HOME      Khutba      லைலத்துல் கத்ரின் தேடல்! | Tamil Bayan - 876   
 

லைலத்துல் கத்ரின் தேடல்! | Tamil Bayan - 876

           

லைலத்துல் கத்ரின் தேடல்! | Tamil Bayan - 876


லைலத்துல் கத்ரின் தேடல்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : லைலத்துல் கத்ரின் தேடல்! 
 
வரிசை : 876
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 05-04-2024 | 26-09-1445
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னாள் அல்லாஹுத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய சலவாத்தும் ஸலாமும் நிலவட்டுமாக என வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பற்றி பிடித்து ஹலால் ஹராமை அறிந்து குர்ஆனோடும் சுன்னாவுடன் நம்முடைய தொடர்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹ் நம்மிடம் இருந்து அமல்களை ஏற்றுக் கொள்வானாக! மறுமையின் வாழ்க்கையை இம்மை வாழ்க்கையை விட சிறந்த வாழ்க்கையாக ஆக்கி வைப்பானாக! ஆமீன்!
 
காஜாவிலே இன்னல்களுக்கும் இஸ்ரேல் கொடுமைகளுக்கும் ஆளாகி கொண்டிருக்கிறார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு விரைவான வெற்றியை தந்தருள்வானாக! அவர்களுக்கு உதவக்கூடிய ஆட்சியாளர்களையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தருவானாக! மேலும் அல்லாஹ் காஸா மக்களுக்கு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான பகிரங்கமான மிகைப்பான வெற்றியை தந்தருள்வானாக! ஆமீன்! 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இன்னும் சில தினங்களில் ரமழான் நம்மை விட்டு பிரிய இருக்கிறது. பொதுவாக இதை மக்கள் எல்லாம் அழைப்பாளர்கள் அறிஞர்கள் எல்லாம் ரமழானுக்கு விடை தரக்கூடிய ஜுமுஆ என்பதாக சொல்வார்கள்.
 
புத்திசாலியான ஒரு முஃமின் வாழ்க்கையில் இந்த ரமழானை மட்டுமல்ல, தன்னுடைய ஒவ்வொரு நாளையும் அவன் கவனிப்பான்; கணக்கெடுப்பான். தனது ஒவ்வொரு நாள் முடிவதை குறித்து அவன் கவலைப்படுவான். ரமழான் முடிவதை மட்டுமல்ல, யார்  தன்னுடைய ஒவ்வொரு நாளையும் அந்த நாள் எப்படி கழிந்தது, அந்த நாளை நான் எப்படி கழித்தேன் என்ற அந்த கவலையில் கணக்கில்  இருக்கிறார்களோ, அமல்களுடைய அக்கறையில் இருக்கிறார்களோ, அவர்கள்தான் ரமழானுடைய பிரிவால் ஏங்குவார்கள்; ரமழானுடைய மாதம் முடிவடைவதை குறித்து அவர்கள் தான் கவலைப்படுவார்கள். 
 
இந்தக் கவலை புதிதாக உங்களுக்கு வராது. இந்த ரமழானுடைய முடிவின் கவலை புதிதாக வராது. யாருக்கு வரும்? யார் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்க்கையை முஹாஸபா செய்வார்களோ, பகல் முடியும் போது இந்த பகலை எப்படி கழித்தேன்? இரவை எப்படி கழிக்கிறேன்? இன்றைய நாளில் எத்தனை தொழுகைகளை ஜமாத்தாக சரியாக நிதானமாக தொழுதேன்? இன்றைய நாளின் நான் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் என்னுடைய மறுமை வாழ்க்கைக்கு நான் எடுத்து செல்வதற்கு தேவையான கட்டுச்சாதங்களாகிய அமல்களில் எதையும் மறந்திருக்கிறேனா? விட்டிருக்கிறேனா? அலட்சியம் செய்திருக்கிறேனா? என்று யார் ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்கிறார்களோ, அதிலே தான் தவறு செய்ததை நினைத்து அலட்சியம் செய்ததை நினைத்து கவலைப்படுவார்களோ அவர்கள் தான் ரமழானிலும் ரமழான் முடிவதை பற்றி கவலைப்படுவார்களே தவிர எல்லோரும் கவலைப்பட்டு விட மாட்டார்கள்; எல்லோருக்கும் அந்த கவலை வராது; எல்லோருக்கும் அந்த எண்ணம் வராது; எல்லோருக்கும் இந்த அழுகை வராது; அந்த பதட்டம் வராது. 
 
நீங்கள் ஒருவரை நேசிப்பவர்களாக இருந்தால் அவருடைய வருகையை எதிர்பார்ப்பீர்கள். உங்களோடு நீங்கள் யாரை உண்மையாக ஈமானோடு, இக்லாஸோடு, அன்பாக, பாசமாக, உயிருக்கு உயிராக நேசிக்கிறீர்களோ அவர் உங்களை விட்டுப் பிரிந்தால் நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்களுக்கு கண்கள் கலங்கும். உள்ளத்திலே ஒரு விதமான கவலை சூழ்ந்து கொள்ளும். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இப்படிப்பட்ட ஒரு உறவை யார் நல்ல அமல்களோடு ஏற்படுத்திக் கொண்டார்களோ, வணக்க வழிபாடுகளோடு ஏற்படுத்திக் கொண்டார்களோ, தொழுகையோடு குர்ஆன் ஓதுவதோடு, சதக்காவோடு, அல்லாஹ்வுடைய திக்ரோடு, அல்லாஹ்வுடைய தியானத்தோடு இப்படிப்பட்ட ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் கவலைப்படுவார்கள் ரமழான் முடிவதை நினைத்து. அவர்கள் வருத்தப்படுவார்கள் இந்த ரமழான் முடியப்போகிறது. அடுத்த ரமழான் எனக்கு கிடைக்குமா? சென்ற ரமழானை விட இந்த ரமழானை பயன்படுத்துவோம் என்று இருந்தோமே, அதிலே  நான்  வெற்றி அடைந்து விட்டேனா? என்று அவர்கள் தான் கவலைப்படுவார்களே தவிர நம்மைப் போன்று சோம்பேறிகளாக இருப்பவர்கள், அலட்சியத்திலே இருப்பவர்கள் எல்லா நாள்களையும் ஒரேமாதிரியாக கவனித்துக்கொண்டு இங்கும் அங்கும் உலக வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள், ஜமாஅத்துகளை தவற விடக்கூடியவர்கள் இப்படியாக  எல்லோரும் கவலைப்பட்டு விட மாட்டார்கள்; எல்லோருக்கும் அந்த கவலை வராது; எல்லோருக்கும் அந்த எண்ணம் வராது; எல்லோருக்கும் இந்த அழுகை வராது; அந்த பதட்டம் வராது. 
 
இரவு தொழுகையில்  பார்க்கலாம்; அதில் சில பேர் இருக்கிறார்கள். சிரிப்பதற்கு சொல்லவில்லை. தாருல் ஹுதாவில் எப்ப போனாலும் இரண்டு ரக்அத் கிடைக்கும். போய் தொழுதுவிட்டு வரலாம் என்று சொல்லிட்டு மொத்த இரவுக்கு தாருல் ஹுதாவில் எப்ப போனாலும் இரண்டு ரக்அத் நமக்கு கிடைச்சிடலாம் போதும்... போதும்... அப்புறம் நம்முடைய வேலையை பார்த்துக்கலாம். அஸ்தஃபிருல்லாஹ்! 
 
சகோதரர்களே! இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இவர்களுக்கு எந்த உணர்வுமே இருக்காது. ரமழான் வந்தது ஆஹா பார்ட்டி வைத்தோம். இஃப்தார் பார்ட்டி வைத்தோம். அந்த விருந்திலே கலந்து கொண்டோம். அந்த டிரஸ் வாங்கினோம். இந்த டிரஸ் வாங்கினோம். வீட்டை விளக்குகளால் அலங்கரித்தோம். நல்ல செலவு ரமழானில் நல்ல பரக்கத்தா செலவு பண்ணோம். பரக்கத்தா தர்மம் கொடுத்திருந்தால் அல்ஹம்துலில்லாஹ்; பரக்கத்தா சதக்கா அள்ளி கொடுத்திருந்தால் அல்ஹம்துலில்லாஹ். 
 
வெறும் உன்னுடைய உணவுக்காக மட்டும் நீ செலவழித்து இருந்தால், நீ வருந்தி கொள்! நீ வருந்தி கொள்! அதற்காக அல்லாஹ்விடத்திலே இஸ்திஃபார் செய்து கொள்! இன்று நம்முடைய காசா மக்களுக்கு ஸஹர் இல்லை; இஃப்தார் இல்லை; கடலிலே தூக்கி எறியப்பட்ட உணவு கரையிலே வந்து கிடந்து மூன்று நாள் நான்கு நாள் வெயிலிலே காய்ந்த அந்த உணவை எடுத்து சாப்பிடக்கூடிய நிலையிலே இருக்கிறார்களே!
 
நினைத்துப் பார்க்க வேண்டும்! அவர்கள் மட்டுமா? சூடானிலே பிரச்சனை, எத்தனை நாடுகளிலே பசியால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்! அல்லாஹ் என்னை வயிறார உணவு கொடுத்து வைத்திருக்கிறானே! நினைத்து பார்க்க வேண்டாமா! 
 
சகோதரர்களே ஒன்றை நான் சொல்கிறேன்; புரிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய நிஃமத்துக்களை நினைத்து அதற்காக உணர்வோடு நன்றி செலுத்துகிறோமா அந்த நன்றி செலுத்தும் போது கண்கள் கலங்குகிறதா? யா அல்லாஹ்! நீ என் மீது எவ்வளவு பெரிய உபகாரம் செய்து இருக்கிறாய், நீ ரஹ்மான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
 
 நீ. மகாக்கருணையாளன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்ற அந்த உணர்வோடு ஓர் அல்ஹம்துலில்லாஹ். இப்படி நம்மில் எத்தனை பேர் சொல்கிறோம்? இல்லாததை நினைத்தே பேசிக் கொண்டிருக்கிறோம். உனக்கு முன்னால் பல வகையான உணவு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எது இல்லையோ, அதை தேடுகிறாய், அதற்கு குறைப்படுகிறாய் என்றால் நாம் எத்தகைய நன்றி கெட்டவர்கள் பாருங்கள்! 
 
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே நூஹ் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை பற்றி சொல்லும் பொழுது,
 
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ‌ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا‏
 
நிச்சயமாக நபி நூஹ் அவர்கள் நன்றியுள்ள அடியாராக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 17:3) 
 
முஃபஸ்ஸிர்கள் எழுதுகிறார்கள்; என்ன செய்வார்கள் தெரியுமா? நூஹ் அலைஹி ஸலாத்து வஸ்ஸலாம் காலையிலிருந்து மாலை வரை பலவிதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலே, அடி ஏச்சுகளுக்கு இடையிலே தாவா கொடுத்துவிட்டு வருவார்கள். உண்ணுவதற்கோ பருகுவதற்கோ ஒரு கவள உணவு ஒரு மிடறு  தண்ணீர் கிடைத்து விட்டால் அவ்வளவு பணிவாக அந்த ஒரு கவள உணவை சாப்பிட்டுவிட்டு அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வே நீ எனக்கு இந்த உணவு கொடுத்தாயே என்று அல்லாஹ்வை புகழ்வார்கள். ஒரு மிடறு தண்ணீர் கிடைத்ததற்கு அல்லாஹ்வை அப்படி உணர்வோடு புகழ்வார்கள். ஒவ்வொரு நேரத்திலும். இதுதான்.  இந்த செயல் அல்லாஹ்விற்கு பிடித்து விட்டது.
 
நூஹுக்கு ஷகூர் என்று அல்லாஹுத்தஆலா பெயர் வைத்தான்.
 
நூஹ் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள்  இறந்து எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பின்னால் வந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனிலே நூஹை அல்லாஹ் நினைவு கூர்ந்து, அவர் அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி உள்ளவர்களாக இருந்தார் என்பதை அல்லாஹ் கூறுகிறான் என்றால் சகோதரர்களே நினைத்து பாருங்கள்! 
 
இப்படி ஒரு நாள் நாம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? எத்தனை திக்ர்களை சொல்கிறோம்; நாம் சொல்லாமல் இல்லை, ஒவ்வொரு நேரத்திலும் சொல்ல வேண்டிய திக்ருகளை சொல்கிறோம், ஒன்றுக்கு பின் ஒன்று துஆ, உணவுக்கு என்று துஆ மற்ற துஆ,  மற்ற துஆ.. என்று. 
 
ஆனால், இங்கே என்ன கேள்வி அந்த உணர்வு எங்கே இருக்கிறது? அந்த துடிப்பு எங்கே இருக்கிறது? 
 
اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ‌ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ‏
 
கருத்து : அல்லாஹ்வுடைய நினைவின்போது உள்ளங்கள் நடுங்குவதற்கு மூமின்களுக்கு நேரம் வரவில்லையா? (அல்குர்ஆன் : 57:16)
 
குர்ஆன் ஓதும் போது, தொழுகையின் போது, திக்ரின் போது ஏன் தர்மம் கொடுக்கும் போது கூட உள்ளத்தில் அவர்கள் அல்லாஹ்வுடன்  பேசுவார்கள்; 
 
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏
 
கருத்து : யா அல்லாஹ் மறுமையின் நாளின் அந்த கடினமான உஷ்ண நேரத்தை பயந்து இந்த தர்மத்தை செய்கிறேன். (அல்குர்ஆன் : 76:10) 
 
எத்தகைய ஈமானிய உணர்வுகளை நாம் பெற வேண்டும் இந்த மாதத்திலே. ஆனால், அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகளிலே நாம் உழன்று இந்த ஈமானிய உணர்வுகளை மறந்து கொண்டே இருக்கிறோம். கடைசி 10 ஐ  எதிர்பார்த்தோம் அதுவும் வந்து விட்டது, அதுவும் முடியப் போகிறது. இந்த இரவுகளில் கூட ஒரு மனிதர் லைலத்துல் கத்ரை தேடவில்லை என்றால் அவர் எவ்வளவு பெரிய துர்பாக்கியவான்?! 
 
யார் லைலத்துல் கத்ரை அடைந்து கொண்டாரோ அவர் மிகப்பெரிய நற்பாக்கியசாலி. யார் இந்த இரவின் நன்மையை இழந்தாரோ அவர் மஹ்ரூம் -நன்மைகளை இழந்தவர் ஆவார். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த லைலத்துல் கத்ரை தேடினார்கள். ரமழானுடைய கடைசி பத்திலே ஒற்றை இரவுகளிலே அதுவும் குறிப்பாக 23,25,27,29 இந்த நாட்களிலே விசேஷமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இரவை தேடி விழித்திருந்தார்கள். 
 
சில ஹதீஸ்களைப் பாருங்கள்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். 
 
هي في العَشْرِ الأواخِرِ، هي في تِسْعٍ يَمْضِينَ، أوْ في سَبْعٍ يَبْقَيْنَ يَعْنِي لَيْلَةَ القَدْرِ
 
இந்த லைலத்துல் கத்ர் இது ரமழானுடைய கடைசி பத்திலே இருக்கலாம், பிறை 29-ல் இருக்கலாம் அல்லது பிறை 27 இல் இருக்கலாம் அல்லது 23 லே இருக்கலாம். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2022.
 
மேலும் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; சில மக்களுக்கு லைலத்துல் கத்ர் ரமழானுடைய இறுதிப்பத்தினுடைய இறுதி ஏழு நாட்களிலே காண்பிக்கப்பட்டது. சில மக்க களுக்கு ரமழானுடைய கடைசி பத்திலே அது காண்பிக்கப்பட்டது. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
التَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ
 
ரமழானுடைய இறுதி ஏழு நாட்களிலே இந்த லைலத்துல் கத்ரை நீங்கள் தேடுங்கள் என்று.
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6991.
 
மேலும் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹி அலைஹி அவர்கள் பதிவு செய்கின்றார்கள். ஒரு கூட்டம் எமனில் இருந்து வந்தார்கள். ஜுஹ்ஃபாவை வந்தடைந்தார்கள். அப்போது ஒரு வாகனப்பயணி வந்து கொண்டிருந்தார். என்ன செய்தி என்று அவரிடத்தில் கேட்டோம் 
 
அவர் சொன்னார்: ஐந்து நாட்களுக்கு முன்பு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாங்கள் அடக்கம் செய்தோம் என்பதாக. 
 
அன்பானவர்களே! அந்த கூட்டம் கேட்டார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை பற்றி சொல்லிய ஏதாவது ஹதீஸ் உனக்கு தெரியுமா? எத்தகைய ஒரு தேடலிலே வந்திருப்பார்கள்! எமன் நாட்டில் இருந்து எந்த கல்வியின் ஆர்வத்திலே வந்திருப்பார்கள்! இந்த செய்தியை கேட்பதற்காக நபியின் சந்திப்புக்காக வந்தவர்கள்! நபியின் இறப்பு செய்தி தெரிந்த உடனே அவர்களுடைய ஹதீஸ் இறக்கவில்லையே! அவர்களுடைய கல்வி இறக்கவில்லையே! நீ நபியை சந்தித்தவர் ஆயிற்றே, லைலத்துல் கத்ரை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி இருப்பது ஏதாவது உனக்கு தெரியுமா? 
 
அவர் சொன்னார்; ஆம் எனக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஅத்தின் பிலால் சொன்னார்; இந்த லைலத்துல் கத்ர் இறுதி பத்தின் கடைசி ஏழு நாட்களிலே இருக்கிறது. (1)
 
அறிவிப்பாளர் : பிலால் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4470.
 
அல்லாஹு அக்பர்! அதுபோன்று, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மற்றும் ஒரு ஹதீஸை இமாம் முஸ்லிம் பதிவு செய்கின்றார்கள். 
 
أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، فَاطْلُبُوهَا فِي الْوِتْرِ مِنْهَا
 
ஒரு மனிதர் லைலத்துல் கத்ர் என்பது அது ரமழானுடைய 27வது இரவு என்று கருதினார். அதாவது கனவிலே அவர் பார்த்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், உங்களுடைய கனவுகளை எல்லாம் நான் பார்க்கிறேன். அந்த கனவுகள் எல்லாம் ரமழானுடைய இறுதி பத்தில் அந்த லைலத்துல் கத்ரை பார்த்ததாக வருகிறது. நீங்கள் ரமழானுடைய இறுதி பத்திலே ஒற்றை இரவுகளிலே இந்த லைலத்துல் கத்ரை தேடுங்கள். 
 
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1165.
 
அடுத்து உபை இப்னு கஅப் அறிவிக்கும் முக்கியமான ஒரு ஹதீஸ், இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். உபை இப்னு கஅப் அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது. உங்களுடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் இருக்கிறாரே, யார் ஆண்டு முழுவதும் நின்று வணங்குகிறாரோ கண்டிப்பாக அவருக்கு லைலத்துல் கத்ர் கிடைத்துவிடும் என்று. 
 
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் உடைய கூற்றின் விளக்கம் என்ன மக்கள் வெறும் ரமழானிலே இரவு தொழுது கொள்ளலாம் என்று சோம்பேறிகளாக இருந்து விடக் கூடாது என்பதற்காக அவர் அப்படி சொன்னார். நன்கு அவருக்கு தெரியும், லைலத்துல் கத்ர் என்பது ரமழானில் தான் இருக்கிறது. 
 
அது மட்டுமல்ல, அவருக்கு இதுவும் தெரியும் ரமழானுடைய இறுதி பத்திலே அந்த லைலத்துல் கத்ரு இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த லைலத்துல் கத்ர் 27வது இரவு என்பதும் அவருக்கு தெரியும் என்று கூறிவிட்டு உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சத்தியம் செய்து சொன்னார்கள், லைலத்துல் கத்ர் என்பது 27 வது இரவுதான்  அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது, நீங்கள் எதை கொண்டு இப்படி சொல்கிறீர்கள்? என்பதாக. எந்த அடையாளங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்களோ அந்த அறிவிப்புகளை அந்த அடையாளங்களைக் கொண்டு நான் சொல்கிறேன் என்று. (2)
 
அறிவிப்பாளர் : உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 762.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அறிஞர்கள் இதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள்? அதாவது எந்த அடையாளங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்களோ தங்களுடைய வாழ்நாளில் அந்த அடையாளங்களை பிறை 27 உடைய இரவிலே உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் பார்த்திருந்தார்கள். எனவே அந்த 27 என்று சொன்னார்கள். 
 
இதுபோக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்ற பல அறிவிப்புகளின் படியே  ரமழான் உடைய இறுதி பத்தில் அதுவும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளிலே இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவை நாம் தேட வேண்டும். 
 
அன்பானவர்களே! இந்த இரவு ஏன் இவ்வளவு முக்கியமானது! இதை புரிய வேண்டும் என்றால் மீண்டும் நாம் நம்முடைய ஆரம்பத்திற்கு செல்ல வேண்டும் யாருக்கு மறுமை தேவையோ, சொர்க்கம் தேவையோ, அமல்கள் தேவையோ, ஆகிறத்து தேவையோ, அல்லாஹ்வுடைய அன்பு தேவையோ, அவர்களுக்கு லைலத்துல் கத்ர் தேவை. யார் மறுமையிலே அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக பிரியமானவர்களாக அந்த உயர்ந்த நல்லவருடைய தரஜாவிலே சேர வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு லைலத்தில் கத்ர் தேவை. 
 
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَا ‏
 
கருத்து : யாருக்கு துன்யா தான் வாழ்க்கை. யாருக்கு இந்த துன்யாவை தவிர வேறு நோக்கமே இல்லையோ நபியே அவனை விட்டொழித்து விடுங்கள். அவனுக்கு எதுவுமே பலன் தராது. எந்த உபதேசமும் அவனுக்கு பலன் தராது. அவர்களை புறக்கணித்து விடுங்கள்! (அல்குர்ஆன் : 53:29) 
 
அவர்களுக்கு லைலத்துல் கத்ரும் புரியாது; ஜுமுஆவும் புரியாது; நோன்பும் புரியாது; தொழுகையும் புரியாது; ஜகாத்தும் புரியாது; யார்  மறுமையை புரிந்து கொண்டார்களோ ஆகிரத்தை புரிந்து கொண்டார்களோ அவர்களுக்குத்தான் மார்க்கம்.
 
சகோதரர்களே! யார் சொர்க்கத்தை தேடுகிறார்களோ அவர்களுக்கு தான் மார்க்கம். அவர்களால் தான் ஹலாலை பேண முடியும். ஹராமை விட்டு விலக முடியும். அல்லாஹ்வின் அன்புக்காக உயிரை கொடுக்க முடியும். அல்லாஹ்வின் அன்புக்காக தன்னுடைய செல்வத்தை கொடுக்க முடியும். 
 
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا
 
அல்லாஹ் சொல்கிறான்: யாருக்கு மறுமை வேண்டுமோ, யார் என்னுடைய சந்திப்பை ஆசைப்படுவார்களோ, அவர்கள் அமல் செய்யட்டும். (அல்குர்ஆன் : 18:110) 
 
எல்லோரையும் அல்லாஹ் அழைக்கவில்லை. யார் என்னை சந்திப்பதை ஆசைப்படுகிறாரோ, யார் என்னுடைய சந்திப்பை பயப்படுகிறாரோ, அவர் நல்லமலை செய்யட்டும். அவர் எனக்கு இணை வைக்காமல் இருக்கட்டும். 
 
அன்பானவர்களே! அவர்களுக்கு லைலத்துல் கத்ர் தேவை இல்லை. அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, ஒரு இரவுக்காக ஒரு சூராவை அல்லாஹ் இறக்கினான். அந்த இரவுக்கு பெயரை கண்ணியமான இரவு என்று வைத்தான். அந்த இரவிலே மலக்குகளை எல்லாம் இந்த பூமியிலே இறக்குகிறான் என்றால் வாழ்த்து சொல்ல வைக்கிறான் என்றால் இந்த இரவு ஜிப்ரீல் உட்பட எல்லா மலக்குகள் இறங்குகிறார்கள் என்றால் எந்த அளவு முக்கியமானது. 
 
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5)
 
நிச்சயமாக நாம் இதை ‘கத்ர்’ இரவில் இறக்கினோம். (நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? ‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள். ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). (அல்குர்ஆன் 97:1-5)
 
ஆனால், இன்று 27 எடுத்துக் கொள்ளுங்கள்! எல்லாம் பெயருக்கு ஜோடிக்கப்பட்ட வணக்க வழிபாடுகள்! பலவீனமான ஹதீஸை கொண்டு எடுக்கப்பட்ட தஸ்பிஹ் நஃபீல் தொழுகை, அப்புறம் விருந்து, அப்புறம் ஒரு பயான், அப்புறம் விழுந்து எழுந்துருச்சு ஒரு தொழுகை. இதுதான் இன்று நடக்கிறது. 
 
பெரும்பாலும் இங்கிருந்து அங்க, அங்கிருந்து இங்க, பயணத்தில் ஒரு ரெண்டு மணி நேரம், கடைசியில சஹர்ல ஒரு ஒரு மணி நேரம், அப்புறம் ஸஹர் சாப்பிடுவதற்கு முன்னாடி ஸஹர் ஏற்பாட்டுக்கு ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் அப்புறம் சஹர் சாப்பிட்டதுக்கு பிறகு ஒரு மணி நேரம் முடிஞ்சு போச்சு இதுதான் நாம் லைலத்துல் கத்ரை தேடுற லட்சணம். 
 
எவ்வளவு நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்! சகோதரர்களே எவ்வளவு பெரிய அலட்சியம் செய்து கொண்டிருக்கிறோம். மார்க்கத்தை விளையாட்டாக்கிவிட்டோம். மார்க்கத்தினுடைய மார்க்கம் சொல்லக்கூடிய அந்த கட்டளைகளின்  உணர்வுகளை அதனுடைய தாக்கங்களை ஏன் அல்லாஹ் இப்படி சொல்கிறானே!
 
நபியே லைலத்துல் கத்ரை உமக்கு தெரியுமா? மீண்டும் கேட்கிறான் லைலத்துல் கத்ரை உமக்கு தெரியுமா? எந்த ஒரு காரியத்தின் மகத்துவத்தை எந்த ஒரு காரியத்தை மிகப்பெரிய அந்த ஆற்றலை கண்ணியத்தை அல்லாஹ் வெளிப்படுத்த விரும்புகிறானோ அங்கே தான் அல்லாஹுத்தஆலா அது எதுவென்று தெரியுமா? அது என்னவென்று அறிவித்தது எது போன்ற கேள்வி சொற்களை  பயன்படுத்துவான்.
 
الْحَاقَّةُ (1) مَا الْحَاقَّةُ (2) وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
 
(அல்குர்ஆன் : 69:1-3) 
 
الْقَارِعَةُ (1) مَا الْقَارِعَةُ (2) وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
 
(அல்குர்ஆன் 101:1-3)
 
இப்படி எல்லாம் அல்லாஹ் பேசினான் என்றால் அங்கே மிகப் பெரிய ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறான் என்று பொருள். 
 
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! வரக்கூடிய இரவுகளை நாம் பயன்படுத்துவோமாக! அதுவும் குறிப்பாக சதக்கத்துள் ஃபித்ரையும் நாம் மறந்துவிடக்கூடாது! 
 
ரமழான் முடிய போகிறது பிறை 27 க்கு பிறகு 28, 29 லே இந்த சதக்கத்துல் ஃபித்ரை சிறப்பான நேரம். என்ன பெருநாள் தொழுகைக்கு முன்பாக குறைந்தது மூன்று கிலோ அரிசியோ அல்லது நம்மூர் மக்கள் சாப்பிடக்கூடிய உணவுகளையோ  நாம் அதை கொடுக்க வேண்டும். நாணயமாக அதாவது காசாக நாம் அதை கொடுக்கக் கூடாது. அதோடு சேர்ந்து மற்ற பொருள்களை நீங்கள் உபரியாக கொடுக்க விரும்பினால் தாராளமாக கொடுக்கலாம். 
 
இந்த சதக்கத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பாக கொடுத்து விட வேண்டும். அப்போதுதான் இது சதக்கத்துல் ஃபித்ரு. நம்முடைய நோன்பில் ஏற்பட்ட குறைகளை குற்றங்களை தவறுகளை அல்லாஹுத்தஆலா மன்னிப்பதற்கு இந்த தர்மம் போதுமானது. இந்த தர்மம் அல்லாஹ்விடத்திலே அவ்வளவு நெருக்கமானது. யார் தொழுகைக்குப் பின்பு இந்த சதக்காவை கொடுக்கின்றார்களோ அது அவருக்கு வெறும் சாதாரணமான ஒரு தர்மமாக இருக்குமே தவிர சதக்கத்தில் ஃபித்ராக ஆகாது. 
 
எந்த நிறுவனங்கள் மக்களிடமிருந்து பணமாக வசூல் செய்கிறார்களோ அவர்கள் அந்த பணத்தை கொண்டு அதற்குரிய உணவுகளை வாங்கித்தான்  மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அது போன்று தாங்கள் வாங்கிய அந்த சதக்கத்துல் ஃபித்ரை எல்லாம் சரியான முறையிலே பெருநாளுக்கு முன்பாக கொடுத்து விட்டோமா? என்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். 
 
அதற்குப் பிறகு ஒரு விழா வைத்து 10 போட்டோகிராபர்களை வரவைத்து பத்து வீடியோக்களை வரவைத்து அதற்கு ஒரு நாளை நிர்ணயம் செய்து இங்கு பெருநாள் முடிந்தது ஷவ்வாலுடைய பாதியை ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அப்புறமாக சதக்கத்துல் ஃபித்ருக்காக ஒரு விழா, அதற்கு ஏற்பாடு, அதற்கு ஒரு பெரிய செலவு, இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. 
 
எந்த நிறுவனத்தார்களோ தனி நபர்களோ பிறரிடமிருந்து வாங்குகிறார்களோ அதை பெருநாளைக்கு முன்பாக அந்த சதக்கத்துல் ஃபித்ரை அவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். இதிலே நாம் கவனமாக இருக்க வேண்டும். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! இந்த ரமழானுடைய மாதத்தை அல்லாஹுத்தஆலா நம்மிடம் இருந்து ஏற்றுக் கொள்வானாக! எஞ்சி இருக்கக்கூடிய நாட்களில் சிறந்த முறையிலே அல்லாஹ்வை பயந்து அமல் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை சுத்தப்படுத்துவானாக! நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக! அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
صحيح البخاري (6/ 16)
 
4470 - حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنِ ابْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ الصُّنَابِحِيِّ، أَنَّهُ قَالَ لَهُ: مَتَى هَاجَرْتَ؟ قَالَ: خَرَجْنَا مِنَ اليَمَنِ مُهَاجِرِينَ، فَقَدِمْنَا الجُحْفَةَ، فَأَقْبَلَ رَاكِبٌ، فَقُلْتُ لَهُ: الخَبَرَ؟ فَقَالَ: «دَفَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ خَمْسٍ»، قُلْتُ: هَلْ سَمِعْتَ فِي لَيْلَةِ القَدْرِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، أَخْبَرَنِي بِلاَلٌ مُؤَذِّنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ فِي السَّبْعِ فِي العَشْرِ الأَوَاخِرِ»
 
குறிப்பு 2)
 
صحيح مسلم
 
220 - (762) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ أَبِي عُمَرَ، كِلَاهُمَا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ ابْنُ حَاتِمٍ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدَةَ، وَعَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، سَمِعَا زِرَّ بْنَ حُبَيْشٍ، يَقُولُ: سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَقُلْتُ: إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ؟ فَقَالَ رَحِمَهُ اللهُ: أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ، وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ، ثُمَّ حَلَفَ لَا يَسْتَثْنِي، أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ، فَقُلْتُ: بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ؟ يَا أَبَا الْمُنْذِرِ، قَالَ: بِالْعَلَامَةِ، أَوْ بِالْآيَةِ الَّتِي «أَخْبَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ، لَا شُعَاعَ لَهَا»
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/