பலர் இன்று குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால், அந்த குர்ஆனுடைய அரபி மொழியின் உச்சரிப்புக்கும் அவர்கள் ஓதுவதற்கும் சம்பந்தமே இருக்காது. இதை அதனுடைய உச்சரிப்போடு, அதனுடைய அந்த நிறுத்தல், தொடருதல் எங்கே இழுக்க வேண்டும், எங்கே அழுத்த வேண்டும், எங்கே மென்மையாக சொல்ல வேண்டும், எங்கே உயர்த்தி சொல்ல வேண்டும் என்ற அந்த அழகிய தோனியோடு தான் ஜிப்ரீல் அலைஹி ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அல்லாஹுத்தஆலா அத்தகைய ஆசிரியரை தேர்ந்தெடுத்தான்.
 
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ 
 
நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும். அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர். (அல்குர்ஆன் 81 : 19, 20, 21)
 
இவரைப் பற்றி அல்லாஹ் அவ்வளவு புகழ்கிறான் அல்லாஹுத்தஆலா ஒருவரை புகழ்கிறான் என்றால் என்ன சொல்வது? சுபஹானல்லாஹ்! அதுவும் இத்தனை வர்ணிப்புகளை கொண்டு,
 
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
 
அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணியம்மிக்க வானவர், மலக்குகள் இடத்தில் மலக்குகளால் கீழ்பனியப்படுபவர் வானவர் மலக்குகளின் தலைவர் அல்லாஹுவிடத்திலே சங்கைக்குரியவர் அந்த வானவரால் இந்த முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டது.
 
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى
 
 (ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார். (அல்குர்ஆன் 53 : 5, 6)
 
ஜிப்ரீல் உடைய அழகையும், அவருடைய வலிமையும் அல்லாஹுத்தஆலா வர்ணிக்கிறான். அழகான தோற்றமுடைய, வலிமையான உடல் அமைப்புடைய இந்த வானவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த குர்ஆனை போதித்தார்கள்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! குர்ஆனையும் அல்லாஹ் கொடுத்து, அந்த குர்ஆனுக்கான ஆசிரியரையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். எப்படிப்பட்ட ஆசிரியரை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான் அவன் தேர்ந்தெடுத்து அனுப்பிய நபிமார்களிலேயே அவனுக்கு மிகவும் விருப்பமான நபியை, இறுதி நபியாக ஆக்கி, நபிமார்களுக்கு எல்லாம் இமாமாக ஆக்கி, அந்த நபியை நமக்கு ஆசிரியராக ஆக்கி அல்லாஹுத்தஆலா கொடுத்தான்.
 
அருமையை உணர்ந்தோமா? இதனுடைய மதிப்பை புரிந்தோமா? குர்ஆன் என்றால் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதற்குதான், குர்ஆன் என்றால் இறந்தவர் வீட்டில் சடங்காக ஈஸால் ஸவாபுக்காக ஓதப்படுவதற்க்கு, இத்துடன் நமக்கும், குர்ஆனுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டது.
 
முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றால் வருடத்தில் ஒரு  மாதத்தில் அவர்களுடைய மாதம் என்ற பெயர் வைத்து, அதில் ஒரு மௌலுதை ஓதினோமா, ஒரு மீலாதை கொண்டாடினோமா. அவ்வளவு தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நமக்கும் இடையில் உண்டான தொடர்பு அதோடு முடிந்து விட்டது.
 
அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களே! நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் சென்று என்ன பதில் சொல்வோம்? இதற்காகவா இந்த குர்ஆன் இறக்கப்பட்டது? இதற்காகவா இந்த இறைத்தூதர் அனுப்பப்பட்டார்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவின் 10 ஆண்டுகளிலேயே 19 பெரிய யுத்தங்களையும் 65 சிறிய போர்களையும் சந்தித்தார்களே! எதற்காக?
 
லட்சக்கணக்கான ஹதீஸ்களை நமக்காக சொல்லி சென்றார்களே! குர்ஆனுடைய 6624 வசனங்கள் நமக்கு எதற்காக? நம்முடைய வாழ்க்கை எல்லாம் நம்முடைய மன விருப்பத்திற்கு ஏற்ப சடங்குகளாக ஆக்கிக் கொண்டு, இதுதான் மார்க்கம் என்று இருந்தால் நம்மை விட கைசேதம் உடையவர்கள் நஷ்டவாளிகள் யாரும் இருக்க முடியாது. அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று உலகத்தில் முஸ்லிம்கள் சந்திக்கின்ற அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு தூரமாகி இருப்பது தான் காரணம் என்றால் அது தான் சரியான வார்த்தையாகும். 
 
உஹது போரை நினைத்து பாருங்கள்? உஹது போரில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு 50 சஹாபாக்களை தேர்ந்தெடுத்து, அந்த உஹது மைதானத்தில் ஒரு மலையில் நிறுத்தினார்கள், அந்த மைதானத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்க, இந்த 50 தோழர்களை அந்த மலையின் உச்சியில் நிறுத்தி, பிறகு, என்ன நடந்தாலும், எது நிகழ்ந்தாலும் நீங்கள் மலையிலிருந்து இறங்கக்கூடாது என்னுடைய கட்டளை வருகிறவரை, நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கின்றவரை நீங்கள் மலையில் இருந்து இறங்கக்கூடாது என்று சொன்னார்கள்; 
 
இன்னும், நாங்கள் எல்லாம் கொல்லப்பட்டு பறவைகளைக் கொத்தி தின்பதை பார்த்தாலும் கூட நீங்கள் மலையில் இருந்து இறங்கக்கூடாது என்று சொன்னார்கள்; என்ன நடந்தது? உஹது போர் காலையில் ஆரம்பமானது மதியத்திற்குள் காஃபிர்கள் தோற்று ஓடிவிட்டார்கள்,
 
அன்பானவர்களே! 3000 காஃபிர்கள் முழு தயாரிப்போடு வந்த 3000 போர் வீரர்களான காஃபீர்கள் மைதானத்தை காலி செய்து விட்டு, வந்த பொருட்களை எல்லாம் விட்டுவிட்டு, புறம்முதுகு காட்டி ஓட்டம் பிடித்தார்கள், வெறும் 700 சஹாபாக்கள் ஆனால், இவர்களை விட காஃபிர்கள், நான்கு மடங்குக்கு மேல் அதுவும் ஓரிரு நாட்களில் திடீரென போருடைய அறிவிப்பு வந்த பிறகு தயாரானவர்கள்.
 
கையில் எது இருக்கிறதோ அதோடு மைதானத்திற்கு கிளம்பியவர்கள், அங்கே ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை பின்பற்றப்பட்டது, அல்லாஹுத்தஆலா வெற்றியை கொடுத்தான்.
 
இந்த 50 தோழர்கள் கீழே என்ன நடக்கிறது என்று அந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தார்கள். அமீர் இடத்தில் சொன்னார்கள்; அமீரே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை கொடுத்து விட்டான்” காஃபிர்கள் எல்லாம் ஓடி விட்டார்கள், முஸ்லிம்கள் கனிமத்துகளை எடுக்கின்றார்கள். வாருங்கள் நாமும் சேர்ந்து அவர்களோடு கனிமத்தை பொறுக்குவோம் என்று சொன்னார்கள்.
 
- அன்பானவர்களே! எங்கே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸ் மறுக்கப்படுகிறதோ, அதற்கு மாற்று அர்த்தம் கற்பிக்கப்படுகிறதோ, அதற்கு பொருந்தாத மாற்று அர்த்தம் மாற்றுப் பொருள் அங்கே புகுத்தப்படுகிறதோ அங்கே குழப்பம் தான் மிஞ்சும் எனவே இது பெரிய ஆதாரமாகும். அங்கே முஸ்லிம்களுக்கு அழிவும், ஆபத்தும், நஷ்டமும் தான் மிஞ்சும் -. 
 
அப்போது அமீர் சொன்னார் ரசூலுல்லாஹ் உடைய கட்டளையை நினைத்துப் பாருங்கள்” அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்; வாருங்கள் ஓடுவோம்” இப்போது காஃபீர்கள் ஓடிவிட்டார்களே!, அவர்கள் யாரும் இல்லையே!, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காஃபிர்கள் தென்படவில்லையே!, புறமுதுகிட்டு ஓடிவிட்டார்களே! கனிமத்துகள் பொறுக்கப்படுகிறதே! நம்முடைய பங்கு என்னாவது? 
 
அமீர் மீண்டும் சொல்கிறார்; வேண்டாம்! வேண்டாம்! ரசூலுல்லாஹ் உடைய கட்டளையை நினைத்துப் பாருங்கள்” அவர்களின் மறு கட்டளை வராதவரை இந்த இடத்தை விட்டு நாம் நகரக்கூடாது” என்றல்லவா அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு சொன்னார்கள்” 
 
அங்கே சிலர் ஆம் சரிதான் ஆனால், அது போரில் வெற்றி கிடைக்கின்ற வரை, கனிமத்துகள் கொடுக்கப்படாத வரை இப்படியாக ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டு; அப்போது 37 தோழர்கள் அந்த மலையின் உச்சியிலிருந்து இறங்கி விடுகிறார்கள்.
 
13 தோழர்கள் மட்டுமே அந்த மலையின் உச்சியில் நிலைத்திருக்கிறார்கள், புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்த ஹாலித் இப்னு வலீத் வெகுதூரம் சென்றதற்கு பிறகு, திரும்பி பார்க்கிறார் முஸ்லிம்களுடைய முதுகுப்புறம் பாதுகாப்பற்றதாக இருக்கிறது, உடனே தனது படையை 200 குதிரை வீரர்களோடு திருப்பிக் கொண்டு வருகிறார், அந்த மலையின் உச்சியில் ஏறி வந்து அந்த பதிமூன்று தோழர்களை கொலை செய்து விட்டு அவர் முஸ்லிம்களை பின்புறத்தில் இருந்து தாக்குகின்றார்,
 
அபுசுஃபியானுக்கு செய்தி சொல்லி விட்டார்” நீ முன்பக்கமாக வாருங்கள் என்று அவரும் வந்து விடுகிறார் முஸ்லிம்கள் நடுவில் மாட்டிக் கொள்கிறார்கள், எழுபது சஹாபாக்கள் கொல்லப்பட்டார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலை உடைக்கப்பட்டு விடுகிறது, அவர்களுடைய முன் பல் உடைக்கப்பட்டு விட்டது, அவர்களது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து, அவர்கள் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.
 
قتل محمد முஹம்மது கொல்லப்பட்டார் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரப்பப்படுகிறது கணியத்திற்குரிய சகோதரர்களே! ஒரு நாளில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஒரு கட்டளை மீறப்பட்டதால், அதற்கு தவறான அர்த்தம் கொடுக்கப்பட்டதால், இந்த உம்மத்துடைய முஸ்லிம்களிலேயே உயர்ந்த சிறந்த தலைமுறையாகிய அந்த சஹாபாக்களின் சமுதாயமே இவ்வளவு பெரிய விளைவை கொடுத்தார்கள் என்றால் நினைத்துப் பாருங்கள்” நாம் இன்று சந்திக்கக்கூடிய துன்பங்கள் இந்த சோதனைகளுக்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்?. 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனை கொடுத்து இந்த குர்ஆனுக்குரிய வழிகாட்டியாகிய முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நமக்கு அனுப்பி, அவர்களை நமக்கு தலைவராக, நபியாக, வழிகாட்டியாக, அழகிய முன்மாதிரியாக, நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கு முன்மாதிரியாக, நம்முடைய ஆன்மீகத்திற்கு முன்மாதிரியாக, நம்முடைய அரசியலுக்கு முன்மாதிரியாக, நம்முடைய மஸ்ஜித்திற்கு இமாமாக முன்மாதிரியாக நம்முடைய வாழ்க்கையின் அத்தனை பகுதிகளுக்கும் அவர்களை அல்லாஹுத்தஆலா முன்மாதிரியாக தேர்ந்தெடுத்து பொருந்திக் கொண்டான்.
 
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
 
எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 33 : 21)
 
திட்டமாக அல்லாஹ்வின் தூதரில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறான்; எந்த ஒரு முஸ்லிமும் அல்லாஹ்வுடைய தூதரை தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டானோ அவனுக்கு அல்லாஹுத்தஆலா அவனுடைய ஈமானை நிரப்பமாக்கி விடுகிறான்,
 
அவனுக்கு அல்லாஹுத்தஆலா வீரத்தை கொடுக்கின்றான், அவனுக்கு அல்லாஹுத்தஆலா கண்ணியத்தை கொடுக்கின்றான், வழி கேட்டிலிருந்து அவன் பாதுகாக்கபடுவான் என்று அவனுடைய நேர்வழிக்கு அல்லாஹுத்தஆலா பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கொடுக்கப்படக்கூடிய வெகுமதி என்ன? அல்லாஹ்வுடைய அந்த உத்தரவாதம் என்ன?
 
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
 
(மேலும்) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)து தான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தான் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24 : 54)
 
நீங்கள் இந்த முகமது ரசூலுல்லாஹ்வை பின்பற்றினால்? உங்களுக்கு நேர் வழி கிடைக்கும், ஹிதாயத் கிடைக்கும்” நீங்கள் ரசூலுல்லாஹு உடைய ஹதீஸை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறக்கணித்துவிட்டு அல்லது, மனதிற்கு பிடித்ததை ஏற்றுக் கொண்டு, உங்களுக்கு பிடிக்காததையோ அல்லது, உங்களுக்கு புரியாதையோ அல்லது, உங்களுக்கு விளங்க முடியாததையோ நீங்கள் தூக்கி எறிவீர்களையானால் அதை ஒதுக்குவீர்களையானால் அதை விமர்சிப்பீர்களேயானால் அங்கும் அல்லாஹ் உடைய எச்சரிக்கை இருக்கிறது.
 
لَا تَجْعَلُوا دُعَاءَ الرَّسُولِ بَيْنَكُمْ كَدُعَاءِ بَعْضِكُمْ بَعْضًا قَدْ يَعْلَمُ اللَّهُ الَّذِينَ يَتَسَلَّلُونَ مِنْكُمْ لِوَاذًا فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
 
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும். (அல்குர்ஆன் 24 : 63)
 
எந்த மக்கள் இந்த நபியின் உடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ, அவர்கள் பயந்து கொள்ளட்டும், அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும், அவர்களை குழப்பம் பிடித்துக் கொள்ளும் பித்னா மார்க்கத்தில் தடுமாறி விடுவார்கள்.
 
عَذَابٌ أَلِيمٌ
 
அல்லது, அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு கடுமையான ஒரு தண்டனை வரப்போகிறது என்பதை அவர்கள் பயந்து கொள்ளட்டும் என்பதாக அல்லாஹ் கூறிகிறான். 
 
நீங்கள் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும் அந்த நேரத்தில், 
 
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ
 
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1 : 6)
 
அன்பானவர்களே! என்றாவது الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ என்பதற்கு சஹாபாக்கள், தாபியீன்கள் தபவுத் தாபியீன்கள், குர்ஆனுடைய விரிவுரையின் இமாம்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தேடி இருக்கிறீர்களா? தப்சீர் இப்னு கஸீர் எடுத்து படித்து பாருங்கள்” உங்களது கைகளுடைய கைகள் எட்டக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது.
 
الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை என்று விளக்கம் சொல்கிறார். எனவே, அதுதான் இஸ்லாமாகும். இஸ்லாம் என்பது என்ன? ரசூலுல்லாஹ் உடைய வழிமுறையாகும். சுன்னாவிற்குள் குர்ஆன் அடங்கிவிடுகிறது.
 
அன்பானவர்களே! இன்று யாராவது நாங்கள் குர்ஆனை கொண்டு ஹதீசை உரசிப் பார்ப்போம் குர்ஆனுக்கு ஒத்து வந்தால் ஹதீஸை எடுத்துக் கொள்வோம், குர்ஆனுக்கு ஒத்து வரவில்லை என்றால் ஹதீஸை ஒதுக்கி விடுவோம், புறக்கணிப்போம் என்று சொன்னார்ககளையானால்? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! மஹா பெரிய வழிகேதாகும், அந்த குர்ஆனை போதிப்பதற்கு தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டார்கள், குர்ஆனை விளக்குவதற்கு தான் நமக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ்களை சொன்னார்கள். 
 
ஆனால், நூறு ஆண்டுகளுக்கு பின்னால் வந்துவிட்டு நம்முடைய சிற்றறிவைக் கொண்டு குர்ஆனை புரிந்து கொண்டு, அந்த குர்ஆனை வைத்து ரசூலல்லாஹ்வுடைய ஹதீஸை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் உரைகளாக இந்த குர்ஆன் கொடுக்கப்படவில்லை, ரசூலுல்லாஹ்வை பின்பற்ற வேண்டும் என்பதாக குர்ஆன் நமக்கு வழிகாட்டுகிறது.
 
ஒரு வசனமா நூற்றுக்கணக்கான வசனங்கள் அல்லாஹ்வோடு சேர்த்து சொல்கிறான், அல்லாஹ்வோடு பிரித்து சொல்கிறான். 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
 
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள்" இன்னும், நீங்கள் ரசூலுக்கு கீழ்படியுங்கள் பிரித்து சொல்கிறான்” பல இடங்களில் இவ்வாறாக கூறுகிறான்;
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ
 
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்; இபாதத் அல்லாஹ் ஒருவனுக்கு தான் ஆனால், إطاعة கீழ்படிதல் என்று வரும்பொழுது அல்லாஹ்வுக்கும் கீழ்ப்படிந்தாக வேண்டும், அல்லாஹ்வுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்தாக வேண்டும்” இது அல்லாஹ்வுடைய கட்டளை என்று அல்லாஹ்வுடைய தூதர் சொன்னால் மட்டுமே நமக்கு தெரியும்.
 
ஆகவே தான் அல்லாஹுத்தஆலா சொன்னான்:
 
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ  وَمَنْ تَوَلّٰى فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ‏
 
எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்.ஆகவே, (நபியே! உம்மை) எவர்களும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
 
தூதருக்கு நீங்கள் கீழ்படிந்தால் தான் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தவர்களாக ஆகுவீர்கள்.”
 
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ  وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَاءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏
 
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். (அல்குர்ஆன் 4 : 64)
 
நாம் ரசூலை அனுப்புவதே அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்குத்தான். எப்படி குர்ஆனில் ஆட்சேபிப்பது மகாபெரிய குற்றமோ குஃப்ருக்கு சமமான குற்றமோ, அதுபோன்று தான் ரசூலல்லாஹ் உடைய ஹதீசில் ஆட்சேபனை செய்வது.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அடுத்த அல்லாஹ் சுபஹானஹூதஆலா ரசூலுல்லாஹ்வை பின்பற்றினால் நமக்கு என்ன கிடைக்கும் என்று சொல்கிறான்:
 
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
 
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.'' (அல்குர்ஆன் : 3:31) 
 
அல்லாஹ்வுடைய அன்பு நமக்கு இருக்குமேயானால், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால்? நபியை பின்பற்றுங்கள் فَاتَّبِعُوْنِىْ என்பதாக கூறினான். 
 
அன்பான சகோதரர்களே! ஒரு முஃமின் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் முழுமையாக அனைத்து காரியங்களில் அவர் ஒருவரை பின்பற்றுவதற்கு தகுதியான ஒருவர் இருக்கிறார் என்றால் முஹம்மத் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.
 
அவர்களைத் தவிர நம்முடைய ஆசிரியரோ, ஆலிமோ, தலைவரோ, முஃப்தியோ, இமாமோ யாராக இருந்தாலும் சரி, அங்கு அவர்கள் விஷயத்தில் வேண்டுமானால் நிபந்தனை இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் கட்டுப்படலாம், இந்த விஷயத்தில் கட்டுப்பட முடியாது என்பதாக, ஆனால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் நீங்கள் கட்டுப்பட்டால் தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்.
 
ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்தை பின்பற்றுவதால் ஒரு முஃமினுக்கு கிடைக்க கூடிய மிகப்பெரிய பாக்கியம் என்ன? அல்லாஹ்வுடைய அன்பு கிடைக்கப்படுகிறது. எந்த அல்லாஹ் உடைய அன்பைக்கொண்டு சொர்க்கம் செல்ல முடியுமோ, மறுமையின் வெற்றி கிடைக்குமோ அவை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை பின்பற்றுவதின் மூலமாக அந்த அன்பு கிடைக்கிறது. அதற்கு பிறகு, உங்களது பாவங்களை எல்லாம் மன்னித்து விடுவான் என்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
 
அன்பான சகோதரர்களே! இதற்கு மீறி ஒருவன் ரசூல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வழிமுறையை ஒதுக்குவனே ஆனால், அவனுக்கு ரசூலுல்லாஹுடைய சுன்னத் பிரியமாக இல்லை என்றால், நபியை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அல்லது, ஹதீஸ் அவருக்கு தெளிவானதற்கு பிறகும், ஹதீஸை ஒதுக்குவாரேயானால் அவரை குறித்த எச்சரிக்கையையும் அல்லாஹ் சொல்கிறான்; 
 
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا
 
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (அல்குர்ஆன் 33 : 36)
 
இந்த வசனம் எப்போது இறங்குகிறது? ஸைனத் பின் ஜஹஷ் என்ற தன்னுடைய உறவு பெண்ணை தன்னிடத்தில் அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவருக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்துக் கொடுக்க ஆசைப்பட்டார்கள்.
 
ரசூலுல்லாஹ் உடைய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உறவுக்காரப் பெண், குறைஷி வம்சத்தை சேர்ந்த உயர்ந்த பெண், அந்த நேரத்தில் நான் யோசித்துக் கொள்கிறேன் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறாக அந்த ஜைனத் பின்த் ஜஹஷ் சொன்னார்கள்; நான்! இவ்வளவு உயர்ந்த குலத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கிறேன், 
 
எனவே, உரிமை இடப்பட்ட ஒரு அடிமைக்கு நான் திருமணம் முடிக்கப்படுவதா என்பதாக ஜைனத் பின்த் ஜஹஷ் சொன்னார்கள்; அவ்வளவுதான் இதற்கு அல்லாஹ் வசனத்தை இறக்கினான்; முஃமினான ஆணுக்கும், மூமினான பெண்ணுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டால், அல்லாஹ்வுடைய தூதர் கட்டளையிட்டால் அதற்கு கீழ்படியாமல் அவர்கள் தங்களுக்கென்று ஒரு விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதி இல்லை.
 
யார் அல்லாஹ்விற்கு மாறுசெய்கிறானோ, யார் அல்லாஹ்வுடைய தூதருக்கு மாறுசெய்கிறானோ அவன் தெளிவான வழிகேட்டிலேயே சென்றுவிட்டான். ஒரே ஒரு விஷயத்தில் நான் யோசித்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு இவ்வளவு கடுமையான வசனம் இறக்கப்பட்டது என்றால், 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று நம்மில் இரண்டு கூட்டத்தை பார்க்கிறோம் எவ்வளவு தான் ஹதீஸை ஓதினாலும், சுன்னா என்று சொன்னாலும், இது பித்அத் என்று நிரூபித்தாலும், இது மார்க்கத்தில் இல்லாத புதுமையான சடங்குகள் என்று சொன்னாலும் ஹதீஸை எல்லாம் தூக்கி தூரமாக வையுங்கள்” எங்களுடைய ஊர்க்கலாச்சாரம் என்ன? எங்களுடைய ஊர் சடங்கு என்ன? எங்களுடைய சம்பிரதாயம் என்ன என்று பேசக்கூடிய இவர்களுடைய நிலைமையை யோசித்துப் பாருங்கள்” 
 
மற்றொரு பக்கம் இன்னொரு கூட்டம்; ஹதீஸ் தான் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால், இந்த ஹதீஸை நாங்கள் அமல் செய்ய முடியாது, ஏன்? இது குர்ஆனுக்கு முரண்படுகிறது, இது எங்களுடைய இமாமுடைய, எங்களுடைய ஆலிமுடைய கருத்துக்கு இது முரண்படுகிறது.
 
அல்லது, அறிவியலுக்கு முரண்படுகிறது அல்லது, இது தத்துவத்திற்கு முரண்படுகிறது என்று ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை அவ்வளவு சீப்பாக, மட்டமாக ஆக்கி தங்களுடைய சிந்தனையை, தங்களுடைய காலத்து மக்களின் அறிவியலை, தங்களது காலத்து மக்களின் தத்துவத்தை உயர்த்துக்கின்றார்களே!
 
இந்த வசனத்திற்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதாக நினைத்துப் பாருங்கள்”?
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இறுதியாக ஒரு வசனத்தை கூறி நிறைவு செய்கிறேன் அல்லாஹுத்தஆலா நமக்கு சொல்கிறான்;
 
مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான். (அல்குர்ஆன் 59 : 7)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு எதை கொடுத்தார்களோ அதைப்பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்” அதை உறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்” எதிலிருந்து உங்களை தடுத்தார்களோ! அதை விட்டு விலகி விடுங்கள்” 
 
அன்பான சகோதரர்களே! இதுதான் நம்முடைய பாதுகாப்பு, இதுதான் நம்முடைய கண்ணியம் ,இதுதான் நம்முடைய மார்க்கமாகும்.
 
கீழ்ப்படிதல் இந்த இரண்டை தான் குர்ஆன் நமக்கு கற்றுத் தருகிறது. அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதல், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்ப்படிதல், எதில் சஹீஹான ஹதீஸ்களை கொண்டு, ஸஹிஹான அறிவிப்பு தொடரோடு நமக்கு கிடைத்து விடுகிறதோ அதை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்”, அதை நாம் பின்பற்ற வேண்டும்”, அதை நாம் அமல் செய்ய வேண்டும்”, அதை நாம் படிக்க வேண்டும்”, அதை நாம் பரப்ப வேண்டும்”. 
 
أما بعدُ فإن خيرَ الحديثِ كتابُ اللهِ, وخيرَ الهديِ هديُ محمدٍ صلَّى اللهُ عليهِ وسلَّمَ, وشرًّ الأمورِ محدثاتُها وكلَّ بدعةٍ ضلالةٌ [ورد بزيادةٍ] وكلَّ ضلالةٍ في النارِ
 
இதற்கு மாற்றமாக ஒவ்வொரு சடங்குகளையும், ஒவ்வொரு சம்பிரதாயங்களையும் எந்தவிதமான அனாச்சாரமாக இருக்கட்டும், அனைத்து அனாச்சாரங்களும் புதுமையே! ஒவ்வொரு புதுமையும் வழிகேடுகள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எச்சரித்தார்கள்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 867
 
 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகைய ஒரு சமுதாயத்தை நாம் கட்டி எழுப்புவதின் மூலமாக இந்த கல்வியை மக்களுக்கு தொடர்ந்து பரப்புவதின் மூலமாக நம்முடைய வளரும் தலைமுறையினருக்கு குர்ஆனையும், சுன்னாவையும் சரியான வழிமுறைகளை போதிப்பதின் மூலமாகத்தான் ஒரு வலிமையான, உறுதியான வெற்றியை நோக்கி செல்லக்கூடிய இம்மை மறுமை வாழ்க்கையின் கண்ணியத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும், கட்டி எழுப்ப முடியும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அத்தகைய ஒரு சமுதாயமாக நாம் மாறுவதற்கு நம்முடைய வரும் தலைமுறையை அத்தகைய ஒரு சமுதாயமாக உருவாக்குவதற்கும் அருள் புரிவானாக!. 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/