HOME      Khutba      சோதனைகளை கடந்து வந்த சமுதாயம்! | Tamil Bayan - 864   
 

சோதனைகளை கடந்து வந்த சமுதாயம்! | Tamil Bayan - 864

           

சோதனைகளை கடந்து வந்த சமுதாயம்! | Tamil Bayan - 864


சோதனைகளை கடந்து வந்த சமுதாயம் 
 
தலைப்பு : சோதனைகளை கடந்து வந்த சமுதாயம் 
 
வரிசை : 864 
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 16-02-2024 | 06-08-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக! அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும் என்று வேண்டியவனாக! 
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் நேர்வழியை வேண்டியவனாக! மறுமையின் உயர்ந்த சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக! இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் சுபஹானஹூதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பானாக! நம்முடைய கடன்களை அடைப்பானாக! நம்மை நோய்வாய் பட்டவர்களுக்கு சுகம் அளிப்பானாக! காஸா முஸ்லிம்களுக்கு அல்லாஹுத்தஆலா விரைவான, முழுமையான, பரிபூரணமான உதவியை செய்துருள்வானாக! 
 
அவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த ஜியுனிச யூதர்களுக்கு கடும் தண்டனையை அல்லாஹுத்தஆலா கொடுப்பானாக! அல்லாஹ் சுபஹானஹூதஆலா அந்த இஸ்ரேலை கேவலப்பட்டவர்களாகவும், தோல்வியடைந்தவர்களாகவும், அந்த புனித பூமியில் இருந்து வெளியேற்றுவானாக! முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், ஈமானிய சகோதரத்துவத்தையும் தந்தருள்வானாக ஆமீன்! 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த சமுதாயத்தை சோதித்துக் கொண்டே இருப்பான். நாம் சோதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய தலைமுறை சோதிக்கப்படலாம். நமது முன்னோர் சோதனை இல்லாமல் வாழ்ந்திருந்தால் நாம் சோதிக்கப்படலாம். கண்டிப்பாக இந்த சமுதாயத்திற்கு சோதனை இருக்கிறது. சோதனையை கொண்டு அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா என்ன நாடுகிறான்? 
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இந்த உலகம் தான் இறுதியானதாக இருந்தால்? இந்த உலகத்தை அல்லாஹுத்தஆலா முஃமின்களுக்கு சொர்க்கமாக ஆக்கி இருப்பான். மாறாக நமக்கு இறுதியானது, நிலையானது மறுமை வாழ்க்கையாகும்.
 
 
وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ
 
இவ்வுலக வாழ்க்கை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தவிர இல்லை. நிச்சயமாக மறுமை வீடு - அதுதான் நிரந்தரமான (வாழ்க்கையை உடைய)தாகும். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! (அல்குர்ஆன் 29 : 64)
 
அல்லாஹுத்தஆலா சொல்கிறான்: நிச்சயமாக மறுமை தான் நிரந்தரமானது. அந்த மரணத்திற்கு பிறகு, உள்ள வாழ்க்கை தான் உண்மையானது. அந்த வாழ்க்கையை அல்லாஹுத்தஆலா முஃமின்களுக்காக, நம்பிக்கையாளர்களுக்காக மட்டும் பரிசுத்தமாக வைத்திருக்கிறான்.
 
சகோதரர்களே! எவ்வளவு அழகாக நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 
 
الدُّنْيا سِجْنُ المُؤْمِنِ، وجَنَّةُ الكافِرِ
 
முஃமினுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று சொன்னார்கள்; காஃபிருக்கு இந்த உலகம் சொர்க்கப் பூங்கா என்று சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2956
 
அல்லாஹுத்தஆலா நம்பிமார்களேயே சோதித்தான் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்கள் யாருக்கு வஹியை இறக்கினானோ, வேதத்தை இறக்கினானோ, யார் பாவமே செய்யாத சமுதாயமாக இருந்தார்களோ, மேலும் அல்லாஹ்வை முழுமையாக வணங்கக்கூடிய சமுதாயமாக இருந்தார்களோ, அந்த நம்பிமார்களே சோதிக்கப்பட்டார்கள்.
 
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
 
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்த சோதனைகள்) போன்று உங்களுக்கு (சோதனைகள்) வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் (இலகுவாக) நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு கொடிய வறுமையும் நோயும் ஏற்பட்டன. இன்னும், “அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்)?‘’ என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.’’ (அல்குர்ஆன் 2 : 214)
 
அல்லாஹ் கேட்கிறான்! நீங்கள் சொர்க்கத்திற்குள் சென்று விடலாம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு சொர்கம் இலகுவானதா? முன் சென்றவர்களுக்கு வராத குழப்பங்கள், பிரச்சனைகள், சோதனைகள் உங்களுக்கு வராமல் நீங்கள் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று நினைக்கிறீர்களா?
 
مَسَّتْهُمُ الْبَأْسَاءُ
 
அவர்களுக்கு கடுமையான வறுமை, பஞ்சம் ஏற்பட்டது. அல் பஃசா என்பதற்கு இன்னொரு பொருள் யுத்தங்கள்” எதிரிகளால் அவர்கள் சூழப்பட்டார்கள்.
 
وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا
 
நோய் நொடியில் சிக்கினார்கள், இன்னும், காஃபிர்களால் அச்சுறுத்தப்பட்டார்கள்.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! காஃபிர்களால் அச்சுறுத்தப்படாமல் எந்த நபியும் இல்லை. ரசூல்மார்கள் இன்னும், நபிமார்களிலேயே மிக உயர்ந்த அந்தஸ்து அல்லாஹ் கொடுக்கப்பட்ட ஐந்து நபிமார்கள் ஆவார்கள்.
 
அவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம், இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம், மூசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம், ஈசா அலைஹி ஸலாத்துவ ஸலாம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஐந்து நபிமார்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்”, இந்த ஐந்து இறைத் தூதர்களும் காஃபிர்களால் மிகப்பெரிய கொடுமைக்கு, அச்சுறுத்தல்களுக்கு, வேதனைகளுக்கு, பிரச்சனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றால் மற்ற நபிமார்களுடைய வரலாறைப் பற்றி என்ன சொல்வது? 
 
அல்லாஹ்வின் அடியார்களே! சோதனை என்பது மட்டும் இல்லை என்றால்? போலிகளும், பிரயோஜனம் அற்றவர்களும், நயவஞ்சகர்களும், பொய்யர்களும், உண்மையாளர்களாகவே கருதப்பட்டிருப்பார்கள். சோதனை என்பது ஓன்று இல்லாமல் இருந்திருந்தால் முனாஃபிக்குகளும் இன்னும், பொய்யர்கள், நயவஞ்சகர்கள் அதாவது காலை வாறக்கூடியவர்கள், சமயத்தில் நழுவி ஓடக்கூடியவர்கள் முஃமின்களுக்கு பிரச்சனை என்றால் சிரிப்பார்களே! அப்படி பட்டவர்கள் எல்லோரும் ஒன்றாக முஃமின்களாக ஆகி இருப்பார்கள்.
 
அல்லாஹ் கேட்கிறான்;
 
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
 
“நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா? (அல்குர்ஆன் 29 : 2)
 
அல்லாஹ் சொல்கிறான்; மக்கள் எண்ணி கொண்டார்களா? ஈமான் கொண்டோம் என்று அவர்கள் சொல்லிவிட்டாள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? 
 
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
 
திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆக, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான். இன்னும், நிச்சயமாக பொய்யர்களையும் அவன் அறிவான். (அல்குர்ஆன் 29 : 3)
 
உங்களுக்கு முந்தியவர்களை திட்டமாக சோதித்து இருக்கிறோம்.” கடுமையாக சோதித்து இருக்கிறோம்” அல்லாஹு அக்பர்! கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா இந்த உலகத்தில் உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்று பிரித்து விட விரும்புகிறான். 
 
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏
 
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!” (அல்குர்ஆன் 41 : 30)
 
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்க மாட்டோம், எனவே அதற்காக அவர்கள் கொல்லப்பட்டாலும் சரியே, அவர்கள் தங்களுடைய நாடுகளில் இருந்து துரத்தப்பட்டாலும் சரியே அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட மாட்டோம் என்று இந்த தீனில் உறுதியாக யார் இருப்பார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள்.
 
சகோதரர்களே! இன்று நம்முடைய குழப்பம் எங்கே இருக்கிறது என்றால்? சுகமாக வாழக்கூடியவர்களை பார்த்து, வசதியாக வாழக்கூடியவர்களை பார்த்து அல்லாஹ்வுடைய அருளுக்குரியவர்கள் என்றும், சிரமத்தில் உள்ளவர்களை பார்த்து அல்லாஹ்வுடைய அருள் அவர்களுக்கு இல்லை என்றும், மேலும் அவர்களை அல்லாஹ் கைவிட்டு விட்டான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா! இங்கே தான் நம்முடைய சிந்தனை கெட்டு இருக்கிறது. நம்முடைய குர்ஆனிய பார்வை குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா முஃமின்களுக்கு இந்த உலகத்தை கொடுப்பான், ஆட்சியையும் அல்லாஹ் கொடுப்பான், அதிகாரத்தையும் அல்லாஹ் கொடுப்பான், வசதியான வாழ்க்கையும் அல்லாஹ் கொடுப்பான் அதுவும் அல்லாஹ்வுடைய அருளாகும்.
 
ஆனால், இங்கே நாம் புரிய வேண்டியது என்ன? அது கொடுக்கப்பட்டு விட்டாள்! அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள்” ஆட்சியை கொடுக்கப்பட்டதால், வசதி கொடுக்கப்பட்டதால் அவர்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்கள் இனிமேல் அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களுக்கு பிரச்சனை இல்லை, அவர்களது ஈமான் கெடாது, அவர்களது மார்க்கம் பலவீனம் அடையாது, அவர்களெல்லாம் சொர்க்கவாசிகள் என்று நினைத்து விடாதீர்கள்” அவர்களெல்லாம் இந்த சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்று எண்ணி விடாதீர்கள்.” 
 
சகோதரர்களே! இந்த உலகத்தில் வறுமையை விட பெரிய சோதனை செல்வமாகும், நெருக்கடிகளை விட பெரிய சோதனை வசதியாகும், வறுமை, பிரச்சனை, குழப்பம், எதிரிகளால் சூழப்படுவது அதைவிட மிகப்பெரிய சோதனை ஒருவருக்கு ஆடம்பரமான, வசதியான வாழ்க்கை கொடுக்கப்படுவதாகும்.
 
ஏன் தெரியுமா? சிரமங்கள் ஒரு முஃமினை அல்லாஹ்விடத்தில் கண்டிப்பாக நெருக்கமாக்கும், ஒரு முஃமினை அல்லாஹ்விற்கு முன்னால் அழ வைக்கும், ஒரு முஃமினுக்கு கஷ்டமானது தன்னை அடிமை என்றும், மேலும் அவன் அல்லாஹ்வின் பக்கம் தேவை உள்ளவன் என்பதையும் அந்த அடியானுக்கு உணர வைக்கும்.
 
ஆனால், செல்வம் அப்படியல்ல, ஆட்சி அதிகாரம் அப்படி அல்ல, வசதியான வாழ்க்கை அப்படி அல்ல, வசதியான வாழ்க்கையில் ஈமானோடு இருப்பது மிகப்பெரிய ஒரு போராட்டம் தேவையாக இருக்கிறது, மிகப்பெரிய ஒரு உறுதி தேவையாக இருக்கிறது.
 
فَوَاللَّهِ لا الفَقْرَ أَخْشَى علَيْكُم، ولَكِنْ أَخَشَى علَيْكُم أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كما بُسِطَتْ علَى مَن كانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது சஹாபாக்களை பார்த்து சொன்னார்கள்; நான் உங்கள் மீது வறுமையை பயப்படவில்லை மாறாக நான் உங்கள் மீது இந்த உலகத்தை தான் பயப்படுகிறேன்!. அந்த உலகம் உங்களுக்கு விசாலமாக்கப்பட்டு விடுமோ, வசதிகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டு விடுமோ என்பதை நினைத்துதான் பயப்படுகிறேன் என்று சொன்னார்களே! ஏன் சொன்னார்கள்? அப்படி அந்த உலக வசதி உங்களுக்கு கிடைக்கும் போது அதில் நீங்கள் போட்டி போடுவீர்கள், எப்படி முந்திய மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிறகு, அந்த உலகம் அவர்களை அழித்ததை போன்று உங்களையும் அழித்துவிடும் என்பதாக பயப்படுகிறேன்.
 
அறிவிப்பாளர் : அம்ரு இப்னு அவ்ஃப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3158, குறிப்பு 1) 
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! செல்வம், ஆட்சி, அதிகாரம் இது ஒரு வகையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மிகப்பெரிய சோதனையாகும். ஆகவே, தான் அல்லாஹ் சுபஹானஹூதஆலா நபிமார்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தான்.
 
எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹுத்தஆலா அரசாங்கத்தை கொடுத்து விடவில்லை. மாறாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த சமுதாயத்தை சோதனைக்காகவே தேர்ந்தெடுத்து இருக்கிறான். 
 
அன்பானவர்களே! நமக்கு இமாம் யார்? இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம். அவர்களைப் பின்பற்றும் படி தான் அல்லாஹுத்தஆலா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிடுகிறான். இப்ராஹிம் நபி யார்? சோதனைக்காகவே படைக்கப்பட்டவர், சோதனைக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
 
இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.” (அல்குர்ஆன் 2 : 124)
 
மார்க்கத்தின் கடுமையான சட்டங்களைக் கொண்டு அல்லாஹ் சோதித்தான், காஃபிர் ஆட்சியாளனை கொண்டு அல்லாஹுத்தஆலா அவர்களை சோதித்தான், தன்னுடைய நகர மக்கள் எல்லோருமே அவருக்கு எதிரியாக ஆகி விட்டார்கள். தன்னந்தனியாக நின்று அல்லாஹ்வுடைய தவ்ஹீதில் உறுதியாக இருந்தார்கள்.
 
சகோதரர்களே! இன்று பொருளாதாரமில்லாமல் இருப்பதா பிரச்சனை? நம்முடைய ஈமான் எங்கே சென்று விட்டது.  அன்பானவர்களே! குர்ஆனுடைய ஈமான் இருக்கிறதா? ஹதீஸ் உடைய ஈமான் இருக்கிறதா? இந்த வசதியான வாழ்க்கை கொடுக்கப்படுவது இருக்கிறதே ஒரு முஃமினை அவனுடைய மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வதற்கு அவன் தள்ளப்படுகிறான்.
 
எதை பயந்து தன்னுடைய வசதியான வாழ்க்கை பறிபோகி விடுமோ என்று ஒரு முஃமின் தன்னுடைய மார்க்கத்தை விட்டு தூரமாகுவதற்கு தயாராகி விடுகிறான். எதனால்? இந்த வாழ்க்கை வசதி அவனுக்கு குறைந்து விடுமோ என்று ஒரு முஃமின் தன்னுடைய ஈமானிய சகோதரத்துவத்தை, தன்னுடைய இஸ்லாமிய சகோதரத்துவத்தை கேள்விக்குறியாக? ஆக்கி விடுகிறான்.
 
யூத, கிறிஸ்துவர்களோடு தன்னுடைய நட்பை பெரிது படுத்துவதற்கு, செல்வத்தின் காரணமாக உறுதிப்படுத்துவதற்கு, ஆழப்படுத்துவதற்கு தயாராகி விடுகிறான். அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு உதாரணத்தையும் நமக்கு அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்; அல்லாஹுத்தஆலா இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கையில் அவ்வளவு படிப்பினையை நமக்கு வைத்திருக்கிறான்;
 
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
 
(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை யாருக்கு கொடுத்தோமோ அவனுடைய செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழன்று கொண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். ஆக, அவன் வழிகெட்டவர்களில் (-மூடர்களில்) ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 7 :  175)
 
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
 
இன்னும், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர், அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரங்களை விவரிப்பீராக. (அல்குர்ஆன் 7 : 176)
 
மிகப்பெரிய ஒரு அறிஞர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அத்தாட்சிகள் கொடுக்கப்பட்டவர் என்பதாக அல்லாஹ் அவரைப் பற்றி  குர்ஆனில் சொல்கிறான்; அப்படி சொல்லப்பட்டவர் அவரோ பாம்பு எப்படி தன்னுடைய சட்டையை கழட்டி வெளியேறுமோ அதுபோன்று அவர் அந்த அத்தாட்சிகளில் இருந்தும் இன்னும், ஈமானிலிருந்தும் வெளியேறி விட்டான்.
 
அன்பானவர்களே! அவன் அல்லாஹ் இல்லை என்று சொல்லிவிட்டானா? அல்லாஹ்வை நிராகரித்து விட்டானா? இல்லை மாறாக அவனுடைய பிரச்சினை என்ன? இந்த உலக மோகத்திற்கு அடிமையாகி விட்டான், காசு பணத்தின் மீது அவனுக்கு ஆசை வந்தது, தன்னுடைய மன இச்சையின் பின்னால் சென்று விட்டான். இன்னும் நாம் நாடி இருந்தால் இந்த அத்தாட்சிகள் மூலமாக அவனது கண்ணியத்தை உயர்த்தி இருப்போம். ஆனால், அவனுடைய உள்ளத்தில் உலக மோகம் ஏறிவிட்டது என்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
 
சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா ஈமான் கொடுக்கப்பட்டதற்கு பிறகு, இஸ்லாம் கொடுக்கப்பட்டதற்கு பிறகு, ஒருவன் வழி கெடுவானையானால், அவர்களுக்கு அல்லாஹ் சொல்லக்கூடிய உதாரணம் ரொம்ப கேவலமான உதாரணமாக இருக்கும், அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்; இவனுக்கு உதாரணம் நாயுடைய உதாரணத்தைப் போன்றாகும்.
 
فَمَثَلُه كَمَثَلِ الْـكَلْبِ‌ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ‏
 
இன்னும், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர், அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரங்களை விவரிப்பீராக. (அல்குர்ஆன் 7 : 176)
 
இவனுடைய உதாரணம் நாயின் உதாரணம் அதை நீங்கள் அடித்து விரட்டினாலும் நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு ஓடும், அதை விட்டாலும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடும். அப்படித்தான் அந்த உலகத்தை பார்த்து அவன் பணம், காசு, உலகம் என்பதாக ஏங்கிக் கொண்டே இருப்பான். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று உலகம் முஸ்லிம்களுடைய நிலையை நினைத்துப் பாருங்கள்” ஈமானிய சகோதரத்துவத்தை விட்டு விட்டோம், இஸ்லாமிய உணர்வு நம்மிடமிருந்து குறைந்து கொண்டே போகிறது. ஒரு முஃமின் இடத்தில் என்ன ஈமானிய உணர்வு, இஸ்லாமிய உணர்வு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானோ! அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. 
 
இந்த உள்ளமெல்லாம் உலகத்தை முன்னோக்கி கொண்டே இருக்கிறது, உலக ஆசா பாசங்களை முன்னோக்கிக் கொண்டே இருக்கிறது, தன்னுடைய உலக வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வரை எங்களுக்கு தேவைப்படும். இதனால் என்னுடைய உலக வாழ்க்கை வசதிக்கு பாதிப்பு என்று சொன்னால் மார்க்கத்தை அப்படியே கழட்டி விட்டு ஓடக்கூடிய முஸ்லிம் சமுதாயமாக இருக்கிறோம். 
 
தவ்ஹீதில் சமரசம், சுன்னாவில் சமரசம், இஸ்லாமிய கலாச்சாரத்தில் சமரசம், இப்படியாக ஷிர்க்கை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள், குஃபூருடைய கலாச்சாரத்தை உள்வாங்க தயாராகி விட்டார்கள், இஸ்லாமிய சகோதரத்துவத்தை முறித்து, நயவஞ்சகத்தை உள்வாங்க தயாராகி விட்டார்கள், ஒரு முஸ்லிம் யாரோடு நட்பு வைப்பது, யாரோடு பகைப்பது என்பதை அல்லாஹ்வுடைய எதிரிகள் அதை  நிர்மாணிக்கிறார்கள். 
 
ஒரு முஸ்லிம் யாரோடு நட்பு வைக்க வேண்டும், யாரோடு அவர்கள் பகைமை பாராட்ட வேண்டும், யாரோடு அவர்கள் சேர வேண்டும், யாரிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என்பதை இன்று நிர்மாணிக்க கூடியவர்கள் யார்? அல்லாஹ்வுடைய எதிரிகள், ரசூலுடைய எதிரிகள், இந்த சமுதாயத்தின் எதிரிகள் அந்த அளவு இந்த சமுதாயத்திற்கு எதிரிகளைப் பற்றிய பயம் சாட்டப்பட்டு விட்டது. 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; எவ்வளவு அறிவுரைகளை நமக்காக வழங்கி விட்டு சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லாதது எது இருக்கிறது? 
 
சகோதரர்களே! நோயையும் சொன்னார்கள்; நோயுடைய சிகிச்சையும் சொன்னார்கள்; பிரச்சனையும் சொன்னார்கள்; பிரச்சனைக்கான தீர்வையும் சொன்னார்கள்; குழப்பத்தையும் சொன்னார்கள்; அந்த குழப்பத்திலிருந்து எப்படி தெளிவடைய வேண்டும் என்ற வழியையும் காட்டினார்கள்; நம்முடைய பலவீனத்தையும் சொன்னார்கள்; அந்த பலவீனத்தை போக்கி வலிமை எப்படி அடைய வேண்டும் என்பதற்கு உண்டான வழியையும் காட்டிவிட்டு சென்றார்கள்.
 
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا»، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ»، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: حُبُّ الدُّنْيَا، وَكَرَاهِيَةُ الْمَوْتِ
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; ஒரு நாள் இப்படியும் ஏற்படும்” எப்படி உணவு பாத்திரத்தில் உணவு தட்டையை பார்த்து பசித்த உணவாளிகள் போட்டி போட்டுக் கொண்டு வருவார்களோ! உங்களை அப்படி கவ்வி கொள்ள உலக சமுதாயங்கள் எல்லாம் வருவார்கள். உங்களை மேற்கத்தியன் ஒரு பக்கம், கிழக்கத்தியன் ஒரு பக்கம் இப்படியா என்னோட வா என்னோடு வா என்று இழுப்பார்கள் இருவருமே குஃபார்கள் நீ யாரோடு சேர்ந்தாலும் சரியே!.
 
ஒரு முஸ்லிம் பிறரோடு இணக்கமாக இருக்க முடியுமே தவிர ஆனால், வித்தியாசம் இருக்கிறது. அதற்கு அர்த்தம் இப்படி எடுத்து விடக்கூடாது” முஸ்லிம் என்றாலே சண்டை போடக்கூடியவன் என்பதாக, முஸ்லிம் என்றாலே எல்லோரோடும் பகைவனாக இருப்பான் அப்படி அர்த்தம் இல்லை ஒரு முஸ்லிம் இணக்கமாக இருக்கலாம், ஒரு முஸ்லிம் சமுதாயம் இணக்கமாக இருக்கலாம், சுமூகமாக இருக்கலாம் ஆனால், அடிமையாக இருக்க கூடாது.
 
பிறருடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டவனாக இருக்கக் கூடாது. அவனுடைய சட்டங்களில் அழுத்தங்களுக்கு உட்பட்டவனாக, தனது மார்க்கத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவனாக, தனது சகோதரத்துவத்தை விட கூடியவனாக, தனது மார்க்கத்தில் குழப்பங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கக் கூடாது. உன்னோடு நான் சமரசமாக வாழ்வதற்கு, உன்னோடு நான் இணங்கி வாழ்வதற்கு தயார், நீ எனது மார்க்கத்தில் எனக்கு பிரச்சனை பண்ணாத வரையாகும்.
 
அன்பான சகோதரர்களே! அல்லாஹ்வுடைய சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட முஸ்லிம் நாடுகளில்  இன்று எங்குமே அல்லாஹ்வுடைய சட்டங்கள் அமல்படுத்தப் படுவதில்லை. 100 சட்டங்களில் .001 சதவீதம் தான் அதுவும் எங்கே அவர்களுக்கு தேவையோ அங்கே மட்டும் செயல்படுத்தப்படுகிறது.
 
எப்போதிலிருந்து இந்த சட்டங்கள் முஸ்லிம் நாடுகளில், சஹாபாக்கள் வெற்றி கொண்ட நாடுகளில், எந்த நாடுகளைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுபச்செய்தி சொன்னார்களோ! எந்த நாட்டை ஸஹாபாக்கள் தங்களுடைய உயிரை கொடுத்து அல்லாஹ்வுடைய கலிமாவை உயர்த்த வேண்டுமென்று சொன்னார்களோ அப்படிப் பட்ட அந்த பூமியில்.
 
அன்பானவர்களே! அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சொல்லிக் காட்டுகிறான்;
 
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ
 
இன்னும், குழப்பம் (-இணைவைத்தல்) இல்லாமல் ஆகி, வழிபாடு எல்லாம் அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போரிடுங்கள். ஆக, (விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் (அதற்கேற்ப அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 8 : 39)
 
அந்த நாடுகளில் ஷிர்க் இருக்கக்கூடாது, அந்த நாடுகளில் லாயிலாஹ இல்லல்லாஹ் ஓங்க வேண்டும், வணக்க வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும், அல்லாஹ்வுடைய சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா தூண்டி அந்த சஹாபாக்கள் எங்கே தீனை ஹயாத்தாக்கினார்களோ இப்போது குஃப்ருடைய ஆட்சிகள், ஷிர்க்குடைய ஆட்சிகள், முஸ்லிம் ஆட்சி செய்வான் ஆனால், குஃப்ரின் அடிப்படையில் இருக்கிறது, முஸ்லிம் ஆட்சி செய்வான் ஆனால், ஷிர்க்கின் அடிப்படையில் இருக்கிறது, 
 
முஸ்லிம் ஆட்சி செய்வான் யாருடைய சட்டத்தின் அடிப்படையில்? எந்த சட்டத்தை அல்லாஹ்வின் எதிரி வகுக்கிறானோ அதாவது இஸ்லாமிய சட்டங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளின் சட்டங்கள் என்பதாக சொல்லகூடிய சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்கிறார்கள், மனித உரிமைக்கு மாற்றமான சட்டங்கள். முஸ்லிம் சமுதாயம் விட்டுவிட்டார்கள். இஸ்லாமிய கலாச்சாரம், இஸ்லாமிய பண்பாடு, இஸ்லாமிய ஒழுக்கம் இதெல்லாம் பிற்போக்குத்தனமானது என்பதாக விட்டு விட்டார்கள் முஸ்லிம் அரசாங்கங்கள் ஹலால் ஆக்கிக் கொண்டார்கள்.
 
ஓரினச்சேர்க்கை ஹலால் ஆக்கப்படுகிறது, ஒரே ஆண் ஆணை மணமுடிப்பது பெண் பெண்ணை மணமுடிப்பது, அதற்காக குரல் கொடுக்கப்படுகிறது, இஸ்லாமிய சொத்துரிமை சட்டங்கள் மீறப்பட்டு விட்டன, திருடினால் கையை வெட்ட வேண்டும், இந்த சட்டங்கள் விடுபட்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. எல்லா சட்டங்களும் பாழாக்கப்பட்டு விட்டன. சில சட்டங்களை தவிர எந்த சட்டங்கள்? எது அவர்களுக்கு பிரயோஜனமாக இருக்குமோ, எது அவர்களுடைய ஆட்சிக்கு பிரயோஜனமாக இருக்குமோ அந்த சட்டங்களை தவிர எல்லா சட்டங்களையும் மூட்டை கட்டி விட்டார்கள்.
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைத்தான் சொன்னார்கள்: மக்கள் அப்படி உங்கள் மீது பாய்வார்கள் என்ன பிரச்சனை சஹாபாக்கள் கேட்டார்கள்: யா! ரசூலுல்லாஹ் நாங்கள் எல்லாம் என்ன அந்த நேரத்தில் மிகக்குறைவானவர்களாக ஆகிவிடுவோமா? 
 
அப்பொழுது சொன்னார்கள்; இல்லை நீங்கள் ரொம்ப அதிகமாக இருப்பீர்கள் எவ்வாறு கடல் ஆற்றை அடித்து வரும் பொழுது அதன் மீது நுரை இருக்குமோ அப்படி இருப்பீர்கள்.” -அன்பானவர்களே! அதிகமாக இருந்து என்ன பிரயோஜனம்?- நுறையை போன்று இருப்பீர்கள். உனது உள்ளங்களில் வஹன் போடப்பட்டு விடும்.
 
சஹாபாக்களுக்கு வஹன் என்றால் அரபியில் என்ன அர்த்தம் என்று தெரியும். ஆனால், இருந்தும் யா! ரஸூல்லாஹ் என்ன வஹனை நீங்கள் சொல்கிறீர்கள்? பலவீனம் என்றால் எந்த பலவீனத்தை சொல்கிறீர்கள்? இயலாமை என்றால் எந்த இயலாமையை சொல்கிறீர்கள்? - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மார்க்கத்தின் இலக்கணத்தை மார்க்க வரையறையை சொன்னார்களோ!- அதுபோன்று அப்பொழுது சொன்னார்கள்; உங்களது உள்ளங்களில் உலகத்தின் ஆசைகள் போடப்படும், நீங்கள் மரணத்தை பார்த்தால் பயப்படுவீர்கள், வெறுப்பீர்கள்” என்பதாக சொன்னார்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! அவர்களுக்கு சோதனையை பார்த்து பயம் ஏற்படுகிறது. இஸ்லாமிய சகோதரத்துவத்தால் தனக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற பயத்தால் யார் நபிமார்களை கொன்றார்களோ, யார் அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கிறது என்று சொன்னார்களோ, யார் அல்லாஹ் பிச்சைக்காரன் என்று சொன்னார்களோ! யார் அல்லாஹ்வுடைய கரம் கட்டப்பட்டு விட்டது என்று சொன்னார்களோ அவர்களோடு நட்பு வைப்பதற்கு ஓடுகிறார்கள். அல்லாஹ் சொல்கிறான்:
 
فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَى أَنْ تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَنْ يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِنْ عِنْدِهِ فَيُصْبِحُوا عَلَى مَا أَسَرُّوا فِي أَنْفُسِهِمْ نَادِمِينَ
 
ஆக, (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களுடன் (நட்புவைக்க) விரைபவர்களாக இருப்பதைக் காண்பீர்! “ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, அல்லாஹ் தன்னிடமிருந்து (நம்பிக்கையாளர்களுக்கு) வெற்றியை அல்லது (யூதர்களின் தாக்குதலை உங்களை விட்டு தடுக்கும்படியான) வேறு ஒரு காரியத்தை கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். (அல்குர்ஆன் 5 : 52)
 
இவர்களைப் பகைத்துக் கொண்டால் எங்களுக்கு பிரச்சினை வந்து விடுமே! எங்களுக்கு வறுமை வந்து விடுமே! என்று கூறி அந்த யூதர்களிடத்தில் நட்பு வைக்கும் கூறுகிறார்கள்.
 
அன்பான சகோதரர்களே! சோதனையை பார்த்து பயப்பட தேவையில்லை, இந்த இஸ்லாமிய சமுதாயம் சோதனைகளை கடந்து வந்த சமுதாயமாகும். இந்த சமுதாயம் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரம் எப்பொழுது ஆரம்பமானது அன்றிலிருந்து சோதனைகளை பார்த்து வந்த சமுதாயம்.
 
யார் உண்மையான முஃமினாக முஸ்லிமாக அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ! அவர்களுக்கு சோதனை ஒன்றும் பெரிதல்ல. நரக தண்டனையை விடவா இந்த யூதர்கள், கிறிஸ்துவர்கள் நமக்கு தண்டனை கொடுத்து விடப்போகிறார்கள். 
 
இந்த யூத கிறிஸ்துவர்களின் தண்டனைகளுக்கு ஆளானால் நாளை மறுமையில் நரகத்துடைய தண்டனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு, சுகபோக வாழ்க்கைக்கு அடிமையாகி. இந்த யூத கிறிஸ்துவர்களுடைய அரவணைப்புக்கு நாம் விரும்பினால் நாளை மறுமையில் அல்லாஹ்வின் நரக தண்டனை கிடைக்கும். எது? பெரியது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
 
புத்திசாலிகளாக இருந்தார்கள். யார்? மூசா நபியை எதிர்க்க வந்த சூனியக்காரர்கள் ஃபிர்அவ்ன் அழகான அங்கே ஒரு வாய்ப்பைக் கொடுத்தான், என்னை ஈமான் கொண்டாள் என்னுடைய அரசவையில் உங்களுக்கு பதவி, செல்வம் எல்லாம் உங்களுக்கு உண்டு என்பதாக. ஆனால், அந்த சூனியக்காரர்கள் எதை தேர்ந்தெடுத்தார்கள்.? 
 
சகோதரர்களே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னதற்காக 70,000 சூனியக்காரர்கள் மாறு கை மாறு கால் வெட்டப்பட்டார்கள், ஈட்டியால் குத்தப்பட்டார்கள், கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள். யோசித்துப் பாருங்கள்” அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகிறான் கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய வசனத்தை கேளுங்கள்” சூரா ஆலு இம்ரானுடைய 195 வது வசனம் அல்லாஹ் சொல்லுகிறான்:
 
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِنْ عِنْدِ اللَّهِ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الثَّوَابِ
 
ஆகவே, “உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் நான் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரத் சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய குற்றங்களை அவர்களை விட்டும் நிச்சயம் நான் அகற்றி விடுவேன். 
 
அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை பிரவேசிக்கச் செய்வேன்.’’ என்று அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளி(த்து அவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரி)த்தான். அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை அவர்களுக்கு வழங்கப்படும்). இன்னும் அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு. (அல்குர்ஆன் 3 : 195)
 
அல்லாஹ் சொல்கிறான் உங்களுடைய துஆ கண்டிப்பாக ஏற்கப்படும். சொல்லிவிட்டு சொல்கிறான்; உங்களுக்கு பிரச்சனையா? உங்களுக்கு சோதனையா? உங்களுக்கு குழப்பங்களா? உங்களுக்கு காஃபிர்களால் அச்சுறுத்தல்களா? காஃபிர்களால் உங்களது பூமியில் நீங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லையா? கேட்டுக் கொள்ளுங்கள்” 
 
فَالَّذِينَ هَاجَرُوا
 
யார் ஹிஜ்ரத் செய்தார்களோ?
 
وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ
 
தங்களுடைய ஊர்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்களோ? 
 
وَأُوذُوا فِي سَبِيلِي
 
எனது மார்க்கத்திற்காக அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதோ அல்லாஹ் அக்பர்! முஃமின் என்ற ஒரே காரணத்திற்காக, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக. 
 
وَأُوذُوا فِي سَبِيلِي
 
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்:
 
وَقَاتَلُوا
 
இன்னும், யார் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திற்காக இந்த உம்மத்திற்காக போர் செய்தார்களோ?
 
وَقُتِلُوا
 
இன்னும், கொல்லப்பட்டார்களோ! 
 
சகோதரர்களே! அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவன் நஷ்டவாளி அல்ல, நபிமார்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். நபிமார்களோடு ஈமான் கொண்ட உயர்ந்த நல்ல சமுதாயம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
 
அதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்; கவலைப்படாதீர்கள்! நீங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டாலோ. நீங்கள் உங்களது பூமியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டாலோ எனக்காக, எனது மார்க்கத்திற்காக உங்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டாலோ, நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தாலோ, கொல்லப்பட்டாலோ உங்களுடைய பாவங்களை சத்தியமாக நான் மன்னிப்பேன்”.
 
உங்களை சொர்க்கங்களில் நான் கொண்டு போய் சேர்ப்பேன் நதிகள் அந்த சொர்க்கங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கக்கூடிய, வாக்களிக்கப்பட்ட நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் அழகிய நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான்; இதே அத்தியாயத்தின் உடைய 146 வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்; முஃமின்களே! நபிமார்களை நினைத்துப் பாருங்கள்”
 
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
 
எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான். (அல்குர்ஆன் 3 : 146)
 
وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ
 
எத்தனையோ நபிமார்கள் அந்த நபிமார்களுக்கு ஆதரவாக அவர்களுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்காக நல்லவர்கள் போரிட்டு இருக்கிறார்கள்.
 
فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ
 
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்து அவர்கள் கோழையாகி விடவில்லையே! 
 
وَمَا ضَعُفُوا
 
அவர்கள் பலவீனமடைந்து விடவில்லையே! 
 
وَمَا اسْتَكَانُوا
 
எதிரிகளுக்கு முன்னால் சரணடைந்து விடவில்லையே! 
 
وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
 
அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்; கடைசி உயிர் இருக்கின்ற வரை கொல்லப்பட்டார்களே தவிர அவர்களில் யாரும் எதிரிகளுக்கு முன்னால் சரணயடையவில்லை என்பதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
 
ஆகவே, கண்ணியத்திற்குரிய அவர்களே! இன்று நாம் எந்த நாட்டில் வசித்தாலும் சரி, இன்று நாம் எதை இழந்திருக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள்” அந்த ஈமானிய உறுதியு இருக்கிறதா? இஸ்லாமிய சகோதரத்துவம், இஸ்லாமிய உணர்வு, முஸ்லிம் என்னுடைய இஸ்லாமியன், என்னுடைய சமூகத்தை சேர்ந்தவன் என்ற அந்த ஈமானிய சகோதரத்துவ உணர்வு வருகிறதா?
 
சகோதரர்களே! நம்முடைய தோல்விக்கு, நம்முடைய பிரச்சனைக்கு நம்முடைய குழப்பத்திற்கு காரணம் இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இல்லை என்பதுதான். இஸ்லாமிய சமுதாயம் இந்த ஈமானுக்காக, இஸ்லாம்காக இல்லை என்பதுதான். கூட்டங்களாக, குழுக்களாக, கட்சிகளாக, பிரிவுகளாக, சிறு சிறு நாடுகளாக, ஜமாத்துகளாக பிரிந்து நாமே நமக்கு உண்டான பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டிய நேரம் அல்லாஹ்விடத்தில்  துஆக்களை கேட்க வேண்டிய நேரம், அல்லாஹ்விடத்தில் நமது பாவங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம், வரக்கூடிய நமது தலைமுறையை ஈமானிய உணர்வோடு, இஸ்லாமிய சகோதரத்துவத்தோடு அவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய நேரமாக இருக்கிறது.
 
அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த ஈமானிய உறுதியை தந்தருள்வானாக! இக்லாஸை தருவானாக! நம்முடைய பாவங்களையும் மன்னிப்பானாக! பிரிந்து இருக்கக்கூடிய நமது அரசர்களை, மன்னர்களை ஆட்சியாளர்களை அல்லாஹ் ஒருங்கிணைப்பானாக! இந்த உம்மத்திற்கு மத்தியில் ஈமானிய இஸ்லாமிய ஒற்றுமையை தந்தருள்வானாக! ஒருவருடைய வேதனையில் இன்னொருவர் அந்த வேதனையை உணரக்கூடியவராக, தனது சகோதரனுக்கு உதவக் கூடியவராக அல்லாஹ் ஆக்கி வைப்பானாக! யூதர்கள், நசராணிகளுடைய அழுத்தத்திற்கு ஆளாகிவிடாமல் நமது ஆட்சியாளர்களையும், நமது மன்னர்களையும், அரசர்களையும், முஸ்லிம் சமுதாயத்தையும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக!.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
 
குறிப்பு 1)
 
أنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بنَ الجَرَّاحِ إلى البَحْرَيْنِ يَأْتي بجِزْيَتِهَا، وكانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ هو صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وأَمَّرَ عليهمُ العَلَاءَ بنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأنْصَارُ بقُدُومِ أَبِي عُبَيْدَةَ، فَوَافَتْ صَلَاةَ الصُّبْحِ مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَلَمَّا صَلَّى بهِمُ الفَجْرَ انْصَرَفَ، فَتَعَرَّضُوا له، فَتَبَسَّمَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ رَآهُمْ، وقالَ: أَظُنُّكُمْ قدْ سَمِعْتُمْ أنَّ أَبَا عُبَيْدَةَ قدْ جَاءَ بشيءٍ؟، قالوا: أَجَلْ يا رَسولَ اللَّهِ، قالَ: فأبْشِرُوا وأَمِّلُوا ما يَسُرُّكُمْ، فَوَاللَّهِ لا الفَقْرَ أَخْشَى علَيْكُم، ولَكِنْ أَخَشَى علَيْكُم أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا كما بُسِطَتْ علَى مَن كانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ. الراوي : عمرو بن عوف المزني | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3158 | خلاصة حكم المحدث : [صحيح]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/Website: http://www.darulhuda.net/